Sunday, November 30, 2014

போட்டி முடிவுகள் - நவம்பர் 2014

வணக்கம் நண்பர்களே!

இம்முறை முதல் தேர்வு இன்றியே போட்டி முடிவுக்குச் செல்கிறோம். மனிதனால் உருவாக்கப்பட்ட பொருட்கள் என்ற தலைப்பின் முடிவை அறிவிப்பதில் பெரிய வேலையாக இருக்குமோ என நினைத்திருந்தேன். ஆனால், இலகுவான தலைப்பில் ஆர்வம் இல்லைபோல் உள்ளது. சவாலான போட்டியில்தான் ஆர்வமாக இருப்பீர்களோ என சிந்திக்க வைக்கிறது. மேலும், ஒருவர் ஒரு படத்தை மட்டுமே அனுப்ப வேண்டும் என்பதற்கேற்ப அடுத்த போட்டிக்கு படங்களை அனுப்பி வையுங்கள்.

வெற்றிபெற்ற படங்களைப் பார்க்குமுன் சில கவனத்தை ஈர்த்த படங்களைப் பார்ப்போம்.

# சரவணன்
அழகாக இருக்கிறது. ஆனாலும் தலைப்பு இப்படத்தில் முக்கியத்துவம் பெறவில்லை. நல்ல முயற்சி.

இரா.குண அமுதன்
எல்லா மொம்மைகளும் படத்தில் வெட்டப்படாமல் தெரிந்து, இடப்பக்க கீழ் மூலையில் வெளிச்சம் இல்லாதிருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மொம்மை வெட்டப்பட்டதும் வெளிச்சமும் உறுத்தலாக உள்ளது. நிறம் சிறப்பாக உள்ளது. 

# விஸ்வநாத்
பைக் focus ஆகவும் நபர் out of focus ஆகவும் இருந்திருந்தால் கவனம் பைக்கை நோக்கியிருந்திருக்கும். மேலும், இடப்பக்கம் இடைவெளி (space) வேண்டும். பாதணி இறுக்கமான வெட்டப்பட்டுள்ளது. நல்ல முயற்சி. கருப்பு வெள்ளையில் நன்றாக உள்ளது.

# வின்சென்
கருப்புப் பின்புலத்தில் கருப்பான பொருட்களை படம்பிடிப்பது இலேசான விடயமல்ல. பொருள் தெரியவும் வேண்டும். ஒட்டுமொத்தக் காட்சியும் வேண்டும். இவ்வாறான நேரங்களில் சிறப்பான ஒளி அமைப்புதான் கைகொடுக்கும். இங்கு, பொருளை வெளிப்படுத்துவதில் மேலும் கவனம் தேவை. மிக நல்ல முயற்சி

மேலும் சில படங்கள் நன்றாக இருப்பினும் தெளிவின்மை, அதிக ஒளி, இரைச்சல் என்பவற்றினால் இங்கு குறிப்பிடவில்லை. அனித்தா, தயு, சிறினி,  சித்தாத், பிறிமிலா ஆகியோரின் படங்கள் சிறப்பாக இருப்பினும் குவியம் (focus), தெளிவு (sharpness) என்பவற்றில் இன்னும் சற்று கவனமெடுத்திருந்தால் சிறப்பாக வந்திருக்கும். அப்பாச்சர் (aperture) எண் குறைவாக இருந்தால் படத்தில் தெளிவு குறைந்துவிடும். அத்தோடு குவியமும் சரியாக இருக்க வேண்டும். அடுத்து வெற்றி பெற்ற படங்கள்.

மூன்றாமிடம்:

# இர்பான்

அப்பாச்சர் f/3.5 இருப்பதனால் தெளிவு குறைவாகவுள்ளது. ஆனாலும் தலைப்புக்குப் பொருத்தம், பட அமைப்பு என்பனவற்றினால் 3ம் இடம் பெறுகிறது.

இரண்டாமிடம்:

# கோபி
சாதாரணமான ஆனால் அழகாக படமாக்கப்பட்டுள்ளது.

முதலிடம்:

# வாகீசன்
தெளிவு, சிறப்பான ஒளிப் பாவனை என்பவற்றால் முதலிடம்.

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.  

6 comments:

  1. மிக பொருத்தமான படங்கள். வாழ்த்துகள் அனைவரின் முயற்சிகளுக்கும் வந்தனங்கள். அழகான அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

    ReplyDelete
  2. pls publish your competition postings in FB enable me to apply here.

    ReplyDelete
  3. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. wow. அல்ஹம்துல்லாஹ்...மொபைலில் படம் பிடித்து கொண்டிருந்த நான் ஆர்வ கோளாரில் dslr கேமிரா வாங்கி..அதிப் எப்படி படம் எடுப்பது என தெரியாமலே பீரோவில் கிடந்த என் கேமிராவில் மீண்டும் படம் எடுக்க தூண்டியது இந்த PIT தளம் ..a to z இன்று வரை தினமும் நான் படித்த என்னுடைய பள்ளியான இந்த pit யில் நான் வெற்றி பெற்றது..உண்மையாகவே என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது..பயனுள்ள பல தகவல்களை போட்ட pit அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள்..

    ReplyDelete
  5. @ Selvam, https://www.facebook.com/photography.in.tamil - இங்கே இணைந்து போட்டி அறிவிப்பை, பதிவுகள் அப்டேட் ஆகும் போது தெரிந்து கொள்ளலாம்.

    @Irfan, வாழ்த்துகள்:)!

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி