Tuesday, June 3, 2014

2014 யூன் மாதப் போட்டி அறிவிப்பு

வணக்கம் நண்பர்களே,

இப்பூமியில் உயிர் வாழ முக்கியமாக ஐம்பூதங்களின் உதவி அவசியமாகின்றது. ஐம்பூதங்கள் /பஞ்சபூதங்கள் (ஐந்து இயற்கை சக்திகள் ) பற்றிய மெய்யியல் கருத்து இந்திய மெய்யியலில் காணப்பட, ஜப்பானிய மற்றும் கிரேக்க மெய்யியலில் நான்கு இயற்கை சக்திகள் பற்றிய கருத்து உள்ளது. இம்மாதம் இந்த நான்கு இயற்கை சக்திகளையும் (நான்கு பூதங்களையும்) உங்கள் கமிராவில் அடக்குவதே போட்டிக்கான அடிப்படை தகுதியாகும்.

இம்மாதத் தலைப்பு: நான்கு இயற்கை சக்திகள் (Four elements)

நீர், நிலம், நெருப்பு, காற்று என்பனவே அந்த நான்கு இயற்கை சக்திகளாகும். அழகாய், பார்ப்பவர் ஈர்க்கும் விதமாக இவற்றில் ஒன்றை உங்கள் கமிராவினால் கிளிக் செய்து அனுப்புங்கள்.
நீர்: நீர்த்துளி முதல் சீறும் சமுத்திரம் வரை படமாக்கலாம்

நிலம்: வெப்பத்தில் வெடித்துப் போன நிலம் முதல் அழகாகத் தெரியும் எந்த நில அமைப்பும் போட்டிக்கு ஏற்றது. படத்தைப் பார்த்ததும் நிலமே நினைவுக்கு வர வேண்டும்.

நெருப்பு: சீறும் தீக்குச்சி முதல் காட்டுத்தீ வரை போட்டிக்கு உகந்தது

காற்று: காற்றுக்கு உருவம் இல்லை. ஆனால் அதன் தாக்கத்தில் அசையும் மரங்கள், நகரும் புகை போன்றன கருப் பொருளாக இருக்கலாம். காற்றைக் காண முடியாவிட்டாலும், படத்தைப் பார்த்ததும் காற்றை உணர வேண்டும்.

இதைத்தவிர இந்நான்கு இயற்கைச் சக்திகளில் இரண்டோ, மூன்றோ அல்லது நான்கோ ஒரு படத்தில் இருந்தாலும் சரி. 

போட்டி விதிமுறைகள் இங்கே

படங்கள் வந்து சேரவேண்டிய கடைசித்தேதி: 20-06-2014 

மாதிரிப் படங்கள்:

# Anton


நீர்

நிலம்

நெருப்பு

காற்று





#Ramalakshmi
நெருப்பு

நீர்

  ***

9 comments:

  1. படங்கள் வந்து சேரவேண்டிய கடைசித்தேதி: 20-05-2014 ( பிழையை திருத்தவும்)

    ReplyDelete
  2. பங்குபெறுவோருக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. படம் அனுப்பி விட்டேன் அதை எங்கு பார்ப்பது

    ReplyDelete
  4. @rk bala
    https://picasaweb.google.com/111715139948564514448/201406#

    இந்தப் பக்கத்தின் வலது மேல்பக்கத்திலும் போட்டி ஆல்பம் ஸ்லைட் ஷோ_வாகத் தெரியும்.

    ReplyDelete
  5. ravi.jpg புகைப்படம் அனுப்பியுள்ளேன் 19.6.14 அன்று. இதுவரை slide showல் காணவில்லை! ஆவன செய்யவும்!

    ReplyDelete

  6. கடைசித் தேதி வரையிலும் வந்த போட்டிப்படங்கள் ஆல்பத்தில் இணைக்கப்பட்டுள்ளன. யாருடையதேனும் விட்டுப் போயிருந்தால் தெரிவிக்கவும்.

    @ RAVIJI RAVI,

    உங்கள் படமும் தற்போது இணைக்கப்பட்டிருக்கிறது.

    ReplyDelete
  7. ஓ! கடைசி தேதி முடிந்ததா...
    ஏதேனும் வழி உள்ளதா பங்கு பெற...
    @thannivandi

    ReplyDelete
  8. இப்போதும் பங்கு பெற வாய்ப்புள்ளதா...?
    இன்று தான் கவனித்தேன்...

    ReplyDelete
  9. @Thannivandi,

    அடுத்த மாதப் போட்டியில் பங்கு பெறலாம்.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி