Saturday, May 17, 2008

பிக்காஸா வண்ணத் திருத்தம்

வண்ணத்திருத்தங்களைப் பற்றி ஏற்கனவே இங்கே படித்திருப்பீர்கள். சுருக்கமாக சொல்லவேண்டுமெனில் காட்சிப் பொருளின் வெள்ளை , உங்கள் படங்களில் முழு வெள்ளையாகத் தெரியவேண்டும், அதேப் போல கருப்பு படத்தில் முழு கருப்பாகத் தெரியவேண்டும்.
பழுப்பாகவோ அல்லது வேறு வண்ணம் கலந்தோ தெரிந்தால் , அதை பிக்காஸாவில் எளிய முறையில் சரிபடுத்துவது பற்றி பார்க்கலாம்.

மாலை வெயில் அல்லது மஞ்சள் விளக்கு வெளிச்சத்தில் எடுத்தப் படங்கள் ,மஞ்சள்/ஆரஞ்ச் வண்ணத்தோடு வரும், மதிய வெளிச்சத்தில் அல்லது ட்யூப் லைட் வெளிச்சத்தில் எடுக்கும் படங்கள் நீலச் சாயலோடும் வரும்.

உங்கள் கேமராவில் White Balance ,AUTO என்று வைத்து இருந்தால் பொதுவாக கேமராவே வண்ணத்தை சரி செய்ய முயற்சிக்கும். Fluorescent,Tungsten என்று தேவைக்கேற்ப வைத்துக் கொள்ளலாம்.


உதாரணத்திற்கு இந்த படத்தில் நீலம் அதிகமாகிவிட்டது போல தோன்றுகிறது ( நீலம் அதிகமாக வேண்டும் என்றே எடுத்தப் படம் என்பது வேறு விஷயம்.)



பிக்காஸாவில் படத்தை திறந்தப்பின் , Tuning பகுதிக்கு செல்லுங்கள்
.



One click fix for color என்று ஒரு பொத்தான் இருக்கும். அதை ஒரு அமுக்கு அமுக்கவும்.





அவ்வளவுதான். நீலம் சாயம் வெளுத்துப் போச்சு டும் டும் டும்.

நீல நிறத்தை தேர்ந்தெடுத்து , அதை குறைத்து இருப்பதை பார்க்கலாம்





இதை செய்தப்பின் படம் இந்த மாதிரி இருக்கும், நீலச் சாயல் இன்றி.



பொதுவாக இந்தப் பொத்தானே உங்களின் அனைத்து படங்களும் போதுமானதாக இருக்கும்.

இன்னொரு முறையும் இருக்கிறது. இதில் நீங்களே வெள்ளை வண்ணத்தை தேர்வு செய்யலாம்.

இந்தப் படத்தில் கொஞ்சம் மஞ்சள் அதிகம்( வீட்டுக்குள் மஞ்சள் வெளிச்சத்தில் எடுத்தப் படமாக இருக்கலாம். )



படத்தை திறந்து Tuning பகுதிக்குப் போனப்பின் .



Neutral color picker என்று ஒருப் பொத்தான் இருக்கும். அதை கிளிக்குங்கள்.




என்ன ஒன்றுமே ஆகவில்லையா? ஏற்கனவே சொன்ன மாதிரி நீங்கள்தான் வெள்ளை வண்ணத்தை தேர்வு செய்யப் போகிறீர்கள். படத்தின் மீது எலிக்குட்டியை ஒட விடுங்கள்.


இந்தப் படத்தில் கோப்பை வெள்ளை வண்ணமாக இருக்கவேண்டும். எலிக்குட்டியை வெள்ளை கோப்பையின் மீது கிளிக்கியவுடன்,



வண்ணம் திருத்தப்படும்




வண்ணம் திருத்தப்பட்ட படம் இங்கே.




அவ்வளவுதான் மேட்டர். வழக்கம் போல உங்களின் சந்தேகங்கள், கருத்துக்களை பின்னூட்டிவிடவும்.

7 comments:

  1. An& அறிமுகப்படுத்திய பிறகு, பிக்காஸா பயன்படுத்திக்கொண்டு இருந்தாலும், இந்த விஷயம் எனக்கு புதிது மற்றும் மிக்க பயனுள்ள கட்டுரை.
    நன்றி!!!

    ReplyDelete
  2. சந்தேகமா???
    இப்ப தான் தெரிஞ்சுக்கிட்டேன்.

    ReplyDelete
  3. ரொம்ப எளிமையாக, அழகான உதாரணத்துடன் எழுதி இருக்கிறீர்கள். உபயோகமான பதிவு. நன்றி.

    ReplyDelete
  4. வணக்கம்.
    மிகவும் பயனுள்ள தகவல்களை அளிக்கும் உங்களுக்கு நன்றிகள். பிக்காஸா‍வை அப்லோடு செய்வதற்கு மட்டுமே பயன்படுத்தி வந்த எமக்கு புதிய செய்திகளை சொல்லியுள்ளீர்கள்.

    ReplyDelete
  5. அண்ணே, என் மூஞ்சி மட்டும் படத்தில் கருப்பா இருக்கு. அதுக்கு எதனா செய்ய முடியுமா?

    பேர் அண்ட் லவ்லி எல்லாம் தேய்க்கச் சொல்லக் கூடாது. :)))

    ReplyDelete
  6. கொத்ஸ்,

    ஜிவாஜில பண்ண மாதிரி எப்படி பண்றதுன்னு ஒரு தனிப் பதிவு போட்டாரேப்பா. பாருங்க.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி