Friday, October 28, 2011

ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்கள் 'மறந்தவை' தலைப்புக்கு பொறுத்தமாக வந்திருந்தது. அதில் முந்திய பத்தை சமீபத்தில் கட்டம் கட்டி காட்டியிருந்தேன்.

போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று படங்களை இனி காணலாம்.


ஒரு படத்தை கட்டம் கட்டுவதில் அநேகமாய் அனைவரும் நன்றாகவே தேறியிருக்கிறோம்.

சிலப் பல திருத்தங்கள் மட்டும் தேவை.
murugeshஹ்ன் மர்ஃபி ரேடியோ பின்னணியில் தெரியும் சிகப்பு , பெரிய கதவு, இதெல்லாம் ப்ரதான படத்தின் மேல் உள்ள பிடிப்பை குறைத்து விடும்.

SSB படம், க்ளோஸ் அப் ரொம்பவே அதிகம். இன்னும் வெள்ளை பின்னணி அதிகமாய் தெரிந்து, மறந்துபோன சட்டியின் தனிமை 'சோகமாய்'  பிரதிபலித்திருந்தால் பன்ச் கூடியிருக்கலாம்.

AjinHari, கீழே இருக்கும் பெயர் பலகை, படத்தை பார்க்க விடாமல் தடுக்கிறது. அவ்ளோ பெரிய பேர் வேண்டாமே. சிறுசா இனிஷயல் மட்டும் இருந்தா படம் பிரதானப் படும். (வல்லி மேடம், சேம் டு யூ. உங்க படங்களில், பெயர் படத்தின் குறுக்கே போட்டுடறீங்க. நன்றல்ல :) )

varun, நல்ல முயற்சி. ஆனா, மஞ்சள் தண்ணி ஒட்டலை.

அப்ப,  பரிசு யாருக்கு? இவிகளுக்குத்தான்.

மூன்றாம் இடம், Kumaraguru:
 

இரண்டாம் இடம், decon clickz


முதல் இடம், R.N.Surya. மிகத் துல்லியமான க்ளிக் இது. போதிய வெளிச்சம், ஷார்ப், நல்ல சப்ஜெக்ட், சரியான கட்டம் என படம் அருமையாய் வந்திருக்கிறது. 




வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!
தீபாவளி நல்வாழ்த்துக்களும் உரித்தாகுக.
 
நவம்பரில் வேறொரு தலைப்புக்கு, க்ளிக்கிக் கலக்குவோம்.
அறிவிப்பு விரைவில்.



Monday, October 24, 2011

வணக்கம். போட்டிக்கு வந்த ஐம்பதுக்கும் மேலான படங்களை ஆராய்ந்து முதல் பத்து இடங்களை பிடித்தவையை கீழே கட்டம் கட்டியுள்ளோம்.

படங்களை பார்ப்பதற்கு முன், மீண்டும் ஒருமுறை இரு விஷயங்களை ஞாபகப் படுத்த ஆசைப்படுகிறேன்.
1) தேர்வு செய்யப்படும் படங்கள், நடுவரின் பார்வையில் கவனத்தை ஈர்த்தவை. அழகு என்பதற்க்கு  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அளவுகோல் இருக்கும். ஒருத்தருக்கு அழகாய் தெரிவது மற்றவர்களுக்கு தெரியாமல் போகலாம்.

2) PiT குழும நண்பர்கள், பலப்பல வேலைகளுக்கு நடுவே, இந்த இணையதளத்தில் இயன்றவரை புகைப்படத் துரை சார்ந்த பல நல்ல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்கள். மாதாந்திரப் போட்டிகள், உங்களின், எங்களின், ஆர்வத்தை உந்தவும், நமது திறமயை வளர்க்கவுமே நடத்தப்படுகிறது. சிலர் அதன் காரணம் புரியாமல், போட்டிக்கு இணயத்திலிருந்து 'சுட்ட' படங்களை அனுப்பி விடுகிறார்கள். இது, நம்பிக்கை அடிப்படையில் இயங்கி வரும்  போட்டிகளுக்கு கரும்புள்ளியாக ஆகிவிடுகிறது.
இப்படிச் செய்பவர்கள் தவிர்க்கவும்.
மற்றவர்கள், இந்த மாதிரி படங்களை சுட்டிக் காட்டி சம-தளமாக PiT ஐ மாற்ற உதவவும். 



இனி, இந்த மாத போட்டியில் முந்திய பத்தை காணலாம்.

Murugesh


Kumaraguru
 


SSB

Shadab

AjinHari

decon clickZ

jai

Varun



R.N.Suriya

Shanmuga Kumar
 


போட்டியில் கலந்து கொண்டு கலக்கிய அனைவருக்கும் நன்றீஸ்.

Sunday, October 16, 2011

ஒவ்வொரு மாத போட்டி அறிவிப்பின் போது விதிமுறைகளுக்கான லிங்க் கொடுக்கப்படுகிறது. அதில் முதல் விதியே “படங்கள் நீங்களே எடுத்த, உங்களின் சொந்தப் படமாக இருக்க வேண்டும்” என்பதுதான். சென்ற மாதப் போட்டியில் முதல் பரிசாக அறிவிக்கப்பட்ட தினேஷின் படம் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டிருப்பதைப் பின்னூட்டத்தில் விஜய் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து அப்படம் நீக்கப்பட்டு முறையே விஸ்வநாதனின் படம் முதலாமிடத்தையும், சூர்யாவின் இடம் இரண்டாவது இடத்தையும் பெறுகின்றன. வாழ்த்துக்கள் விஸ்வநாதன், சூர்யா! [திருத்தப்பட்ட பதிவு இங்கே.] அக்கறையுடன் சுட்டிக் காட்டிய விஜய்க்கு நன்றி.

தினேஷ் இதை தெரிந்து செய்திருப்பாரானால் பிட் குழுமம் தன் கடுமையான கண்டனங்களை இங்கு பதிவு செய்கிறது. அறியாது செய்திருப்பின் எச்சரிக்கிறது. ஜூன் போட்டியிலும் ஒருவர் இப்படிக் கொடுத்திருந்ததாக விஜய் குறிப்பிட்டிருந்தார். பிட் குழுமம் வாசகர்கள் மேல் நம்பிக்கை கொண்டே போட்டிகளை நடத்துகிறது. அவை உங்களின் திறமையை ஊக்குவிக்க என்பதை மனதில் கொண்டு இது போன்ற தவறுகள் இனியும் நேராமலிருக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Monday, October 3, 2011

பொருள் மேலே ஒளி பட்டுத் திருப்பி அனுப்பப் படறதுதான் ரிஃப்லெக்ஷன்-ன்னு பார்த்தோம். அதுக்கு மாதிரி படம் எங்கே? ஹிஹிஹி.. நாம பார்க்கிற எல்லா படங்களுமே இதுக்கு மாதிரி படங்கள்தான். இப்படி ஒளி சிதறி திருப்பி அனுப்பப்பட்டு நம் கண்களை அடையாட்டா நாம் அதைப் பார்க்கவே முடியாது. ஆக ரிஃப்லெக்ஷன் என்கிறது தினசரி எப்போதுமே நடந்துகிட்டு இருக்கிற விஷயம். ஆகவே படம் எடுக்க இது வெகுவாகவே பார்க்கப்பட வேண்டிய விஷயமும் கூட.

இது வரை ஒளி, அதன் நடத்தை ஆகியவற்றைப் பார்த்தோம். ஒளி மூலத்தின் மூன்று முக்கிய தன்மைகள் பிரகாசம், நிறம், மாறுபாடு என்று பார்த்தோம். படமெடுப்பதில் லைட்டிங் என்பதற்கு படம் எடுக்கப்படும் பொருளே வெளிச்சத்தை விட முக்கிய காரணி என்றும் பார்த்தோம். இந்த படம் எடுக்கப்படும் பொருள் ஒளியை ஊடுருவ விடலாம், உள் வாங்கலாம் அல்லது திருப்பி அனுப்பலாம் என்பதையும் பார்த்தோம். இனி மேலே இந்தக் கடைசி விஷயத்தை மேலும் கவனிக்கலாம்.

பொருள் ஒளி முழுவதையும் ஊடுருவ விட்டால் அதை பார்க்க முடியாது. அதே போல முழுக்க உள்வாங்கி விட்டாலும் பார்க்க முடியாது. இந்த இரண்டிலுமே ஒளி பொருள் மேலே பட்டு சிதறி நம் கண்களை வந்து அடையவில்லை. நல்ல காலமா இயற்கையில இந்த இரண்டு எக்ஸ்ட்ரீம்களிலும் விஷயங்கள் 100% ஆக இல்லை. பெரும்பாலும் கொஞ்சமாவது ஒளி சிதறி பொருளை நாம் பார்க்க முடிகிறது. ஆகவே இந்த ஒளிச் சிதறலை சரியாக புரிந்து கொள்வதும் மேலாளுவதுமே போட்டோகிராபில லைட்டிங் என்பதில் முக்கியமானது.

ஒரு எண்ணச் சோதனை மூலம் இதைச் சரியாக புரிஞ்சு கொள்ள முயற்சி செய்யலாம்.

ஒரு மேசை மேலே ஒரு தடிமனான வழ வழன்னு இருக்கிற சாம்பல் நிற காகிதத்தை கற்பனை செய்யுங்க. சாம்பல்(க்ரே)ன்னா இது மேலே பென்சில்ல எழுதினா தெரியணும். அதே சமயம் யாரும் அதை வெள்ளைன்னு நினைக்ககூடாது. சரியா?

உதாரணத்துக்கு இப்படி:


அதே போல ஒரு சாம்பல் நிறத் தகடு கற்பனைக்கு கொண்டு வாங்க. பேப்பர் அளவே அதுவும். அதே நிறம் வழ வழப்பு.

இப்படி இருக்கலாம்:


ரைட், அதே மாதிரி அளவு, நிறம், வழவழப்போட ஒரு செராமிக் டைல்-உம் கற்பனைக்கு வரட்டும்.

இப்படி:


இது மூணையும் (கற்பனை செய்து) பார்த்தா, ஒவ்வொண்ணும் ஏன் வித்தியாசமா இருக்கு? இதுல எதுவும் ஒளியை ஊடுருவ விடலை. (அதுக்குத்தான் காகிதம் தடிமனான்னு சொன்னோம்!). எல்லாமே ஒரே அளவு ஒளியை உள்வாங்கியது. அதனாலதான் எல்லாமே ஒரே நிறமா இருக்கு! சரிதானே? அப்ப இந்த மூன்றுமே ஒளியை வித்தியாசமா திருப்பி அனுப்புகின்றன. இது கற்பனையிலேயே எப்படித் தெரிஞ்சது? நாம் இந்த பதிவுகளில பார்க்கபோகிற எல்லாமே ஏற்கெனவே நம்ம தினசரி வாழ்க்கையில பார்த்தவைதான். அவற்றை இங்கே கவனத்துக்கு கொண்டு வரோம். அவ்வளோதான்.

(இன்னும் தெரிந்து கொள்வோம்)

காரமுந்திரி I.
காரமுந்திரி II

Sunday, October 2, 2011

வணக்கம் நண்பர்களே.

வாழ்க்கைச் சக்கரம் எம்புட்டு வேகமா சுழலுதுங்கரது நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியணும்னு இல்லை. ஒரு காலத்துல வீட்ல ரேடியோ இருந்தா கெத்தான விஷயம். அப்பாலிக்கா கறுப்பு வெள்ளை டயனோரா டிவி இருந்தா பெரிய விஷயம். கலர் டிவி வந்து, ஃப்ளாட் ஸ்க்ரீன் வந்து, LCD/Plasma எல்லாம் வந்த வேகம் அசாத்யம். இப்ப 3D அது இதுன்னு அடுத்த கட்டத்துக்கு ஆயத்த மாயிட்டோம்.
என்னதான் புதுசு புதுசா தொழில்நுட்ப விஷயங்கள் வந்தாலும், ஞாயிற்றுக் கிழமை பிரியாணி சாப்பிட்டுட்டு, அந்த பழைய மர்ஃபி ரேடியோவில் கிர்ர்ர் சப்தத்தின் ஊடே, ஜானகியின் பழைய ராஜா பாடல்களை கேட்கும் சுகம் எந்த ஐப்-பாட்டிலும் கிடைப்பதில்லை.

விஷயத்துக்கு வாரேன். இந்த மாதப் போட்டிக்கான தலைப்பு, "மறந்து போனவை'.

அதாவது, புழக்கத்திலிருந்து மறைந்து போன, நாமெல்லாம் மறந்து போன விஷயங்க்ளை, தேடிப் பிடித்து போட்டிக்கு அனுப்ப வேண்டும்.

உதாரணத்துக்கு: மர்ஃபி ரேடியோ, சைக்கிள் டயனமோ, ஹால்டா டைப்ரைட்டர், கெரோஸின் அடுப்பு, இங்க் பேனா, வயர் சேரு, ஸ்லேட்டு பல்பம், சாக்பீஸு, ராந்தல் விளக்கு, எவெரெடி டார்ச்சு, மண் சட்டி, இத்யாதி இத்யாதி...

ஜமாய்ங்க.

போட்டி விதிமுறைகள் இங்கே.
படங்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி 15-10-2011.

source: shameer



source: tmab2003




 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff