Thursday, June 21, 2007

புகைப்படம்எடுக்கலாம் வாருங்கள் - பகுதி 1

பதிவுலக நண்பர் திரு ஐயப்பன் அவர்களிடம் நான் அடிக்கடி பேசுவது உண்டு. (மிகவும் சரக்குள்ள, சமுதாயத்திற்கு உதவும் எண்ணம் உள்ள அடக்கமான ந(ண்)பர்!). அவரும் இன்னும் சில பதிவர்களும் சேர்ந்து ஒரு புகைப்படக் கலை பற்றிய வலைப்பூ ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறோம். முதலில் சில பேசிக் விசயங்கள் பற்றிய சில பதிவுகளை இங்கேயே தரலாம் என்ற எண்ணத்தில் இந்த பதிவுத் தொடர்.



மேலே உள்ள படத்தை பாருங்கள். ஒரு சாதாரண தினக் காட்சி.என் வீட்டுக்கு அருகில் காலை பள்ளி செல்லும் இளம் மனிதர்களைஏற்றிச் செல்ல தினம் வரும் ஒரு ஆட்டோ. பூத்துக் குழுங்கும் ஒரு அழகிய மரம்.எடுத்தேன் காமிராவை. சுட்டேன் உடனே. .. இதோ ஒரு அழகிய படம்.

இதில் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது?... ஆம் கம்போசிசன் எனப்படும் விசயம். அதாவது நமது படத்தின்எல்லைகள்எது என்று வியூ ஃபைன்டரால் பார்த்து நாம் முடிவு செய்யும் மென்கலை நுட்பம். இதை மனிதர்களாகிய நாம் தான் செய்ய வேண்டும் ...எவ்வளவு காஸ்ட்லியான காமிராவாக இருந்தாலும்! மேலே உள்ள படத்தில் ஆட்டோ இடமிருந்து வலமாக நிற்கிறது தானே.எனவே கம்போஸ் செய்யும்பொழுது வலது பக்கம் அதிக இடம் விட்டுஎடுக்கப் பட்டதால் அழகாக தெரிகிறது... நீங்களும் உங்கள் காரையோ, பைக்கையோ இதே மாதிரி எடுத்து பருங்கள்... அழகாக இருக்கும். ( செல்பேசியில் உள்ள காமிராவே போதும்... கம்போசிங் பழக!)

(பிகு) படத்தின் மீது க்ளிக்கி பெரிதாகப் பார்க்கவும்.

2 comments:

  1. மிக்க நன்றி ஐயா , இன்று தான் உங்கள் வலைதளத்தினை பார்க்கும் பாக்கியம் பெற்றேன். விரைவில் அனைத்து பதிவையும் படித்து எனது நீண்ட நாள் ஆசையான புகைப்பட கலையை கொஞ்சமாச்சும் கற்றுக்குவேன் .
    மிக்க நன்றி
    ராஜா

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி