Tuesday, July 24, 2007

அறிவி்ப்பு: அடுத்த மாத புகைப்படப் போட்டி... நடுவர்கள் - எழுத்தாளர் பாமரன் & செல்லா

வலையுலகப் புகைப்பட ஆர்வலர்களின் கவனத்திற்கு...

சென்ற போட்டி அறிவிப்பு சிலருக்கு தெரியாமலே போய்விட்டது என்று வருத்தப்பட்டு எழுதியிருந்தனர். எனவே மிகவும் முன் கூட்டியே தலைப்பையும் நடுவர்களையும் அறிவித்து விடலாம் என்று முடிவு செய்துள்ளோம். நடுவராக இருக்க பிரபல எழுத்தாளர் பாமரன் அவர்களை தொடர்பு கொண்டேன். "செல்லா, இளைஞர்கள் பலரும் இணைந்து ஆர்வத்துடன் ஒரு காரியத்தை செய்யறீங்க..நான் நிச்சயம் நடுவராகப் பங்குபெறுகிறேன், போட்டியை இன்றே அறிவியுங்க" என்று உறுதியளித்து உற்சாகப்படுத்தினார். (அனைவருக்கும் அவர் ஒரு எழுத்தாளர் என்று மட்டுமே தெரியும்.... தெரியாதது அவரும் ஒரு புகைப்பட ஆர்வலர். ஒரு SLR ( Rebel) எப்பொழுதுமே அவருடன் சுற்றுப் பயணங்களில் பயணிக்கும்! )

சரி இன்னொரு நடுவராக ஆனந்தைப் போடலாம் என்று பாமரனிடம் சொன்னென்.
அவரு எந்த ஊரு ன்னார்... " கலிபோர்னியா" ன்னேன்.
"அப்பா சாமி நமக்கு இந்த சாட், ஈமெயிலுக்கெல்லாம் வசதியோ நேரமோ கிடையாது.. உள்ளூருல யாரையாவது போடு" என்றார்.

அமைதிப்படை சத்தியராஜ் மாதிரி நான் பக்கத்திலேயே கையைக் கட்டிக்கொண்டு "சரிங்க" என்றவனைப் பார்த்து.. அதே மணிவன்னன் ஸ்டைலில்.. "ஏப்பா, நீயே நடுவரா இருந்தின்னா எனக்கும் வசதியாப் போயிரும்ல" என்றார்.

சரி யென்று நானும் MLA பதவிய...ச்சே... (அமைதிப்படை படத்திலேயே மூழ்கிட்டேன்!) ஜட்ஜ் பதவிய.. அட அதாங்க "நடுவர்" பதவிய ஏத்துக்கிடேன்!!

சரி "போட்டியோட தலைப்பு?" நீங்க கேட்கறது நல்லா கேக்குது. அதுக்கு முன்னாடி நம்ம எழுத்தாளரை ரெண்டு வெவ்வேறு பட்ட ஆங்கிளில் பெரிய எந்த் உபகரணமும் இல்லாமல் இருவேறு விதமாகப் படம் எடுத்தேன் சில நாட்களுக்கு முன்பு... ஒன்னுல ஜோல்னா பை எழுத்தாளர் மாதிரியும் ...



இன்னொன்னுல ரஜினியின் அடுத்த பட வில்லன் எஃபெக்டும் வர்ரமாதிரி! இக்கட சூடுங்க...



பாருங்க போட்டுருக்கற சட்டைய கூட மாத்தாம, தலையலங்காரத்த மாத்தாம... ஒரு எழுத்தாளர வில்லனாக்கிட்டேன்! ஒரே ஒரு கிங்ஸ் சிகரெட் + புது ஆங்கிள்...! (இப்ப புரியுதா.. ஏன் பழைய தமிழ் படங்கள்ள வில்லன் எப்பொழுதுமே கையில சிகரெட்டோட தான் வந்தாங்கன்னு! lol!...)

"... அதெல்லாம் சரி.. தலைப்பு" என்கிறீர்களா? .. கொஞ்சமாவது சஸ்பென்ஸ் வேண்டாமா... நாளை காலை... வேண்டாம் இன்னும் 12 மணி நேரத்தில் தலைப்பு, நாள், விதிகள் அறிவிக்கப்பட்டு விடும்!

அட ஒரு க்ளூவாவது குடுத்தா குறைஞ்சா போயிறுவ" ன்னு கேக்கறீங்களா? .. சரி ஒரு க்ளூ தர்றேன்.. "செந்தழல் ரவி அவசரப்பட்டுட்டார் " !

சஸ்பென்சுடன் விடை பெறுவது
ஓசை செல்லா

பிகு: இந்த முறை நடுவரான என்னைத் தவிர ஆசிரியர் குழுவும் களமிறங்குகிறது! சபாஷ்... சரியான போட்டி!

12 comments:

  1. /பாருங்க போட்டுருக்கற சட்டைய கூட மாத்தாம, தலையலங்காரத்த மாத்தாம... ஒரு எழுத்தாளர வில்லனாக்கிட்டேன்! ஒரே கிங்ஸ் சிகரெட் + ஆங்கிள்...! இப்ப புரியுதா.. ஏன் பழைய தமிழ் படங்கள்ள வில்லன் எப்பொழுதுமே கையில சிகரெட்டோட தான் வந்தாங்கன்னு//

    அட போங்க, நீங்க இதெல்லாம் இல்லாமையே வில்லனாட்டம் இருக்கீங்க. Just Kiddging!

    Fun Apart!

    அப்படியே ஒருவாரம் படமா தமிழ்ப்பதிவுகளை ஓட வெச்ச பெருமை உங்க குழுவையே சாரும்! மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. நன்றி இளா.. பாராட்டுக்கும் உங்கள் நகைச்சுவை உணர்வுக்கும். நீங்களும் கலந்துகொள்கிறீர்கள் தானே?

    ReplyDelete
  3. அடுத்த மாத போட்டியில் வெற்றி பெறுபவருக்கு என் சார்பில் புகைப்படக்கலை சார்ந்த ஒரு புத்தகம் பரிசளிக்கப் படும்.

    ReplyDelete
  4. //செந்தழல் ரவி அவசரப்பட்டுட்டார//

    ம்கூம் அனுபவப் பட்டுட்டார்...
    இது ட்ரையல் தான்;)

    ReplyDelete
  5. மிக்க நன்றி சிந்தாநதி!

    ReplyDelete
  6. பதிவுகளில் 'புகை' வரலாமா?

    ReplyDelete
  7. //நீங்களும் கலந்துகொள்கிறீர்கள் தானே?//
    தலைப்பைச் சொல்லுங்க, படம் இருந்தா உடனே "மீ த பர்ஸ்ட்"னு அனுப்பிருவேன். இல்லைன்னாலும் எடுத்து அனுப்புவேன்.

    ReplyDelete
  8. நாங்களும் போட்டோஸ் போடுவோமில்ல

    ReplyDelete
  9. தாய்லந்த் தாய்க்க்குலங்களை போட்டோ புடிக்கணுமா..? ..?.. தாய்லாந்த் விமானதுக்கு டிக்கட் எடுக்காணும்.. எல்லாரும் கொஞ்சம் இடிக்காம தள்ளி நில்லுங்கப்பா... என் 24x SLR க்கு இடம் வேணும்..:-/

    ReplyDelete
  10. aakaa ippadi kalaikkiraangale nammala! enna solla? vayakuduththu vangi kattikkaama vidu... joot.. escape!

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி