எந்த கேமரா வாங்கலாம்??..தலைய பிச்சிக்கலாம் போல இருக்குதா?
டிஜிட்டல் புரட்சி வந்தாலும் வந்தது..ஒவ்வொருத்தரும் இந்த குட்டி செல்போன் ஐ வெச்சுக்கிட்டே போட்டோ எடுக்குறதுங்கற பேர்ல ஓவர் அலும்பு பன்றத பார்த்தா, புதுசா கேமரா வாங்க போற நமக்கு எவ்வளவு இருக்கனும்ன்னு நெனைப்போம் இல்லையா?
ஒரு சிலர்,பணம் வேற சேர்த்து வெச்சிருப்பாங்க,ஒரு சிலருக்கு அவுங்க பெற்றோர்களோ அல்லது உறவினர்களோ பரிசளிக்க விரும்பி, கேமரா வாங்குற முடிவை மட்டும் உங்ககிட்டயே விட்டிருப்பாங்க.
பொதுவா பெரும்பாலான மக்கள் இந்த மாதிரி நேரத்துல நல்ல முடிவு எடுக்க ரொம்பவே சிரமப்படுவாங்க..
என்னிடம் ஒரு நண்பர் எந்த கேமரா வாங்குவது என்று கேட்டார்.ஒரே கம்பெனி,ஆனால் வெவ்வேறு மாடல்கள் சொல்லி ஒன்றின் விலை ரூ.9000 என்றும் மற்றொன்று ரூ.12500 என்றும் சொன்னார்.. விலை கூடுதலாக இருப்பதால் அதில் பலன் இருக்கும் என்று கடைக்காரர் சொன்னதால் அதையே வாங்குவதகாவும் கூறினார்.
ஆனால் அந்த இரண்டு கேமராக்களுக்கும் உள்ள வித்தியாசம் என்பது மிகவும் குறைவே..அதுவும் அவருக்கு தேவையில்லாத பயன்பாடு..இதற்காக கூடுதலாக ரூ.3500 என்பது worthஆ என்றால், இல்லை.. எனவே நான் அவரிடம் பழைய மாடலையே வாங்கச்சொன்னேன்.
கடைக்காரங்களையும் நம்ப முடியாது,ஏன்னா அவுங்க எப்பவுமே நல்ல கேமராவை விற்பதை விட நல்ல லாபத்தையே எதிர்பார்பாங்க.
ஊருல ஏகப்பட்ட மாடல்கள் இருக்கு..தினமும் புதுசு புதுசா ஒன்னு வந்துகிட்டே இருக்கு..இதுல எது நல்ல BRAND கேமரான்னு ஒரே குழப்பமா இருக்கும் ,அதுல வேற எந்த மாடல் வாங்கறதுன்னும் குழப்பமா இருக்கும் ..
அப்படி பொதுவா வர சில குழப்பங்கள்..
1.என்ன வகை பிராண்ட் கேமரா வாங்கலாம்?
2.புதுசு புதுசா features வருது ,அதெல்லாம் தேவையா?
3.எந்த கேமரா வாங்கினா குவாலிட்டியா இருக்கும்?
4.சின்னதா வாங்கலாமா அல்லது பெருசா வாங்கலாமா?
5.எத்தனை PIXELS வாங்கலாம்?
6.லென்ஸ் எது வாங்குவது?
7.OPTICAL ZOOM,DIGITAL ZOOM என்றால் என்ன?
இந்த மாதிரி குழப்பங்கள் தீர எனக்கு தெரிஞ்சத,படிச்சத,புரிஞ்சிக்கிட்டத உங்களுக்கு உதவவே இந்த கட்டுரை..
பொதுவா கேமராவில் 4 வகை உள்ளது..அது என்னன்னு பார்ப்போம்,
1.BASIC COMPACT CAMERA.

2.ADVANCED COMPACT CAMERA.
3.PROSUMER அல்லது SUPER ZOOM CAMERA.
4.DSLR CAMERA.

இதுல எந்த டைப் வாங்கலாம்,
இதுல உள்ள நல்லது,கெட்டது,
எந்த மாடல் நல்லது,
அப்படிங்கறதுக்கு முன்னாடி , கேமரா வாங்கிறவங்க அடிப்படையா கீழ் கண்டுள்ளவற்றை கொஞ்சம் யோசிக்கவேண்டியுள்ளது.. அது என்னன்னா,,,
1.எந்த வகையான படம் எடுக்க விருப்பம் உள்ளவர்..
ஒரு சிலர், எல்லா சிறப்பு அம்சமும் வேணும், அதே சமயம் நல்ல குவாலிட்டியாகவும் வேணும் ,,நல்ல ஸ்பீடா எடுக்கணும், தூரத்துல இருக்கிறத தெளிவா எடுக்கணும், அப்படின்னு விருப்ப படுவாங்க. இவங்களுக்கு DSLR வகை கேமராக்கள் சிறந்தது..
ஒரு சிலர், மேல சொன்ன ஏதாவது கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும், இல்லைனாலும் பரவாயில்ல..அப்படின்னு விருப்ப படுவாங்க..இவங்களுக்கு PROSUMER அல்லது ADVANCED COMPACT வகை கேமராக்கள் சிறந்தது..
ஒரு சிலர்,எப்பவாவது தான் போட்டோ எடுப்போம்,அதுக்கு சிம்பிளா, கேமரான்னு ஒன்னு இருந்தா போதும்னு நினைப்பாங்க..இவங்களுக்கு BASIC COMPACT வகை கேமராக்கள் போதும்..
இதுல நீங்க எந்த வகைன்னு முதல்ல முடிவு பண்ணனும்..
2.பட்ஜெட் .
அடுத்து முடிவு பண்ண வேண்டியது நம்மளோட பட்ஜெட்.. சுருக்கமா சொன்னா..நம்ம பட்ஜெட் என்னவோ..அதுக்கு தகுந்த மாதிரி தான் கேமரா கிடைக்கும்.. நல்ல கேமரா வேணும்ன்னா கொஞ்சம் அதிகமா பட்ஜெட் ஒதுக்கி தான் ஆகனும்,அதுக்கு பட்ஜெட் பத்தலைன்னா ஒரே வழி,கொஞ்சம் வெயிட் பன்னி பணம் சேர்த்து வைத்து பின் நல்லதா வாங்கலாம்..
அதே சமயம்,அதிக விலையுள்ள கேமாராக்கள் எல்லாம் நல்ல கேமரா என்று கண்டிப்பாக கிடையாது..
விஜய் மாதிரி,ஒரு தடவ பட்ஜெட் முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன் அப்படின்னா, ரஜினி படத்துல சொல்லற மாதிரி, அளவுக்கு அதிகமா ஆசை படறவங்க,அவசர படறவங்க நல்லதா போட்டோ எடுத்ததா சரித்திரமே இல்லை..அதனால கொஞ்சம் பொறுமையா இருந்து சேர்த்து வைத்து வாங்குவது புத்திசாலிதனம்..
3.கேமரா செலக்ட் பண்ணுவதற்கான வழிமுறைகள் ...
உங்களுக்கு அடிப்படையா எது முக்கியமான தேவைன்னு முடிவு பண்ணினதுக்கப்புறம் உங்கள் தேவைக்கு உட்பட்ட மாதிரி மட்டும் இருக்கிற நல்ல கேமராவை செலக்ட் பண்ணிக்கலாம்..
உதாரணமா உங்களுக்கு கை அடக்கமா, பாக்கெட்டுக்குள்ள வெக்கற மாதிரி வேணும்ன்னு முடிவு பண்ணிட்டா, முதல் வகை கேமரா (பேசிக் காம்பக்ட்) சிறந்தது..அதுக்கப்புறம் அதுல,என்ன மாடல் வாங்கறதுன்னு முடிவு பன்னலாம்..உதாரணம் (CANON,or PANASONIC,etc)
அதே சமயம்,மின்னுவதெல்லாம் பொன்னல்ல..பார்ப்பதற்க்கு அழகா இருக்கும் கேமரா எல்லாம் நல்ல கேமரா என்று கிடையாது..
ஒரு கேமராவின் உண்மையான இமேஜ் குவாலிட்டியை LCD screenல் வரும் ரிசல்ட்டை வைத்து மட்டும் எவராலும் முடிவு செய்யமுடியாது. அந்த மாதிரி பார்க்கவும் கூடாது.. ஒரு LCD screen ல் வரும் படம் என்பது அந்தந்த கேமராவுக்கு தகுந்த மாதிரி calibrate செய்யபட்டு அதிகபடியான resolution,sharpness கொடுக்கும். இதனால் சில மோசமான படங்களும் தெளிவாக தெரியும்..
மேலும் LCDன் அளவு சிறியதாக இருப்பதால் உண்மையான கலர், ஷார்ப்னெஸ் இவற்றையெல்லாம் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம்.
ஒரு சில கேமராக்களின் LCD screen என்பது ரொம்பவும் குவாலிட்டியாக இருக்கும்,ஆனால் கேமரா சுமாராக இருக்கும்..LCD ல் படம் அருமையாக தெரியும்..இதன் உண்மையான ரிசல்ட் என்பது computer monitorல் பெரியதாக பார்க்கும் போது தான் தெரியும்.. இரண்டிற்க்கும் சம்பந்தமே இருக்காது.
எனவே ஒரு கேமராவின் LCD அழகை மட்டும் பார்க்க கூடாது..
உங்களுக்கு தேவையான சைஸ் முடிவு பண்ணினதுக்கு அப்புறம், நீங்கள் விருப்ப படும் கேமரா மாடல் ஐ பற்றிய விமர்சனங்களை புத்தகங்கள்,இன்டர்நெட் வழியாக நன்றாக அலசி ஆராயவும்..
சிறந்த வெப் தளங்கள்,
1.www.dpreview.com
2.www.dcresource.com
3.www.imaging-resource.com
4.www.steves-digicams.com
5.www.kenrockwell.com (நான் மிகவும் விரும்புவது)
குறிப்பிட்ட ஒரு மாடல் பிடித்தாலும்,உங்கள் தேவைக்கு ஏற்ப அதே மாதிரி உள்ள வேறு மாடல் ஐ பற்றியும் நன்றாக படிக்கவும்..
மேலும், நீங்கள் வாங்க விரும்பும் கேமரா மாதிரி யாராவது வைத்திருந்தால்,அவர்களதுடைய கருத்துக்களையும், அனுபவங்களையும் கேட்டு தெரிந்து கொள்ளவும்..
அதே சமயம், இதை வைத்து மட்டும் முடிவு பண்ண வேண்டாம்.. ஏனென்றால் அவர்களும் உங்களை மாதிரி புது கேமரா வாங்குபவராக கூட இருக்கலாம்..
ஏற்கனவே சொன்ன மாதிரி உங்க பட்ஜெட் ஐ நன்றாக பிளான் செய்யவும்.. பட்ஜெட்டுக்கு கொஞ்சம் அதிகமாக வந்தால், பட்ஜெட்டுக்காக குவாலிட்டி கம்மியான கேமராவை வாங்க வேண்டாம்.. ஒரு மாதமோ,மூன்று மாதமோ வெயிட் பண்ணி காசு சேர்த்து வைத்து வாங்குவதே சிறந்ததாகும்..
நீங்களே நேரடியா தொட்டு,பயன்படுத்தி வாங்கவும்.. ஒரு சிலருக்கு கை கொஞ்சம் நடுங்கும், ஒரு சிலருக்கு கை பெரிதாகவோ,சிறியதாகவோ இருக்கும்.. அதனால அந்த கேமரா சைஸ் உங்களுக்கு சரியாக உள்ளதா என்று சரி பார்த்த பின்னரே வாங்குவது புத்திசாலி தனம்.. ஏனென்றால் உங்கள் தேவைகளை உங்களை விட யாரும் சிறப்பாக புரிந்து கொள்ள முடியாது..
இனி,எத்தனை pixelகள் வாங்குவது என்பதை பற்றி அடுத்த பாகத்தில் பார்ப்போம்..
இப்போதைக்கு போய்ட்டு வரட்டுங்களா..
நன்றி,
கருவாயன்..