முதல் முறையா "நிழல்" Shadow அப்படீங்கிர சொல்லை எங்க கேட்டீங்கன்னு உங்களுக்கு நினைவிருக்கா.. அனேகமா நாலாவதோ - அஞ்சாவதோ படிக்கும்போது இருக்கலாம். கடிகாரங்கள் கண்டுபிடிக்கிரதுக்கு முன்னால் மனிதன் நிழலை வச்சுத்தான் நேரத்தை தெரிஞ்சுகிட்டான்னு ஸையன்ஸ் டீச்சர் சொன்னது ஞாபகம் வருதா..? அந்த கட்டத்துக்கப்புறம் நாம நிழலுக்கு முக்கியத்துவம் குடுக்கிரதுக்கு மறந்தது மட்டும்மில்லாமல் நிழலை ஒதுக்கவே ஆரம்பிச்சுட்டோம். அதுவும் முக்கியமா சொல்லணும்னா.. புகைப்படங்கள் எடுக்கும்போது "நிழல் வராம ஜாக்கிரதையா " படம் எடுக்கிரதிலேயே இருப்போம்.இதுக்காக குனிஞ்சு வளைஞ்சு ஸ்டூல் மேறே ஏறின்னு பல சர்க்கஸ் பண்ணியிருக்கோம். ஒரு கட்டத்துக்கப்புறம் நிழலின் தனித்தன்மைய்யை நாம் கவனிக்க விட்டுவிட்டோம்.
சின்னப்பிள்ளையிலே பெட்ரோமாஸ் வெளிச்சத்திலே விரலால் வித்தை காட்டி காக்கய் - நாய் - மான் - பறவை அப்படீன்னு விளையாடினது நினைவிருக்கா? ( இப்போ யாரு இந்த மாதிரி விளையாடராங்க.. அதான் எல்லாருடைய வீட்டிலேயும் UPS இருக்கே !) இந்த மாத போட்டி உங்களுக்கு மறந்துபோன அந்த க்ஷணங்களை மறுபடி enjoy பண்ணரது ஒரு opportunity தருவது மட்டுல்லாமல் அதை document பண்ணவும் ஒரு வாய்ப்பு தந்திருக்கு. ஆக நிழலை எப்படி நிஜமாக சித்தரிக்கலாம்ன்னு பார்க்கலாமா ?
பகலில் நிழலை படம் எடுக்கணும்னா சூரியனை விட ஒரு பிரமாதமான light source கிடையாது. காலை & மாலையிலே விழும் நிழல் கொஞ்சம் நீளமா இருக்கும். அந்த மாதிரி நேரத்திலே எடுக்கபட்ட படம் இது மாதிரி இருக்கும்.. (Dil Chahtaa hai -- படத்திலே கூட இது மாதிரி வரும்)

கொஞ்சம் வித்தியாசமா சிந்திச்சீங்கன்னா இப்படி கூட வித்தை காட்டலாம்

கொஞ்சம் உங்களை சுத்தி பாருங்க.. நாம இருப்பது காண்ட்ரீட்- காடு ன்னு எல்லாரும் தொண்டை கிழிய கத்தறாங்க.. அட இந்த காண்ட்ரீட் காட்டிலே கூட நிழல் என்னமா கவிதை எழுதியிருக்கு பாருங்க.

எங்களுக்கெல்லாம் பள்ளிக்கூடத்திலே "Arts & Crafts" ன்னு ஒரு வகுப்பு நடத்துவாங்க. காகிதத்தை டீச்சர் சொல்லராமாதிரி மடிச்சு ஒரு ஓரமா மட்டும் வெட்டினா.. விதவிதமா Pattern கிடைக்கும். முக்கியமா இது க்ரிஸ்துமஸ் / நவராத்தி நாட்களிலே சொல்லித்தருவாங்க. தோரணம் தோரணமா தொங்க விடுவோம். ஆனா இவர் கொஞ்ச வித்தியாசமா இந்த மனிதச்சங்கிலியோட நிழலை எப்படி பின்னியிருக்கார்ன்னு பாருங்க. ஒருவேளே cardboard லே பண்ணினா.. இப்படி தான் இருக்குமோ !!

எல்லாரும் Morning Walk போவீங்க… இல்லைனா.. Evening Walk போவீங்க.. இன்னைக்கி கொஞ்சம் வித்தியாசமா Afternoon walk போயிட்டுவாங்க. அப்படி நடக்கும்போது செடி, கொடி, மாடு, மனுஷன் நிழல் "சுவர் (wall) மேல்" எப்படி இருக்கு ன்னு கூர்ந்து கவனிக்கணும். ஏன்னா.. மத்தியான நேரத்தில் விழும் நிழல் Shap மட்டுமல்லாது.. ரொமப்வே துல்லியமா இருக்கும். உதாரணத்துக்கு கீழே இருக்கும் படத்தை பாருங்க. இலையின் வடிவம் மட்டுமில்லை.. நடு நடுவிலே இருக்கும் strands கூட என்ன துல்லியமா இருக்கு. ரெண்டு அடி தள்ளி நின்னு பார்த்தா.. இந்த படத்துக்கு ஒரு Post Card லுக் இருக்குன்னு நான் நினைக்கறேன்

அட, நிழல்னா கறுப்பாத்தான் இருக்கும்ன்னு யாருங்க சொன்னது. இங்க பாருங்க.. நிழலுக்குள் வெளிச்சம்

இன்னொண்ணும் சொல்லறேன்.. நல்ல கும்மிருட்டில்லே வெறும் ஒரு அகல் விளக்கு மட்டுமே வச்சு கூட நிழலை படம் எடுக்கலாம். அப்படி எடுத்த படம் தான் இது. எங்க விளக்கை வைக்கறீங்க.. எப்படி உருண்டு புரண்டு படம் எடுக்கப் போறீங்கங்கிரது உங்க சாமர்த்தியம்

இன்னும் சொல்லணும்ன்னா.. இன்னிக்கி கார்த்திகை தீபம். இன்னைக்கி இரவு இருளும் ஒளியிம் கச்சிதமா இருக்கும். நிழலை படம் எடுக்க இதை விட ரம்யமான ஒரு set up கிடைக்குமா ன்னு எனக்கு சந்தேகம தான். நான் பாருங்க விளக்கெல்லாம் கூட ரெடி பண்ணிட்டேன். சூர்யாஸ்தமனம் ஆகணும், விளக்கை ஏத்தணும் , நிழலை படம் எடுக்கணும்.
முயர்ச்சி பண்ணுங்க... You will surprise yourself.

படங்களெல்லாம் கலக்குது.
ReplyDeleteNicely written ..
ReplyDeleteயாரு இது தீபாவா..பரவாயில்லயே இதுக்கெல்லாம் நேரமிருக்கா..?
ReplyDeleteநல்லா எழுதி இருக்கீங்க.. இன்னும் உருண்டு புரண்டு எடுக்க ஆரம்பிக்கல நான்..
படங்கள் மிக அருமையாக உள்ளது.
ReplyDeleteஎனது பங்குங்கும் ஒரு படம் அனுப்பியுள்ளேன்.பாருங்களேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
the tea cup photo is really superb!
ReplyDeleteஇந்தவார விகடன் வரவேர்ப்பறைய அலங்கரிச்ச பிட் குழுமத்தாருக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteHey man.. amazing pics on the other blog page.. so what cam do u have?
ReplyDeleteInnumoru udharanam
ReplyDeletehttp://flickr.com/photos/tapstyle/3100679680/
http://flickr.com/photos/glebe2037/3100862881/
ReplyDeletehttp://flickr.com/photos/23727600@N08/3092954739/
ம்ம்ம்ம்ம் நல்லாத்தான் சொல்லி இருக்கீங்க. கொஞ்சம் ஜாலியா நிழல் விளையாட்டு விளையாடினேன். அப்புறம் விளக்கை வெச்சு விளையாடிப்பாத்தேன். நிலாவில விளையாடினேன். ஒண்ணும் சரிப்படலை. அப்புறம் சூரிய வெளிச்சம் வந்து ஒரு வழியா ஒரு படம் தேத்தினேன்! :-)
ReplyDeletehttp://chitirampesuthati.blogspot.com/2008/12/blog-post.html
// இந்தவார விகடன் வரவேர்ப்பறைய அலங்கரிச்ச பிட் குழுமத்தாருக்கு வாழ்த்துக்கள்.//
அது என்னப்பா விஷயம்?