வண்ணங்கள் அனைத்தும் சிவப்பு, நீலம் மற்றும் பச்சையின் மூலம் அடையமுடியும் என்பது வண்ணத்தொலைக்காட்சியில் நெடும்தொடர் பார்த்து கண்ணீர் விடும் அனைவரும் அறிந்ததுதான். வண்ணப்புகைப்படங்களையும் அதேப் போல அனைத்து பிற்தயாரிப்பு மென்பொருட்களும் RedGreenBlue (RGB) என்ற முறையிலேத்தான் கையாளுகின்றன.

இதில் பல குறைகள் இருக்கு. உதாரணதிற்கு சிவப்புப் பகுதியில் மாற்றம் செய்தால் அது படத்தின் வெளிச்ச அளவையும் பாதிக்கும். வெளிச்சப்பகுதியில் மாறுதல் செய்தால் அது அனைத்து வண்ணங்களயும் பாதிக்கும். RGB போல மற்றொரு வகை, LAB , இதில்
L - Luminance ( வெளிச்சப்பகுதி )
A - Red/Green
B - Blue/Yellow
என்று மூன்று வகையாக வண்ணப்படம் பிரிக்கப்பட்டு விடும். சரி இதில் என்ன நன்மை ? பல நன்மைகள் . இந்த இடுகையில் ஒரு நன்மையை பார்ப்போம்.
முதலில் படத்தை எப்படி LAB க்கு மாற்றுவது பற்றி.
படத்தை கிம்பில் திறந்து Colors->Components->Decompose தேர்ந்து எடுங்கள்.

Color Model பகுதியில் LAB தேர்ந்து எடுங்கள்.

ஒரு புதிய சன்னலில் கருப்பு வெள்ளைக்கு மாற்றப்பட்ட படத்தை கிம்ப் உருவாக்கும்.
L, A , B என்று மூன்று பகுதிகளாக படம் பிரிக்கப்பட்டு இருக்கும்.

ஏற்கனவே கூறிய மாதிரி A பகுதியில் வெள்ளைப்பகுதிகள் சிவப்பு நிற்த்தையும், கருப்புப் பகுதிகள் பச்சை நிறத்தையும் குறிப்பவை. இப்போது சிவப்பு நிற காரை பச்சை நிற்த்துக்கு மாற்ற வேண்டுமானல், அதை LABல் செய்வது மிக எளிது.
A தேர்ந்து எடுத்துக் கொண்டு ,

Colors->Invert செய்தால், சிவப்பு பகுதிகள் பச்சையாக மாறிவிடும்.

படத்தை மீண்டும் RGB மாற்றினால் இந்த மாறுதலை பார்க்கலாம்.மீண்டும் RGB க்கு மாற்ற
Colors->Components->Compose

Color Model -> LAB

சிவப்பு காரு பச்சையாச்சு ..

அடுத்த இடுகையில் LAB மூலம் கிடைக்கும் பிற நன்மைகளை பார்க்கலாம்.

சித்து வேலை மாதிரி படம் காட்டுறீங்க அண்ணாச்சி!!
ReplyDeleteInteresting post!
Thanks :)
இந்த மேட்டர் புதுசா இருக்கே .. PIT வந்து தான் கிம்ப்’பை ஓரளாவுக்காவது பயன்படுத்தக் கத்துகிட்டு இருக்கேன் .. பகிர்ந்தமைக்கு நன்றி
ReplyDeleteவாவ். ட்ரை பண்ணிட வேண்டியது தான்.
ReplyDeleteas usual AN& Rocks
ReplyDeleteVAASI
As usual AN& ROCKS
ReplyDeleteஉதாரணம் கொடுக்கிற படத்தை முதலிலே போட்டா அதையே நீங்க சொல்கிர மாதிரி மாத்தி பாக்க வசதியா ருக்கும்.
ReplyDeleteஅப்புறம் கிம்ப் மொழியாக்கம் பாத்தாச்சா?