Tuesday, December 1, 2015

நவம்பர் '15 போட்டி முடிவுகள்

எல்லாருக்கும் வணக்கம்!

இம்மாத போட்டிக்கு படங்கள் அனுப்பிய அனைவருக்கும் நன்றி. நிறைய நல்ல படங்கள் வந்திருந்தது. வந்திருந்த படங்களில் எனக்கு சிறந்தவைகளாக தோன்றிய படங்களை வெற்றி பெற்ற படங்களாக அறிவிக்கிறேன்.

சிறப்புக்கவனம் பெற்ற படங்கள்
ரூபன்:
அழகான படம். இன்னும் கொஞ்சம் காண்ட்ராஸ்ட் கூடுயிருந்தால் நல்லாயிருந்திருக்கும்.

ஹஃபீஸ் இஸ்ஸாதீன்:
நல்ல படம். எல்லா வண்ணத்துப்பூச்சிகளும் ஷார்ப்பா இருந்திருந்தா இன்னும் சிறப்பா இருக்கும்.

கணேஷ் குமார்:
கொஞ்சம் ஃப்ரேமிங் ரூல்-ஆஃப்-தேர்ட்ஸ் முறயில் அமைந்திருந்தால் அழகா வந்திருக்கும்.

வெற்றிபெற்ற படங்கள்
மூன்றாமிடம் - அமல்


இரண்டாமிடம் - செந்தில் குமார்


முதலிடம் - கண்ணதாசன்


வெற்றிபெற்ற, பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்! விரைவில் டிசம்பர் மாத போட்டிக்கான அறிவிப்புடன்  சந்திக்கிறோம். 

11 comments:

  1. மற்ற படங்களில் உள்ள குறைகளை சுட்டிக் காண்பித்தால் அடுத்து போட்டியில் உதவியாக இருக்கும்

    ReplyDelete
  2. மற்ற படங்களில் உள்ள குறைகளை சுட்டிக் காண்பித்தால் அடுத்து போட்டியில் உதவியாக இருக்கும்

    ReplyDelete
  3. வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் ,ஐயா மற்ற படங்களில் உள்ள குறைகளை சுட்டிக் காண்பித்தால் அடுத்து போட்டியில் உதவியாக இருக்கும்,
    அடுத்த முறை அதைவிட சிறந்த புகைப்படம் அனுப்ப நான் முயற்ச்சி செய்கிறேன் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் படம் சிறப்பான முயற்சி.

      Delete
  4. வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  5. பிட் குழுவிற்கு வணக்கங்கள்....
    வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...அனைத்தும் அருமை.
    சிறப்பு பகுதி மற்றும் வெற்றி பெற்ற படங்களை தவிர மற்ற புகை படங்களின் குறைகளை, கருத்துகளை அந்தந்த படங்களின் கீழ் குறிப்பிடும் பட்சத்தில் அவற்றை திருத்திக்கொள்ள உதவியாக இருக்கும் என எதிர்பார்கிறேன்.

    நன்றி

    கார்த்திக்

    ReplyDelete
  6. மிக்க நன்றி...

    ReplyDelete
  7. முதலிடம் பெற்றதில் மகிழ்ச்சி...பிட் குழுவினருக்கு எனது நன்றிகள் :-) மேலும் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  8. @ yamo moya & கார்த்திக்,

    பல்வேறு பணிகளுக்கிடையே நடுவர்கள் இப்போட்டிக்காக நேரம் ஒதுக்கி செயல்படுகிறார்கள். எல்லா படங்களுக்கும் கருத்தளிப்பது என்பது நடைமுறையில் சாத்தியப் படுவதில்லை. கலந்து கொள்ளும் பல படங்கள் அருமையாகவே உள்ளன. தேர்வாகும் படங்கள் அவற்றை விட சில விஷயங்களில் கூடுதல் சிறப்பாக அமைந்து விடுகின்றன. புரிதலுடன் தொடரக் கேட்டுக் கொள்கிறோம்.

    ReplyDelete
  9. தாங்கள் தந்த பதில் தகவலுக்கு மிக்க நன்றி ஐயா!!

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி