Monday, May 31, 2010

பிரசன்ன கிருஷ்ணன் அவர்களின் "Cloud Bean" இந்த வார படமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றது.


இவரின் மற்ற படங்கள் - இங்கே

Saturday, May 29, 2010

மக்களே, கருவாயன் எங்கிற சுரேஷ் அவர்களுக்கு Fotoflock இல் இந்த மாதம் முதலிடம் பெற்றதற்கு மீண்டும் நாம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு இந்த மாத வெற்றியாளர்களை கவனிக்கப் போகலாம். அதற்கு முன்னால் நாம் சூரியோதய/அஸ்தமன புகைப்படங்களுக்கான அடிப்படைகளை மீண்டும் ஒரு முறை பார்ப்போம்
  • நல்ல படங்கள் கிடைக்க சூரியன் உதயம் ஆகும் அந்த நொடியில் இருந்து அதிகப் பட்சம் பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்குள் எடுக்கப் படவேண்டும்.
  • ஒரே மாதிரியான சிந்தனையில் இருந்து வெளி வந்து சற்றே வித்தியாசமாக சிந்திக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒரு வட்டம் சில "சில்ஹவுட்" மட்டுமே உங்களுக்கு கிடைக்கும்.
  • சில நேரங்களில் வேண்டுமானால் சில அற்புதமான படங்கள் கிடைக்கலாம். ஆனால் சூர்யோதயமோ அல்லது அஸ்தமனமோ தேவையான ஏற்பாடுகள் இல்லாமல் போனால் ஏனோ தானோ புகைப்படம் தான் கிடைக்கும். சில இடங்களை தேர்வு செய்து வைத்துக் கொண்டு அல்லது சூர்யோதயமோ அல்லது அஸ்தமனத்திற்கு குறைந்தது அரை மணிக்கு முன்பே கோணங்களை தேர்வு செய்து வைத்துக் கொண்டால் எதிர் பார்க்கும் நல்ல புகைப்படங்கள் கிடைக்கும்.
  • நிர்மலமான வானம் இருப்பதை விட மேகங்கள் நிறைந்திருந்தால் நன்று
  • படத்தில் சூரியன் இருந்தால் மட்டுமே அது சூர்யோதயம்/அஸ்தமனம் என்றில்லை. அதன் விளைவுகளை எடுத்துக் காட்டுவதாய் இருந்தாலும் போதும்.
  • வழக்கமாக சொல்லுவது தான். Follow the rule and Break it when you feel that will create better result.
  • ஒரே விதமான எக்ஸ்போஷரில்/செட்டிங்க் முயற்சிக்காமல் பல செட்டிங்கில் மாற்றி எடுக்க வேண்டும். உதாரணத்துக்கு ஒயிட் பேலன்ஸ். ஒவ்வொரு ஒயிட் பேலன்ஸ் செட்டிங்கிற்கும் ஒவ்வொரு விதமான படம் கிடைக்கும்
  • HDR முறை நல்ல பலன் தரும்
  • கேமராவின் "ஆட்டோ " செட்டிங்க் சன்ரைஸ்/சன்செட் க்கு தயவு செய்து உபயோகிக்காதீர்கள். எஸ்.எல்.ஆர் குடும்பஸ்த்தர்கள் மேனுவல் மோடிலும் பாயிண்ட்&ஷூட் குடும்பஸ்த்தர்கள் சன்செட் மோடிலும் வைத்து எடுங்கள்
  • சூரியன் கடலில் குளித்து தூங்கப் போன பின்பும் மிச்சமிருக்கும் ஒளிவண்ணக் கலவையை ட்ரைபாட் வத்து குறைந்த வேக ஷட்டரில் எடுத்துப் பாருங்கள். புகைப்படத்தின் இன்னொரு பரிமாணம் புலப்படும். எப்போதும் அபெர்ஷர் கொஞ்சம் அதிக அளவிலேயே இருக்கட்டும்.
  • உங்களைச் சுற்றி இருப்பவற்றை பார்த்துக் கொண்டே இருங்கள். அது புகைப்படத்திற்கு புதிய கற்பனையை ஊட்டும்.
  • உதயமோ அஸ்தமனமோ... பலமுறை சுட்டுக் கொண்டே இருங்கள். ஒவ்வொரு நிமிடத்திற்கும் சூரிய பகவான் தன் கிரணத்தையும் வண்ணங்களையும் மாற்றிக் கொண்டே இருப்பார்.
சரி இப்போது மூன்றாம் இடத்துக்கான புகைப்படம். இதற்கு இரண்டு பேர் போட்டி . இரண்டுமே என் பார்வைக்கு சமமானதாக இருந்ததால் மெர்வினும் நந்தகுமாரும் மூன்றாம் இடத்தைப் பகிர்ந்துக் கொள்கிறார்கள். இருவருக்கும் வாழ்த்துகள்.

சிறப்புக் கவனம் - ஹேமா - வித்தியாசமான சிந்தனையும் படப் பிடிப்பும். வாழ்த்துகள் ஹேமா
இரண்டாவது இடம். கமல். வாழ்த்துகள் கமல்.
முதலிடம் அமல். அருமையான காட்சியமைப்பு. பார்க்கும் போது நாமே அந்த இடத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. மீண்டும் முத்லிடத்திற்கு வந்ததற்கு வாழ்த்துகள் அமல். வெற்றிப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். மற்றவர்களுக்கு - ரொம்பவே அதிக டஃப் குடுத்திருக்கீங்க. ரொம்ப குறைவான வித்தியாசத்தில் தான் பின் தங்கி இருக்கிறீர்கள். அடுத்த போட்டியில் முதல் மூன்று இடம் உங்களிடம் இருந்து வர்ம் என்று வெகுவாக நம்புகிறேன். வெற்றியாளர்களைக் காட்டிலும் உங்களுக்கு என்னுடைய அதிக வாழ்த்துகள். மீண்டும் அடுத்தப் போட்டியில் சந்திப்போம். அமல், மீண்டும் வேண்டுகோள். இந்தப் புகைப்படம் எடுத்தவிதம் பற்றிய உங்கள் பதிவு தாருங்கள். அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

Friday, May 28, 2010

Epsonன் FotoFlock.com என்ற இணையம் நடத்தும் மாதாந்திர போட்டியில் கருவாயனின் தண்ணீர் படம் வெற்றி பெற்றுள்ளது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறோம்.. வாழ்த்துக்கள் கருவாயன் (சுரேஷ் பாபு). கலக்கிப்புட்டீங்க!
வணக்கம் புகைப்பட ஆர்வலர்களே மற்றும் புகைப்படக் கலைஞர்களே! அந்தி மாலையும் அதிகாலையும் உங்களை மிகவும் கவர்ந்திருக்கிறது என்று வந்திருந்த படங்களைப் பார்த்ததுமே தெரிந்து விட்டது. முதல் சுற்றில் என்னைக் கவர்ந்த இருபத்தோரு படங்களை வைத்துப் பார்த்தேன். அத்தனையும் அழகு. அதற்காக முதல் சுற்றில் வராதவர்களின் படம் அழகில்லை என்று இல்லை. ஆனால் சிலவற்றில் அவை தவறிப் போயின. படத்தின் நடுவில் எழுத்துகள், படத்தை மீறித் தெரியும் பெயர் விளம்பரம், வெட்ட வேண்டியவற்றை வெட்டாமை, Flat Composition போன்ற சில காரணிகளால் அவை முதல் சுற்றில் தேர்வாகவில்லை. பொதுவாக ஊரில் சொல்லுவாங்க. துலக்க துலக்க பித்தளையும் தங்கம் அப்படின்னு. போட்டோவும் அப்படித்தான். எடுத்தப் புகைப்படத்தை யாரோ எடுத்த மாதிரி தயவு தாட்சண்யம் இல்லாம நீங்களே விமர்சிக்கனும். எங்கெங்க வெட்டனும்னு தோணுதோ அங்க வெட்டிடுங்க. அதுக்கு தேவையான பாடங்கள் ஏற்கனவே இங்கே விவாதிக்கப் பட்டிருக்கின்றன. மேலே இருக்கும் இருபத்தொன்றில் இருந்து அடுத்தக் கட்டத்துக்குப் போக வேண்டிய படங்களைத் தேர்ந்தெடுக்க பட்ட அவஸ்த்தை கொஞ்சம் அதிகம் தான். இருந்தும் என்னுடைய ரசனையின் பேரில் தேர்வு செய்த படங்கள் கீழே..











முதல் மூன்று படங்களுடன் விரைவில் சந்திப்போம். அதுவரைக்கும் வர்ட்டா...

Sunday, May 23, 2010

MQN அவர்களின் "Dancing in the Air" இந்த வார படமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றது.




இவரின் மற்ற படங்கள் - இங்கே

Monday, May 17, 2010

கார்த்திக் அவர்களின் "வெயில் தாங்கமுடியலடா" இந்த வார படமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றது.





இவரின் மற்ற படங்கள் - இங்கே

Tuesday, May 11, 2010

ஜேம்ஸ் வசந்த் அவர்களின் "World Trade Centre" இந்த வார படமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றது.




இவரின் மற்ற படங்கள் - இங்கே

Sunday, May 9, 2010

இந்த மாத போட்டிக்கு படங்கள் அனுப்பியவர்கள் பின்னூட்டத்தில் சொன்ன பிறகு தான் தெரிந்தது.
பிகாஸா ஆல்பத்தின் கொள்ளளவு பிரச்சினை காரணமாக அதிக சைஸ் கொண்ட புகைப்படங்கள் வலையேற்றப் படாமல் இருந்தன. பழைய புகைப்படங்களை இப்போது எடுத்து photos.in.tamil@gmail ஐடி க்கு சிசி அனுப்பியவர்கள் புகைப்படங்கள் மீண்டும் ஆல்பத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.யாரேனும் படம் அனுப்பி அது ஆல்பத்தில் இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளவும். உங்கள் படம் இல்லை என்றால் மறுபடி அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிக்கவும்.



May2010: Sunset-Sunrise


நன்றி
ஜீவ்ஸ்

Thursday, May 6, 2010

வணக்கம் மக்கா, கீழே உள்ள படம், அந்த பறவையோட Eye-Levelல எடுக்கப்பட்டது. அப்படி எடுக்கறதால நம்ப சப்ஜக்டோட profile முழுசா தெரியும், அதே சமயம் background நல்லா Out of Focus ஆகி disturbance இல்லாம இருக்கும். இந்த படத்தை தரைல படுத்துகிட்டு எடுத்தேன். இப்படி எடுக்கும் போது வெறும் கையில்(HandHeld) எடுக்கமுடியாது. நமக்கு வாகா இருக்காது, அதே சமயம் balance இருக்காது. சில ட்ரைபாட்கள் மட்டும் தான் தரை மட்டத்துக்கு விரிச்சு வைக்க முடியும், அப்படியும் அது முழுசா தரையோடு இருக்காது, கொஞ்சம் ஆட்டமும் இருக்கும். பெரும்பாலான ட்ரைபாட்களில் "Center Column" இருக்கும், அவற்றை தரை மட்டத்துக்கு விரிச்சு வைக்கவே முடியாது. தரை மட்ட படம் எடுக்க ட்ரைபாட்களுக்கு மாற்றாக "Ground Pod" உள்ளது. அவற்றின் சில வகை "Panning Ground Pod" மற்றும் "Skimmer" இதெல்லாம் காசு ரெம்ப கூட. இது எல்லாம் வாங்க முடியாது என்பவர்களுக்கு ஒரு எளிய மாற்று உள்ளது. உங்ககிட்ட இருக்குற பழைய வானலிய எடுத்துகோங்க, அந்த வானலியின் "நடு சென்டர்ல" ;) ஒரு ஓட்டைபோட்டு, நீங்க வச்சு இருக்குற ட்ரைபாட் ஹெட் பொருத்துவதற்கு ஏதுவான ஒரு ஸ்க்ருவை மாட்டவும். உங்களுடைய "Ground Pod" தயார். விளக்கப் படங்கள் கீழே. இந்த செய்முறை படங்களின் உதவி - http://taloncraft.com வேறு வகையான "Ground Pod" செய்யும் முறை இந்த காணொளியில் விளக்கப்பட்டுள்ளது. தரை மட்டத்தில் எடுக்கப்பட்ட மற்றும் சில படங்கள் - இனிமேல் தரையில் உருண்டு புரண்டு படம் எடுக்க வேண்டியது தான் :) பி.கு: ஆர்வக்கோளாருல நல்லா இருக்குற வானலியில் ஓட்டை போட்டு, சமையல் செய்வதற்கு திண்டாடினால் நாங்க பொறுப்பு கிடையாது ;)

Monday, May 3, 2010

சமீபத்தில் ஒரு புகைப்படம் ஈமெயிலில் வந்தது. நம்ம ஜீவ்ஸ் அண்ணாச்சி அனுப்பியிருந்தாரு. ஏதோ ஒரு பெருந்தகை Hannes Lochner என்றவரின் புகைப்படங்கள் அவை. இவரு புகைப்படத் துறையில் வல்லவரு. அதை நீங்க அவரு எடுத்த புகைப்படங்களை பாக்கும்போதே புரிஞ்சுக்கலாம். எல்லா படங்களும் பட்டையை கிளப்பியது. ஒரு படம் 'எப்படி எடுத்திருப்பாரு' என்ற தேடலைத் தந்தது. நான் மேலும் அளப்பதர்க்கு முன், படத்தை பாருங்க. photo source: Hannes Lochner சிங்கம் வயிறு ஃபுள்ளா சாப்பிட்டுட்டு ஹாப்பியா உடம்பை ஸ்ட்ரெச் பண்ணுது. அதை ஃப்ளாஷ் போட்டு எடுத்திருக்காரு. ஆனா, வானத்துல பாத்தீங்கன்னா, வட்ட வட்டமா ஒளிக்கீற்று தெரியுது. அநேகமா, நட்சத்திரங்களா இருக்கும். ஆனா, அந்த மாதிரி ஒளிக்கீற்று புகைப்படத்தில் வரணும்னா, ஷட்டரை ஒரு சில பல நிமிஷங்களாவது திறந்து வைக்கணும். எல்லா DSLRகளிலும், ஷட்டர் வேகத்தை விருப்பத்துக்கு ஏத்த மாதிரி திறந்து வைக்க முடியும். ஆனா, நீங்க 1/2 மணி நேரம் தொறந்து வச்சிருந்து, வானத்தை பாத்து க்ளிக்கினாலும், தரையில் இருக்கும் சிங்கம், அம்புட்டு நேரம், அந்த ஸ்ட்ரெட்ச் பண்ணி போஸ் கொடுத்து ஸ்டைலா நிக்குமா என்ன? குறைந்தது இரண்டு மூன்று விநாடிகளில், அது சோம்பல் முறிச்சுட்டு, அடுத்த மானை கபளீகரம் பண்ணக் கெளம்பிடும். இந்த மாதிரி நேரங்களில் தான் Slow Sync Flashing என்னும் யுத்தி உபயோகப்படும். எல்லா DSLR களிலும், இந்த வசதி இருக்கும். 'front/rear Curtain sync'னு சில கேமராவில் சொல்லியிருப்பாங்க. சிலதில், Slow Syncனே இருக்கும். இந்த சிங்கம் + வானத்தின் ஒளிக்கீற்றை படம் பிடிக்க: 1) ராத்திரி காட்டுக்கு போங்க 2) கேமரா. Manualல், போட்டு front curtain sync என்ற ஆப்ஷனை தெரிவு செய்து கொள்ளுங்கள் 3) ஷட்டர் வேகத்தை bulb modeல் வைத்துக் கொள்ளுங்கள் (bulb modeல், க்ளிக்கரை க்ளிக்கியதும், ஷட்டர் திறந்து விடும். பிறகு மீண்டும் க்ளிக்கரை அமுக்கியபின்னே மூடும்) 4) ஃப்ளாஷை திறந்து வைத்துக் கொள்ளுங்கள் 4) கேமராவை ட்ரைபாடில் பொறுத்தி வைத்துக் கொள்ளுங்கள் 5) சிங்கம் வந்து, ஹாஆஆவ்னு சோம்பல் முறித்ததும், கேமராவை க்ளிக்கவும். 6) இப்ப ஃப்ளாஷ் பளிச்னு அடிச்சுடும். சோம்பல் முறிக்கும் சிங்கம் சென்ஸாரில் பதிஞ்சுடும். 7) சிங்கம் சோம்பல் முறித்து முடித்ததும், உங்களை ஒரு லுக்கு விட்டுட்டு போயிடும். ஃப்ளாஷ் அடித்து முடிந்ததால், இனி சிங்கம் என்ன செய்தாலும், சென்ஸாரில் ஏறாது. 8) கேமரா இன்னும் ஷட்டர் திறந்தது திறந்த படி, வானத்தில் என்ன ஒளிக்கீற்று இருக்கோ, அதையெல்லாம் உள்வாங்கிக் கொண்டே இருக்கும். சிங்கம் இருக்கும் இடம் இருட்டாக இருப்பதால், ஏற்கனவே பதிந்த 'சோம்பல் முறித்தலை' சென்ஸார் தக்க வைத்துக் கொள்ளும். 9) ஒரு 1/2 மணி நேரம் கழித்து, க்ளிக்கரை அமுக்கி, ஷட்டரை மூடவும். அம்புட்டுதேன். படம் ரெடி. இப்ப, இந்த slow sync என்ன பண்ணிச்சுன்னு பாப்போம். slow syncல் இரண்டு வகை. நாம மேலே உபயோகிச்சது front curtain sync என்ற முதலாம் வகை. இந்த modeல், ஃப்ளாஷ் முதலில் பளிச்சுன்னு அடிச்சுடும், அப்பரம், ஷட்டர் நம் தேவைக்கேற்ப திறந்திருக்கும். இரண்டாம் modeல் (rear curtain sync), ஃப்ளாஷ், கடைசியில், ஷட்டரை மூடுவதற்க்கு முன் பளிச்சிடும். உங்க இடம், பொருள், ஏவலுக்கேற்ப, 1st slow sync அல்லது 2nd slow sync இவற்றில் ஏதாவது ஒன்றை தெரிவு செய்து, அமக்களமாய் எடுக்க வாழ்த்துக்கள். இந்த டெக்னிக்கில் எடுக்கப்பட்ட பல வகை படங்கள் ஃப்ளிக்கரில் பாருங்கள். நன்றீஸ்!

Sunday, May 2, 2010

கார்த்திக் அவர்களின் "டைவ்" இந்த வார படமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றது.



இவரின் மற்ற படங்கள் - இங்கே

பிட் குழுவினரின் சார்பாக அவருக்கு வாழ்த்துக்கள் !
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff