Sunday, December 13, 2015

டிசம்பர் 2015 போட்டி அறிவிப்பு

அனைவருக்கும் வணக்கம், 

இம்மாதப் போட்டித் தலைப்பு: மார்கழி

மார்கழி மாதம் என்பதை எடுத்துக்காட்டக்கூடிய படங்களை போட்டிக்கு அனுப்பலாம். மார்கழி என்றதும் மழைதான் பொதுவாக நினைவுக்கு வரும். வெள்ளமும் வரலாம். மேலும், பண்டிகைகள் பலவும் இம்மாதத்தில் முக்கிய இடம் பெறுகின்றன. கிறிஸ்தவர்களாயிருந்தால் நத்தார், பௌத்தராயிருந்தால் போதி தினம், இந்துவாயிருந்தால் பஞ்ச கணபதி, கோலங்கள், பஜனை, இசை நிகழ்ச்சிகள், யூதாயிருந்தால் ஒளித்திருவிழா என பல விழாக்கள் மார்கழியில் இடம் பெறுகின்றன. எனவே, படத்தைப் பார்த்ததும் மார்கழியை நினைவுபடுத்தக்கூடிய படங்களை அனுப்பி வையுங்கள். 

எடுத்துக்காட்டுக்கு சில படங்கள் இங்கே:

#1

#2

#3

வழமையான போட்டி விதிமுறைகள் இங்கே.


போட்டி அறிவிப்பு தாமதமாகியதால், இம்முறை படங்கள் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி 25 டிசம்பர் 2015

Tuesday, December 1, 2015

நவம்பர் '15 போட்டி முடிவுகள்

எல்லாருக்கும் வணக்கம்!

இம்மாத போட்டிக்கு படங்கள் அனுப்பிய அனைவருக்கும் நன்றி. நிறைய நல்ல படங்கள் வந்திருந்தது. வந்திருந்த படங்களில் எனக்கு சிறந்தவைகளாக தோன்றிய படங்களை வெற்றி பெற்ற படங்களாக அறிவிக்கிறேன்.

சிறப்புக்கவனம் பெற்ற படங்கள்
ரூபன்:
அழகான படம். இன்னும் கொஞ்சம் காண்ட்ராஸ்ட் கூடுயிருந்தால் நல்லாயிருந்திருக்கும்.

ஹஃபீஸ் இஸ்ஸாதீன்:
நல்ல படம். எல்லா வண்ணத்துப்பூச்சிகளும் ஷார்ப்பா இருந்திருந்தா இன்னும் சிறப்பா இருக்கும்.

கணேஷ் குமார்:
கொஞ்சம் ஃப்ரேமிங் ரூல்-ஆஃப்-தேர்ட்ஸ் முறயில் அமைந்திருந்தால் அழகா வந்திருக்கும்.

வெற்றிபெற்ற படங்கள்
மூன்றாமிடம் - அமல்


இரண்டாமிடம் - செந்தில் குமார்


முதலிடம் - கண்ணதாசன்


வெற்றிபெற்ற, பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்! விரைவில் டிசம்பர் மாத போட்டிக்கான அறிவிப்புடன்  சந்திக்கிறோம். 

Friday, November 20, 2015

போட்டோஷாப் : மூன்று விதமான ’கருப்பு வெள்ளை’ படங்களை உருவாக்குவது எப்படி?

ணக்கம் பிட் மக்கா! நலமா? இன்றைய கட்டுரையில் நாம் கருப்பு வெள்ளை படங்களை உருவாக்கும் முறையை சற்று விபரமாக பார்க்கலாம்.பொதுவாக கருப்பு வெள்ளை படங்களை உருவாக்க போட்டோஷாப்பில் பலவழிகள் இருக்கிறது இது குறித்து பிட் தளத்தில் ஏற்கனவே சேனல் மிக்ஸர் மற்றும் Gradient tool கொண்டு விளக்கம் தந்திருக்கிறேன்.

இக்கட்டுரையில் கருப்பு வெள்ளை அட்ஜெஸ்ட்மென்ட் லேயரை வைத்து 3 விதமான கருப்பு வெள்ளை எபக்டுகளை எளிமையாக உருவாக்குவது குறித்து பார்க்கலாம்.


1 கான்ட்ராஸ்டுடன் கூடிய கருப்புவெள்ளை:

முதலில் படத்தை போட்டோஷாப்பில் திறந்துகொள்ளவும். இப்போது கருப்புவெள்ளை அட்ஜெஸ்ட்மென்ட் லேயரை இருமுறைஉருவாக்கவும்.
Black & White 2 Adjustment layer ன் பிளன்ட் மோடை Overlay க்கு மாற்றவும்.



Black & White 1 adjustment layerஐ திறந்து உங்களது விருப்பதிற்க்கு ஏற்றவாறு சேனல்களை அட்ஜெஸ்ட் செய்துகொள்ள கான்ட்ராஸ்டுடன் கூடிய கருப்புவெள்ளை படம் தயார்.



2.Lowkey கருப்புவெள்ளை :

உங்களது படத்தை போட்டோஷாப்பில் திறந்துகொள்ளவும். கருப்புவெள்ளை அட்ஜெஸ்ட்மென்ட் லேயரை இருமுறை உருவாக்கவும்.
Black & White 2 Adjustment layer ன் பிளன்ட் மோடை Multiplyக்கு மாற்றவும்.

Black & White 1 adjustment layerஐ திறந்து கொண்டு உங்களது ரசனைக்கேற்ப அட்ஜெஸ்ட் செய்துகொள்ள lowkey கருப்புவெள்ளைப்படம் தயார்.

3.Highkey கருப்புவெள்ளை :

உங்களது படத்தை போட்டோஷாபில் திறந்துகொள்ளவும். கருப்புவெள்ளை அட்ஜெஸ்ட்மென்ட் லேயரை இருமுறை உருவாக்கவும்.
Black & White 2 Adjustment layer ன் பிளன்ட் மோடை இம்முறை Screenக்கு மாற்றவும்.


Black & White 1 adjustment layerஐ திறந்து கொண்டு உங்களது ரசனைக்கேற்ப அட்ஜெஸ்ட் செய்துகொள்ள Highkey கருப்புவெள்ளைப்படம் தயார்.




என்ன வாசகர்களே கட்டுரை எளிமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறதா?

என்றும் அன்புடன்,
நித்தி ஆனந்த்




Sunday, November 8, 2015

பிரேம்குமார் சச்சிதானந்தம் - இந்த வாரப் படம்

ஹம்பி

https://www.flickr.com/photos/prem_sparkcrews/22158946244/in/pool-pit-group/
வாழ்த்துகள் பிரேம்குமார் சச்சிதானந்தம்!
**
தேர்வு: சரவணன் தண்டபாணி
***

Wednesday, November 4, 2015

நவம்பர் 2015 போட்டி அறிவிப்பு

வணக்கம் நண்பர்களே,

இந்த மாதம் மிக எளிதான ஒரு தலைப்புடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. ஆமா, குறிப்பா எதுவுமில்லை. நீங்கள் அனுப்பும் படம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். மலை,மழை, காடு, கடல், ஆறு, மனிதர்கள், விலங்குகள், மேக்ரோ, பூச்சிகள்... இப்படி எதுவா வேண்டுமானாலும் இருக்கலாம். இருக்க வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான், படம் மிகச் சிறந்த படமாக இருக்க வெண்டும். இதுவரை நீங்கள் எடுத்ததிலோ இனி எடுக்கப்போவதிலோ ஒரு சிறந்த படத்தைத் தேர்ந்தெடுத்து போட்டிக்கு அனுப்புங்கள். நிச்சயம் போட்டி பலமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

வெற்றி பெற வாழ்த்துகள்!


படங்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி: 20 நவம்பர் 2015
போட்டி விதிமுறைகள் இங்கே. மீண்டும் நினைவூட்டுகிறோம், படங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரிகள்:
hall84eyes@photos.flickr.com
photos_in_tamil@yahoo.in

---
போட்டி ஆல்பம் இங்கே..

Tuesday, November 3, 2015

இராமேஸ்வர மீனவர்கள்; குலசேகரப்பட்டின தீ மிதி - இந்த வாரப் படங்கள்

நித்தி ஆனந்த்:
இராமேஸ்வர மீனவர்கள்
https://www.flickr.com/photos/nithiclicks/22151555375/in/pool-pit-group/

அருண் வீரப்பன்:
அக்னி
https://www.flickr.com/photos/129265103@N08/22373153180/in/pool-pit-group/ 


சிறந்தபடங்களில் இருக்கின்றன கற்றுக் கொள்ள பல பாடங்கள். PiT உறுப்பினர் குழுவில் இருப்பவர் படம் என்பதால் (Nithi Anand) விலக்கத் தேவையில்லை என்கிறார், இந்த வாரப்படங்களைத் தேர்வு செய்து வரும் சரவணன் தண்டபாணி.

நித்தி ஆனந்த், அருண் வீரப்பன் இருவருக்கும் வாழ்த்துகள்!

***




Saturday, October 31, 2015

அக்டோபர் 2015 போட்டி - முதல் மற்றும் இறுதிச் சுற்று முடிவுகள்

முதல் சுற்றுக்கு முன்னேறிய சில படங்களும்.. இறுதிச் சுற்றை எட்டாத காரணங்களும்..

# Reg
அருமையான முயற்சி. பை மேல் இருக்கிற ஷார்ப்நெஸ்
கோழிக்குஞ்சுகளின் மேல் இல்லாதது குறை...
# இஷா&ஈஸா
தெளிவான பின்னணியில் அழகான படபிடிப்பு.
மூன்று எனும் எண்ணிக்கைக்காக செய்யப்பட்ட க்ராப்பிங் 
சற்று டைட்டாக அமைந்து விட்டது குறை.
# செந்தில் குமார்
ரசனையான படமாக்கம். ஆனால் பூக்கள் மேலன்றி
கிருஷ்ணர் ராதை பார்க்கும் திசையில்பார்வை செல்வதை தவிர்க்க முடியவில்லை.
கவனச் சிதறல் ஏற்படுகிறது. சிலையை  வலப்பக்கம் வைத்து எடுத்திருக்கலாம்.

மேலும் சில படங்களில் குறிப்பாகத் தென்பட்ட குறைகள் போட்டி ஆல்பத்தில் சொல்லப்பட்டுள்ளன.

சிறப்புக் கவனம்:

சுந்தர்ராஜன்
லைட்டிங், கலர் கான்ட்ராஸ்ட் கவருகிறது..
JP கார்த்திக்
வரிசை பார்வையை இழுத்துச் செல்வது சிறப்பு.
(Leading line)

மூன்றாம் இடம்:


# ரஞ்சித் ராஜேந்திரன்


இரண்டாம் இடம்:

# ஜெயவேலு


முதலிடம்: 

# சிவசுப்ரமணியம் சதுர்சன்


போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி.

முதல் சுற்றுக்கு முன்னேறியவர்களுக்கும்
வெற்றி பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்! 
***

Tuesday, October 27, 2015

வனிலா பாலாஜி, ராஜ்குமார் - சென்ற மற்றும் இந்த வாரப் படங்கள்

இந்த வாரப்படம்:

# ராஜ்குமார்

காஷ்மீரி நாடோடி
https://www.flickr.com/photos/rajkumar_photography/21765088254/
சென்ற வாரப் படம்: 
# வனிலா பாலாஜி

மணம் கூட்டும் மசாலாப் பொருட்களும்..
உடல் நலன் காக்கும் உலர் பழங்களும்..
https://www.flickr.com/photos/vanilabalaji/21542523273/
Spice Seller
இருவருக்கும் வாழ்த்துகள்!

தேர்வு: சரவணன் தண்டபாணி
**

Friday, October 16, 2015

போட்டோஷாப் : Neutral Gray Point ஐ கண்டுபிடிப்பது எப்படி?

வணக்கம் பிட் மக்கா நலமா?

***
இன்றைய கட்டுரையில் நாம் போட்டோஷாப்பில் Neutral Gray Point ஐ சுலபமாமக‌ கண்டுபிடிப்பது எப்படின்னு பார்க்கபோகிறோம்.
** 
பொதுவாக நாம எடுக்கிற படங்கள்ல color cast வருவது இயல்புதான். இதற்காகவே professional  கலைஞர்கள் தாங்கள் படம்பிடிக்கும் மாடல்களிடம் முதலில் ஒரு கிரே நிற கார்டை கொடுத்து படம் பிடித்துக்கொண்டு பின்னர் கேமரா raw எடிட்டரில் Synchronize செய்துகொண்டு white balance ஐ சரி செய்து கொள்வார்கள். (இது குறித்தகட்டுரையை நான் பிறகு வெளியிடுகிறேன்).

ஆனா என்ன மாதிரி அப்படியே போகுற போக்குல படம்பிடிக்கிறவங்க, கிராமப்புறமா போயி candid எடுக்கிறவுங்களுக்கு இந்த கிரே கார்டு ஷூட்டிங் எல்லாம் எப்படி சரிப்பட்டு வரும்? அதனால பிற்சேர்க்கையிலதாங்க சரி செஞ்சிக்கனும்.

ஆனா ஒரு படத்தில கிரே புள்ளிய கண்டுபிடிக்கிறது ரொம்ப ரொம்ப கஷ்டமான விஷயமா இருந்துச்சுஆனா Education and Curriculum for the National Association of Photoshop Professionals (NAPP) Senior Developer ஆகஇருக்கிற திரு.DAVE CROSS அவர்கள் ஒரு எளிமையான வழிய கண்டுபிடிச்சு கொடுத்திருக்காரு ..

சரி
அது என்ன வழின்னு பார்க்கலாமா
?

கீழேயுள்ள படமானது என்னுடைய வீட்டில் இன்டோர் லைட்டில் எடுக்கப்பட்ட படமாகும்.படத்தை பார்த்தாலே தெரிகிறது படத்தில் warm tone சற்று கூடியிருக்கிறது. கண்டிப்பாக இது தவறான ஒயிட் பேலன்ஸ் செட்டிங்ஸ் ஆகும்.


சரி இப்போது போட்டோஷாப்பில் உங்களது படத்தினை திறந்துகொள்ளவும்.இப்போது உங்களது லேயர் பேலட்டில் இருக்கும் புதிய லேயர் ஐக்கானை கிளிக்செய்து புதிய லேயர் ஒன்றை உருவாக்கவும்.


இப்போது அந்த லேயரை 50% கிரே வண்ணத்தால் நிரப்பவும்.இதற்கு Edit>Fill  50% Gray வை தேர்ந்தெடுக்கவும்.


இப்போது அந்த லேயரின் blend mode ஐ Differenceக்கு மாற்றவும்.


இனி நியூ அட்ஜஸ்ட்மன்ட் லேயரிலிருக்கும் Threshold கிளிக் செய்யவும்.Threshold ஸ்லைடரை 0 விற்கு கொண்டுவந்து பின் இடமிருந்து வலமாக‌ லேசாக நகர்த்திக்கொண்டு வருகையில் உங்கள் படத்தில் தெரியும் கரும்புள்ளிகள் உங்களது Gray பாயிண்டுகளாக இருக்கலாம்.




சற்று அடர்த்தியான கரும்புள்ளிகள் புலப்பட்டவுடன் அப்படியே நிறுத்தவும்,இனி Color sampler டூலைக்கொண்டு இந்த கரும்புள்ளியை கிளிக் செய்து தேர்வு செய்துகொள்ளவும்.



Gray பாயிண்டை சேம்பிள் செய்துகொண்டப்பின்னர் இந்த gray நிற லேயரும் Threshold லேயரும் நமக்கு தேவையில்லை,எனவே இவ்விரு லேயரையும் தேர்வுசெய்துகொண்டு விசைப்பலகையில் delete பட்டனை அழுத்த இவ்விருலேயரும் அழிக்கப்படும்.

இப்போது புதிய அட்ஜெஸ்ட்மன்ட் லேயரில் Curvesஅல்லது Levelsஸை தேர்ந்தெடுக்கவும்.


இப்போது Curves அல்லது Levels ஸில் இருக்கும் கிரே நிற  Eye Dropperஐ தேர்ந்தெடுத்து நீங்கள் மார்க் செய்த புள்ளியில் ஒரே கிளிக் !!! இப்போது பாருங்கள் கலர் காஸ்ட் நீக்கப்பட்டிருக்கும்.



Before :

 After :




குறிப்பு:
எல்லா படங்களுக்கு இது பயனளிக்குமா? அப்படின்னு நீங்க ஒரு கேள்வியை எழுப்பினால் இல்லைங்க ஆனா பெரும்பாலான‌ படங்களுக்கு பயனளிக்கும்.

நன்றி மக்கா மீண்டும் மற்றொரு கட்டுரையில் சந்திக்கலாம்!

என்றும் அன்புடன்,
நித்தி ஆனந்த்.