Tuesday, September 25, 2012


அன்பு நண்பர்களே,

இந்த மாதம் `வெற்று`(EMPTY) புகைப்பட போட்டிக்கு 130க்கும் மேற்பட்ட படங்கள் வந்துள்ளது மிக்க மகிழ்ச்சியளிக்கின்றது.. 



        இதில் முதல் சுற்றிற்கு முன்னேறிய படங்களை பார்ப்போம்..


Aaryan

  

Senthil kumar



 James





Amaithi charal




Balaji baskaran





Durai





Ganesan





Jagadesh



Kavai prabhu



Kumaraguru



Rajkumar



Rohini



Senthil kumar




Shravyan



Snapper



TVN vijay prakash



Viswanath



Aravind



Muthukumaran



Saravanan



Sivapri



Umashankar



Venkiraja



தமிழ் வாசகன்




விரைவில் முதல் மூன்று இடங்களை பிடித்த படங்களுடன் தங்களை சந்திக்கின்றோம்

நன்றி
கருவாயன்

Monday, September 24, 2012


“சாலையோரக் குழந்தைகளை எடுத்தப் புகைப்படங்கள் அல்ல. சாலையோரக்  குழந்தைகளே புகைப்படக் கலையைக் கற்றுக் கொண்டு, தாங்கள் வாழும் சூழலையும், தங்களின் வாழ்க்கையையும் காட்சி மொழியாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.”









செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்கப்பட்ட இக் கண்காட்சி இன்று நிறைவுறுகிறது. இடம் பெற்றிருக்கும் தொகுப்பான புகைப்படப் புத்தகமும் கண்காட்சிக்கு செல்கிறவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. ஆர்வம் இருப்பவர்கள் நேரத்தை ஏற்படுத்திக் கொண்டு கண்காட்சிக்கு சென்று இச்சிறுவர்களின் திறமைக்கு அங்கீகாரம் அளித்திடக் கேட்டுக் கொள்கிறோம்.
***     

Saturday, September 22, 2012

றவைகளைப் படம் பிடித்தலைப் பொறுத்த வரை இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லஸ் கியர்டன் (1862 -1928) என்பவரைப் பிதாமகர் என்று சொல்லலாம்.  அவர் தனது இருபத்தி இரண்டாவது வயதில் இயற்கைக் காட்சிகள் பற்றி (வனங்கள், வனவிலகுகள் இவை பற்றி) கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார்.  அப்போது அவருக்குத் தோன்றியது கட்டுரைகள் படங்களோடு இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே என்று.  உடனே படம் பிடிப்பதில் இறங்கினார். (இறங்கினாரா ஏறினாரா என்பது என் தீராத சந்தேகம்.)


 (சார்லஸ் கியர்டனும் அவர் சகோதரர் ரிச்சார்டும் பறவை படம் பிடிக்கிறார்கள்.  இது எப்படி இருக்கு?  ஆடுமா?  ஆடாதா?  படம் வருமா?  வராதா?  கேமிரா லென்ஸின் மூடிதான் ஷட்டர் என்று இருந்த காலம் அது.)

பறவைகளோ அவருக்கு போஸ் கொடுக்காமல் பயத்தில் பறந்து சென்றன.  அவர் உடனே ஒரு கூடாரத்துள் ஒளிந்திருந்து படம் பிடிப்பது சுலபம் என்பதைக் கண்டறிந்தார்.  அவர் தயார் செய்த மாய்மால கூடாரங்கள் (camouflage tents) பிரபலமாயின.  அவரது கண்டு பிடிப்பு பறவைகளோ விலங்குகளோ மாய்மால கூடாரங்கள் மனிதனைத் தவிற வேறு எந்த உருவத்தில் இருந்தாலும் அவற்றைக் கண்டு கொள்வதில்லை, பயப் படுவதில்லை என்பது.

கியர்டனுக்குப் பின் பறவைகளைப் படம் பிடிப்பதில் உலகப் புகழ் பெற்றவர் எரிக் ஜான் ஹாஸ்கிங்க் (ஆர்டர் ஆஃப் தெ ப்ரிடிஷ் எம்பையர்) (1909 – 1991) ஆவார்.

ஹாஸ்கிங் பல படங்கள் எடுத்த போதிலும் அவர் உலகப் புகழ் பெற்றது அவர் ஒரு ஆந்தையைப் படம் பிடித்தபோது அவருக்கு ஏற்பட்ட ஒரு விபத்தினால் தான்.  அந்த் ஆந்தை தன் கூரிய நகங்களினால் அவரது இடது கண் விழியினைப் தோண்டி எடுத்துச் சென்று விட்டது.

அதன் பிறகு அவரது பறவைகள் படங்கள் அவருக்குப் பல பட்டங்களையும், பதவிகளையும் கொண்டு சேர்த்தன.
 
உலகில் தான் எடுத்த பறவைகள் படங்கள் கொண்டு சேர்த்த பணத்தைக் கொண்டே வாழ்க்கை நடத்திய ஒரே மனிதர் அவர் என்று சொல்வார்கள்.

 எரிக் ஜான் ஹாஸ்கிங்

 ஹாஸ்கிங்க் எடுத்த ஆந்தை படம்

நம் நாட்டில் பறவைகள் படம் பிடிப்பதிலோ, அவை பற்றி ஆராய்ச்சிகள் செய்வதிலோ முன்னோடி என்றால் “இந்தியாவின் பறவைகள் மனிதன்” என்றழைக்கப் பட்ட பத்ம விபூஷன் டாக்டர் சாலிம் அலி யைச் சொல்ல வேண்டும்.

 டாக்டர் சாலிம் அலி


பல புத்தகங்கள் எழுதிய, படங்கள் எடுத்த, ஆராய்ச்சிகள் செய்த டாக்டர் ஸாலிம் அலி அவர்கள் பறவைகள் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கக் காரணம்மயிருந்தது ஒரு நாள் அவர் கண்ணில் பட்ட, தோட்டத்தில் செத்துக் கிடந்த மஞ்சள் தொண்டை கொண்ட சிட்டுக் குருவி!

 மஞ்சள் தொண்டைச் சிட்டுக் குருவி


நான் திருச்சியில் இருந்த போது இந்த பெரியவர் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார்.  அன்று மாலை அவர் எங்கள் வன விலங்குப் பாதுகாப்புச் சங்கத்தின் கூட்டத்தில் தலமை தாங்கிப் பேச வேண்டும்.  அவரை அறிமுகம் செய்ய வேண்டியது காரியதரிசியான என் வேலை.  அதனால் அவரை நிகழ்ச்சி துவங்கும் முன் எங்கள் வீட்டிற்குத் தேனீர் விருந்திற்கு அழைத்திருந்தேன். 

முதல் நாள் இரவு எனது தாயின் உடல் நிலை திடீரெனெக் கவலைக் கிடமாகியதால் நான் அவசர அவசரமாக இரவு 11 மணிக்குச் சென்னைக்குக் கிளம்ப வேண்டியதாயிற்று.  உடனே என் பேச்சினை ஒலிப் பதிவு செய்து மனைவியிடம் கொடுத்து விட்டு சென்னை சென்றேன். 

திட்டமிட்ட படி சாலிம் அலி அவர்கள் எங்கள் வீட்டிற்கு மறு நாள் மாலை வந்தார்.  தேனீர் விருந்தும் நடந்தது.  அன்று மாலை சங்கக் கூட்டமும் நடைபெற்றது..  ஆனால் நான் தான் கொடுத்த் வைக்க வில்லை அந்தப் பெரியவரோடு அன்று கலந்துரையாட!
***
Legend Talks..
திரு கல்பட்டு நடராஜன்


தொடர்புடைய முந்தைய பதிவுகள்:

Monday, September 3, 2012

‘வெற்று’ அல்லது காலி. EMPTY. இதுதான் நண்பர்களே இந்த மாதத் தலைப்பு.

பார்த்ததுமே காலியாக இருப்பதை உணர வைப்பதாக, வெற்றிடத்தின் தாக்கம் தெரிவதாக இருக்க வேண்டும் படங்கள்.

மாதிரிக்கு சில படங்களைப் பார்ப்போமா?

# 1 ராமலக்ஷ்மி


# 2 நவ்ஃபல்


# 3 நவ்ஃபல்


# 4 ராமலக்ஷ்மி


# 5 நவ்ஃபல்


#6 ராமலக்ஷ்மி


#7 ராமலக்ஷ்மி


#8 நவ்ஃபல்


#9 ராமலக்ஷ்மி


#10 நவ்ஃபல்


# 11 ராமலக்ஷ்மி


#12 நவ்ஃபல்


#13 ராமலக்ஷ்மி


போட்டிக்கான விதிமுறைகள் இங்கே.

கடைசித் தேதி: 20 செப்டம்பர் 2012
***
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff