Monday, September 30, 2013

முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து - செப்டம்பர் 2013 போட்டி

நடனம் என்றதும் பரதம் பலருடைய சாய்ஸாக அமைந்து போயிருக்கிறது:). வந்த படங்களில் அதிக எண்ணிக்கையில் இடம் பெற்றிருந்தவை பரத நாட்டியப் படங்களே.  முதல் சுற்றிலும் அவையே களை கட்டி நிற்கின்றன என்றாலும் வித்தியாசமாக அமைந்து கவனத்தை ஈர்த்தது படம் ஒன்று.

எந்த வரிசையின் படியும் அல்லாமல் முன்னேறிய பத்து படங்களாக முதல் சுற்றுக்கு தேர்வானவை இங்கே:

#1 பெருசு



#2 சந்தியா

 

#3 பூபதி



#4 கயல்விழி முத்துலெட்சுமி


#5 சரவணன்


#6 ஆயில்யன்


#7 துளசி கோபால்



#8 ராகவேந்திரா



#9 குணா அமுதன்



#10 கோபிநாத்



பத்து பேருக்கும் வாழ்த்துகள்! 
பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி!
இறுதிச் சுற்று முடிவு ஓரிரு நாட்களில் வெளியாகும்.
***

Wednesday, September 4, 2013

செப்டம்பர் 2013 போட்டி அறிவிப்பு

தாளத்துக்கும் இசைக்கும் தொடர்புடைய ஒரு கலையை உங்கள் ரசனையில், பார்வையில் காண விரும்புகிறது இம்மாதப் போட்டி.

நடனம். இதுதான் தலைப்பு.

ஒரு சமூகத்தின் பண்பாட்டைச் சார்ந்து ஒவ்வொரு நடனமும் ஒவ்வொரு வகையான நெறிமுறைகளையும் நுணுக்கங்களையும் கொண்டிருந்தாலும் அதன் அடிப்படை அழகியல்தான், இல்லையா? இந்தியப் பாரம்பரிய நடனங்கள், கிராமிய நடனங்கள், மேற்கத்திய நடனங்கள் இவற்றோடு குழந்தைகளின் பள்ளி விழாக்கள் போன்றவற்றில் படமாக்கியவையும் தலைப்புக்குப் பொருந்தும். உங்கள் திறமையோடு கற்பனா சக்தியும் சேர்ந்து கொள்ளட்டும்.

போட்டி விதிமுறைகள் இங்கே.

படங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தினம்: 20 செப்டம்பர் 2013

மாதிரிப் படங்கள்:

# ஐயப்பன் கிருஷ்ணன்

# ராமலக்ஷ்மி

# ஐயப்பன் கிருஷ்ணன்

***