Tuesday, December 16, 2014

கருப்புக்குள் கருப்பு

கருப்புப் பின்புலத்தில் கருப்பொருளைப் படமாக்குதல் சுவாரசியமான அனுபவம். வணிக நோக்கம், கருப்பொருளை "வெளிச்சம்" போட்டுக் காட்டல், எதிர்மறையான உணர்வை வெளிப்படுத்துதல் போன்ற காரணங்களுக்கு இந்த கருப்புப் பின்புலம் முக்கியமாகப் பயன்படுகிறது. பலர் கருப்பு பின்புலத்தை "மங்களம்" இல்லை எனத் தவிர்த்துவிடுவர். இந்த விருப்பு, வெறுப்புக்கு அப்பால், கருப்புப் பின்புலத்தில் கருப்பொருளைப் படமாக்குதல் என்பது வழமையான படமாக்குதலில் இருந்து வேறுபட்டது.

கீழே கருப்புப் பின்புலத்தில் படமாக்கப்பட்ட கருப்பொருள்களுக்குச் சில உதாரணங்கள்:



கடந்த மாதப் போட்டி முடிவு அறிவிக்கும்போது ஒரு இடத்தில், கருப்புப் பின்புலத்தில் கருப்பு கருப்பொருளைப் படமாக்குதல் எளிதல்ல எனக் குறிப்பிட்டிருந்தேன். எனவே, கருப்புக்குள் கருப்பை படமாக்குவதில் உள்ள நுட்பத்தையும், அதை எளிய முறையில் எவ்வாறு செய்வது என்பது பற்றிய விளக்கமே இப்பதிவு.


பொதுவாக, கருப்புப் பின்புலத்தில் கருப்பொருளைப் படமாக்க நாம் பொருத்தமான அமைப்பு முறையைச் செய்ய வேண்டும். அதற்கு இருக்க வேண்டிய உபகரணங்கள்: DSLR, கருப்புத் திரை, கருப்பு அடிப்பகுதி, இரு மின்விளக்குகள், சிறிய வெண் குடையுடன் பிளாஷ் மற்றும் முக்காலி, மேசை போன்ற இதர பொருட்கள். இவற்றைக் கொண்டு பின்வரும் அமைப்பில் அமைக்கப்பட வேண்டும்.


பலர் இது வேலைக்கு ஆகாது என்று எண்ணலாம். காரணம், தொழில்முறையில் இருப்பவர்கள்தான் இம்மாதிரிப் பொருட்கள் எல்லாம் வைத்திருப்பார்கள், நமக்கோ இது ஒரு பொழுதுபோக்கு. நம்மில் பலர் வைத்திருப்பது ஒர் DSLR மற்றும் அதற்குண்டான சில பொருட்கள்தான். உண்மையில் பொருளை அல்லது காட்சியைப் படமாக்குதல் என்பது வெறுமனே "கிளிக்" அல்லாமல் சற்று நுட்பம் பற்றிய அறிந்தால் நாமும் அழகான படங்களுக்குச் சொந்தக்காரர் ஆகலாம். இனி விடயத்திற்கு வருவோம்.


கருப்பு நிறம் ஒளியை உறிஞ்சும் என்பதால் கருப்பான பொருட்கள் படத்தில் சரியாக விழுவதில் சிரமத்தை ஏற்படுத்தும். எனவே தனிக் கருப்பான பொருளை தெளிவாகப் படம்பிடித்தல் என்பதே சிரமத்தை ஏற்படுத்தும். இங்கு பின்புலம், ஒளிப் பாவனை என்பன அவசியம். பொருளின் ஓரங்கள் ஒளியினால் மிளிரும்போது, பொருள் பின்புலத்தில் இருந்து வேறுபடுத்தப்பட்டுத் தெரியும். கருப்புப் பின்புலத்தில் கருப்புப் பொருள் மறைந்து போகாமலிருக்க ஒளி பொருளின் விளிம்புகளிற்பட்டு ஒளிர வேண்டும். இதற்காகவே மேலுள்ள அமைப்பு முறை அவசியமாகிறது. இந்த நுட்பத்தை விளங்கிக் கொண்டால் எம்மாலும் கருப்புனுள் கருப்பை படம்பிடிக்க முடியும். பொருளைவிட பின்புலம் கருப்பாக இல்லாமல் சாம்பல் நிறத்தில் அல்லது கிட்டத்தட்ட 70% - 90% கருப்பு நிறத்தில் இருந்தாலும் கருப்பினுள் கருப்பினைப் படமாக்கலாம். (படம் 1) அல்லது பின்புலத்தில் ஒளித் தெரிப்பை ஏற்படுத்தியும் படமாக்கலாம். (படம் 2)

படம் 1

படம் 2
வீட்டிலிருந்த பொருட்களைக் கொண்டு இரு torch light உதவியுடன் கமிராவிலுள்ள பிளாஷைக் கொண்டு எளிய முறையில், மேற் குறிப்பிட்ட அமைப்பு முறையில் படமாக்கப்பட்ட mouse. இங்கு குடையுடன் பிளாஷ் பயன்படுத்தப்படவில்லை. இங்கு போதிய ஒளி கிடைக்காததால் ஓரங்கள் சிறப்பாக வரவில்லை. ஓரங்களுக்கு ஒளித் தெறிப்பு மற்றும் பொருளை வெளிக்காட்டக்கூடிய ஒளி அமைப்பு என்பன மிக முக்கியம். பொருளுக்கும் கருப்புத் திரைக்கும் குறைந்தது 1.5 மீட்டர் இடைவெளி இருப்பது கருப்புத் திரையின் விபரங்கள் தெரியாதவாறு படமாக்க உதவும்.


2 comments:

  1. நன்றி. முயற்சி செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி