Friday, February 5, 2010
GMIC - கிம்பின் முக்கிய நீட்சி
கிம்பின் மிக முக்கிய நீட்சிகளுள் ஒன்று GreysMagicImageConverter. அதை பற்றி இங்கே பார்ப்போம்.
GMICயை இந்த தளத்தில் இருந்து தரவிறக்கிக் கொள்ளலாம்.
http://gmic.sourceforge.net/gimp.shtml
தரவிறக்கி அதில் இருக்கும் அனைத்து கோப்புகளையும், உங்களின் மற்ற நீட்சிகள் இருக்கும் பகுதிக்கு நகர்த்திக்கொள்ளுங்கள்.
(C:\ProgramFiles\GIMP-2.0\lib\gimp\2.0\plug-ins )
அடுத்த முறை கிம்பை திறக்கும் போது இந்த இடத்தில் GMIC நீட்சி தெரியும்.
( Filters->GMIC )
இந்த நீட்சியில் கிம்பிற்கான நிறைய முன்னேற்றங்கள் இருக்கின்றன. விளையாடிப் பார்க்க நிறைய வாய்ப்புகள்.
உதாரணதிற்கு, கிம்பில் இருக்கும் UnSharpMask விட மிகவும் மேம்படுத்தப்பட்ட UnSharpMask இங்கே இருக்கு,
படங்களை கருப்பு வெள்ளை அல்லது Sepia க்கு மாற்ற பல வசதிகள்.
Artistic பகுதியில் உங்களின் கற்பனைக்கு பல பகுதிகள்.
உபயோகித்துப் பாருங்கள். கிம்பை பற்றிய மதிப்பு இன்னும் உயரும்.
மிகவும் பயனுள்ள தகவல்.
ReplyDeleteஆனாலும் எனது கணனியில் விண்டோஸ் விஸ்தாவில் (32 bit ) இந்தப் பின்னிணைப்பை இயங்கவைக்க முடியவில்லை.
C:\ProgramFiles\GIMP-2.0\lib\gimp\2.0\plug-ins மற்றும் C:\Users\vijay\.gimp-2.6\plug-ins ஆகிய இரண்டு இடங்களிலும் கோப்புக்களைப் போட்டுப்பார்த்தேன். Filters->GMIC இல் GMIC ஆனது செயற்படாத நிலையில் (disabled) மட்டுமே தெரிகிறது.
@Vijay,
ReplyDeleteEdhenum padathinai open seidhu vittu parungal...adhu "enable" aagi irukum. NAanum mudhalil appadi dhan yemandhaen!!
@AN&,
Mikka nandri..ubayogamana pathivu
@ Chan,
ReplyDeleteநன்றிகள் பல!
நீங்கள் கூறியது சரிதான். மற்றைய பின்னிணைப்புகள் படங்களை திறந்திருக்காத நிலையில் இயங்குவதாகத் தெரியும் அதே நேரத்தில் GMIC மட்டும் இயங்காதது போல் தோன்றியதால் ஏற்பட்ட குழப்பம் இது.
அன்புடன்,
விஜயாலயன்
நன்றி முயற்சித்து பார்கின்றேன்
ReplyDeleteநன்றிங்க தல
ReplyDelete