Friday, September 2, 2011

செப்டம்பர்'11- போட்டி அறிவிப்பு

எல்லாருக்கும் வணக்கம்.

நம்மைச் சுற்றிலும் எப்போதும் சில வடிவங்கள் மறைந்து கிடக்கும். மேகங்களை பார்த்து 'டேய் அங்க பாருடா சிங்கம் மாதிரி இருக்குல்ல', 'குதிரை மாதிரி இருக்குல்ல'.. இப்படி பல வடிவமைப்புகள் வெவ்வேறு பொருட்களில்/இடங்களில் விரவிக் கிடக்கின்றன. அது போல சில எழுத்து வடிவங்களும் எண் வடிவங்களும் காணக் கிடைக்கும்.

இந்த மாத போட்டி: "தற்செயலான எழுத்துகள்/எண்கள் "

போட்டி விதிமுறைகள் இங்கே.

படங்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி 15-09-2011.

இந்த மாத போட்டிக்காக மட்டும் படத்தின் ஃபைல் நேம் முறையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது... படத்தின் ஃபைல் நேம், அனுப்பும் மடலின் சப்ஜெக்ட் இரண்டிலும் முதலில் படத்தை எடுத்தவர் பெயர், தொடர்ந்து அடைப்புக்குள் நீங்கள் படம் பிடித்திருக்கும் எழுத்து/எண் என்றிருக்குமாறு அனுப்புங்கள். எடுத்துக்காட்டாக: MQN(X).jpg என்றிருக்க வேண்டும்.
கீழுள்ள மாதிரி படங்களை பார்த்தாலே உங்களுக்கு போட்டி என்னவென்று விளங்கிவிடும். இருந்தாலும், சில விஷயங்களை தெளிவு படுத்துகிறேன்.

நீங்கள் குறிப்பிட விரும்பும் எண்/எழுத்து முதன்மை பொருளாக(main subject) இருக்க வேண்டும். படத்தில் எங்கே ஒரு மூலையில் 10% அளவில் மட்டும் அந்த எழுத்து வடிவம் படமாக்கப் பட்டிருக்கக் கூடாது. முதன்மை பொருளாக இருக்க வேண்டும்.

  • நேரடியாக ஒரு எண்ணோ/எழுத்தோ எழுதப்பட்டிருப்பதை படமாக்க கூடாது. அதவாது, எங்கேயோ ஒரு 'D' என்று எழுதப்பட்டிருப்பதை படமாக்கக் கூடாது. அது போன்ற வடிவமைப்புடன் உள்ளதைத்தான் படமாக்க வேண்டும்.
  • ஒரு எழுத்தை தலைகீழாக படமாக்க நேரிட்டால், பரவாயில்லை படம் பிடியுங்கள், பின்னால் பிற்தயாரிப்பில் அதை rotate செய்து அனுப்பி விடுங்கள். பார்வையாளரை தலை சுற்ற வைக்காதீர்கள். :)))
  • தமிழ் எழுத்துக்களாக (ஆங்கிலம் & தமிழ் மட்டும்) இருந்தாலும் பரவாயில்லை. வேறு மொழி வேண்டாம் ப்ளீஸ் (எனக்குத் தெரியாது... அதனால் என்னால் கண்டு பிடிப்பது சிரமம்).
மாதிரி படங்கள்.
X

S

O
H - (நன்றி ராமலஷ்மி)
W - (நன்றி ராமலஷ்மி)
இப்படத்தில் கழுத்தில் பாம்பு ‘U' ஆகவும் கையில் S ஆகவும் தெரிந்தாலும் அழுத்தமாக எழுத்தைச் சொல்வது w. எனவே மல்டிபிள் எழுத்துள்ள படமாயினும் நீங்கள் காட்ட விரும்புவதையே அடைப்புக்குள் குறிப்பிடுங்கள்.

T


டிப்ஸ்:
பறவைகளில் 'S' நிறையக் காணலாம்.
கட்டிடங்களில், 'D' 'W' 'U' 'Z' ஆகிய எழுத்துகள் காணக் கிடைக்கும்.
சாலை வளைவுகளில் 'U' 'C' காணலாம்.
மரக்கிளைகளில், 'V' 'W' 'X' 'Y' போன்றவை கிடைக்கும்.
மேலும், இங்கே இது போல பல படங்கள் உங்கள் ஐடியாவுக்கு.
ஆக..... இந்த மாத போட்டி உங்களுக்கு தெளிவாய் விளங்கியிருக்கும் என்று நம்புகிறேன். சந்தேகங்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

நடுவர்: MQN

போட்டிக்குப் படங்களை அனுப்பி கலக்குங்க மக்களே. :)


13 comments:

  1. சூப்பர் தலைப்பு..

    ReplyDelete
  2. சூப்பர் தலைப்பு... கலந்து கொள்ள இருக்கும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. முதல் முறையாக முயற்சி செய்யப்போகின்றேன்...ஆர்வத்தை தூண்டியதற்கு நன்றி....
    சித்திரன்

    ReplyDelete
  4. ஒரு எழுத்து அனுப்பி இருக்கிறேன் .
    நல்லதொரு ஐடியா. வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. முந்தின பின்னூட்டம் என்னுடையதுதான். அனானியாகத்தான் வரவேண்டி இருக்கிறது.!!
    வல்லிசிம்ஹன்

    ReplyDelete
  6. நல்ல தலைப்பு ....
    எழுத்து படத்தை அனுப்பி இருகிறேன் .

    நன்றி !!!

    ReplyDelete
  7. hallo,
    எழுத்து, எண் படம் ஒன்று அனுப்பியுள்ளேன்.பார்க்கவும் நன்றி
    நாகராஜன்

    ReplyDelete
  8. sir prize enna kudupinganu sona konjam muyarchi pannuven...

    ReplyDelete
  9. நான்,ஆங்கில எழுத்து 'Q'அனுப்பியுள்ளேன்.நான் ஸ்டிக்
    தோசைக்கல்லின் படத்தை ஆங்கில எழுத்து 'Q' வாக எடுத்து அனுப்பியுள்ளேன்.நன்றி

    ReplyDelete
  10. //sir prize enna kudupinganu sona konjam muyarchi pannuven...//

    அனானி சார், போட்டி முடிவுகள் வெற்றியாளர்களின் திறமைக்கு அங்கீகாரம். மெகா போட்டிகளில் மட்டுமே பரிசுகள் வழங்கப்படும்.

    போட்டியில் கலந்து கொள்வதன் மூலமாக நிறைய கற்றுக் கொள்ள இயலும் என்பதைப் புரிந்து கொண்டவர்கள் பிட் குடும்பத்தினர். நீங்களும் முயன்றிடுங்கள். தொடர் பங்களிப்பில் இதைப் புரிந்து கொள்வீர்கள்:)!

    ReplyDelete
  11. செப்டம்பர் மாத போட்டி: "தற்செயலான எழுத்துகள்/எண்கள் " ( letter I or NO 1) புகைப்படம் அனுப்பி உள்ளேன்

    நன்றி .ஜெரால்ட் பிரசன்னா

    ReplyDelete
  12. நானும் அனுப்பி வைத்துள்ளேன்..

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி