அன்பு நண்பர்களே..
`ஒன்று` போட்டியின் இறுதி சுற்று முடிவுகள் வருவதற்கு காலதாமதமாகி உங்கள் பொறுமையை ரொம்பவே சோதித்து விட்டோம்.. வேறு வழியுமில்லை.. இந்த முறை அதிக படங்கள் வந்ததால் அதை 9 நாட்களுக்குள் ஒவ்வொன்றாக பிரித்து செலக்ட் பன்னுவதற்குள் சற்று தாமதமாகிவிட்டது....
சரி,இனி ரிசல்ட் என்னன்னு பார்ப்போம்...
முதல் 3 இடத்தை பிடித்தவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்வதற்கு முன் இரண்டாவது சுற்றிலிருந்து வெளியேறியவர்களின் படங்களை பற்றி பார்ப்போம்...
ஆயில்யன்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJ0r89iGiAtePPbeEqqgmuhn-7Vhz5AnGf9RRdj4IMSGhm11KuMEaQxGNxYpcAbmG2pDQqhavbG0HF9uXM72R9_kTl7cAWgzbu4BZV-DBC19P7q7cMOHJtoh7E_k-juz4hhMnYrkQ1BJcl/s280/aayilyan.1.JPG)
ஒரு சாதாரணமான க்ளிப்பை ஏதோ மாயாஜாலம் பன்னின மாதிரி எடுத்து கலக்கி வெச்சிருக்கீங்க.. ரொம்ப நல்ல வொர்க்.. அது நிக்குதா.. அந்தரத்தில் தொங்குதான்னே தெரியல..ஆனால்,
1.இந்த க்ராப் நல்லா இருக்கும்னு தோனுது.. பழைய compositionம் மோசம் இல்லை..அதுவுமில்லாம சப்ஜெக்ட் செண்டரா இருக்குது..அதனால கொஞ்சம் வேற மாதிரி composition இருந்தா நல்லா இருக்கும்னு நினைக்கின்றேன்..
2.இந்த இடத்தில் foucs இன்னும் நல்லா வந்திருக்கனும்..
சரி இந்த படத்தை எப்படி எடுத்தீங்க?? நூல்ல கட்டி விட்டு எடுத்தீங்களா??
உங்கள் படத்தை கொஞ்சம் alter செய்தது..
அமல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHuXmVMvgbC9NUeU3Aa4F4eU_k8a3nK-GJeSljZky0_uP_h0YyMLUZSiNTBcJlLhLRziBnoXy5toVEg4WYhJZeLwB0ei32_aorOuNA-pbsNjGGwgmQN1mbGBTkLAmn2ZpXS-zLB2qSuhbq/s280/Amalll.jpg)
perfect composition, அருமையாக பறவை இறக்கை விரித்து இருக்கும் படம், இரை தேடுவது போல் நல்ல டைமிங்..ஆனால்..
1. முகம் இல்லாமல் இருப்பது இந்த படத்திற்கு மைனஸ்..
2. தண்ணீர் dark - கொஞ்சம் under exposure, பறவை வெளிச்சம் கொஞ்சம் over exposure..(வேறு வழியுமில்லை)
3. டைட் க்ராப் படத்தில் டீடெயில்ஸ் இல்லாமல் இருப்பது கொஞ்சம் நெருடல்..highlights அதிகமாக உள்ளது..
அமல்.. நீங்கள் வைத்திருந்த மற்ற படங்களையும் பார்த்தேன்.. எனக்கு மற்ற படங்கள் பிடித்திருந்தது... இருந்தாலும் நீங்கள் புதிதாக மட்டும் தான் எடுத்து அனுப்புவீர்கள் என்று குறிப்பிட்டிருந்தீர்கள்..அதற்கு வாழ்த்துக்கள்.. அப்பொழுது தான் நமக்குன்னு ஒரு புது தேடல் வரும் இல்லீங்களா? நான் இந்த மாதிரி போட்டோ எடுக்கும் வாய்பை ரொம்பவே மிஸ் பன்றேன்..
பூபதி
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFAWU8jJMIfEFY94JIw-xANTbHgTh-T3yHd74tQ1hifr-z7Q3zHW9GL_Zu9XLWuOgJymWEyrSiAHgu9cJDpCmBkeH3q_ZLhmXVhlRHiN3OE2hkY4-UHSV53XBG98hQPAYiFarJhNJQEosI/s280/Boopathiii.jpg)
நல்ல மலர் படம்..பேக்கிரவுண்டும் தொந்தரவுகள் அதிகம் இல்லாமல் இந்த தலைப்புக்கு ஓ.கே..ஆனால்,
1.மேலே கொஞ்சம் இடம் விட்டிருக்கலாம்.composition கொஞ்சம் இடிக்கின்றது..
2.இந்த மலரின் நடு பாகம் மிக அழகாக இருக்குமே..அதுவும் இருந்தால் படம் இன்னும் சூப்பராக இருந்திருக்கும்...இதனால் படம் கொஞ்சம் சிம்பிள் டைப் ஆக தோன்றுகிறது..டைட் க்ராப் படத்தில் டீடெயில்ஸ் இல்லாமல் இருப்பது கொஞ்சம் நெருடல்..
உஙக்ள் படத்தை கொஞ்சம் alter செய்தது...
கனேஷ்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgi9Tv4MJgaDZNVR8YvDU5iXfuivHqZeAuAYATPECcHz3T7BQJEpASZFWXej_W5gvBnxxt1uvyP9P3Vd2JTUTGqlUDS1JKssDstBhYtYaYZPl293EB7c4lHXNr-7GAewJzWqjdaTetrSusk/s280/Ganesh.1.JPG)
பஞ்சவர்ண கிளி படம் கலர்கலராக அருமை..details ம் ஓ.கே.. பேக்கிரண்டும் நன்றாக இருக்கின்றது..ஆனால்,
1.சிவப்பு கலர் saturation ரொம்பவே அதிகம்.. டிஜிட்டலை பொறுத்த வரையில் சிவப்பு கொஞ்சம் இப்படி தான் லொள்ளு பன்னும்.. கலர் correction பன்ன வேண்டும்..
2.உடம்பு முழுதாக எடுதிருக்கலாம் .. உடம்பு சரி பாதியாக(கால் பகுதி) கட் ஆவது கொஞ்சம் நெருடல்..அப்பொழுது தான் பறவையில் முழு அழகும் தெரியும்.. இல்லையென்றால் முகம் மட்டும் தெளிவாக படம் எடுத்து க்ராப் செய்யலாம்.. அதேசமயம் இந்த க்ராப்பும் குறையில்லை..
3.இந்த மாதிரி க்ராப் செய்யலாம்..
4.& 5. இந்த வகைகளில் compose இருந்திருக்கலாம்..
6. கண் பகுதி நன்றாக வந்துள்ளது....
உஙக்ள் படத்தை கொஞ்சம் alter செய்தது...
கெளதம்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzNhPirCjAFcOig0DgNcSmVk0d9j32zaagMuuBH8-fXu1k6fvDbqtpiEBKBMin_Bl6an88urxpwkqe1xE9b_p22A_fQTteKLkjy0ZFwFbYqMXBxHATLQvpEpluQCJqbEDmrWBrJWvQA6aS/s280/Gowtham(2).1.JPG)
வெள்ளை கிளி சூப்பர்.. தலைப்புக்கு பொருத்தமான நல்ல படம்.. பேக்கிரவுண்டில் தொந்தரவுகள் பெரிதாக இல்லை.. வெள்ளை கிளியும் highlights அதிகம் தெரியாமல் படம் expose ஆகி உள்ளது..ஆனால்..
1. இந்த வகையில் composition இருந்தால் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து..
2. வெள்ளை சப்ஜெக்ட்டுக்கு இந்த கலர் கொஞ்சம் இடைஞ்சல்..
இதனால் இந்த படத்தை கொஞ்சம் க்ராப் செய்து black and white ல் மாற்றியிருக்கின்றேன்...
KVR
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEeD6WepovqtDWciDuDa_WGI7jv9QZx6j4t3QthDS4BwOHLyz5bNFlk0qDpWY_w3bA_f7T2xq4TefY_KZSDMFLtlLs371k1AXFnMjMhGgVdRuupM7CJE0nXRjanusOpAafRZo8z7ojTlVV/s280/KVR.1.JPG)
செம expression.. என்னமா போஸ் குடுத்திருக்குது இந்த குட்டி..அழகு..
1.அருமையான போஸ்..பத்திரமா வெச்சுக்கங்க...
2.பேக்கிரவுண்ட் கலர் நன்றாக இருக்கின்றது..ஆனால் இந்த மாதிரி portrait படங்கள் எடுக்கும் போது சப்ஜெக்ட்க்கும்,பேக்கிரவுண்டுக்கும் இடைவெளி இருந்தால் பேக்கிரவுண்ட் முற்றிலும் out of focus ஆகி படம் மிகவும் அருமையாக வரும்..
3. ஷார்ப்னெஸ் அதிகமாக தெரிகின்றது, contrast ம் அதிகம்..
composition ஓ.கே. இருந்தாலும் பேக்கிரவுண்ட் நேராக இல்லை..கொஞ்சம் சாய்ந்த மாதிரி இருக்கின்றது.. சைடிலிருந்து எடுத்தீர்களா?
shutter speed 1/1000sec வரை பயன்படுத்தும் அளவு வெளிச்சம் இருக்கும் போது ISO 1800 என்பது தேவையில்லை..முடிந்த அளவு ISO வை குறைத்தே எடுக்கவும்.. இதனால் கண்டிப்பாக சில நேரங்களில் பிக்சர் குவாலிட்டி வித்தியாசம் இருக்கும்..
பிரகாஷ்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEis7foonrTkrUnrD4f-s4zIWKGfEDXmPOUWypWP67CNgWB-0m53XgyZQhVa6LxakHphfIS4_uL-MO0pbwljuFMDx7hHi6tIXJzf1mFTcmc99Y77pvMI3XlCHwUcJGoIPSW_MVr-QTflaOv4/s280/prakash.1.JPG)
எனக்கு மிகவும் பிடித்த பட்டாம்பூச்சி subject.. நன்றாக எடுத்துள்ளீர்கள்..அதுவும் பழைய prosumer கேமராவில்... நெல்லங்காட்டில், பட்டாம்பூச்சி நன்றாக ஃபோகஸ் ஆகியுள்ளது..
பட்டாம்பூச்சியை படம் எடுப்பது சாதாரண காரியம் இல்லை,பொறுமையாக எடுத்துள்ளீர்கள்
இருந்தாலும்,
கம்போஸிசன் இன்னும் நன்றாக செய்திருக்கலாம், கொஞ்சம் டைட் க்ராப் சரியாக அமையவில்லை.. மேலும் பேக்கிரவுண்ட் ரொம்பவும் cluttered ஆக இருப்பது சிறப்பாக இல்லை..அதுவுமில்லாமல்,
1.expose சரியாக இல்லை.. காரணம் காலை நேர வெயில்.. இந்த மாதிரி நேரங்களில் ரொம்பவும் கவனமாக வெளிச்சத்தை கவனிக்க வேண்டும்.. இல்லையென்றால் பேக்கிரவுண்ட் வெளிச்சம் அதிகமாகவும்,சௌஜெக்ட் வெளிச்சம் குறைவாகவும் தான் வரும்.. இதற்கு ஒரு வழி, வெளிச்சம் பட்டாம் பூச்சியின் மேல் படும் வரை வெயிட் பன்னி தான் எடுக்க வேண்டும்.. இல்லையென்றால் ஃப்ளாஷ் பயன்படுத்த வேண்டும்.. ஆனால் சில சமயம் அது ஒத்து வராது..
2. நல்ல ஃபோகஸ்..
3.இந்த முறையில் கம்போஸிசன் இருக்க வேண்டும்..
ரகு முத்துகுமார்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFAD9eW3FbaJMc6UwdemaBzaSCjFxg9SvAZB7Vzr4dQFzvNhC38vIzLjIFtV5NbCZrTMRdCwxMe838h2y68yWKZccCluIihotKQCdYnWjCztuloih0ZEyTWJbPlncCgk-lBEDNnaYdBEI8/s280/Ragumuthukumar.1.JPG)
பறவை பறப்பதை மிக அழகாக, நல்ல டைமிங்காக,ஷார்ப்பாக,டீடெயிலாக எடுத்துள்ளீர்கள்.. இந்த மாதிரி படங்களை எடுப்பதே கஷ்டம்..
பாராட்டுக்கள்.
ஆனால்,
1.இந்த மாதிரி composition இருந்திருந்தால் இன்னும் அட்டகாசமாக இருந்திருக்கும்..composition தான் இப்படத்திற்கு ஒரு மைனஸ்..
2.இறக்கை அழகாக உள்ளது..
3. இப்பகுதி கொஞ்சம் தொந்தரவு(distraction).. அதை சரி செய்யலாம்.. இதை மாற்றி ,கொஞ்சம் க்ராப் செய்து போட்டுள்ளேன்...
சத்தியா
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgiOqu3xcEyndYBFfc3r6ovnLDLTpqwxdOlZSgmOFeuzCCN4YQ7Wkg_QO2KVpgsS5aFC6xpz6WtrsssGP0iHa_jkjspj98cz07jmpmkse9JjeNK3AYrpkzuuuzGbxMxdHWh2ZN5ntUhCTQI/s280/Sathiya.1.JPG)
எறும்பு படம் மிக அழகு,அட்டகாசமான் ஃபோகஸ்,exposure அருமை.. பச்சை கலர் BGயும் அழகு சேர்க்கின்றது.. angleம் different ஆக இருக்கின்றது..இருந்தாலும்..
1.இந்த பகுதி தேவையில்லை.. ரொம்பவே blur(out of focus) ..
2. dust ஐ remove பன்னாமல் இருப்பது படத்திற்கு சிறிய தொந்தரவு..(இது பெரிய விசயமில்லை)
3.எறும்பு நல்ல ஃபோகஸ் ஆகி உள்ளது.. இருந்தாலும் subject என்பது too center ஆக இருப்பது நமது கண்களை இரண்டாக பிரிக்கும் என்பதால் ஒரு மைனஸ்..
4 & 5.இந்த வகைகளில் க்ராப் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
விஜயாலயன்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV4L3PyBf7joDlKH8PyBXxJGkJk9aHnRQc1bnxyyz_BXVrJ_LyxuKlodEFt72x7Yzrub-AeJgyJpG9HARxtJn3cWAjI3bB8auZWsj4Mgomya_wpWR9z47wGQPWuDottJxkgNccw2HHtxST/s280/vijayaalayan.1.JPG)
காவி கலரில் துறவியின் படம் மிக அழகாக இருக்கின்றது..செலக்ட்டிவ் கலரிங்கும் நன்றாக இருக்கின்றது..இருந்தாலும்,
1. செலக்ட்டிவ் கலரிங் ஓ.கே. என்றாலும் கொஞ்சம் artificial effect ஆக சுவர்கள் தெரிகின்றது.. ஒரு வேளை கலரில் இருந்தாலே நன்றாக இருக்கலாம்..
2.இந்த வகையில் composition இருந்திருக்கலாம்.. ஏனென்றால் கைத்தடி க்ராப் ஆனது சிறிய நெருடல்..அவர் கீழே தலையை குனிந்து இருப்பதால்,இன்னும் கீழே இடம் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து..
3.இந்த படத்தை வைத்து இந்த மாதிரியும் க்ராப் செய்யலாம்..
4.படத்தில் பேக்கிரவுண்டே ஃப்ரேம் போல் இருக்கின்றது.. இதில், அதிகமான ஃப்ரேம் (4 ஃப்ரேம்) போட்டிருப்பது படத்தை தொந்தரவு செய்கின்றது..
5. இந்த பகுதி அழகாக இருக்கின்றது.. நடந்து வந்த அடையாளத்தை தெரிவிக்கின்றது அதனால் ரெஸ்ட் எடுப்பது போல் தெரிகின்றது..
செல்லம்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqzxdrs23nvPg7UWvpLBTpWxfrZPkfebI76aUxsWqEgGUIPN44PAQ1R5ElcBYbMjpQGTNn2J4khkdOlHGrriGQLz-q-ikA17or9vuI4x4_CLzNaBLzb2255uiQFejDerYcQ0Ex0mNEN_qk/s280/Chellam.1.JPG)
இந்த போட்டிக்கு வந்திருந்த விளக்கு படங்களில்.. நீங்கள் எடுத்திருக்கும் இந்த படம் நன்றாக உள்ளது.. நல்ல exposure , தீபமும் ஒவர் லைட்டாக இல்லாமல் நன்றாக வந்துள்ளது.. மண்விளக்கும் அழகு..ஆனால்,
1.தீபம் மேல் நோக்கி இருப்பதால்,மேலே இடம் விட்டு இந்த மாதிரி compose இருந்திருக்க வேண்டும்..
2.இந்த பக்கமும், கீழேயும் கொஞ்சம் இடம் இருக்க வேண்டும்.
3. ஃபோகஸ் சரியான இடத்தில் இருந்தாலும்..இன்னும் கொஞ்சம் depth இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்க தோன்றுகிறது.. இருந்தாலும் இதுவே இந்த மாதிரி படங்களுக்கு நன்றாகவே இருக்கின்றது..ஏனென்றால் கொஞ்சம் மாறி போய் தீபத்திற்கு ஃபோகஸ் போயிருந்தால் படம் முற்றிலும் இருட்டாகியிருக்கும்..
4.இந்த பகுதி இருட்டாக இருப்பதால் கொஞ்சம் க்ராப் செய்திருக்கலாம்..
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVpRhajUuPZdQogCTWagGlvR6T6L2SuSy1ZcLsRT85TEq2A-LhYHWWuKP6yXJPD_qpEviV7yExJtMo5IfGp6gqci3l9-7uVqzXh6-jAGhzJq20N4CHNgTC-56pbDI2uF-IqrHFD3jXnARw/s280/Chellam.2.jpg)
அடுத்தபடி மூன்றாம் இடத்திற்கு மூன்று படங்கள் போட்டி போடுகின்றன..
அவர்கள்,
கார்த்திக் ,
விக்னேஷ் ,
நிக்கோலஸ்..
இவர்களில்,
கார்த்திக் படத்தில்,
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiO5L53-dtA7BHwE5iTWwJfO0MZdXZnAeugaMm6C42iE_60kb5zDLxAnsvpUVaG5_Z9pgv6j5KUPFYGBV3UH-0Abadw72CAnnsQL0Exl7Z4mM-X46ZF93r3BGQeF03QiHWcHpn6mtuw4bSB/s280/Karthik.1.JPG)
படத்தின் சப்ஜெக்ட்டும்,ஷார்ப்பும் சூப்பரோ சூப்பர்..பச்சை கலர் பச்சோந்தி,பிங்க் கலர் வாய திறந்து கொண்டு இருப்பதும் அருமை..
ஆனால்,சென்ற தடவை(வாண்டுகள்) மாதிரியே இந்த முறையும் க்ராப்பில் தான் கோட்டை விட்டுவிட்டீர்கள்..
1.இந்த முறையில் டைட் க்ராப் செய்யலாம்..டீடெயில்ஸ் நன்றாகவே இருக்கின்றது..
2.ரொம்பவே நெகட்டிவ் or empty space..
3.இந்த பகுதி மிகவும் அருமை.
4.இந்த முறையில் கம்போஸ் செய்திருந்தால் நன்றாக இருக்கும்.. வலது புறம் நோக்கி இந்த பச்சோந்தி இருப்பதால் வலது பக்கத்தில் வேண்டுமானால் கொஞ்சம் empty space இருந்தால் தவறில்லை..ஆனால் இடது புறம் தான் empty space இருக்கின்றது ஒரு குறை.
5.இந்த vertical முறையிலும் கம்போஸ் பன்னலாம்..
அந்த காலுக்கு அருகில் வரும் வெளிச்சப் பகுதி சிறு உறுத்தல்..
நீங்கள் அனுப்பிய படத்தை வைத்து இரண்டு முறையில் crop செய்துள்ளேன்...
நிக்கோலஸ் படத்தில்,
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhB0x7rOXKO5oo4cPZguA8H1mEcdDnYIMvmNV2m_pQB_C6DUdtq8xLPJ-s1ley3bOwfYhE4f7NqG2Qzcbw94nVqj_tmw4i748I_P4IvKuFaeLQ1cTe_1iwXAcuAb-BJHj3yBsu9q3KVkim1/s280/nicholas.1.JPG)
செம ஷார்ப் expression படம், perfect focus.. அருமையான bokeh பேக்கிரவுண்ட் மற்றும் exposure..ஆனால்,
இந்த படத்தில் சப்ஜெக்ட் தரும் expression என்ன என்பது சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை.. சோகத்தை வெளிப்படுத்தறாங்களா இல்லை சும்மா பேசுறாங்களான்னு புரியவில்லை.
அதுவுமில்லாமல்,கழுத்து பகுதி டைட் க்ராப்,பொக்கேவுக்காக கொஞ்சம் அதிகமாக வைடாக க்ராப் செய்திருப்பது சிறிய பலவீனம்.
1.இந்த வகையில் கம்போஸ் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
2.அருமையான டீடெய்ல்ஸ்.
3.bokeh கலர்ஸ் அருமை.. ஆனால் இவ்வளவு அதிகமாக தேவையில்லை...
கொஞ்சம் alter செய்தது..
விக்னேஷ் படத்தில்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_D44OOhfL3xKwTG2ePuS-MhEqEncLzIGV80GuDyYpWp3aX51bJthxj817vounNHlOR3pIj0P-najgXV70ajbk36v3kEZfCWTWigg7Pdll-aIzKy9VngXUSEtx__-tWAkOL7kTZoRkAUsa/s320/vignesh.1.JPG)
நமது தேசத்தந்தையை அழகான சிலூயெட்(silhouette) ஆக படம் எடுத்துள்ளார்.. மிகவும் அருமை..அதுவுமில்லாமல் அருமையான ஃப்ரேமிங்(compose)..background hue colours மிகவும் அழகு..இந்த படத்தில்,
1.இப்பகுதி அருமையாக இருக்கின்றது.
2.கம்போஸிசனும் அருமை..கலர்களும்(hues) அருமை..
3.முக்கியமான இப்பகுதி ஷார்ப்பாக இல்லை..ஃபோகஸ் தவறியிருக்கலாம்..கண்டுபிடிப்பதும் கொஞ்சம் சிரமம் தான்.
4.இந்த படத்தின் பலவீனமே இந்த extra பகுதி தான்..
முதல் மூன்று இடங்கள்:
இவர்கள் மூன்று பேரில் யாரை தேர்ந்தெடுப்பது என்பது சற்று சிரமமாகவே இருந்தது..மூன்று படங்களுமே நல்ல படங்களே.. இருந்தாலும்,
ஒரு படத்திற்கு மிக முக்கியமான கம்போஸிசன் நன்றாக இருப்பதால்,
மூன்றாம் இடம் பிடிப்பது
விக்னேஷ்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGuzZHYk0hn89-Oo-6haAQ3BMnVHucaSsDy7_X7boZd1hTv_56wb4Jb_7LvUkkue2JkwQgKGMleHlJJGQhyphenhypheneRNLR_ppLpOv8B44Bp62CSsF5v1zqNXB2Xcyrsfg1vga7v_zFTP2NKCDgCQ/s320/vignesh.jpg)
அடுத்து இறுதியாக
அன்பு ஆனந்த் மற்றும்
MQN படங்கள்..
இவர்களில்
அன்புவின் aerial view படம் அட்டகாசம்..
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQvhf346AEa0XJZVkL_-3hf6k8GmK3ZxBfQbHYI0xViBdwZ5MxjhOelp2Bh6rniHHFTlEN_kiifH-YRHFI7oiNJypDtBmqhw4ikF_MVoYvKiRvCXzHHgjufMQ3cJ_Wmqi8jK1WNh7RWczZ/s280/S.M.Anbu+Anand.1.JPG)
சுத்தாமான தண்ணீரில் தெரியும் கலர், அட்டகாசமான கம்போஸிசன், படகு,படகின் கயிறு நம் கண்களை அழகாக லீட் செய்வது என்று அனைத்தும் அருமை..
இந்த படத்தை பொறுத்த வரையில் பலவீனம் என்பது பொதுவாக இல்லை... ஆனால் இந்த `ஒன்று` தலைப்பு என்று வரும் போது..சிறு நெருடல்.. படகு மற்றும் கயிறு தான்..
அதே மாதிரி, 1 & 2 இடத்தில் darkening PP செய்திருப்பது கொஞ்சம் இயற்கைதன்மையை(இப்படத்திற்கு) குறைக்கின்றது..
அதே சமயம், 2 இடத்தில் படகும்... 1 இடத்தில் கயிறும் இருந்திருந்தால் இந்த படம் இன்னும் top கம்போஸிசனாக ஆக இருந்திருக்கும்
எனவே,
இரண்டாம் இடம் பிடிப்பது,
S.M.ANBU ANAND
முதலிடம் பிடிப்பது
MQN
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEo-Yb-lOMWQXCxDJpHnOJvfZWc_94-fIsLBhkaugLUwxi28om73Cp_RJO2okg2xmW6eHlDZdeV0HsoZt0DeVAXnozHe3S1AQErwLFdbakdGBYKIfvnkWAvi2gpsfangpBQFSZDbiGaLFe/s280/MQN.jpg)
வழக்கம் போல இவரு தான் டாப்... இந்த படத்தில் குறை என்பதே கண்டுபிடிக்கமுடியவில்லை...
தலைப்புக்கு மிக பொருத்தம்..
புறாவின் சிறகு,கால்கள்..
அழகான வானம்,
அருமையான ஃபோகஸ்
பறவைகளை நிற்கும் போது எடுப்பதே கஷ்டம்.. அதுவும் இவர் புறா பறப்பதை அழகாக ஃபோகஸ் செய்துள்ளார்
எனவே MQN முதலிடத்தை பெறுகின்றார்...
இந்த போட்டியில் வெற்றி பெற்ற மூவருக்கும் ஒரு பொதுவான காரணம் என்னவென்றால் அது
COMPOSITION தான்..
என்னை பொருத்த வரையில் இந்த தலைப்புக்கு composition என்பது மிக முக்கியம்..
மற்ற படங்களில்(அமல் படத்தை தவிர) எதோ ஒரு சிறிய வகையில் கம்போஸிசன் என்பது பலவீனமாகவே இருந்தது..
இந்த மூன்று பேரின் படங்களையும் வேறு மாதிரி என்னால் கம்போஸ் பன்ன முடியவில்லை.. இதுவே இவர்களின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம்..
வெற்றி பெற்ற மூவருக்கும் PITன் வாழ்த்துக்கள்.....
மிக விரைவில் அடுத்த போட்டிக்கான தலைப்புடன் வருகின்றோம்...
நன்றி
கருவாயன்.