Sunday, June 19, 2011

ஜுன் 2011 போட்டி -முதல் சுற்றுக்கு முன்னேறியவை

எல்லாருக்கும் வணக்கம்.

எல்லாருக்கும் இந்த மாத போட்டி மிகவும் பிடித்திருந்தது என நினைக்கிறேன். அதை நிறுவும் விதமாக 80 படங்கள் இந்த போட்டிக்கு வந்திருந்தன. அதில் சில படங்கள் தலைப்பு குறிப்பிடாமலும், சில படங்கள் அனுப்பியவர் பெயர் குறிப்பிடாமலும் இருந்தன. காலக்கெடுவிற்குள் திருத்தம் தெரிவிக்காதவர்கள் படங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டாலும், அடுத்து சுற்றுக்கு தெரிவாகும் வாய்ப்பை பெறவில்லை.

வந்திருந்த படங்களில் பாதி படங்கள் நன்றாகவே படமாக்கப்பட்டிருந்தன. சிலர் போட்டி அறிவித்ததற்குப் பின் படம் எடுத்திருந்தார்கள். அந்த படங்கள் எல்லாம் நன்றாக வந்திருந்தன. இதுபோல, போட்டி அறிவித்ததற்குப் பின் படம் எடுத்தால் நிச்சயமாக போட்டித் தலைப்பிற்கு ஏற்றவாறு படம் எடுக்க முடியும். அவர்களுக்கு எங்கள் குழு சார்பாக சிறப்பு வாழ்த்துகள்.

சில படங்கள் புதிதாக படம் எடுக்கத் தொடங்கியவர்களின் படங்கள் போல் இருந்தது. அவர்கள் முயற்சிக்கும் பாராட்டுகள். தொடர்ந்து முயற்சி செய்து பயிற்சி எடுத்து வந்தால் முன்னுக்கு வரலாம்.

சரி, இந்த மாத போட்டிக்கு அடுத்த சுற்றுக்கு முன்னேறிய படங்கள் இதோ. அவர்களுக்கு வாழ்த்துகள்.


# நிதி ஆனந்த்( வாழ்க்கைப் படகு)


# ஆன்டன் (அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது)


# விஜய் ப்ரகாஷ்(மதராசப் பட்டணம்)


# வருண் (அழகர்சாமியின் குதிரை)



# விதூஷ் (பசங்க)


# கார்த்தி (திருட்டுப் பயலே)


# காயத்ரி (பள்ளிக் கூடம்)


# உதயன் (இணைந்த கைகள்)



# சித்தா ட்ரீம்ஸ் (அடுத்த வாரிசு)


# ஸ்ருதி (பிரிவோம் சந்திப்போம்)


# விக்ஸ் (இணைந்த கைகள்)


# Ajin Hari (யுத்தம் செய்)


# வானம் வசப்படும் (மலர்விழி)


எல்லா படங்களுக்குமான என்னுடைய கருத்துகளை விரைவில் போட்டிக்கான ஆல்பத்திலேயே ஒவ்வொரு படத்தின் கீழும் தெரிவிக்கிறேன்.

போட்டி முடிவுடன் உங்களை விரைவில் சந்திக்கிறேன். அடுத்த மாத போட்டிக்கு இப்போதே ஆயத்தமாகுங்கள்.

7 comments:

  1. முதல் பத்தில் இடம் பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!! திரு. மெர்வின் ஆண்டோவின் படம் இடம் பெறாததில் வருத்தம்.

    ReplyDelete
  2. என்னுடைய புகைப்படத்தை தேர்வு செய்தற்கு நன்றி....

    ReplyDelete
  3. என் புகைப்படத்தை தேர்ந்தெடுத்ததற்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  4. முதல் பத்துக்கு முன்னேறிய அனைவருக்கும் வாழ்த்துகள்....

    ReplyDelete
  5. போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் & முதல் சுற்றில் முன்னேறியவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    சிறப்புற தேர்வு செய்த PIT குழுமத்திற்கும் நன்றிகள் பல‌

    நித்தி கிளிக்ஸ்

    ReplyDelete
  6. முதல் பத்துக்கு முன்னேறிய அனைவருக்கும் வாழ்த்துகள் :-)

    பிகாசாவில் நீங்கள் தந்திருக்கும் விளக்கங்கள் அருமை :-) வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  7. நல்ல தேர்வு,அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி