Tuesday, July 29, 2014

வணக்கம். போட்டியில்  கலந்து கொண்ட அனைவருக்கும் மிக மிக நன்றி.
வெள்ளையும் மஞ்சளையும் அள்ளி வீசி இருந்தார்கள் போட்டியில் பங்கு கொண்டவர்கள்.

படங்களை ஆராயும்போது 'நான்' 'நான்' என்று அநேகம் படங்களும் கைதூக்கின முதல் இடங்களை பிடிக்க.

பார்த்ததும் கண்ணுக்கு பிடித்து வசீகரம் செய்தது இந்த சில படங்கள்:
#S.Robert

#

#ஜெயந்த்

#Appoi.

#

#

#Karthi

#Amudha Hariharan

#Rajendiran

#alexaldericjero


#KARTHIK BABU


இன்னும் சில படங்கள் வாவ் போட வைத்தன!
# Sathishkumar Balan

#Durai

#Sathiya




இந்த மூன்று படங்கள் வெற்றியைத் தேடின!

மூன்றாம் இடத்தில் Bilal Mahaboob Ali . கலைக்கும் கருத்துக்கும்!



இரண்டாம் இடத்தில் Rajendiran. முயற்சிக்கு!



முதல் இடத்தில் Vinoth.S. வசீகரித்த அழகுக்கும் நேர்த்திக்கும் !



வாழ்த்துக்கள் அனைவருக்கும். நன்றிகளும்.
**

நண்பர்களே,

படங்களை அனுப்பும்போது File name மட்டுமின்றி மின்னஞ்சலின் subject_லும் உங்கள் பெயர் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் படம் ஆல்பத்தில் சேரும்போது உங்கள் பெயர் தானாக update ஆகும். சிறப்புக் கவனம் பெற்ற படங்களை எடுத்த பலரது பெயர்கள் தெரியவில்லை. இங்கே comment செய்தால் பெயர்கள் சேர்க்கப்படும்.

விரைவில் அடுத்த மாதப் போட்டி அறிவிப்பு வெளியாகும்.

-PiT
***

Wednesday, July 9, 2014

வணக்கம் பிட் மக்கா,நலந்தானா??

இன்றைய கட்டுரையில் நாம் High Pass பில்டரை பயன்படுத்தி படத்தை எப்படி ஷார்ப் செய்வது என பார்க்கலாம்.... High Pass பில்டர் படத்தினை ஷார்ப்பன் செய்துகொள்ள அருமையான பில்டராகும்.அதாவது உங்களது படத்திலிருக்கும் Edges களை மட்டும் கண்டுபிடித்து ஒரு outline தந்துவிடும் அந்த Edgesகளுக்கு நீங்கள் எத்தனை பிக்ஸல்களை  தேர்வு செய்கிறீர்களோ அந்த பிக்ஸல் கான்டிராஸ்டினை படத்தின் Edgesகளில் அப்ளை செய்ய உங்களது படத்தில் ஷார்பன் கூடியிருக்கும்.


இதுதாங்க High Pass பில்டரின் தியரி இனி பிராக்டிக்கல்ஸ்கு போகலாமா?

முதலில் உங்களது படத்தை போட்டோஷாப்பில் திறக்கவும். பின்னர்
இப்போது உங்களது பேக்கிரவுண்டு லேயரை டூப்ளிகேட் செய்துகொள்ளவும்.(CTRL+J).

© Nithi Clicks


இப்போது Filter>Other>High Pass என்பதனை தேர்வுசெய்யவும்.

© Nithi Clicks


இப்போது தோன்றும் High Pass மெனுவில் உங்களுக்கு தேவையான ரேடியஸை கொடுக்கவும்.

© Nithi Clicks
அதாவது High Pass பில்டரைப்பொருத்தவரை Radius 1 லிருந்து 2 பிக்ஸல்களுக்கு மிகாமல் இருப்பது நல்லது.இல்லையேல் இந்த High Pass பில்டர் படத்தில் Halos ஐ உருவாக்கிவிடும்.

இங்கு மற்றொரு விஷயத்தையும் உங்களுடன் நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.குறிப்பாக இந்த High Pass பில்டர் பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் கோட்டைவிடுவது இந்த இடத்தில் தான்.அதாவது High Pass பில்டர் கொண்டு ஷார்பன் செய்யப்படும் படங்கள் அனைத்துமே பெரும்பாலும் Color Frings களை உருவாக்கும்.இதனை கட்டாயம் நீக்கவேண்டும்.

கீழேயிருக்கும் படத்தை பாருங்கள் படத்தை Zoom செய்து பார்க்கையில் Color Fringsகளை காணலாம்.

© Nithi Clicks


இதனை சரி செய்ய High Pass பில்டர் Apply செய்தவுடன் Image>Adjustments>Desaturate செய்துகொள்ளவும்.(Shift+Ctrl+U).

© Nithi Clicks

Desaturate செய்தவுடன் படத்தில் Color Frings கள் நீக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

© Nithi Clicks


சரி High Passபில்டரை Apply செய்துவிட்டோம்,ஆனால் படத்தில் என்னவோ ஒருவித அவுட்லைன் தானே தெரிகிறது.அதுவும் Gray நிறத்தில்.... ???


ஆம் இந்த High Pass பில்டர் Blending மோடுகளுடன் தொடர்புடையது எனவே உங்களது Blending மோடை கட்டாயம் மாற்றவேண்டும்.நான் ஏற்கனவே எழுதியிருந்த புகைப்படக்கலைஞர்கள் அவசியம் அறிந்திருக்க வேண்டிய Blend மோடுகளில் 50% Gray நிறத்தோடு தொடர்புடைய Blend மோடு Overlay அல்லது Softlight என குறிப்பிட்டிருக்கிறேன்.எனவே இப்போது உங்களது லேயரின் Blend மோடை Overlay அல்லது Softlight க்கு மாற்ற 50% Gray வானது transparant ஆக‌ மாற ஷார்பான படம் தயார்.

© Nithi Clicks

படத்தில் ஷார்பன் அதிகமாக இருப்பின் High Pass லேயரின் Opacity யை குறைத்துக்கொள்ளவும்.

© Nithi Clicks


நன்றி,
என்றும் அன்புடன்,
நித்தி ஆனந்த்






 










 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff