Friday, September 11, 2009

எந்த கேமரா தாங்கி என்னோட கேமராவுக்குத் தேவை ? - TRIPOD (ட்ரைபாட்)

Source : http://www.freephotosbank.com/9358.html
கேமராவுக்கு முக்காலி (ட்ரைபாட்) தேர்வு செய்வது எப்போதுமே சற்றே சிரமமான விஷயம் தான். எவ்வளவு தான் ஆராய்ச்சி செய்து எதைத் தேர்ந்தெடுத்தாலும் அட.. இதை விட நல்லதை தேர்ந்தெடுத்திருக்கலாமே என்ற எண்ணம் வருவதை தவிர்க்க முடியாது.


பொதுவாக ட்ரைபாட் தேர்ந்தெடுக்கும் போது கவனிக்க வேண்டிய சில.

* அரங்கத்தில் உபயோகிக்கவா, பொதுவெளியில் உபயோகிக்கவா ?
வெளியில் உபயோகிக்கப்படும் தாங்கிகளுக்கு பொதுவாக மண்ணில் நன்றாக ஊன்றி நிற்பதற்கேற்றவாறு முள் போன்ற அமைப்பு காலில் இருக்கும். உள்ளரங்கம் என்றால் இரப்பரில் வழுக்காதவாரு ஸ்திரமாக நிற்கும் வகையில் இருக்கும். இரண்டில் எது உங்களின் அதிகபட்ச தேவையோ அதற்கேற்றார் போல் தேர்ந்தெடுக்கவும்.
Running photographer in retro style with old-time camera on tripod photo

* எவ்வளவு எடை தாங்கும் ? உங்களிடம் உள்ள அதிக பட்ச எடை கூடிய லென்ஸுடன் கூடிய கேமராவின் எடை, மற்றும் லென்ஸ் எவ்வளவு நீளம் வரும். கேமரா முன்னால் சாயாமல் அதை தாங்குமா ?


குறைந்தது இரண்டு கிலோ எடை தாங்கக் கூடியதாக இருத்தல் நலம். லென்ஸுடன் கூடிய கேமராக்கள் அதிலும் டெலி ஜூம் வைத்த லென்ஸுகள் கொண்ட கேமராக்கள் அதிகம் எடை வரும். தாங்கி அதை ஸ்திரமாகத் தாங்க வேண்டும். இல்லாவிட்டால் கால்கள் வளைந்தோ/உடைந்தோ முதலுக்கே மோசமாகலாம் அல்லது ஸ்திரத்தன்மை இழந்து முன்பின் சாய்ந்துவிடலாம்.

* எந்த அளவு உயரம் தேவை, பொதுவாக எது போன்ற புகைப்படத்துக்கு உபயோகிப்பீர்கள் ?

இது முக்கியமான ஒன்று. உங்களின் உபயோகம் எதுபோன்றது என்பதைப் பொறுத்தது. மேக்ரோ போட்டோ எடுப்பவர்களுக்கு, கட்டிடம், இயற்கை காட்சிகள், போர்ட்ரைட் என ஒவ்வொன்றிற்கும் ஒரு உயரம் தேவைப் படுகிறதல்லவா ? பொதுவாக குறைந்தபட்ச உயரமாக மூன்றடியில் இருந்து ஆறடி வரைக்கும் அமைக்கும் வகையில் கிடைக்கும். மேக்ரோ போட்டோகிராபிக்கு இன்னும் குறைந்த உயரத்தில் ஸ்திரமானவைகளும் கிடைக்கும்.
Photographer with a camera on a tripod photo

Source : http://www.123rf.com/photo_420928.html
* கியருடன் கூடியதா ? பால் ஹெட் கூடியதா ? அல்லது வெறுமனே கேமராவை அமர்த்தக் கூடியதா ?
கியருடன் கூடியது என்றால் பனாரம / இயற்கை காட்சிகள் மற்றும் போர்ட்ரைட் க்கு நன்றாக இருக்கும்.
பால் ஹெட் இருந்தால் நகர்தல் மிக மென்மையாகவும் அதே நேரம் பிடிப்பு அழுத்தமாகவும் நழுவாமலும் இருக்கும். பெரும்பாலும் வைல்ட் லைஃப் போட்டோகிராபிக்கு இது நன்றாக இருக்கும்.


* உங்களின் பயணத்துக்கு ஒத்துவருமா ? சில ட்ரை பாட்கள் 3 - 4 கிலோவுக்கும் வரும். அதை தோளில் சுமந்துக் கொண்டு சுத்த முடியுமா ?
ரொம்ப சீரியஸான உபயோகம் இல்லாதவங்க, கைக்கடக்கமான, மினி ஸ்பைடர் வகை குட்டி ட்ரைபாடை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அவசரத்துக்கு எடுத்துச் செல்ல, மற்ற வகை பெரிய ட்ரைபாடுகளை விட இவை மிக உபயோகமானவை. இவ்வகைகள், point&shoot கேமராக்களுக்கும், கனம் குறைந்த (பெரிய லென்ஸ்கள் இல்லாத) DSLRக்கும் உபயோகிக்க முடியும்.


* ட்ரைபாட் க்காக உங்களின் அதிகபட்ச பட்ஜட் எவ்வளவு ?
சுமார் ஐநூறில் இருந்து பத்தாயிரத்துக்கும் அல்லது இன்னமும் அதிகபட்ச விலைக்கும் கிடைக்கிறது.
* ஒற்றைக் கால் தாங்கியா ? முக்காலியா ?
எத்தனை கைப்பிடி தேவை
உங்களின் உபயோகத்திற்கு ஏற்றவாரு தேர்ந்தெடுக்க வேண்டும். ஒற்றைக் கால் தாங்கி பெரும்பாலும் தன்மீது சாய்த்து வைத்துக் கொண்டு எடுக்க வேண்டும்.

* எந்த மெட்டீரியலில் செய்யப் பட்டிருக்கிறது ?
அலுமினியம், கார்பன் ஃபைபர் அல்லது இரும்பு என பலவகையிலும் கிடைக்கிறது


அப்பாடா... லிஸ்ட் முடிஞ்சுடுச்சான்னு கேக்கறீங்களா ? ... அட யோசிச்சதுல நினைவுக்கு வந்தது இது. அடுத்து வெளிச்சத்தை எப்படி க்ரியேடிவா உபயோகிக்கறதுன்னு பாக்கலாம். அதுவரைக்கும் .. ஜூட்டேய்

9 comments:

  1. அட ! நொம்ப நாளா டிரைப்பாட் வாங்கினா என்னான்னுஒரு டெரராய் ஒரு யோசனை ! எனக்கு இப்போதைக்கு குட்டையான மினி ஸ்பைடர் டைப்தான் பெஸ்டா இருக்குமோ? :) -

    டிரைபாட் பொதுவாக எல்லா - நிக்கான் கேனான் சோனி - கேமரா உபயோகங்களும் பயன்படுத்த இயலுமா அல்லது வெவ்வேறு புராடெக்டுகளுக்கு ஏற்ற மாதிரி மாறுமா

    ReplyDelete
  2. ஆயில்ஸ்,

    ட்ரைபாடுக்கு இந்த ஜாதி பேதம் பார்க்கும் பழக்கமே இல்லை. யாதும் கேமாரா.. யாவரும் கேளிர் தான்.

    ReplyDelete
  3. ஜீவ்ஸ்,
    நல்ல உபயோகமான பதிவு..

    ஆமாம் இந்த கியர் பால் ஹெட் இதெல்லாம் என்ன?

    ReplyDelete
  4. நல்ல உபயோகமான பதிவு. என்னோட ட்ரைபாடு கிராண்ட் கேன்யான் அருகில் காற்று அடித்து கேமராவோடு கீழே விழுந்துவிட்டது. அதிலிருந்து ட்ரைபாடு உபயோகித்தால் நடுவில் உள்ள கொக்கியில் ஒரு நல்ல "stability" வெயிட் தொங்க விடுவது வழக்கமாகிவிட்டது. See this PDF for more helpful tip: http://www.oldjimbo.com/Outdoors-Magazine/Tripod-Tips.pdf

    ReplyDelete
  5. நான் அலுமினியத்தால் ஆனதைதான் உபயோகப்படுத்துகிறேன். இதை ரொம்ப நாளாக கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் நீங்கள் பதிந்திருப்பதற்கு நன்றிகள் பல...

    ReplyDelete
  6. அட போங்க Jeeves, இன்னைக்கு தாங்க முக்காலி (ட்ரைபாட்) பத்தி நெனச்சேன். எப்படீங்க இப்படியெல்லாம் நெனச்சவுடனே எங்கள் கேள்விகெல்லாம் பதிவுல பதில போட்டு அசத்துரீங்க...

    ஒரு திறமையான ஆசிரியர் என்றால் மாணவர்களுடைய எண்ணங்கள்/தேடல்களுக்கு அவர்கள் கேட்பதற்கு முன்னால் பதில்/விளக்கம் அளிப்பது தான்.

    அந்த வகையில் நீங்கள்...

    ReplyDelete
  7. படத்துக்கு பார்டர் - கட்டம் கட்டறது எப்படின்னு சொல்லறீங்களா?

    ReplyDelete
  8. //An& said...

    சின்ன அம்மிணி ,

    படத்துக்கு பார்டர் - கட்டம் கட்டறது எப்படி ?

    http://photography-in-tamil.blogspot.com/2008/09/blog-post.html
    //

    நன்றி

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி