Sunday, February 21, 2016

***வணக்கம் பிட் மக்கா நலந்தானா?...


பொதுவாக‌ புகைப்பட கண்காட்சி, ஓவிய கண்காட்சி போன்ற இடங்களுக்கு சென்று படம்பிடிக்கும்போது பிரேம்களுக்கு நேராக நின்று நாம சப்ஜெக்ட்ட போகஸ் பண்ணும்போது நம்மளோட பிம்பம் படத்தில் பிரதிபலிக்கும் அல்லது வருகின்ற வெளிச்சத்த நாமளே எதிரில் நின்னு மறைத்துவிடுவதால் நாம் பிடிக்கும் படத்திற்கு போதிய வெளிச்சமில்லாமல் படம் இருட்டடிக்க ஆரம்பிக்கும், நாம படத்திற்கு சற்று அருகில் சென்று படம்பிடிக்கலாம்னு பார்த்தா தடுப்பு வேலி அமைத்திருப்பார்கள் இல்லேன்னா கூட்ட நெரிசலில் நாம விரும்புறமாதிரி படம்பிடிக்க இயலாத சூழலில் படம்பிடிக்கும் போதோ, அல்லது நாம சற்று பக்கவாட்டில் சென்று படம்பிடிக்கும் போது கண்டிப்பாக படத்தின் perspective மாறிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.

** 
கீழேயுள்ள படம் இதுபோன்ற சூழ்நிலையில் எடுக்கப்பட்ட படமாகும் படத்தை சரியான exposure கொண்டு எடுத்திருந்தாலும் படத்தில் perspective சரியில்லாமல் இருப்பது ஒரு குறையே.
#

சரி,படத்த எடுத்தாச்சு அத எப்படியாவது சரிசெய்துகொள்ளனும் இல்லையா?இதுபோன்ற குறைகளை சரிசெய்துக்கொள்ள போட்டோஷாப் அறிமுகம் செய்திருக்கும் டூல் தான் Perspective Crop Tool ஆகும். 
முதலில் படத்தை போட்டோஷாப்பில் திறந்துகொள்ளவும். இப்போது பேக்கிரவுண்டு லேயரை இருமுறை கிளிக் செய்ய உங்களது background  லேயர் editable லேயராக மாறிவிடும்.
#

#

இப்போது கிராப் டூலில் இருக்கும் Perspective Crop Tool ஐ தேர்வு செய்துகொண்டு படத்தின் சப்ஜெக்டடின் நான்கு  மூலைகளையும் மார்க் செய்து கொண்டு விசைபலகையில் என்டர் ஐ அழுத்த பெர்ஸ்பெக்டிவ் சரி செய்யப்பட்டு படமானது நேராக வந்துவிடும்.

#

#


Final output:
#

#

என்ன பிட் மக்கா கட்டுரை பயனுள்ளதாக அமைந்ததா? மீண்டும் ஒரு கட்டுரையில் உங்களை சந்திக்கிறேன்

என்றும் அன்புடன்,
நித்தி ஆனந்த்.






Wednesday, February 3, 2016


புகைப்படக் கலையில் தமிழ் நண்பர்கள் திறனையும் ஆர்வத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டுமென்கிற ஒரே நோக்கத்துடன் பாடங்கள், அனுபவக் குறிப்புகளோடு எட்டரை ஆண்டுகளாக இயங்கி வருகிறது நம் PiT என்பதை அறிவீர்கள். இடைவிடாமல் வேறுவேறு தலைப்புகளில் நடத்தப்பட்டு வந்த மாதாந்திரப் போட்டிகள், இனி https://www.facebook.com/groups/488597597986621/ குழுவின் மூலமாக தொடர உள்ளன. ஃபேஸ்புக்கில் கணக்கு இல்லாதவர்கள் முதலில் ஒரு கணக்கை உருவாக்கிக் கொள்வது அவசியம். அதன் பின் மேற்சொன்ன குழுமத்தில் இணைந்திடுங்கள். ஆர்வமுள்ள உங்கள் நண்பர்களையும் சேர்த்திடலாம்.

அதன் பிறகு பிப்ரவரி மாதப் போட்டிக்கான படத்தை கீழ்கண்ட இணைப்பில் வலையேற்ற வேண்டும்: “Feb'2016 போட்டி” https://www.facebook.com/media/set/?set=oa.488598547986526&type=1 

குழும சுவற்றில் பதியாமல், மேலுள்ள இணைப்பைத் திறந்துதான் பதிய வேண்டும். ஒவ்வொரு போட்டி அறிவிப்பின் போதும் அந்தந்த மாதப் போட்டிக்கான ஆல்பத்தின் இணைப்பு  பதிவில் தரப்படும். படங்கள் PiT குழுவினரின் அனுமதிக்குப் பிறகே ஆல்பத்தில் இடம் பெறும்.

புதிய மாற்றமாக, இனிமேல் ஒரு நபர் இரண்டு படங்களை அனுப்ப அனுமதி. மற்றபடி “வழக்கமான விதிமுறைகள்தான்.

இம்மாதத் தலைப்பு : உயிருள்ளவை (Living things) . படம் மனிதர்களாகவோ வேறு உயிரினங்களாகவோ இருக்கலாம்.

 படங்களை அனுப்பக் கடைசித் தேதி: 25 பிப்ரவரி 2016

போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துகள்!
*** 
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff