Tuesday, April 15, 2008

Manual-இல் படம் எடுப்பது எப்படி?? - 1

16 comments:
 
போன பதிவுல உங்களின் கேமராவில் வெவ்வேறு மோட்கள் பற்றி அறிந்துக்கொண்டோம் அல்லவா! இந்தப்பதிவில் அந்த மோட்களில் படம் பிடிக்க ஆரம்பிக்கலாம் வரீங்களா??
போன பதிவை படிக்காதவங்க,அதை ஒரு சுத்து படிச்சிட்டு வந்துடறது நல்லது.
Manual என்று நான் இங்கு குறிப்பிடுவது, லென்ஸ் விட்டம் அல்லது ஷட்டர் வேகம் அல்லது இரண்டையுமே நாமே தீர்மானித்து படம் எடுக்கும் முறையை சொல்கிறேன்.
முதலில் ஆட்டோ மோடை விட்டு விட்டு Av,Tv,M ஆகிய மோட்களில் படம் பிடிப்பதால் என்ன பயன் என்று தெரிந்துக்கொள்வோம்.
ஆட்டோ மோடில் கேமரா தனக்கு ஏற்றார்போல் எல்லா அளவுகளையும் நிர்ணயித்துக்கொள்ளும் என்பதால் நமக்கு வேண்டியபடி படம் எடுக்க வேண்டும் என்றால் அது சரிப்பட்டு வராது.உதாரணத்திற்கு உங்கள் படத்தில் மிகக்குறைந்த DOF-உடன் (shallow Depth Of Field) உங்கள் கருப்பொருள் தனித்து நிற்பது போன்ற படம் வேண்டும் என்றால்,அதற்கு நீங்கள் உங்கள் லென்ஸின் அதிக பட்ச விட்ட அளவை உபயோகித்துக்கொள்ள விரும்புவீர்கள்.
Lesser f number = wider aperture = shallow DOF
குறைந்த f நம்பர் = அதிக லென்ஸ் விட்டம் = குறைவான குவிய ஆழம்
ஆனால் ஆட்டோ மோடில் படம் எடுத்தால் உங்கள் இஷ்டப்படி உங்களால் லென்ஸின் விட்டத்தை நிர்ணயித்துக்கொள்ள இயலாது!! இது போன்று, நீங்கள் படம் எடுக்கும்போது உங்களுக்கு முழு சுதந்திரம் வேண்டுமென்றால் நீங்கள் Av,Tv,M ஆகிய மோட்களில் படம் எடுக்க பழகிக்கொள்வது நல்லது.
இது கற்பதற்கும் சுலபம்தான்,கூடவே சுவாரஸ்யமான விஷயமும் கூட. சிலருக்கு Manual என்ற பெயரை கேட்டாலே சற்றே தலை சுற்ற ஆரம்பித்து விடும்! எதற்கு இவ்வளவு கஷ்டப்பட வேண்டும் ,ஒரே ஒரு பொத்தானை அழுத்தினால் முடிந்துவிடக்கூடிய விஷயத்திற்கு இவ்வளவு மெனக்கெடுவானேன் என்று விட்டு விடுவார்கள். இந்த பதிவை பார்த்து சற்றே நேரம் செலவழித்து முயன்று பாருங்களேன். சரிப்பட்டு வரவில்லை என்றால் திரும்பவும் ஆட்டோ மோடிற்கே சென்று விடலாம்.முயன்று பார்த்தால் தான் என்ன ?? இதை கற்றுக்கொண்டால் ஒரு விஷயத்தை புரிந்துக்கொண்டு செய்யும் திருப்தியாவது கிடைக்கும். என்ன நான் சொல்வது சரிதானே?? ;)

சரி!! ஆரம்பிப்பதற்கு முன் நம்மிடம் தேவையான பொருட்கள் என்னென்ன என்று பார்க்கலாமா? முதலில் வேண்டியது ஒரு கேமரா! அதில் Av,Tv,Manual ஆகிய மோட்களில் படம் எடுக்கக்கூடியதாக இருக்க வேண்டும். அதன் பின் உங்கள் கேமராவில் வெவ்வேறு அளவுகளை மாற்றிக்கொள்வது எப்படி என்று உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்!! தெரியவில்லை என்றால் உங்கள் கேமராவின் செயல்குறிப்புப்புத்தகத்தை(operation manual) எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.அது இல்லையென்றால் இணையத்தில் தேடிப்பிடித்தாலும் சரிதான்.
அப்புறம் உங்களிடம் முக்காலி(ட்ரைபாட்) இருந்தால் ஷட்டர் வேகம் குறைவாக உள்ள படங்கள் எடுக்க வசதியாக இருக்கும். அது இல்லையேல் உங்கள் கேமராவை ஏதாவது தட்டையான மற்றும் கடினமான ஒரு பரப்பில் இருத்திக்கொள்ளுங்கள்.
நீங்கள் கேமராவை பொருத்தும் இடம் உங்கள் கருப்பொருளை படம் பிடிக்க வாட்டமாக இருக்க வேண்டும் என்பதை மறக்க வேண்டாம் ஏற்பாடுகள் எல்லாம் ஆகிவிட்டதா??? சரி இப்போ Manual-இல் படம் எடுக்கலாம் வாங்க.
முதலில் நாம் எடுக்கப்போவது Av மோடில்! போன பதில் குறிப்பிட்டது போல இந்த மோடில் லென்ஸின் விட்டத்தை நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ள அதற்கேற்ப ஷட்டரின் வேகத்தை கேமராவே தீர்மானித்துக்கொள்ளும். முதலில் இந்த படப்பிடிப்புக்கு தேவையான கருப்பொருளை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அது என்ன தனியா தேர்ந்தெடுத்துக்கிட்டு?? ஏதோ கண்ணுல மாட்டுனத கப்புனு புடிக்க வேண்டியதுதானே அப்படின்னு கேக்கறீங்களா?? நம்மளோட இன்றைய பாடத்தின் பலனை சுலபமாக புரிந்துக்கொள்ள DOF நிறையவே மாறுபடும் கருப்பொருள் கிடைத்தால் நன்று.
அதாவது உங்கள் கருப்பொருளின் முன்னாலேயும் பின்னாலேயும் பொருட்கள் இருந்தால் ,லென்ஸ் விட்டத்தின் மாறுபாடுகளினால், அவற்றின் மேல் கேமராவின் ஃபோகஸ் எந்த அளவு மாறுபடுகிறது என்பதை புரிந்துக்கொள்ள வசதியாக இருக்கும். உதாரணத்திற்கு ஒரு மேஜையின் மேல் மூன்று பொருட்கள் இருப்பது போன்று தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அப்பொழுதுதான் அந்த பொருட்களில் நடுவில் உள்ள பொருள் மட்டும் தெளிவாக தெரிவது போல ஒரு படம் ,அந்த பொருட்கள் மூன்றுமே தெளிவாக உள்ளது போன்ற படம் என்று மாற்றி மாற்றி எடுத்து லென்ஸ் விட்டத்தின் மகத்துவத்தை பற்றி அறிந்துக்கொள்ளலாம்.
சரி! உங்கள் கருப்பொருளை முடிவு செய்துக்கொண்ட பின்,உங்கள் கேமராவை அதற்கேற்ப பொருத்திவிட்டு,கேமராவின் மோடை Av-கு மாற்றிக்கொள்ளுங்கள். பின்னர் உங்கள் லென்ஸின் விட்டத்தை முடிந்தவரை பெரிதான அளவிற்கு செட் செய்துக்கொள்ளுங்கள்.ஒவ்வொரு லென்ஸின் அதிகபட்ச விட்ட அளவு அந்தந்த லென்ஸின் மேலேயே குறிப்பிடப்பட்டிருக்கும். என்னுடைய கிட் லென்ஸில் அதிகபட்ச விட்ட அளவு f5.6. உங்கள் லென்ஸின் குறைந்தபட்ச எஃப் நம்பர் லென்ஸின் அதிகபட்ச விட்டத்தின் அளவுகோல் என்பதை மறக்க வேண்டாம். இப்பொழுது உங்கள் ஷட்டரை லேசாக அழுத்துங்கள்! உங்கள் கருப்பொருளின் மேல் ஃபோகஸ் செட் ஆகி விடும்.நீங்கள் வைத்திருக்கும் முன்று பொருட்களில் நடுவில் உள்ள பொருளின் மீது உங்கள் கேமராவின் ஃபோகஸ் செட் ஆகுமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
உங்கள் காட்சியின் ஒளியமைப்புக்கு ஏற்றார்போல், உங்கள் கேமரா, ஷட்டரின் வேகத்தை தீர்மானித்துக்கொள்ளும்.இப்பொழுது Manual-இல் படம் பிடிக்கும் போது நாம் கவனிக்க வேண்டிய அதிமுக்கியமான விஷயத்தை பற்றி நாம் பார்க்கப்போகிறோம்
அது ரொம்ப முக்கியம் என்பதால் இந்த பகுதியில சொன்னா அதிகப்படியா போயிடும்! அதனால அதை விலாவாரியா அடுத்த பகுதியில சொல்றேன்! சரியா???
அட!! எதுக்குங்க அதுக்குள்ள கல்லை எடுக்கறீங்க?? அடுத்த பகுதியை உடனே போட்டுடறேன்!!
ஒரே பதிவா இருந்தா ரொம்ப நீளமா இருக்குமேன்னு தான் இரண்டாக பிரித்துப்போடுகிறேன்.
ஓகேவா??
இப்போ எனக்கு உத்தரவு கொடுங்க!! வரட்டா?? ;)

--தொடரும்..

16 comments:

  1. CVR,

    I am going to buy Canon Digital Rebel XTi (not the one coming with EF-S 18-55mm Lens. just the body)and I am planning to buy EF-S 18-55mm f/3.5-5.6 IS Lens separately. will it work?

    ReplyDelete
  2. ரொம்பவே பிரயோசனப்படும் பதிவு, குறிப்பா என் மாதிர் காமிரா கூமுட்டைகளுக்கு ;-)

    நிதானமா பகுதி பகுதியாவே
    போடுங்க தல


    உங்க காலைக் காட்டுங்க பிளீஸ் ;-)

    ReplyDelete
  3. @உதயக்குமார்
    தாராளமா வாங்கலாம் அண்ணாச்சி!
    நம்ம ஜீவ்ஸ் அண்ணாச்சி கிட்டேயும் ஒரு தடவை கேட்டுகிட்டேன்,அவரும் வாங்கலாம்னு சொல்லிட்டாரு!!!
    வாழ்த்துக்கள்!! B-)

    @கானா பிரபா
    முயற்சி செய்து பார்த்துவிட்டு எப்படி வந்தது என்று சொல்லுங்கள் அண்ணாச்சி!!
    நானே தரையிலே தான் இருக்கேன்,இதுக்கு மேல எதுக்கு காலை வாரி விட பாக்கறீங்க.. ;)

    ReplyDelete
  4. Udhayakumar ,
    18-55mm தூரத்துக்கு
    IS தேவையில்லை என்பது எனது கருத்து. kit lens போதும். IS விலைதான் கூட.

    எதுக்கு உங்களுக்கு IS தேவை என்று சொல்ல முடியுமா ?

    ReplyDelete
  5. தோழரே.. அதாவாது ஏ.வி ல் எடுக்கும் போது எப். நம்பரை கூட்டி வைத்துக்கொள்ளவேண்டும் சரிதானே.. முயற்சித்துப்பார்த்தேன். ஒரு படம் மிகவும் அதிகமாகவும் மற்றது மிகவும் குறைந்த அளவிலும் வைத்துள்ளேன். பார்த்து விட்டு கருத்துச்சொல்லமுடியுமானால் சொல்லுங்கள் (எவ்வாறு அனுப்புவது என்றும் சொல்லுங்கள்). நன்றி..

    ReplyDelete
  6. @கிருத்திகா
    எஃப் நம்பரை கூட்டுவதும் குறைப்பதும்,காட்சியை பொருத்தது,காட்சியின் ஒளியமைப்பை பொருத்தது!
    அதன் வித்தியாசங்களை உணர்த்துவதற்க்காகத்தான் குறைந்த எஃப் நம்பரோடு ஒன்றும் அதிகப்படியான எஃப் நம்பரோடு ஒன்றும் எடுப்பதைப்போல பதிவிட்டேன்.
    மற்றபடி இது Av மோடில் எடுக்க வைப்பதற்கான ஒரு அறிமுகப்பதிவு மட்டுமே.
    உங்கள் படங்களை நீங்கள் உங்கள் பதிவிலேயே வலையேற்றிவிட்டு சுட்டியை பின்னூட்டத்தில் அறிவிக்கலாம்...
    Just Upload the pics in your blog and comment the link in this post! :-)

    ReplyDelete
  7. please leave spae between every paragraph ;)..padikka konjam kastama irukku !!

    ReplyDelete
  8. thala suththuthu, i already tried. i have d300s in this camera where is av,tv mode? i cant understand. ungaludaya lesson arumai annal yenudaya camerala use panna yanaku tahyriyavillai

    ReplyDelete
  9. i already followed the last lesson, but i cant understand what is av and tv mode? please explain

    ReplyDelete
  10. @valliappan...

    அவர் சொல்லியிருப்பது canon கேமராவில் உள்ள செட்டிங்ஸ் பற்றி.. நிக்கானில் அப்படி இருக்காது..

    av mode என்றால் நிக்கானில் A mode ஆகும்,அதாவது aperture priority mode.. இதை பயன்படுத்தும் போது நம்மால் aperture ஐ மட்டும் நம் விருப்பத்திற்கேற்ப நாம் கண்ட்ரோல் செய்து கொள்ளலாம் ஆனால் shutter speed ஐ கேமராவே பார்த்துக்கொள்ளும்..

    Tv mode என்றால் நிக்கானில் S mode ஆகும், அதாவது shutter speed priority mode ஆகும்.. இதை பயன்படுத்தி எடுக்கும் போது நாம் shutter speed ஐ நம் விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளலாம் ஆனால் apertureஐ கேமரா தான் முடிவு செய்யும்..

    P mode(programme mode) என்றால் aperture மற்றும் shutter speed இரண்டையுமே கேமரா பார்த்துக்கொள்ளும்...

    M mode (manual mode) என்றால் aperture மற்றும் shutter speed இரண்டையுமே நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்..நம் விருப்பத்திற்கேற்ப நாம் மாற்றிக்கொள்ளலாம்..

    -கருவாயன்

    ReplyDelete
  11. super thala, arumayana vilakam nanrikal pala, keep in touch. i bought d300s but i cant take any good picture. last 5 days i take (http://www.flickr.com/photos/55730738@N02/5173707343/) this snap only. please guide me.

    ReplyDelete
  12. i am always intersted in flowers and small creatures, i like to buy macro lence. which one is best for d300s.please sent reply as soon as possible, i will purchase with in 2days.
    now i have 18-150mm normal lence only.
    - illakiyam47@hotmail.com

    ReplyDelete
  13. next niraya payr kaypathu passport size photo onnu yayduthu kodunganu, indoorla umberlla lighting illama d300s flash matum vachu yayduka mudiya?(tube light lightingla)???

    ReplyDelete
  14. s...nanum nikon d300 than vatchuruken so explain pannum podhu nikon, and canon camera rendumea yepdi use panrathunu sonningana nalarukum...

    thanks...

    keeke....

    ReplyDelete
  15. naan nikoncoolpix p500 camera vachiruken itha vachithan naan photography training eduthukittu irukken ithu eppadi itha vachi photographila develope aagalaamaa ?

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff