Thursday, April 30, 2015

மறுபக்கம் - 2015 ஏப்ரல் மாதப் போட்டி முடிவுகள்

அனைவருக்கும் வணக்கம்,

மறுபக்கம் காட்டும் படங்களில் முதற் சுற்றிலிருந்து இறுதி நிலைக்கு வந்துவிட்டோம். பல படங்களில் உள்ள கையெழுத்துக்கள் (signatures) உறுத்தலாக உள்ளன. படங்களில் இருந்து கவனத்தை திசை திருப்புவனவாகவும் இருந்தன. படத்தை உற்று நோக்கும் போது, கவன ஈர்ப்பை கையெழுத்துக்கள் பெறுவது தவிர்க்கப்படுவது நல்லது. எங்காவது ஓரத்தில் சின்னதாக, மங்கலாக இருப்பது நல்லது. இல்லாவிட்டாலும் நல்லதே. பொதுவாக, வெளியில் இடம்பெறும் போட்டிக்களுக்கு கையெழுத்துக்கள் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.

பல படங்கள் நன்றாவிருந்தாலும் ஒருசில காரணங்களினால் வெற்றி பெறும் வாய்ப்பைத் தவறவிட்டுள்ளன. வெற்றி பெறும் படங்களை அறியுமுன், மற்றவை வெற்றி பெறாததன் காரணத்தைச் சுருக்கமாகத் தருகிறேன்.

#விஜய்
தலைப்புக்கு நல்ல கருத்தை வழங்குகிறது இப்படம். சுமையைக் கொண்டு செல்லும் முதியவர், மீண்டும் பார்க்க வைக்கும் ஆடை நிறம் என்பன சிறப்புக்கள். வெளிறிய வானம் படத்திற்கு எடுப்பாகவில்லை.





#கார்த்திக் பாபு
பின்புலம், ஒளி பயன்படுத்தப்பட்ட விதம், கருத்து என்பன நன்றாகவிருந்தாலும், படம் வெட்டப்பட்ட முறை (crop) சிறப்பாகவில்லை. நடனக்கலைஞர்களின் கால்கள் வெட்டப்படாது, சிறு இடவெளியுடன் இருந்திருந்தால் சிறப்புப் பெற்றிருக்கும்.


#தனராஜ் ரமேஸ்
நல்ல முயற்சி. Panning சிறப்பாக வந்துள்ளது. வண்டியின் பின்புறம் சேர்ந்து தெரிந்திருந்தால் மேலும் சிறப்பாக தலைப்புக்கு பொருந்தி இருந்திருக்கும். நுட்ப அளவில் நல்ல படம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், கவன ஈர்ப்புக் குறைவாகவுள்ளது.



#புகைப்பட காதலன்
ஓவியம் போன்ற படப்பிடிப்பு. ஆனாலும், கூட்டமைவு (Composition) சிறப்பாக அமைந்திருக்க வேண்டும். படத்திலுள்ள இருவரும் இடப்பக்கம் இல்லாது வலப்பக்கம் இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.



#மதன் மத்தியூ
வானம், நிலம், ஆட்கள் என குறைந்த உள்ளடக்கங்களுடன், ஆடம்பரமற்ற அழகான படம். ஆனாலும், கவன ஈர்ப்பு அதிகமாக இல்லை.



#ஜவாகர் ஜெயபால்
இதுவும் குறைந்த உள்ளடக்கங்களுடன், ஆடம்பரமற்ற அழகான படம். பச்சை வண்ணச்சாயல் (hue) அதிகமாகவுள்ளது. கூட்டமைவை (Composition) இன்னும் சிறப்பாக அமைத்திருக்கலாம். இடப்பக்கமும், கீழ்ப்பக்கமும் இடைவெளியைக் குறைத்திருக்கலாம். படம் வெட்டப்பட்ட (crop) விதமும் நன்றாக இல்லை. படத்தில் அகலம் அதிகமாகவும் உயரம் குறைவாகவும் உள்ளது. இதுவே கூட்டமைவில் (Composition) குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

#தீபன் சுபா
வித்தியாசமாக, ஓர் ஒழுங்குடன் படம் உள்ளது. ஆனால், கவனயீர்ப்பு அதிகமில்லை.



#சிறி பிரபு
அழகான கருப்பு-வெள்ளைப்படம். வயது, சுமை, பொருளாதார நிலை என்பன மிக அழகாகக் காட்டப்பட்டுள்ளன. இடப்பக்கத்திலுள்ள கோடு, வலப்பக்கம் அரைகுறையாகத் தெரியும் பொருள் என்பன படத்தில் பலவீனங்கள். படம் வெட்டப்பட்ட (crop) முறையிலும் கூட்டமைவிலும் (Composition) சற்றுக் கவனமெடுத்திருக்கலாம். முறையாக வெட்டப்பட்டு, வலப்பக்கத்தில் சற்று இடைவெளியுடன், உருவம் இன்னும் சிறப்பாகத் தெரிய சற்று மாற்றமும் செய்திருந்தால் மிகச் சிறப்பாக வந்திருக்கும்.



3 ஆம் இடம்: பிரேம்நாத்
இயல்பாக, சின்னஞ்சிறார்களை படம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள். இயல்பாக இருக்கும் சின்னஞ்சிறார்கள்தான் படத்தின் வெற்றிக்குக் காரணம். படம் சற்சதுரமாக காட்சியளிப்பது படத்திற்கு சிறப்பாக அமையவில்லை.



2 ஆம் இடம்: பிரேமிலா
சிறப்பான குவிவு (focusing), அளவான நிறங்கள், இயல்பான தன்மை என்பன சிறப்புக்கள். ஓவியம்போல் காட்சியைப்படமாக்கியதற்கு வாழ்த்துக்கள்.



1 ஆம் இடம்: கார்த்திக்
கூட்டமைவு (Composition), குறிப்பிட்ட சில நிறங்கள், இயல்புத் தன்மை என்பன படத்திற்கு அழகு சேர்க்கின்றன. அழகான படப்பிடிப்புக்கு வாழ்த்துக்கள்.


போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி! 
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
***

Saturday, April 25, 2015

2015 ஏப்ரல் மாதப் போட்டி முதல் சுற்று முடிவுகள்

அனைவருக்கும் வணக்கம்,

இப்மாதப் போட்டிக்கு வந்த சில படங்களில் பல அழகாகவும், சிறப்பாகவுமிருந்தன. ஆயினும், சில படங்களை மட்டுமே முதல் சுற்றுக்கு தெரிந்தெடுப்பது என்ற காரணத்தின் நிமித்தம் தேர்வான மறுபக்கம் காட்டும் படங்கள்.

எவ்வித வரிசையுமின்றி...

#கார்த்திக் பாபு

#விஜய்

#தனராஜ் ரமேஸ்

#புகைப்பட காதலன்

#மதன் மத்தியூ

#ஜவாகர் ஜெயபால்

#கார்த்திக்

#பிரேம்நாத்

#பிரேமிலா

#தீபன் சுபா

#சிறி பிரபு

போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி! முதல் சுற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!

Saturday, April 4, 2015

2015 ஏப்ரல் மாதப் போட்டி அறிவிப்பு

அனைவருக்கும் வணக்கம், 

இம்மாதப் போட்டித் தலைப்பு: மறுபக்கம்

அரசியலின் மறுபக்கம், சினிமாவின் மறுபக்கம், வாழ்க்கையின் மறுபக்கம் என்று எத்தனை மறுபக்கங்கள். கோபப்பட்டுக் கொண்டுகூட "எனக்கொரு மறுபக்கம் இருக்கு" என்று நாம் சொல்வதுண்டு. முன் பக்கம் அல்லது தெரியும் பக்கம் பெறும் முக்கியத்துவத்தை மறுபக்கமும் பெறுவதுண்டு. ஒரு பூவின் மறுபக்கம்கூட கலைஞனின் பார்வையில் அழகாகும். மறுபக்கம் எதார்த்தமான பார்வையையும், ஒரு செய்தியையும் தரவல்லது.


எடுத்துக்காட்டுக்கு சில படங்கள் இங்கே:

Anton:
#1

#2


#3

Ramalakshmi
#4

#5

#6


#7

வழமையான போட்டி விதிமுறைகள் இங்கே.

படங்கள் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி 20 ஏப்ரல் 2015

**

Thursday, April 2, 2015

நெகடிவ் ஸ்பேஸ் - மார்ச் 2015 போட்டி முடிவுகள்

ணக்கம்.

இந்த மாசம் நிறைய பேர் பங்கேற்றது எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது. அதிலும் பாதிக்குமேல் தலைப்பை உள்வாங்கி படம் எடுத்து அனுப்பியிருந்தீர்கள். முதல் பத்து படங்களிலிருந்து சிறந்த மூன்றைத் தேர்ந்தெடுப்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. சில டெக்னிகல் விஷயங்கள் போக, என்னுடயை சொந்த ரசனையின் அடிப்படையில் தேர்ந்தேடுக்கப்பட்டவையே இந்த முடிவுகள். இந்த பத்துமே சிறந்த படங்கள்தான் என்பதில் சிறிதும் ஐயம் வேண்டாம்.

அப்புறம் இன்னொன்னு கவனிச்சீங்களா? நெகடிவ் ஸ்பேஸ் படங்களுக்கு கருப்பொருளை (சப்ஜெக்டை) நடுவில் வைத்து எடுப்பது அவ்வளவாக ஈர்க்கவில்லை. வலது/இடது/மேல்/கீழ் ஓரங்களில் கருப்பொருளை வைத்தால் ஒரு அழகு இருக்கும்.

இன்னொரு விஷயம், போட்டிக்கு தயவு செய்து ஒரே ஒரு படத்தை மட்டும் அனுப்புங்கள்.

முதலில்... கடும்போட்டிக்குப் பின் அடுத்த சுற்றுக்குள் வரமுடியாமல் போன படங்கள் (வரிசையில் இல்லை).

#சித்ரா சுந்தர்:

ரொம்ப அழகான படம் அழகான நிறம். பார்த்தவுடனே மனதுக்கு அமைதியை தரும் படம். இரண்டே இரண்டு திருத்தங்களை செய்திருந்தா நிச்சயம் முதல் மூன்றுக்குள் வந்திருக்கும். அதாவது, முதல்ல கருப்பொருளை இன்னும் கொஞ்சம் மேல்-இடது மூலைக்கு கொண்டுவர்ற மாதிரி வெட்டியிருக்கலாம் (crop) & பறவையோட தலைப்பகுதில் இன்னும் கொஞ்சம் வெளிச்சம் கொண்டுவந்திருக்கலாம். எப்போவுமே உயிருள்ளவை இடம்பெறும் படங்களின் உயிரே கண்கள்தான். கண்கள் தெளிவா தெரியுற மாதிரி இருந்தா நல்லாயிருந்திருக்கும்.



#பாரிவேல்:

இதுவும் நல்ல வண்ணங்களுடன் அமைந்த படம். துடுப்பு போடும் படகோட்டி, தூரத்தில் தெரியும் பறவைகள் என தங்க வெளிச்சத்தில் அழகு. மேலே சொன்ன மாதிரி... இந்தப் படத்தில் கீழே தண்ணீரை வெட்டியிருந்தால் அருமையாக வந்திருக்கும். அப்புறம்... படம் கொஞ்சம் வலப்புறம் சாய்வா இருக்கு. 


 #ராஜ்குமார்:

அழகான ஒரு ஃபைன்-ஆர்ட் படம். ரொம்ப புடிச்சது எனக்கு. ஆனால், படத்தை பார்த்துக்கொண்டிருக்கும்போது ஒரு பக்கம் உள்ள வெற்றிடத்தின் (அதாவது பறைவை பார்க்கும் திசையில்) மீது மட்டுமே நம் கண்கள் செல்கிறது. வலது பக்கம் உள்ள வெற்றிடம் கொஞ்சம் கண்களை உறுத்துது. கருப்பொருளை நடுவில் வைப்பதில் உள்ள சிக்கல் இது. ஒருவேளை காகத்தின் பார்வை கேமராவை நோக்கி இருந்திருந்தால் நல்லாயிருந்திருக்கலாம்.


#தீபன் சுபா:

ஆஹா! என்ன ஒரு வைப்ரண்ட் நிறம். ரொம்ப நல்லாருக்கு. மேலே சொன்ன அதே கமெண்ட்டுதான் இதற்கும்.


சிறப்புக்கவனம் பெற்ற இரண்டு படங்கள்:

# 5-ம் இடம் - பிரபு:

அழகான குதூகலமான படம். இந்த குழந்தைக் குறும்பு படங்கள் வண்ணத்தில் இருந்தால் இன்னும் நல்லாருக்கும். மேலும், இந்தப் படத்தில் ஷட்டர் வேகம் குறைந்து கொஞ்சம் ப்ளர் ஆகியிருக்கு. வாழ்த்துகள் பிரபு!



# 4-ம் இடம் - வித்யாதரன்:

அழகான காட்சி. மறையும் சூரியனின் மஞ்சள் ஒளி கடலை மின்ன வைக்கிறது. அழகாக ஒதுக்கப்பட்ட நெகடிவ் ஸ்பேஸ். ஒரு சின்ன உறுத்தல்... கருப்பொருள் (படகு) இன்னும் தெளிவாக தெரியும்படி இருந்திருந்தா நல்லாயிருந்திருக்கும். மங்கிய வெளிச்சத்தோடு படகும் கலந்துவிட்டது போல ஒரு தோற்றம். வாழ்த்துகள் வித்யாதரன்.



வெற்றி பெற்ற படங்கள்:
# 3-ம் இடம் - விஜய்:

து மாதிரி படங்கள் எத்தனையோ பார்த்திருக்கிறோம். ஆனால், எத்தனை படங்கள் பார்த்தாலும் சலிக்காத காட்சிகள் இவை. கிராமத்து சிறுவர்களின் இந்த சாகச படங்கள் நாம எல்லாருக்கும் நம்மோடு ஒரு இணைப்பை ஏற்படுத்திவிடும். நமது பால்யம் ஞாபகம் வந்துவிடும். அதான், இந்தப் படத்தின் வெற்றி. வாழ்த்துகள் விஜய்! 


இரண்டு படங்கள் இரண்டாம் இடம் பெறுகிறது. இரண்டும் ஒரே அளவிற்கு என்னை ஈர்த்தது.

# 2-ம் இடம் (1) - கார்த்திக் ராஜா:

ன்ன ஒரு அழகான க்ராபிகல் கம்போஷிசன். சூப்பர்! அந்த காக்கையும் கூட எதோ சொல்கிறது. நீரிலும் நிலத்திலும் அற்புதமான texures. அசத்திட்டீங்க கார்த்திக் ராஜா. வாழ்த்துகள்!



# 2-ம் இடம் (2) - மாஹே தங்கம்:

ன்ன சொல்ல! சான்சே இல்ல. ஆமாங்க, இந்த மாதிரி நிகழ்வை படம் பிடிக்க எத்தனை பேருக்கு வாய்க்கும்? ரொம்ப கொஞ்சமான இடத்தையே கருப்பொருள் பிடித்திரிருந்தாலும், சொல்ல வந்ததை அழகாக சொல்லிவிடுகிறது. புதிய உயிரின் பிறப்பை அழகாக படமாக்கிய மாஹே தங்கத்திற்கு வாழ்த்துக்கள்! படம் ஷார்ப்பா இருந்திருந்தா முதலிடம் சந்தேகமில்லாமல் இந்தப் படத்திற்குத்தான்.



# முதலிடம் - மாஹிரன்:

ம்மியம்! 'அமைதியான நதியினிலே ஓடம்' என நம்மை முணுமுணுக்க வைக்கிறது. காலைப்பொழுது (மாலை?), தூரத்தில் மங்கலான ஒளியில் மரங்கள், ஒற்றைப்பறவை... படகு. ஆஹா! நேர்த்தியான கம்போசிஷன். வாழ்த்துகள் மாஹிரன்!



இந்தப் பத்து பேருக்கு மட்டுமல்ல கலந்து கொண்ட எல்லாருக்கும் வாழ்த்துகள்! புதிது புதிதாய் படம் எடுங்கள். போட்டி அறிவித்த பிறகு தலைப்பிக்கேற்ப எடுங்கள். அது உங்களை மெருகேற்றும். நன்றி.
***