Sunday, November 30, 2014

வணக்கம் நண்பர்களே!

இம்முறை முதல் தேர்வு இன்றியே போட்டி முடிவுக்குச் செல்கிறோம். மனிதனால் உருவாக்கப்பட்ட பொருட்கள் என்ற தலைப்பின் முடிவை அறிவிப்பதில் பெரிய வேலையாக இருக்குமோ என நினைத்திருந்தேன். ஆனால், இலகுவான தலைப்பில் ஆர்வம் இல்லைபோல் உள்ளது. சவாலான போட்டியில்தான் ஆர்வமாக இருப்பீர்களோ என சிந்திக்க வைக்கிறது. மேலும், ஒருவர் ஒரு படத்தை மட்டுமே அனுப்ப வேண்டும் என்பதற்கேற்ப அடுத்த போட்டிக்கு படங்களை அனுப்பி வையுங்கள்.

வெற்றிபெற்ற படங்களைப் பார்க்குமுன் சில கவனத்தை ஈர்த்த படங்களைப் பார்ப்போம்.

# சரவணன்
அழகாக இருக்கிறது. ஆனாலும் தலைப்பு இப்படத்தில் முக்கியத்துவம் பெறவில்லை. நல்ல முயற்சி.

இரா.குண அமுதன்
எல்லா மொம்மைகளும் படத்தில் வெட்டப்படாமல் தெரிந்து, இடப்பக்க கீழ் மூலையில் வெளிச்சம் இல்லாதிருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மொம்மை வெட்டப்பட்டதும் வெளிச்சமும் உறுத்தலாக உள்ளது. நிறம் சிறப்பாக உள்ளது. 

# விஸ்வநாத்
பைக் focus ஆகவும் நபர் out of focus ஆகவும் இருந்திருந்தால் கவனம் பைக்கை நோக்கியிருந்திருக்கும். மேலும், இடப்பக்கம் இடைவெளி (space) வேண்டும். பாதணி இறுக்கமான வெட்டப்பட்டுள்ளது. நல்ல முயற்சி. கருப்பு வெள்ளையில் நன்றாக உள்ளது.

# வின்சென்
கருப்புப் பின்புலத்தில் கருப்பான பொருட்களை படம்பிடிப்பது இலேசான விடயமல்ல. பொருள் தெரியவும் வேண்டும். ஒட்டுமொத்தக் காட்சியும் வேண்டும். இவ்வாறான நேரங்களில் சிறப்பான ஒளி அமைப்புதான் கைகொடுக்கும். இங்கு, பொருளை வெளிப்படுத்துவதில் மேலும் கவனம் தேவை. மிக நல்ல முயற்சி

மேலும் சில படங்கள் நன்றாக இருப்பினும் தெளிவின்மை, அதிக ஒளி, இரைச்சல் என்பவற்றினால் இங்கு குறிப்பிடவில்லை. அனித்தா, தயு, சிறினி,  சித்தாத், பிறிமிலா ஆகியோரின் படங்கள் சிறப்பாக இருப்பினும் குவியம் (focus), தெளிவு (sharpness) என்பவற்றில் இன்னும் சற்று கவனமெடுத்திருந்தால் சிறப்பாக வந்திருக்கும். அப்பாச்சர் (aperture) எண் குறைவாக இருந்தால் படத்தில் தெளிவு குறைந்துவிடும். அத்தோடு குவியமும் சரியாக இருக்க வேண்டும். அடுத்து வெற்றி பெற்ற படங்கள்.

மூன்றாமிடம்:

# இர்பான்

அப்பாச்சர் f/3.5 இருப்பதனால் தெளிவு குறைவாகவுள்ளது. ஆனாலும் தலைப்புக்குப் பொருத்தம், பட அமைப்பு என்பனவற்றினால் 3ம் இடம் பெறுகிறது.

இரண்டாமிடம்:

# கோபி
சாதாரணமான ஆனால் அழகாக படமாக்கப்பட்டுள்ளது.

முதலிடம்:

# வாகீசன்
தெளிவு, சிறப்பான ஒளிப் பாவனை என்பவற்றால் முதலிடம்.

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.  

Wednesday, November 19, 2014

 வணக்கம் பிட் மக்கா நலம்தானா?

***இன்றைய கட்டுரை e-publishing தொடர்பான கட்டுரையாகும். 'என்னது? புகைப்படக் கலைக்கும் e-publishing_க்கும் என்ன தொடர்பு?' ன்னு உங்களுக்குள் ஒரு கேள்வி எழுவது நியாயம்தான்:)!  மேலே வாசியுங்க, புரியும் மக்கா..**

நீங்கள் புகைப்படக்கலை குறித்தோ அல்லது போட்டோஷாப் குறித்தோ இணையத்தில் இலவசமாகவோ அல்லது விலைகொடுத்து e-புத்தகங்களை வாங்கும் போது அதனை கணினியில் திறக்கமுடியாமல் அவதிப்படும்போது இக்கட்டுரை உங்களுக்குப் பயனளிக்கும்.

சமீபத்தில என்னோட நண்பர் ஒருவர் இணையத்தில் Flash Photography குறித்த ஒரு புத்தகத்த விலைகொடுத்து வாங்கியிருக்கிறார். அதாவது பதிவிறக்கியிருக்கிறார், பதிவிறக்கம் (download) முடிந்ததும் அதனை கணினியில் திறக்க முற்படும்போது கணினியில் அந்த கோப்பு திறக்கப்படவில்லை. இத்தனைக்கும் அவரது கணினியில் விண்டோஸ் 8 தொகுப்பினையே பயன்படுத்துவதாக கூறினார். பின்னர் அவரது samsung tab இல் முயற்சி செய்திருக்கிறார், அதிலும் திறக்கவில்லை என்றதும், சுமார் 40 டாலர்களுக்கு வாங்கிய புத்தகம் அவ்ளோதானானு நினைத்து என்னை தொடர்புகொண்டார்.

அதாவது இணைய‌த்தில் விற்கப்படும் புத்தகங்கள் அனைத்தும் pdf கோப்பாகத்தான் விற்கப்படுகிறது என நீங்கள் நினைத்தால் அது தவறு, தற்சமயம் சந்தையில் விற்பனைசெய்யப்படும் பெரும்பாலான புத்தகங்கள் ebook அல்லது epub என்ற பார்மேட்டில் விற்பனைசெய்யப்படுகிறது.

உதாரணமாக நீங்கள் Amazon.com இல் e-புத்தகங்கள் வாங்கினால் அவர்களே amazon kindle என்ற மென்பொருளை பரிந்துரை செய்வார்கள்,ஆனால் பிறதளங்களிலிருந்தோ அல்லது உங்களுடைய நண்பர்கள் வாங்கிய புத்தகங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்ள உங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட இவ்வகையான e-books களை கணினியில் நேரடியாக திறக்கமுடியாது என்பதனை நினைவில் கொள்ளவும்.

இதுமட்டுமில்லாமல் நம்மில் பலரும் pdf reader இருந்தாலே e-புத்தகங்களை படித்துவிடலாம் என நினைக்கின்றனர் ஆனால் ebook,epub போன்ற பைல் பார்மேட்டுகளை பொதுவாக எல்லா pdf ரீடர்களும் திறக்காது.

அதெல்லாம் சரி தீர்வு என்னென்னு சொல்லனுமில்லையா?

ஒரு சில இலவச மென்பொருட்கள் மூலமாக‌ உங்களது e- புத்தகங்களை திறந்துகொள்ளலாம்.

எனக்கு இந்த epub கோப்பை கணினியில் படித்தாலே போதும் மேற்படி எந்த ஆப்ஷனும் எனக்கு தேவையில்லை கணினியிலும் அதிக இடம்பிடிக்காமல் லைட் வையிட்டா இருந்தாலே போதும்னு நினைக்கிறவங்க Adobe Digital Editions பதிவிறக்கம் செய்து கணினியில் பயன்படுத்திக்கொள்ளவும்.

எனக்கு இந்த epub  கோப்பை நான் வேறொரு பார்மேட்டுக்கு கன்வர்ட் செய்யபோகிறேன் அப்படின்னு நீங்க நினைச்சா நீங்க Calibre வை பயன்படுத்துங்கள்.

எனக்கு இத தனியா ஒரு அப்ளிகேஷனா நிறுவாமா என்னோட pdf reader மூலமாகவே இந்த கோப்புகளை படித்தால் போதும்னு நீங்க நினைச்சா நீங்க sumatra pdf reader பயன்படுத்துங்கள் அல்லது foxit reader  பயன்படுத்தலாம்.


இப்போது பாருங்கள் திறக்கமுடியாமல் சிரமப்பட்ட நண்பரது e-book ஆனது adobe digital editions மூலமாக திறக்கப்பட்டதை காணலாம்.


குறிப்பு: 

இதே கோப்புகளை உங்களது ஆன்ட்ராய்டு அலைபேசியிலோ அல்லது ஆன்ட்ராய்டு டேபளட்களிலோ திறக்க வேண்டுமென்றால் Sumatra pdf reader Foxit Reader இன் ஆன்ட்ராய்ட் பதிப்புகளை உங்களது அலைபேசியிலோ அல்லது டேப்ளட்டிலோ நிறுவிக்கொள்ளுங்கள்.

நன்றி
என்றும் அன்புடன்,
நித்தி ஆனந்த்



Tuesday, November 11, 2014

 வணக்கம் பிட் மக்கா. நலமா?

***
DXO Optics Pro 8….ம்ம்ம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் சுமார் 150லிருந்து 200 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு இமேஜ் எடிட்டிங் டூலாகும்.
** 

DXO Optics Pro ன் பதிப்பு 10 சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது.எனவே அந்நிறுவனம் தனது பழைய பதிப்பான 8.5 இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் 31-1-2015 க்குள்ளாக கீழேயிருக்கும் சுட்டியை கிளிக் செய்து உங்களது மின்னஞ்சல் முகவரியை தெரிவித்தாலே போதும்ஆக்டிவேஷன் எண்ணை இலவசமாகவே தருகிறார்கள்.


#
 
#
 
 
#
 
 

 
DXO Optics Pro 8 கிட்டத்தட்ட அடோபியின் லைட்ரூமுக்கு இணையாக பணிபுரியும். பொதுவாக‌ விண்டோஸ் xp பயன்படுத்துபவர்கள் லைட்ரூமின் புதிய பதிப்புகளை (since version 4) பயன்படுத்தமுடியாது.

ஆனால் DXO Optics Pro 8, Windows XPயிலும் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Raw கோப்புகளையும், jpg கோப்புகளையும் கையாள்கிறது.
 
"பொதுவாக இமேஜ் எடிட்டிங்கில் போதிய அனுபவமில்லாதவர்களுக்கு பயனளிக்கும் விதமாக ஆட்டோ மோட் இருப்பது இதன் சிறப்பாகும்."
 
#

ஒரு புகைப்படக்கலைஞருக்கு தேவையான  அம்சங்களும் இதிலிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக‌ :

White Balance Correction,
Exposure compensation(Auto mode available)
DXO Smart Lighting(Auto mode available)
Color Rendering(Auto mode available)
Noise Reduction(Auto mode available)
Sharpening using Unsharp mask
Lens corrections

DXO Optics pro பொதுவாக 3 tab ளை கொண்டுள்ளது.
#

1.Organize : இதில்  நீங்கள் எடிட் செய்ய விரும்பும் உங்களது படங்களை தேர்வுசெய்துகொள்ளலாம்.
2.Customize :  இதில்  உங்களது படங்களை எடிட் செய்து கொள்ளலாம்.
3.Process : எடிட்டிங் முடித்தபின்னர் Process என்பதனை கிளிக் செய்து Start Processing என்பதனை கிளிக் செய்ய படமானது process செய்யப்படும். Output செய்யப்படும் படங்களை நீங்கள் விரும்பும் இடத்தில் சேமித்துக்கொள்ளவும் வழி இருக்கிறது.

#

பயன்படுத்திப்பாருங்கள் பயனடையுங்கள்.
நன்றி,
என்றும் அன்புடன்,
நித்தி ஆனந்த்

Wednesday, November 5, 2014

வணக்கம் நண்பர்களே!

இம்மாதப் போட்டித் தலைப்பு: மனிதனால் உருவாக்கப்பட்ட பொருட்கள்

ஊசி, ஆணி என மனிதன் உருவாக்கிய சிறு பொருள் முதல் சமையலறைப் பொருட்கள் உட்பட சுத்தியல், வாள் என வேலைத்தள பொருட்கள் ஆகிய பலவற்றை உள்ளடக்கி நீண்டு சென்று, இதன் எண்ணிக்கை கப்பல், விமானம் போன்ற பிரமாண்டமான பொருட்கள் வரை செல்கிறது. எனவே, பொருள் என்ற வரையறையினுள் உள்ளவற்றை நீங்கள் படமாக்கலாம்.

உதாரணத்திற்குச் சில படங்கள்:


Anton Cruz:









Ramalakshmi:





NITHI ANAND:


படங்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி: நவம்பர் 20, 2014.
வழமையான விதிமுறைகள்: இங்கே

Tuesday, November 4, 2014

முதல் சுற்று வரை வந்து இங்கே தேர்வாகாத படங்களில் பெரிய குறைகள் ஏதும் இல்லை. அவற்றை விடவும் வென்ற படங்கள் எப்படிக் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளன எனப் பார்ப்போம்.

மூன்றாமிடம்:

மூன்றாம் இடத்தைப் பங்கிட்டுக் கொள்கின்றன கீழ்வரும் இரு படங்கள். இரண்டுமே சற்று டைட் ஃப்ரேமிங் ஆக அமைந்து போனது சின்னக் குறை.

# Sureshkumar
பச்சைப் பின்னணி நல்ல காண்ட்ராஸ்ட். மழை (அ) பனித்துளியினூடாக பிரதிபலிப்பைக் காட்டியிருப்பதும் பாராட்ட வைக்கிறது.

# Siva
கனியொன்றும் காயொன்றுமாக காட்டியிருப்பது கவருகிறது.

இரண்டாமிடம்:

# Winsen
பிஞ்சோடு பலா. காயை இரட்டை இலைகள் தாங்கிப் பிடிக்கிற மாதிரியான கோணம். அழகான bokeh.


 முதலிடம்:

#Arun Jose

தனித்தொரு பாகல்! ‘நச்’ என்றிருக்கிறது. அருமையான படம்.

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!

கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.  இம்மாதப் போட்டிக்கான அறிவிப்புடன் விரைவில் உங்களைச் சந்திக்க இருக்கிறார் Anton Croos.
***




Monday, November 3, 2014

முதல் சுற்றுக்கு முன்னேறும் பத்து படங்கள்.

எந்தத் தரவரிசையின் படியும் அமையவில்லை.

#Saravanan

#Rajamanikandan

#Sureshkumar

# Winsen

#ILA_Selliraja

#Arun Jose


#Amudha Hariharan

# Siva

# Alexaldericjero

#Jeyanth

பத்து பேருக்கும் வாழ்த்துகள்! இறுதிச் சுற்று முடிவை நாளை பார்க்கலாம்:)!

**
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff