# நவோதயா செந்தில்

# பன்னீர் ஜவஹர்

செந்தில், ஜவஹர் நீங்கள் இருவருமே வாட்டர் மார்க்கை தவிர்த்திருக்கலாம். PiT தளத்தில் மட்டுமல்ல, எல்லா புகைப்படப் போட்டிகளுமே இதைத் தவிர்க்கக் கேட்டுக் கொள்கின்றன என்பதை நினைவில் கொள்க. மேலும் PiT அளவைக் குறைத்தே இப்போது படங்களை சமர்ப்பிக்கக் கேட்பதால் உங்கள் படங்களை யாரேனும் தவறாகப் பயன்படுத்தி விடுவார்களோ என்கிற கவலையும் வேண்டாம். அப்படியும் போட்டுதான் ஆகவேண்டுமெனில் நித்தி க்ளிக்ஸ், வெங்கட்ராமன், நிலா ஆகியோர் படங்களில் உள்ளது போல (ஒபாஸிடி குறைத்து) உறுத்தல் இல்லாமல் ஓரமாகப் பதியலாம்.
# ஷகீவன்

# சத்தியா
# R.N. சூர்யா
வெற்றி பெற்ற படங்கள் கூடுதல் சிறப்பாக அமைந்து விட்டதால் விலகுகின்றன முதல் சுற்றின் பிற படங்கள். மற்றபடி பெரிய குறையென்று ஏதுமில்லை.
இனி, என் ரசனையின் அடிப்படையில் அமைந்த தேர்வுகள்:
மூன்றாம் இடம்: Asjaloys Devadass

வானத்தின் ஆரஞ்சு வசீகரம்.
இரண்டாம் இடம்: குசும்பன்

மேகங்களிலும் நீரின் பிரதிபலிப்பிலும் மிளிருகிறது ஆரஞ்சு. லைட்டிங் பிரமாதம். நேர்த்தியான படம்.
முதல் இடம்: குமரகுரு
அம்மை அப்பனைச் சுற்றி வந்து மாம்பழத்தைத் தட்டிச் சென்ற பிள்ளையாரப்பனைப் போல் சின்னஞ்சிறு கண்ணைச் சுற்றி அற்புதமாக ஆரஞ்சைப் படர விட்டு முதல் இடத்தைத் தட்டிக் கொண்டு விட்டார் குமரகுரு:)!

சிறப்புக்கவனம்:
# நிலா
போட்டி ஆல்பத்தில் பார்த்ததுமே பாராட்டத் தோன்றிய படம்.

படம் நடுவே செல்லச் செல்ல அவுட் ஆஃப் ஃபோகஸ் ஆகியிருப்பதும் நீர்த்திவலைகள் மேல் வெளிச்சம் ஓவர் எக்ஸ்போஸ் ஆகியிருப்பதும் குறைகள். ஆயினும் பளிச் ஐடியாவைப் பளிச் எனக் காட்டிய விதத்தில் சிறப்புக் கவனம் பெறுகிறார் நிலா.
# ராஜசேகரன்
துல்லியமாகப் படமாக்கிப் பிரமிக்க வைத்த விதத்தில் சிறப்புக் கவனம் பெறுகின்றவர் ராஜசேகரன்.

படத்தின் பின்னணி ஆரஞ்சாக இருந்தாலும் ப்ளெயினாக இருப்பதால், நீர்த்துளிகளுக்குள் இருக்கும் ஆரஞ்சு மலர்களையே கருப்பொருளாகக் கண்கள் நோக்குகின்றன. அளவில் அவை சிறியதாகி விட்டது குறை. இதேபடம் இரண்டு அல்லது மூன்று துளிகள்(மலர்கள்) மட்டும் தெரிகிற மாதிரி க்ராபிங் செய்யப்பட்டிருந்தால் நிச்சயம் முதல் மூன்று இடங்களுக்குள் வந்திருக்கும். முடியுமானால் க்ராப் செய்து அனுப்பி வையுங்களேன். காண ஆசை:)! போட்டி ஆல்பத்தில் பார்வைக்கு சேர்த்திடலாம்.
வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்! கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி! தொடர்ந்து பங்கு பெற்று வாருங்கள்! விரைவில் அடுத்த போட்டிக்கான அறிவிப்பு வெளியாகும்.
***