
Thursday, February 11, 2010
Focus Stacking
Macro படங்கள் எடுக்கும்போது ஏற்படும் பெரிய தொல்லை, படத்தின் முழு விவரங்களையும், ஃபோக்கஸ் செய்ய முடியாதது.
பெரிய அபெர்ச்சர் வைத்து எடுக்கும் மேக்ரோ படங்களில், மொத்த படத்தின் மிக குறுகிய விஷயங்களே, ஃபோக்கஸ் ஆகி, பளிச் என்று வரும். மற்ற இடங்கள், ஃபோக்கஸ் இல்லாத, மங்கலாய்தான் வரும்.
உதாரணத்துக்கு கீழே இருக்கும் படம். எனது கிட்டாரின் படம் அது. படத்தில், கம்பி ஃபோக்கஸிலும், கிட்டாரின் லோகோ மங்கலாயும் தெரிகிறது.
சில படங்களுக்கு, இந்த மாதிரி ஒரு DOF (depth) அழகைக் கொடுத்தாலும், மொத்த விஷயங்களும் பளிச்னு கொண்டு வரணும்னா என்ன பண்ணனும்?
ஒரே வழி(?) இதுதான்.
கேமராவை மேக்ரோ லென்ஸ் பொறுத்தி (லென்ஸ் இல்லாதவர்கள், reverse ring வாங்கி, சாதா லென்ஸை தலைகீழாய் போட்டு ), ட்ரைபோடில் வைக்கவும்
Manual மோடில் வைத்து, எடுக்க விருக்கும் மேக்ரோ விஷயத்தில் ஒரு பாகத்தை ஃபோக்கஸ் செய்யவும்.
க்ளிக்கவும்
அடுத்து, ஆடாமல் அசங்காமல், ஃபோக்கஸை கொஞ்சமாய் பின்னோ முன்னோ நகர்த்தி, சப்ஜெக்ட்டின், இன்னொரு பாகத்தை ஃபோக்கஸில் வைக்கவும்.
க்ளிக்கவும்
இப்படியே படத்தின் சகல பாகங்களையும், ஃபோக்கஸில் வருமாறு அமைத்து, க்ளிக்கிக் கொண்டே போகவும். பத்து பதினைஞ்சு படம் தேறும்.
இனி தான் வித்தை. எடுத்த படங்களை கணிப்பொரியில் தரவிறக்கம் செய்யவும்.
CombineZM ஒரு இலவச மென்பொறுள் இருக்கு, அதை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் எடுத்த பத்து பதினைந்து படங்களை, இந்த combineZMல் கொடுத்தால், அனைத்தையும் 'combine' செய்து, எல்லா படங்களிலிருந்தும், ஃபோக்கஸ் ஆன இடத்தை மட்டும் கோர்த்து, ஒரு அட்டகாசமான 'பளிச்' படத்தைக் கொடுக்கும்.
ட்ரை பண்ணிட்டுச் சொல்லுங்க. நானும் இன்னும் ட்ரை பண்ணிப் பாக்கலை. வீக்-எண்டுதான், பண்ணிப் பாக்கணும்.
மேலும் வாசிக்க:
விக்கியில்
Flickrல்
அழகான Focus Stack'd படங்களை ரசிக்க: Flickrல்
PiTல் மேக்ரோ பாடங்கள்
செய்முறை விளக்கம், இந்த வீடியோவில்:

பகிர்விற்கு நன்றி சர்வேசன்!
ReplyDeleteNice
ReplyDelete