A "failed attempt" is always better than "No Attempt" அப்படீன்னு எங்க இங்க்லீஷ் டீச்சர் சொல்லுவாங்க. இது ஏதோ நம்ம மனசை தேத்த மிஸ் சொல்லறாங்கன்னு நாங்க எல்லாரும் பேசிக்குவோம். அதுவும் Essay writing competition லே நம்ம கட்டுரை முதல் ரவுண்டை கூட தாண்டாதப்போ போட்டியை வேடிக்கை பார்க்கரது மட்டுமே செய்யும் கும்பல் இருக்கே.. அவங்க ஒட்டுமொத்தமா நம்மள ரவுண்டுகட்டி " என்னமா கண்ணு... புட்டுகிச்சா? " ன்னு கேக்கும்போது.. போட்டியிலே தேர்வாகலையேங்கிர வருத்தத்தை விட, இப்படி நம்மை அவமான படுத்தறாங்களேன்னு மனசுக்குள்ளே புகையும். போட்டியும் வேணாம், ஒரு மண்ணும் வேணாம்ன்னு தோணும். அப்போ அந்த பக்கம் வந்த எங்க இங்கலிஷ் மிஸ் கிண்டல் பண்ணின கும்பலை பார்த்து விட்ட டோஸ் தான் இது. (அப்புறம் வந்த Essay Writing competition லே செலெக்டானேனா இல்லையான்னெல்லாம் கேக்கப்படாது.. மிஸ் கிட்டே சொல்லிக்குடுப்பேன்.. ஆமா !)
எட்டாங்கிளாஸிலே மிஸ் சொன்னது, பிட்டிலே சேர்ரதுக்கு முன்னே ஏதோ ஒரு மூலையிலே மங்கிக்கிடந்துது. ஆனா பிட்டிலே மாசாமாசம் போட்டிக்கான படங்களை பார்க்கும்போது ஒரு வாசம்னானும் திருவாசகமா சொன்னாங்கன்னு நினைக்கத்தோணுது. இந்த மாத சில்லவுட் போட்டிக்கு அனுப்பின எல்லா போட்டியாளர்களுக்கும் வாழ்த்துக்கள். சுத்தமா கலந்துக்காத்தவங்களைவிட நீங்க எவ்வளாவோ மேல் (பீமேல்).
சரி, தேர்வான முதல் 15 படங்களை பார்ப்போமா !!.
மொத்தம் வந்த 58 படங்களில், 15 படங்களை மட்டும் முன்னிறுத்த நாலு காரணம் உண்டு. ஒண்ணு, எல்லா போட்டியிலேயும் சொல்லரா மாதிரி – தலைப்போட சரியா ஒத்துப்போகலை. ரெண்டாவது, கம்பி – குச்சி மாதிரியான distractions. சில பேரோட படங்களிலே light கம்மியா இருக்கும் போது படத்திலே "கறுப்படிக்குமே" , அதுமாதிரியான படங்களை சில்லவுட்ட்னு தப்பா நினைச்சுடாங்க. (வருத்தப்படாதீங்க, இனிமே சரியான சில்லவுட் எதுன்னு கத்துக்கிட்டா போச்சு). மூணாவது, ஒரிஜினல் 'பரவாயில்லாமா இருக்கு', படத்தை எடுக்கும் போது இருந்த உண்மையான சூழலை அதே மாதிரி கொண்டுவரணும்ன்னு நினைக்கிறாங்க. அதுக்காக GIMP / Photoshop லெ ரொம்பவே மெனக்கெட்டிருக்காங்க. ஆனால், மேக்கப் போடும் போது எங்க நிறுத்தணும்ன்னு தெரியாம திணறியிருக்காங்க. அதனாலேயே அங்க அங்க திட்டுதிட்டா பவுடர் வந்து படத்தோட அழகையே மாத்திடுச்சு.சிலரோட படத்திலே கிராப் & பிரேமிங்க பண்ணினா நல்லா இருந்திருக்கும், பண்ணாம விட்டுட்டாங்க. ( மேக்கப் போடாலும் தப்பு - போடலைன்னாலும் தப்புன்ங்கிரா மாதிரி இருக்கில்லே).. மேக்கப் போடணும், ஆனா அளவோட நிறுத்தணும், அதான் பாயிண்ட்
Not Revelent to Topic
- Arun.jbg
- VALLISIMHAN
- Malten.jpg
- jaya.jpg
- somayajula.sastry
- S.M.Anbu Anand
- Ashok
- Sri
Distractions / blur / கறுப்படித்திருப்பது / Noise/ glare
- Vaasi
- gurupandi.jpg
- Knbpsa
- Goma
- Sriram
- Tulasi
- Ramalakshmi
- Gnanaprakash
- Nundhaa
- Parthasarathy
- Nilofer Anbarasu
- Thiva
- jwaharclicks .jpg
Missed out due lack of cropping & framing
- Manivannan
- Vennila meeran
- Gaanaprakash
- Kamal (Noise on the edges)
- Prem G
- Madan
Brilliant for ecards, but seems to loose an edge somewhere
- Nila's Mom
- Venkiraja
- T Jay
- Aadav
- Karthi
எல்லாம் சரிதான், தேர்வான 15 படங்கள் + இங்கே பட்டியலிட்டிருக்கும் 33 படங்கள். மிச்சம் 10 படம் என்ன ஆச்சு?.. இதுக்கு என்கிட்டே பதில் இல்லை. இந்த 10 படங்கள் எந்த வரிசயிலேயுமே வரலை. முதல் சுற்றில் தேர்வான 15 படங்களும் இந்த 10 படத்தை தூக்கி சாப்பிடு ஏப்பம் விட்டுடுச்சு.. அம்புட்டுத்தேன். அடுத்த பதிவுல வின்னர்ஸு யாரு பார்க்கலாம்.
//டிஸ்கி
தேர்வு செய்யப்பட்ட படங்கள் எல்லாமே நடுவர்களின் மனதுக்கு சரியானதாக தோன்றியவையே. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும். இதுவே வேறு நடுவர்களாக இருக்கும் பட்சத்தில் இந்த தேர்வில் சில மாறுதல்கள் இருக்கலாம் துல்லியமான அளவீடுகள் புகைப்படத்துக்கு இல்லை. அதன் படி நீங்கள் நல்ல படம் என நினைத்த படங்கள் தேர்வு செய்யப்படாமல் இருக்கலாம். அதுக்காக டென்சன் ஆயிடாதீங்க. எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம்.//