Thursday, April 2, 2015

நெகடிவ் ஸ்பேஸ் - மார்ச் 2015 போட்டி முடிவுகள்

ணக்கம்.

இந்த மாசம் நிறைய பேர் பங்கேற்றது எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது. அதிலும் பாதிக்குமேல் தலைப்பை உள்வாங்கி படம் எடுத்து அனுப்பியிருந்தீர்கள். முதல் பத்து படங்களிலிருந்து சிறந்த மூன்றைத் தேர்ந்தெடுப்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. சில டெக்னிகல் விஷயங்கள் போக, என்னுடயை சொந்த ரசனையின் அடிப்படையில் தேர்ந்தேடுக்கப்பட்டவையே இந்த முடிவுகள். இந்த பத்துமே சிறந்த படங்கள்தான் என்பதில் சிறிதும் ஐயம் வேண்டாம்.

அப்புறம் இன்னொன்னு கவனிச்சீங்களா? நெகடிவ் ஸ்பேஸ் படங்களுக்கு கருப்பொருளை (சப்ஜெக்டை) நடுவில் வைத்து எடுப்பது அவ்வளவாக ஈர்க்கவில்லை. வலது/இடது/மேல்/கீழ் ஓரங்களில் கருப்பொருளை வைத்தால் ஒரு அழகு இருக்கும்.

இன்னொரு விஷயம், போட்டிக்கு தயவு செய்து ஒரே ஒரு படத்தை மட்டும் அனுப்புங்கள்.

முதலில்... கடும்போட்டிக்குப் பின் அடுத்த சுற்றுக்குள் வரமுடியாமல் போன படங்கள் (வரிசையில் இல்லை).

#சித்ரா சுந்தர்:

ரொம்ப அழகான படம் அழகான நிறம். பார்த்தவுடனே மனதுக்கு அமைதியை தரும் படம். இரண்டே இரண்டு திருத்தங்களை செய்திருந்தா நிச்சயம் முதல் மூன்றுக்குள் வந்திருக்கும். அதாவது, முதல்ல கருப்பொருளை இன்னும் கொஞ்சம் மேல்-இடது மூலைக்கு கொண்டுவர்ற மாதிரி வெட்டியிருக்கலாம் (crop) & பறவையோட தலைப்பகுதில் இன்னும் கொஞ்சம் வெளிச்சம் கொண்டுவந்திருக்கலாம். எப்போவுமே உயிருள்ளவை இடம்பெறும் படங்களின் உயிரே கண்கள்தான். கண்கள் தெளிவா தெரியுற மாதிரி இருந்தா நல்லாயிருந்திருக்கும்.



#பாரிவேல்:

இதுவும் நல்ல வண்ணங்களுடன் அமைந்த படம். துடுப்பு போடும் படகோட்டி, தூரத்தில் தெரியும் பறவைகள் என தங்க வெளிச்சத்தில் அழகு. மேலே சொன்ன மாதிரி... இந்தப் படத்தில் கீழே தண்ணீரை வெட்டியிருந்தால் அருமையாக வந்திருக்கும். அப்புறம்... படம் கொஞ்சம் வலப்புறம் சாய்வா இருக்கு. 


 #ராஜ்குமார்:

அழகான ஒரு ஃபைன்-ஆர்ட் படம். ரொம்ப புடிச்சது எனக்கு. ஆனால், படத்தை பார்த்துக்கொண்டிருக்கும்போது ஒரு பக்கம் உள்ள வெற்றிடத்தின் (அதாவது பறைவை பார்க்கும் திசையில்) மீது மட்டுமே நம் கண்கள் செல்கிறது. வலது பக்கம் உள்ள வெற்றிடம் கொஞ்சம் கண்களை உறுத்துது. கருப்பொருளை நடுவில் வைப்பதில் உள்ள சிக்கல் இது. ஒருவேளை காகத்தின் பார்வை கேமராவை நோக்கி இருந்திருந்தால் நல்லாயிருந்திருக்கலாம்.


#தீபன் சுபா:

ஆஹா! என்ன ஒரு வைப்ரண்ட் நிறம். ரொம்ப நல்லாருக்கு. மேலே சொன்ன அதே கமெண்ட்டுதான் இதற்கும்.


சிறப்புக்கவனம் பெற்ற இரண்டு படங்கள்:

# 5-ம் இடம் - பிரபு:

அழகான குதூகலமான படம். இந்த குழந்தைக் குறும்பு படங்கள் வண்ணத்தில் இருந்தால் இன்னும் நல்லாருக்கும். மேலும், இந்தப் படத்தில் ஷட்டர் வேகம் குறைந்து கொஞ்சம் ப்ளர் ஆகியிருக்கு. வாழ்த்துகள் பிரபு!



# 4-ம் இடம் - வித்யாதரன்:

அழகான காட்சி. மறையும் சூரியனின் மஞ்சள் ஒளி கடலை மின்ன வைக்கிறது. அழகாக ஒதுக்கப்பட்ட நெகடிவ் ஸ்பேஸ். ஒரு சின்ன உறுத்தல்... கருப்பொருள் (படகு) இன்னும் தெளிவாக தெரியும்படி இருந்திருந்தா நல்லாயிருந்திருக்கும். மங்கிய வெளிச்சத்தோடு படகும் கலந்துவிட்டது போல ஒரு தோற்றம். வாழ்த்துகள் வித்யாதரன்.



வெற்றி பெற்ற படங்கள்:
# 3-ம் இடம் - விஜய்:

து மாதிரி படங்கள் எத்தனையோ பார்த்திருக்கிறோம். ஆனால், எத்தனை படங்கள் பார்த்தாலும் சலிக்காத காட்சிகள் இவை. கிராமத்து சிறுவர்களின் இந்த சாகச படங்கள் நாம எல்லாருக்கும் நம்மோடு ஒரு இணைப்பை ஏற்படுத்திவிடும். நமது பால்யம் ஞாபகம் வந்துவிடும். அதான், இந்தப் படத்தின் வெற்றி. வாழ்த்துகள் விஜய்! 


இரண்டு படங்கள் இரண்டாம் இடம் பெறுகிறது. இரண்டும் ஒரே அளவிற்கு என்னை ஈர்த்தது.

# 2-ம் இடம் (1) - கார்த்திக் ராஜா:

ன்ன ஒரு அழகான க்ராபிகல் கம்போஷிசன். சூப்பர்! அந்த காக்கையும் கூட எதோ சொல்கிறது. நீரிலும் நிலத்திலும் அற்புதமான texures. அசத்திட்டீங்க கார்த்திக் ராஜா. வாழ்த்துகள்!



# 2-ம் இடம் (2) - மாஹே தங்கம்:

ன்ன சொல்ல! சான்சே இல்ல. ஆமாங்க, இந்த மாதிரி நிகழ்வை படம் பிடிக்க எத்தனை பேருக்கு வாய்க்கும்? ரொம்ப கொஞ்சமான இடத்தையே கருப்பொருள் பிடித்திரிருந்தாலும், சொல்ல வந்ததை அழகாக சொல்லிவிடுகிறது. புதிய உயிரின் பிறப்பை அழகாக படமாக்கிய மாஹே தங்கத்திற்கு வாழ்த்துக்கள்! படம் ஷார்ப்பா இருந்திருந்தா முதலிடம் சந்தேகமில்லாமல் இந்தப் படத்திற்குத்தான்.



# முதலிடம் - மாஹிரன்:

ம்மியம்! 'அமைதியான நதியினிலே ஓடம்' என நம்மை முணுமுணுக்க வைக்கிறது. காலைப்பொழுது (மாலை?), தூரத்தில் மங்கலான ஒளியில் மரங்கள், ஒற்றைப்பறவை... படகு. ஆஹா! நேர்த்தியான கம்போசிஷன். வாழ்த்துகள் மாஹிரன்!



இந்தப் பத்து பேருக்கு மட்டுமல்ல கலந்து கொண்ட எல்லாருக்கும் வாழ்த்துகள்! புதிது புதிதாய் படம் எடுங்கள். போட்டி அறிவித்த பிறகு தலைப்பிக்கேற்ப எடுங்கள். அது உங்களை மெருகேற்றும். நன்றி.
***

10 comments:

  1. போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  2. போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  3. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. Hi நானும் இந்த போட்டியில் பங்குபற்ற ஆசைபடுகின்றேன்  

    ReplyDelete
  5. வெற்றி பெற்ற அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். படத்திற்கு நடுவரின் கருத்து முழுமையாக போருந்திகிறது. ஆனால் ....

    ஒரு கருத்து. முதலிடம் பெற்ற படம் " தலைப்புக்கு " முழுவதுமாக ஏற்ற படம் என்பதில் எனக்கு ... சந்தேகம் ...

    ReplyDelete
  7. //முதலிடம் பெற்ற படம் " தலைப்புக்கு " முழுவதுமாக ஏற்ற படம் என்பதில் எனக்கு ... சந்தேகம் ..//

    அந்தப் படத்தில் படகு (சப்ஜெக்ட்) தவிர மற்றவை அனைத்தும் ஃபோகசில் இல்லை. கவனம் முழுமையும் அந்தப் படகின் மீது மட்டுமே குவிகிறது. கண்கள் அதை விட்டு அகலவில்லை. சுற்றியுள்ளவை அனைத்தும் நெகடிவ் ஸ்பேஸ் ஆகவே தெரிகிறது. மேலும், எழுத்துக்களை பதிக்க போதுமான வெற்றிடம் அங்குள்ளது.

    ReplyDelete
    Replies
    1. //அந்தப் படத்தில் படகு (சப்ஜெக்ட்) தவிர மற்றவை அனைத்தும் ஃபோகசில் இல்லை. கவனம் முழுமையும் அந்தப் படகின் மீது மட்டுமே குவிகிறது. கண்கள் அதை விட்டு அகலவில்லை.//

      எனவேதான் இது Bokeh என்ற படத்திற்கு பொருந்தலாம்.

      அன்புடன்
      ராஜசேகரன்

      Delete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி