Saturday, February 27, 2010

இதற்கு முந்தைய பகுதிகள்....
எந்த கேமரா நமக்கு சிறந்த கேமரா??
நாம் கேமரா வாங்கும் போது எவ்வளவு zoom வாங்குவது என்று ஒரு குழப்பம் வருவதுண்டு. அது போல wide zoom,tele zoom,optical zoom,digital zoom.. என்று பல சந்தேகங்கள் வருவதுண்டு.. இதெல்லாம் ஒரு லென்ஸின் பல்வேறு வேலைகள். இதை பற்றி தெரிந்துகொள்வதற்க்கு முன் கேமராவில் உள்ள லென்ஸை பற்றி பார்ப்போம்..

லென்ஸ்

பெண்கள் வீட்டின் கண்கள்.. லென்ஸ்கள் கேமராவின் கண்கள்.. ஒரு லென்ஸ் என்பது தான் கேமராவின் கண்கள் ஆகும்.ஒரு லென்ஸ் தான் சென்சாரில்/ நெகட்டிவில் ஒரு இமேஜை உருவாக்கி தரும்.

நம் பார்வை எவ்வளவு தெளிவாக இருந்தால் நாம் நன்றாக பார்க்கமுடியுமோ, அது போல் தான் கேமராவின் கண்களான லென்ஸும்.
ஒரு லென்ஸின் தரத்தை பொருத்து தான் ஒரு நல்ல குவாலிட்டியான,தெளிவான படம் அமையும்.

லென்ஸின் முக்கிய வேலைகளாக இரண்டை சொல்லலாம் ,

1.FOCAL LENGTH.

2.SPEED.

இவ்விரண்டையும் நாம் அனைத்து லென்ஸ்களிலும் குறிப்பிட்டிருப்பதை நாம் பார்க்கலாம்.

பொதுவாக ஒரு லென்ஸில் MM என்று என்களை குறிபிட்டிருந்தால் அது FOCAL LENGTH ன் அளவை குறிக்கும்.

1: என்று குறிப்பிட்டு அதன் பக்கத்தில் எண்கள் இருந்தால்,அது லென்ஸின் வேகத்தின் அளவு ஆகும்.இதை aperture அளவு என்று சொல்வார்கள்..

முதலில் FOCAL LENGTH ன் வேலைகளை பற்றி பார்ப்போம்,
FOCAL LENGTH FOCAL LENGTH என்பது ஒரு சென்சாரில் பதிவாகும் படத்தின் மாறுபட்ட அளவுகளை குறிப்பதாகும்.
இது முற்றிலும் லென்ஸிற்குள் மட்டுமே அளவிடப்படும் ஒரு கணக்காகும். கேமராவுக்கு வெளியில் இருந்து நாம் எடுக்கும் சப்ஜெக்ட் இருக்கும் தூரத்தை வைத்து அளவிடுவதல்ல..
நாம் ஒரு போட்டோ எடுக்கும் போது zoom அளவை மாற்றுவோம் அல்லவா. அப்போது ஒரு லென்ஸின் உள்பகுதியின் நடுவில் இருந்து ஃபோகல் ப்ளேன் வரை , நாம் எடுக்கும் சப்ஜெக்ட் சரியாக ஃபோகஸ் ஆகும் வரை இவ்விரண்டிற்கும் இடையே ஒரு தூர மாற்றம் இருக்கும்.
அப்படி சரியான ஃபோகஸ் பாயிண்டிலிருந்து, நடுவில் இருக்கும் லென்ஸ் வரை உள்ள தூரமே FOCAL LENGTH ஆக அளவிடப்படும்.. இதை மில்லிமீட்டர்(MM) ஆக கணக்கிடுகிறார்கள்.
இதை எப்படி அளவிடுகிறார்கள்?
உதாரணமாக ஒரு சராசரி மனிதனின் பார்வை என்பது 180 டிகிரி வரை அகலமாக பார்க்கலாம்.. அதற்க்கும் கீழ் பார்க்க முடியாது,அதாவது 190,200 டிகிரி என்பது பார்க்க முடியாது. அதாவது நம் பார்வையின் சைடில் இருந்து பின்னால் வரை நம்மால் பார்க்க முடியாது..
நாம் நம் கண்களால் அதிகபட்சம் அகலமாக(180 டிகிரி) பார்க்க முடிகின்ற அளவை, லென்ஸில் 50MM ல்( 35MM ஃபார்மேட் படி) வைத்து எடுத்து பார்த்தால் சரியாக வரும் என்று ஒரு தோராயமாக கணக்கிடபட்டுள்ளது.. அதாவது நாம் பார்க்கின்ற பார்வையின் அளவும் , லென்ஸின் 50mm(35mm format) தரும் படமும் கிட்டதட்ட ஒன்று.
focal length அதிகமாக அதிகமாக படத்தின் அளவு பெரியதாகும், குறைக்கும் போது படம் சிறியதாகும்.
நாம் நார்மலாக பார்க்கும் அளவை (50mm) NORMAL LENS எனவும்,
50MMற்கு கீழ் வரும் 35mm,28mm,24mm etc. என்பதை wide angle lens என்றும், 50mm ற்கும் மேல் வரும் 70mm,105mm,150mm, etc. போன்றவற்றை telephoto lens என்றும் கூறப்படுகின்றன்..
மேலே சொன்னது எல்லாம் 35mm format படி உள்ள அளவாகும்..
சிறிய கேமராக்களில் இதை தான் zoom மாற்றும் இடத்தில்(zoom lever) ஒரு பக்கம் W எனவும் மறுபக்கம் T எனவும் குறிப்பிட்டிருப்பார்கள்.. W என்றால் wide angle ,T என்றால் telephoto என்று அர்த்தமாகும். ஆனால் இந்த வகை கேமராக்களில் எவ்வளவு zoom என்பதை நாம் போட்டோ எடுத்த பின் தான் தெரிந்துகொள்ள முடியும்.
OPTICAL ZOOM என்றால் என்ன?
பொதுவாக நாம் compact size கேமரா வாங்கும் போது 3X optical zoom மற்றும் 4X digital zoom என்றெல்லாம் போட்டிருக்கும். (DSLR கேமராக்களில் எழுதியிருக்காது...)
optical zoom என்பது தூரத்தில் இருக்கும் subjectஐ அருகிலேயே படம் பிடிக்க லென்ஸ் ஐ (optically) முன்னோக்கி செலுத்தி நமக்கு உதவி செய்யும்.. இதனால் நமக்கு படம் குவாலிட்டி மாறாமல்,பிக்சல் மாறாமல் கிடைக்கும்.. optical zoom என்பது தான் real zoom ஆகும்.. இதில் தான் focal length என்பது zoom ற்கேற்ப சரியாக மாறும்.. இதன் அளவு தான் சரியானது..
optical zoomன் அளவுகள் கேமரா வகையை பொறுத்து மாறுபடும். அதிகமான அளவு optical zoom என்றால் தூரத்தில் இருப்பதை இன்னும் எளிதாக படம் பிடிக்க உதவும்..
DIGITAL ZOOM என்றால் என்ன?
digital zoom என்பது நம்மை தூரத்தில் இருப்பவரிடம் optical zoomஐ போல் அழைத்து செல்லாது..அதற்கு பதிலாக optical zoomன் கடைசி zoom அளவு முடிந்த பின்,அதிலிருந்து கேமராவே நாம் பயன்படுத்தும் digital zoomன் அளவிற்கேற்ப கேமராவுக்குள்ளேயே crop செய்து பிறகு டிஜிடலாக enlarge செய்து கொடுக்கும். இதன் விளைவு, குவாலிட்டி மிகவும் குறையும்..,பிக்சலும் குறையும்..
optical zoom ல் படம் பிடித்து,அதன் பிறகு photo editing softwareல் நாம் செய்யும் crop ஐ போன்றதே digital zoom ஆகும்.. photo editingல் crop செய்வதும்,கேமராவில் digital zoom பயன்படுத்துவதும் இரண்டுமே ஒன்று தான்.. digital zoom செய்து படம் பிடிப்பதை விட,optical zoomல் படம் எடுத்து பின் photo editingல் crop செய்வதே சிறந்ததாகும்.ஏனென்றால்,zoom அதிகமாக அதிகமாக நம் கை கொஞ்சம் நடுங்கினாலும் போட்டோ digital zoom ல் மோசமாக தான் வரும்.. எனவே optical zoom எவ்வளவு என்பதை தான் முக்கியமாக பார்க்க வேண்டும்..digital zoom ஐ பற்றி கவலை பட தேவையில்லை..
X என்றால் என்ன அர்த்தம்?

கேமராக்களில் 3X zoom , 15X zoom..என்று போட்டிருப்பதை நாம் பார்த்திருப்போம்,

சரி X என்றால் என்ன?

பொதுவாக X என்பது எத்தனை முறை(times)என்று அர்த்தம். ஒரு லென்ஸில் 18mm - 55mm போட்டிருந்தால்,லென்ஸ் 18mm zoomல் ஆரம்பிக்கிறது,55mm zoomல் முடிகிறது..

18லிருந்து 3 தடவை பெருக்கினால் 54 வருவதால் இந்த லென்ஸ் 3X zoom என்று கூறப்படுகின்றது. இன்னும் சில உதாரணங்கள்...

  1. 28mm-200mm என்றால் 7X zoom (28mm X 7x=200mm)
  2. 18mm-200mm என்றால் 11X zoom (18mm X 11x=200mm)
  3. 55mm-200mm என்றால் 3.6X zoom
  4. 18mm-85mm என்றால் 4.7X zoom.
  5. 35mm-600mm என்றால் 17X zoom.
  6. 6mm - 24mm என்றால் 4X zoom
இதில் முதல் மூன்றின் அளவும் ஒரே 200mm ல் முடிந்தாலும் X என்பது வெவ்வேறு அளவுகள். அதே மாதிரி 3 மற்றும் 4 ன் அளவை பார்த்தால் இன்னும் நன்றாக புரியும்.. 200mm என்பது அதிகமான zoom ஆக இருந்தாலும் இதை விட குறைவான 85mm என்பது அதிகமான X..

எனவே x ன் அளவை பார்த்து மட்டும் மயங்க வேண்டாம்..எந்த zoom rangeல் ஆரம்பித்து,முடிகிறது என்று தான் கவனித்து பார்க்க வேண்டும்.

முடிந்த அளவு எந்த வகையான brand ஆக இருந்தாலும் 28mm(35mm format அளவின் படி) அல்லது அதற்க்கும் கீழ் உள்ள wide zoom ல் (28mm,24mm etc) ஆரம்பம் ஆகும் zoom அளவையே பார்த்து வாங்கவும்.. மேலும் வேகம் அதிகமாக உள்ள லென்ஸையே பார்த்து வாங்க வேண்டும்.. இது ஏன்,எப்படி என்பதையும், எந்த zoom range முக்கியம் என்பதையும் அடுத்த பகுதியில் பார்க்கலாம்.. இந்த பகுதி குறித்த சந்தேகங்கள் ஏதும் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.. போயிட்டு வாரனுங்.. -கருவாயன்.

Friday, February 26, 2010

Flickr PiT Group ல் இருந்து இந்த வாரத்துக்காண(ன) ப(ய)டங்கள். SenShots/ Ar.M.Senthil M Q Naufal Pit Flickr குழுவில் இணைந்து விட்டீர்கள்தானே ?
வணக்கம் மக்கா,
இந்த மாத போட்டியில் வெற்றிப்பெற்ற முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களின் விவரம் கீழே,


முதல் இடம் - செல்லம்

நமக்கு நன்றாக பரிச்சயமான வாகனம். பொதுவாக வெளி இடங்களில் ஒளியமைப்பு நன்றாக அமைவது கடினம். இந்த படத்தில் ஒளியமைப்பு சிறப்பாக உள்ளது. ரயில் நிலையமும் படத்திற்கு வலு சேர்க்கிறது. ரயிலின் முன்னால் சிறிது இடம் அளித்து இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.


இரண்டாம் இடம் - MRK

Panning நன்றாக பயன் படுத்தப்பட்டுள்ளது. நம் கவனமும் வாகனத்தை விட்டு எங்கும் சிதறவில்லை. காரின் கண்ணாடியில் Sun-film இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்(உள்ளே இருப்பவர் தெரிய மாட்டார் :) )


மூன்றாம் இடம் - விஜயாலன் மற்றும் வாசி


இரண்டு படங்களுமே சப்ஜெக்டை முன்னிலை படுத்தி எடுக்கப்பட்டவை. விஜயலானின் படத்தில் வானத்தின் வண்ணம் அருமை. வாசி, கார் விளம்பரத்தில் உள்ளது போல காரினை போஸ் செய்ய வைத்துள்ளார். :)

வெற்றி பெற்றவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ! பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி !!!

Wednesday, February 24, 2010

இளவரசி டயானவிற்கு பிறகு அதிகம் புகைப்படம் எடுக்கப்பட்டது, சூரியன் மறையும் மாலை காட்சிகளாகத்தான் இருக்கும். கேமரா இருக்கும் அனைவரும் ஒரு முறையேனும், இதை முயற்சி செய்து இருப்போம்.
கிம்பில் எளிய முறையில் , இவ்வகை காட்சிகளை மெருகேற்றவது பற்றி இங்கே பார்ப்போம்.



படத்தை கிம்பில் திறந்து, பின்னணி லேயரை நகலெடுத்துக் கொள்ளுங்கள்.



Layer Mode -> Multiply என்று மாற்றிக் கொள்ளுங்கள்.



படம் ஒரளவிற்கு வண்ணதில் நிறைந்து இருக்கும்.
இனி Layer-> New From Visible கிளிக்கினால் ஒரு புதிய லேயர் நாம் இது வரை செய்து இருக்கும் மாற்றங்களோடு உருவாகும்.



அடுத்து Colors-> Color Balance தெரிவு செய்யுங்கள்.




Select Range to Adjust -> Shadows தெரிவு செய்து

சிவப்பையும், மஞ்சளையும் அதிகரியுங்கள்.



உங்களின் இரசனைக்கு ஏற்ப மாற்றுங்கள். உதாரணதிற்கு நான் இங்கே

Red = 51 . Blue = - 34

என்று மாற்றி இருக்கிறேன். ( நீலமும். மஞ்சளும் நேரெதிர் வண்ணங்கள். நீலத்தை குறைப்பது. மஞ்சளை அதிகரிப்பதற்கு சமம்)

அவ்வளவுதான் வேலை. மொத்தம் இரண்டு நிமிடம் கூட ஆகாது செய்து முடிக்க
( படம் உதவி. இராமலக்ஷ்மி )

Monday, February 22, 2010

வணக்கம் மக்கா, இந்த மாதப்போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி. வந்திருந்த வாகனங்களில் முன்னேறிய முதல் 10 வாகனங்கள் கீழே, பெருசு MRK செல்லம் முத்துகுமரன் டில்லிபாபு TJay வாசி விஜயாலன் சத்தியா பிரேம் முன்னேறியவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ! மற்ற படங்களின் விமர்சனம் கீழே, நந்தா - விமானம் இந்த படத்துல மிக மிக சிறியதாக இருக்கு. :( வீரவிஷ்வா - நல்ல படம். ஆனா நெருக்கமான காட்சி அமைப்பு. அந்த ஆட்டோ முழுமையா இல்லை. அதே போல் ஆட்டோவிற்கு முன்னால் சிறிது இடமளித்து இருக்கலாம் விக்னேஷ் - அருமையான காட்சி அமைப்பு. ஆனா போட்டியின் தலைப்புக்கு விலகி இருக்கு. வாகனத்தை (ரயிலை) விட காத்திருக்கும் நபரே கவனத்தை ஈர்க்கிறார். உஸ்மான் - இந்த படத்தில் எல்லா ட்ராளியும் வரிசையாக ஒழுங்குபடுத்தி வைக்கப்பட்டுள்ளதால், வாகனம் என்ற எண்ணம் மனதில் எழவில்லை. கணேஷ் - இந்த படம் கொஞ்சம் silhouette மாதிரி இருக்கு. மேலும் விமானத்தின் முன்பக்கத்தை எடுத்திருந்தால் நன்றாக இருக்கும். ஜெய் - சாதாரண காட்சி அமைப்பு. :( வெங்கட்நாராயணன் - நல்லா இருக்கு ஆனா கொஞ்சம் டல்லா இருக்கு. கொஞ்சம் பிற்சேர்க்கை செய்து பாருங்கள் கலீல் - நீங்க பல படம் அனுப்பி வச்சு இருக்கீங்க. ஆனா அந்த படங்கள் தலைப்புக்கு சிறிது விலகியோ அல்லது சாதாரண காட்சி அமைப்பாக உள்ளது. உங்கள் முயற்சி அனைத்தையும் ஒரே படத்தில் செலுத்தி அடுத்த முறை போட்டிக்கு அனுப்புமாறு வேண்டுகிறேன். நன்றி ! முத்துகுமரன் - நல்ல படம். ஆனா கவனம் விமானத்தில் சாகசம் செய்யும் ஆட்களின் மேல் விழுகிறது. மேலும் background நீல வானமாக இருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும். செந்தில் - நல்லா முயற்சி ஆனா சில இடையூறுகள் உள்ளது. ஆ.ஞானசேகரன் - ரெம்ப நல்ல படம். ஆனா முதல் பத்து படங்களில் இருக்கும் பஞ்ச் இதில் சிறிது குறைவு எமிலின் - தீயை அணைக்கும் முயற்சி தான் உடனடியாக மனதில் பதிகிறது. நல்ல முயற்சி கார்த்திக் - வித்யாசமான சப்ஜெக்ட். ஆனா சாதாரணமான காட்சி அமைப்பு. வேறு கோணங்களில் முயற்சி செய்து பார்த்து இருக்கலாம். காசிவிசு - நல்ல கோணம் மற்றும் சிறந்த படம். ஆனா நெருக்கமான காட்சி அமைப்பு. அந்த கார் முழுமையா இல்லை. மேலும் மேல் பகுதி கொஞ்சம் ஓவர் எக்ஸ்போஸ் ஆகிடுச்சு. பூபதி - சாதாரணமான காட்சி அமைப்பு மற்றும் கொஞ்சம் டல்லா இருக்கு ஆயில்யன் - அருமையான படம். நல்ல டோன். ஆனா தலைப்புக்கு விலகி உள்ளது. மகன் - நல்லா இருக்கு. வித்யாசமாவும் இருக்கு. ஆனா உங்க கிட்ட இன்னும் நெறைய எதிர் பாக்குறோம் தல. பிரேம் ஆனந்த் - நல்ல முயற்சி. ஆனா முதல் பத்து படங்களில் இருக்கும் பஞ்ச் இதில் குறைவு. ஸ்ரீ - இந்த படத்தில் சாலை தான் பிரதானம். அந்த சாலையில் இருப்பவை இரண்டாம் பட்சமாக படுகிறது. ரமேஷ் - நல்லா இருக்கு. விமானத்தின் சில பகுதிகள் ஒழுங்கா எக்ஸ்போஸ் ஆகலை(கருப்பா இருக்கு) சந்திரசேகர் - அழகான காட்சி அமைப்பு. இந்த படத்தில் வாகனத்திற்கு முக்கியத்துவம் சிறிது குறைவு கோமா - சின்ன படம். சாதாரணமான மற்றும் நெருக்கமான காட்சி அமைப்பு. ராமலட்சுமி - அழகான படம். பஞ்ச் இதில் கொஞ்சம் குறைவு. வேறு கோணங்களை முயற்சித்து பார்க்கலாம். வெண்ணிலா மீரான் - நல்ல முயற்சி. அந்த பஸ் படத்திற்கு வலு சேர்க்கிறது. சில டிஸ்டர்பன்செஸ் (குறிப்பா பின் கதவில் இருக்கும் நபர்). பிரியதர்சன் - நல்ல கோணம் மற்றும் காட்சியமைப்பு. ஆனா கருப்பு வெள்ளை இந்த படத்தில் எடுபடவில்லை. கொஞ்சம் டல்லா இருக்கு காவியம் - அருமையான காட்சி. அழகான இடம். தலைப்புக்கு முக்கியத்துவம் குறைவாக உள்ளது கமல் - நல்ல கோணம் மற்றும் நல்ல முயற்சி. சில டிஸ்டர்பன்செஸ் மேலும் தண்டவாளங்களுக்கு சிறிது அதிகம் முக்கியத்துவம் உள்ளது போல் இருக்கு. இன்னும் சில நாட்களில் முதல் மூன்று படங்களோடு சந்திக்கிறேன். நன்றி ! டிஸ்கி - சில படங்களில் பஞ்ச் இல்லை அப்படின்னு நான் சொல்றாதால யாரும் என்னை குத்தனும்ன்னு(பஞ்ச்) ஆசை படாதீங்க. வித்யாசமான கோணங்கள் மற்றும் சிறிதளவு பிற்சேர்க்கை இவையே போதுமானது.

Friday, February 19, 2010

அன்பு மக்களே,

இந்த வாரம் FLICKR PIT GROUP ற்கு வந்திருந்த படங்களில், இரண்டு படங்கள்
` இந்த வாரப் புகைப்படம்` இடத்தை பிடிக்கின்றன.. அவர்கள்
,

ஆனந்தம்



மற்றும்

`கேமரா கிறுக்கன்`



இவர்கள் இருவரில்,

ஆனந்தம் அவர்களின் படத்தில் ,எருமை ஓட்டப்பந்தய வீரரின் உணர்ச்சியை மிக அழகாக பிடித்தமைக்காகவும்,

கேமரா கிறுக்கன் அவர்களின் படத்தில்,ஒரு சிம்பிள் படத்தை தொந்தரவு (distraction) இல்லாமல், சிவப்பு கலரில் நிரப்பி அழகாக பிடித்தமைக்காகவும்,

இருவரும் இந்த வாரம் வெற்றி பெறுகின்றனர்..

இரண்டு வெற்றியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்..

புகைப்படத்துறையில் உங்கள் வெற்றிப் பயணம் தொடர நம் குழுவின் சார்பில் மீண்டும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்
..

Saturday, February 13, 2010

வணக்கம் நண்பர்களே, சென்ற பகுதியில் சென்சார்களின் வகைகளையும், அதன் முக்கியத்துவத்தையும் பார்த்தோம். இந்த பகுதியில்,
  • சென்சார்கள் வெவ்வேறு அளவுகளில் ஏன் வருகின்றன?
  • அப்படி பல்வேறு அளவுகள் இருப்பதால் பிக்சர் குவாலிட்டி என்பது வித்தியாசப்படுமா?
  • சின்ன சென்சார்,பெரிய சென்சார் இரண்டிலும் எப்படி ஒரே அளவு பிக்சல்கள் வருகின்றன? என்பதை பார்ப்போம்..
ஒரே அளவு சென்சாரில் வெவ்வேறு பிக்சல்கள் எப்படி? nikon d40 - 6 mp nikon d40x - 10mp nikon d300 - 12mp மேலே சொன்ன அனைத்து கேமராக்களும் DSLR வகை மற்றும் ஒரே அளவு சென்சார்கள்...ஆனால் வெவ்வேறு பிக்சல்கள்..ஒரே அளவு சென்சாரில் எப்படி பல்வேறு pixelகள் வருவதை பற்றி பார்ப்போம்... உதாரணமாக,ஒரே அளவு கொண்ட மூன்று பெட்டி முழுவதிலும் இடைவெளி இல்லாமல் ஆரஞ்சு பழங்கள்அடுக்கிவைக்கபட்டுள்ளன. ஒரு பெட்டியில் 6 பழங்களும், மற்ற பெட்டிகளில் 12 மற்றும் 18 பழங்களும் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.. ஆனால் மூன்று பெட்டிகளும் ஒரே எடை தான் .. ஒரே எடை என்றால்,ஒவ்வொறு பெட்டியிலும் பழங்களின் சைஸில் தான் வித்தியாசம் என்று நமக்கு உடனடியாக புரிந்துவிடும்.6 ஆரஞ்சுகள் இருக்கவேண்டிய பெட்டிக்குள் 12 அல்லது 18 ஆரஞ்சுகள் இருந்தால் கண்டிப்பாக பழங்கள் சிறியதாக தான் இருக்கமுடியும். இந்த லாஜிக் தான் டிஜிட்டல் சென்சாருக்கும் பொருந்தும். இதில் பெட்டி என்பது சென்சார்,ஆரஞ்சு என்பது pixels அல்லது photo diodes ஆகும். 6 photodiodes(6MP) இருக்க வேண்டிய ஒரு சென்சாரில்,12 photodiodes இருந்தால், இந்த photodiodesன் அளவு சிறியதாக தான் இருக்கும்.எனவே pixelsன் என்னிக்கை அதிகமாக அதிகமாக photodiodesன் அளவு கண்டிப்பாக குறைந்து கொண்டே போகும். எனவே ஒரு சென்சாரில் பிக்சல் கம்மியாக இருந்தால் photodiodesன் அளவு என்பது பெரியதாக இருக்கும்.. பிக்சல்கள் அதிகமாக இருந்தால் photodiodesன் அளவு சிறியதாக இருக்கும்.. அதாவது, ஒரு 6MP DSLR கேமராவில் உள்ள photodiodesன் அளவு, 10MP DSLR கேமராவின் photodiodesஐ விட பெரியதாக இருக்கும். அதாவது, 6MP கேமராவில் இருப்பது 6 பெரிய ஆரஞ்சுகள், 12 MP கேமராவில் இருப்பது 12 சிறிய ஆரஞ்சுகள். photodiodes என்பது பெரியதாக இருந்தால் படங்களின் தரமும், தெளிவாகவும்,noise குறைவாகவும் இருக்கும்.. மேலே சொன்னது எல்லாம் ஒரே அளவுள்ள சென்சாருக்கு தான் பொருந்தும், வெவ்வேறு அளவு சென்சார்களில் ஒரே பிக்சல்கள் எப்படி? 12mp DSLR சென்சாருக்கும்,12mp compact சிறிய கேமரா சென்சாருக்கும், எப்படி ஒரே அளவு பிக்ஸல்கள் வரும்? உதாரணமாக, nikon d5000-12mp ( 1.5 crop sensor) nikon d700 - 12mp ( full frame sensor) canon s90 - 12mp (5.0 crop sensor) இந்த கேமராக்கள் எல்லாம் ஒரே mpஆக இருந்தாலும்,ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை அளவு சென்சார்கள்.. இதற்கு மேலே சொன்ன ஆரஞ்சு பெட்டி உதாரணத்தையே பார்ப்போம்.. இதில் ஆரஞ்சு பெட்டியின் அளவு மட்டும் மாறுபடும் . பெரிய பெட்டிக்குள் 12 பெரிய ஆரஞ்சுகளும்,சிறிய பெட்டிக்குள் 12 சிறிய ஆரஞ்சுகளும் இடைவெளி இல்லாமல் இருக்கும். இரண்டுமே 12 ஆரஞ்சுகள் தான். ஆனால் எடையும் மாறும் , பழங்களின் சைஸும் மாறுபடும். 6 ஆரஞ்சு மட்டுமே அடுக்க வேண்டிய சிறிய பெட்டிக்குள் 12 ஆரஞ்சுகள் அடுக்கினால் பழங்கள் மிகவும் நெருக்கமாக இருக்கும் இல்லையா.. இதனால் காற்று போவதற்க்கு சிரமம்..பழங்களும் டேமேஜ் ஆகும் வாய்ப்பு உண்டு.. அதே மாதிரி தான் சென்சாரிலும், photodiodes என்பது சிறிய சென்சாரில் மிகவும் நெருக்கமாக இருக்கும், இதனால் நாம் எடுக்கும் ஒளியானது photodiodesன் நெருக்கத்தால் மிக சரியாக பதிவு ஆகாது..இதனால் noiseம் அதிகமாக இருக்கும்.. கலர்கள் சரியாக பதிவாகாது.. ஒரே அளவு megapixels கொண்ட, இரு வேறு சென்சார் சைஸ் கேமராக்கள் தரும் வித்தியாசத்தை இந்த சாம்பிள் படம் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.. ( பெரியதாக பார்க்க க்ளிக் செய்யவும்) 1. இது சிறிய வகை சென்சார் உள்ள கேமராவில் எடுத்தது. 2.இது 1.5X crop factor DSLR கேமராவில் எடுக்கப்பட்டது. மேலே உள்ள படங்களை பார்த்தால் நமக்கு வித்தியாசம் தெரிந்துவிடும்.. படம் 1 ல் டீடெய்ல்ஸ் குறைவாகவும்,படம் 2 ல் அதிகமாகவும் தெரியும்.. இந்த வித்தியாசத்தை dynamic range என்று சொல்வார்கள்.. ஒரு பக்கம் வெள்ளை(highlights) அதிகமாகவும், மற்றொரு பக்கம் கருப்பு(shadows) அதிகமாகவும் இருக்கின்றது.. இதுவே சென்சார் அளவு இன்னும் பெரிதானால் டீடெயில்ஸ் இன்னும் நன்றாக தெரியும்.படங்களின் dynamic rangeம் இன்னும் சரியாக பதிவாகும்.. ஒரு 3mp உள்ள full frame சென்சார் கேமரா தரும் picture dynamic range என்பது, 15mp சின்ன சென்சார் கேமராவைவிட அதிகமாக இருக்கும்.. சென்சார்கள் வெவ்வேறு அளவுகளில் ஏன் வருகின்றன?
  • ஒரு பெரிய சென்சாரை தயாரிப்பதற்கு மிகவும் செலவு ஆகும்,அளவில் சிறியதாகும் போது செலவும் மிகவும் குறைந்து விடும்.
  • சென்சார் சைஸ் சிறியதாக சிறியதாக அதன் அளவிற்கேற்ப லென்ஸின் அளவும் சிறியதாக வடிவமைத்தால் போதும்.
  • சென்சார் பெரியதாக இருந்தால்(full frame) dust மற்றும் scratches மிக எளிதில் பதிந்துவிடும்.இதனால் கேமராவுக்கு பாதிப்பு அதிகம்.ஆனால் தற்பொழுது டெக்னாலஜியின் வளர்ச்சியில் இந்த குறைகளை நீக்க பல வழிகள் வந்துவிட்டன.இருந்தாலும் விலை வித்தியாசம் மிக அதிகம்.
  • சென்சார் சிறியதாக இருப்பதால் , லென்ஸ் அளவும் சிறியதாக இருந்தாலே போதும் என்பதால் tele zoom(upto650mm) என்பது சிறிய கேமராவுக்குள்ளேயே மிக எளிதாகின்றது.
  • சென்சார் சிறியதாக இருப்பதால், கேமராவும் உள் பாக்கெட்டில் எளிதாக போடும் அளவுக்கு சிறியதாக தயாரிப்பது என்பது எளிதாகின்றது. இதுவே ஃபுல் ப்ரேம் (நெகட்டிவ் சைஸ்) சென்சார் என்றால் கேமரா செல்போன் என்பது சாத்தியம் இல்லை (இப்போதைக்கு).
சிறிய அளவு சென்சார்களால் பல நன்மைகள் இருந்தாலும்,ஒரே ஒரு மிக முக்கியமான picture quality என்பது குறைவதால், பெரிய சென்சார் என்பதே நல்லது.. எனவே, உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது தன்னிடம் அதிக பிக்சல் கேமரா இருக்கிறது என்று பந்தா பண்ணினால்,ஏறி போட்டு மிதிக்காம... கோவப்படாம... மேல் சொன்ன விவரங்களை எடுத்துச் சொல்லுங்க. பந்தா தானா குறைஞ்சுடும். இனி,optical zoom,digital zoom என்றால் என்ன என்பதை அடுத்த பாகத்தில் பார்ப்போம்.. அது வரைக்கும் போயிட்டு வாரனுங்.. -கருவாயன்..
இந்த வாரப் புகைப்படத்தில் PIT Flickr Group ல் இருந்து - எம்.ஆர்.கே அவரின் புகைப்படம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் நிறை குறைகளை நீங்களும் இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.

சென்னையின் அழகை தன் புகைப்படத்தின் மூலம் வெளிக்கொணர்வேன் என்று உறுதியா இருக்கும் இவருக்கு நம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம்.

இவரின் மற்ற படங்களை இங்கே காணலாம்.


வாழ்துகள் எம்.ஆர்.கே. புகைப்படத்துறையில் உங்கள் வெற்றிப் பயணம் தொடர நம் குழுவின் சார்பில் மீண்டும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்

Thursday, February 11, 2010

Macro படங்கள் எடுக்கும்போது ஏற்படும் பெரிய தொல்லை, படத்தின் முழு விவரங்களையும், ஃபோக்கஸ் செய்ய முடியாதது. பெரிய அபெர்ச்சர் வைத்து எடுக்கும் மேக்ரோ படங்களில், மொத்த படத்தின் மிக குறுகிய விஷயங்களே, ஃபோக்கஸ் ஆகி, பளிச் என்று வரும். மற்ற இடங்கள், ஃபோக்கஸ் இல்லாத, மங்கலாய்தான் வரும். உதாரணத்துக்கு கீழே இருக்கும் படம். எனது கிட்டாரின் படம் அது. படத்தில், கம்பி ஃபோக்கஸிலும், கிட்டாரின் லோகோ மங்கலாயும் தெரிகிறது. சில படங்களுக்கு, இந்த மாதிரி ஒரு DOF (depth) அழகைக் கொடுத்தாலும், மொத்த விஷயங்களும் பளிச்னு கொண்டு வரணும்னா என்ன பண்ணனும்? ஒரே வழி(?) இதுதான்.
  • கேமராவை மேக்ரோ லென்ஸ் பொறுத்தி (லென்ஸ் இல்லாதவர்கள், reverse ring வாங்கி, சாதா லென்ஸை தலைகீழாய் போட்டு ), ட்ரைபோடில் வைக்கவும்
  • Manual மோடில் வைத்து, எடுக்க விருக்கும் மேக்ரோ விஷயத்தில் ஒரு பாகத்தை ஃபோக்கஸ் செய்யவும்.
  • க்ளிக்கவும்
  • அடுத்து, ஆடாமல் அசங்காமல், ஃபோக்கஸை கொஞ்சமாய் பின்னோ முன்னோ நகர்த்தி, சப்ஜெக்ட்டின், இன்னொரு பாகத்தை ஃபோக்கஸில் வைக்கவும்.
  • க்ளிக்கவும்
  • இப்படியே படத்தின் சகல பாகங்களையும், ஃபோக்கஸில் வருமாறு அமைத்து, க்ளிக்கிக் கொண்டே போகவும். பத்து பதினைஞ்சு படம் தேறும்.
  • இனி தான் வித்தை. எடுத்த படங்களை கணிப்பொரியில் தரவிறக்கம் செய்யவும்.
  • CombineZM ஒரு இலவச மென்பொறுள் இருக்கு, அதை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
  • நீங்கள் எடுத்த பத்து பதினைந்து படங்களை, இந்த combineZMல் கொடுத்தால், அனைத்தையும் 'combine' செய்து, எல்லா படங்களிலிருந்தும், ஃபோக்கஸ் ஆன இடத்தை மட்டும் கோர்த்து, ஒரு அட்டகாசமான 'பளிச்' படத்தைக் கொடுக்கும். ட்ரை பண்ணிட்டுச் சொல்லுங்க. நானும் இன்னும் ட்ரை பண்ணிப் பாக்கலை. வீக்-எண்டுதான், பண்ணிப் பாக்கணும். மேலும் வாசிக்க: விக்கியில் Flickrல் அழகான Focus Stack'd படங்களை ரசிக்க: Flickrல் PiTல் மேக்ரோ பாடங்கள் செய்முறை விளக்கம், இந்த வீடியோவில்:
  • Monday, February 8, 2010

    வணக்கம் நன்பர்களே, சென்ற பகுதிகளில் ஒரு கேமராவுக்கு தேவையான பிக்சல்களை பற்றி நாம் பார்த்திருந்தோம்.. இந்த பகுதியில் அதை விட முக்கியமான இமேஜ் சென்சார்கள் பற்றி சுருக்கமாக கூற முடியாது என்பதால் கொஞ்சம் விலாவாரியாக பார்ப்போம்.. சென்சார் என்றால் என்ன? (படம் - 1) முன்னெல்லாம் நாம் ஃப்லிம் கேமராவை பயன்படுத்திய போது, ஒரு படத்தை லென்ஸ் மற்றும் கேமராவின் உதவியுடன் ஒரு ஃபிலிம் நெகட்டிவில்(35mm ஃபார்மேட்) பத்திரமாக பதிவு செய்து,பின்பு அதை நாம் ப்ரிண்ட் போட்டு பார்த்து வந்தோம். ஆனால் டிஜிட்டல் கேமராவில் ஃபிலிம் என்பது இல்லாததால், ஃபிலிம் செய்யவேண்டியதை இந்த டிஜிட்டல் சென்சார்கள் செய்யும். ஒரு லென்ஸ் எடுத்து தரும் படங்களை(ஒளி வடிவத்தை) இந்த சென்சார்கள் பதிவு செய்து, பின்பு எலெக்ட்ரிக்கல் சிக்னலாக மாற்றி தரும்.அதை நம் வசதிக்கேற்ப jpeg,raw போன்ற ஃபார்மேட்டில் பல்வேறு வகைகளில் மீண்டும் மாற்றி தரும். ஒரு படத்தினுடைய பிக்சர் குவாலிட்டியை தீர்மனிப்பதில் இந்த இமேஜ் செனசாரின் அளவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பல்வேறு வகையான சென்சாரின் அளவுகள், டிஜிட்டல் கேமராக்கள் வந்த பிறகு crop factor முறையிலான சென்சார்கள் பல வகையான சைஸ்களில் வர தொடங்கியது..(பார்க்க படம் - 1) DSLR மற்றும் அனைத்து வகையான சிறிய டிஜிட்டல் கேமராக்களின் சென்சார்களின் அளவுகள், 35mm ஃப்லிம் formatஐ( நெகட்டிவ் சைஸை) விட பல்வேறு வகையில் சிறியதாகும்.(ஒரு சில 35mm full frame கேமராக்களும் உண்டு.) அப்படி வேறு வேறு சைஸில் உள்ள சென்சார்களின் அளவுகளை கிழே உள்ள படத்தில் பார்க்கலாம்.. (பெரியதாக பார்க்க க்ளிக் செய்யவும்) இந்த அளவு, கேமராக்களை பொறுத்து மாறுபடும்..அப்படி மாறுகின்ற கேமராக்களும்,அதன் crop factor அளவுகளையும் பார்ப்போம்.. NIKON DSLR = 1.5 X (no.4) CANON DSLR = 1.6 X (no.5) OLYMPUS DSLR = 2.0 X(no.7) PANASONIC DSLR = 2.0 X(no.7) SONY DSLR = 1.5 X (no.4) (இங்கே X என்பது எத்தனை முறை 35mm ஃபிலிம் ஃபார்மேட்டை விட(ஒரு நெகட்டிவ் சைஸை விட) சிறியது என்று அர்த்தம். 1.5 X என்றால் 1.5 மடங்கு ஒரு நெகட்டிவின் அளவை விட சிறியது என்று அர்த்தம்.) கிட்டதட்ட அனைத்து சிறிய compact,prosumer வகை கேமராக்களின் crop factor என்பது 4.75x முதல் 5.75x (no.8 மற்றும் no.9)வரை இருக்கும். no.1 ல் இருப்பது மீடியம் ஃபார்மேட் சென்சார் அளவாகும்.. இந்த வகை கேமராக்கள் பெரிய பெரிய நிறுவனங்கள் விளம்பர படங்களை எடுக்க பயன்படுத்துகின்றன..(hasselblad,mamiya,போன்ற கேமரா வகைகள்) no.10 என்பது கேமரா செல்போனில் வரும் அளவு. no.2 ல் இருப்பது தான் 35mm full frame அளவு ஆகும்.இந்த சென்சாரின் அளவும்,ஃபிலிம் நெகட்டிவும் ஒரே அளவாகும். இந்த 35mm ஃபார்மேட் படி வரும் FOCAL LENGTH அளவே பொதுவான அளவாகும் ஏன் 35mm என்பது பொதுவான அளவு ? ஒரு குறிப்பிட்ட காலத்தில் இருந்தே 35mm format (36mm * 24mm) என்று அளவிடப்பட்ட ஃபிரேமே standard formatஆக இருந்து வருகின்றது. இது முன்னர் நாம் பயன்படுத்தி வந்த 35mm ரோல் ஃபிலிமின் அளவாகும். லென்ஸ் எடுத்து தரும் படமானது(ஒளி வட்டம்), லென்ஸ் வழியாக ஊடுருவி,எந்த மாறுதலும் இல்லாமல் அந்த கேமராவில் உள்ள 35mm ஃபிலிம் ரோல் அளவிற்கு மிக சரியாக பொருந்தி, ஒளி வேறெங்கும் சிதறாமல் பதிவாகி வந்ததால் அதுவே பொதுவான ஒரு ஃபார்மேட்டாக இருந்து வருகிறது. அதாவது ஒரு லென்ஸ் வழியாக உள்ளே ஊடுருவி வரும் ஒளிவட்டத்தின் அளவும்(36 X 24), ஃபிலிம் நெகட்டிவின் அளவும்(36 X 24) ஒரே மாதிரியான, சரியான அளவாகும். இதனால் 50mmல் வைத்து எடுத்தால் என்ன வரவேண்டுமோ,அது சரியாக 35mmஃபார்மேட் அளவு கொண்ட நெகட்டிவில் அல்லது சென்சாரில் எந்த மாறுதலும் இல்லாமல் 50mm ஆக சரியாக பதிவாகும். ஆனால் டிஜிட்டல் கேமராக்களில் அப்படி கிடையாது.. லென்ஸில் வரும் ஒளி வட்டம் என்பது 35mm format அளவுக்குத்தான் சரியாக பொருந்தும்,சிறிய சென்சாருக்கு மிக சரியாக பொருந்தாது.. சென்சார்கள் சிறியதாக இருப்பதால் 50 mmல் எடுத்தால் சென்சாரின் அளவுக்கு தகுந்த மாதிரி வெவ்வேறு அளவுகளில் வரவேண்டியது பதிவாகும். இதனால் உண்மையான FOCAL LENGTH அளவு(MM) எது என்பது குழப்பமாக இருக்கும். இது எப்படி என்று கீழ் உள்ள உதாரணங்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.. உதாரணம்:1 ஒரு நிக்கான் DSLR கேமராவில் உள்ள சென்சாரின் அளவு என்பது 23.5 X 15.7,ஆனால் லென்ஸ் தரும் ஒளிவட்டத்தின் அளவு என்பது 36 X 24. இந்த நிக்கான் சிறிய சென்சாரைவிட,லென்ஸில் ஊடுருவி வரும் ஒளி அமைப்பு பெரியதாக இருக்கும்.. இதனால் லென்ஸின் ஒளி அமைப்பை விட சிறிய சென்சாரில் பதிவாகும் போது நாலாபுறமும் சென்சாரின் அளவுக்கேற்ப crop செய்யப்பட்டு, மீதி தான் சென்சாரில் பதிவாகும். அதாவது லென்ஸிலிருந்து 36 X 24 என்று வரும் ஒளியில்,23.5 X 15.7 அளவை மட்டும் தான் பதிவு செய்யமுடியும். மீதியை க்ராப் செய்துவிடும் அல்லது அந்த ஒளி பதிவாகாது. அப்படி க்ராப் செய்து சென்சாரில் பதிவாகும் போது,output result ஆக வரும் போட்டோவானது, zoom அளவு மாறி 1.5 மடங்கு அதிகமாக enlarge அல்லது magnification ஆகி தான் பதிவாகும். இதனால் உண்மையான zoom அளவு மாறிவிடும்.. உதாரணம்:2 ஒரு குறிப்பிட்ட அளவு(50mmல்) வைத்து படம் எடுத்தால் என்ன வரவேண்டுமோ அது வராமல் மேலே சொன்ன crop factorக்கு தகுந்த மாதிரி தான் சென்சாரில் பதிவாகும். அதாவது nikonல் 50mm என்று focal lengthஐ பயன் படுத்தினால் உன்மையான 50mm வராமல், கேமராவுக்குள் 1.5 மடங்கு க்ராப் நடப்பதால் 50mm X 1.5 மடங்கு =75mm ல் வைத்து எடுத்தால் என்ன வருமோ அது தான் பதிவாகும். . இதுவே canon ஐ பயன்படுத்தினால் 50mm X 1.6 மடங்கு = 80mm, olympusல் என்றால் 50mm X 2 =100mm ல் வரவேண்டியது வரும். இதுவே சிறிய டிஜிட்டல் கேமராக்களின் லென்ஸில் 50mm ல் வைத்து எடுத்தால்,35mm format படி 260mmல் வரவேண்டியது தான் பதிவு ஆகும். . உதாரணம்:3 ஒரு NIKON DSLR கேமராவில் 50mm என்ற அளவில் வைத்து எடுக்கப்படும் படமானது, அதே 50mm என்ற அளவில் ஒரு canon DSLR கேமராவில் வைத்து எடுத்தால் படத்தின் அளவு வித்தியாசப்படும். அதே அளவு வேண்டுமென்றால் canonல் 45mm ல் வைத்து எடுத்தால் தான் சரியாக வரும்.. இதையே olympusல் 25mm என்ற focal length அளவில் வைத்து எடுத்தால் தான் ஒரே மாதிரி வரும். சிறிய கேமராக்களில் இந்த அளவுகளை நாம் படம் எடுத்தபின் EXIFல் தான் பார்க்க முடியும். இதனால் , nikonல் 50mm, canonல் 45mm, olympusல் 25mm.. என்பது எல்லாம் 35mm full format படி focal length என்பது ஒரே அளவு தான். உதாரணம்:4 வெவ்வேறு அளவு சென்சார்களால், ஒரே அளவு படத்தை எடுக்க இந்த மாதிரி தான் லென்ஸ் அளவுகள் மாறுபடும்.., சிறிய கேமராவின் 5mm - 15mm லென்ஸ்,(லென்ஸில் குறிப்பிட்டிருக்கும்) DSLR கேமராவின் 18mm - 55mm லென்ஸ், பழைய ரோல் கேமராவின் 28mm - 80mm லென்ஸ், இவை அனைத்தும் ஒரே அளவு தான் என்றால் நம்பமுடிகிறதா? இவை அனைத்தும் ஒரே அளவு படத்தை தான் நமக்கு தரும். இதனால் உண்மையான FOCAL LENGTH அளவு(MM) எது என்பது குழப்பமாக இருக்கும். இந்த குழப்பம் வராமல் இருக்கத்தான், உண்மையான FOCAL LENGTHஐ மாற்றாத அளவான 35MM FULL FRAME FORMAT(negative size) என்பது ஒரு பொதுவான formatஆக இருந்து வருகிறது.. 35mm equilant focal length, நாம் ஒரு DSLR கேமராவில் 50mm ல் வைத்து எடுத்தால்,EXIFல் பார்க்கும் போது இரண்டு வகையான focal length அளவுகள் இருப்பதை பார்க்கலாம். focal length என்று ஒன்றில் 50mm என்றும்,35mm equilant focal lengthல்=75mm என்றும் இருப்பதை காணலாம். இதுவே olympus DSLR ல் 50mmல் எடுத்து பார்த்தால்,focal length ல் 50mm என்றும்.35mm equilant focal lenghtல்=100mm என்றும் இருக்கும். ஒரு சில சிறிய கேமராக்களில் படம் எடுத்து EXIF ல் பார்த்தால், focal lengthல் ஒரு அளவு இருக்கும் ஆனால் 35mm equilant focal length அளவு இருக்காது. எனவே ஒரு படத்தின் உண்மையான அளவு என்பது 35mm equilant focal lengthல் என்ன அளவு உள்ளதோ அது தான் உண்மையான அளவு ஆகும். வெவ்வேறு கேமரா சென்சாரில் ஒரே அளவில் வைத்து எடுத்தால் (உதாரணமாக50mm) வரும் வித்தியாசத்தை கீழே உள்ள படங்களை பார்த்தால் புரியும்.. 1.(35mm full format) (focal length = 50mm, 35mm equilant focal length = 50mm என்று இருக்கும்) 2.(nikon வகை 1.5x crop factor) (focal length = 50mm , 35mm equilant focal length = 75mm என்று இருக்கும்) 3. (canon வகை 1.6x crop factor) (focal length = 50mm , 35mm equilant focal length = 80mm என்று இருக்கும்) 4.(olympus 2.0x crop factor) (focal length = 50mm , 35mm equilant focal length = 100mm என்று இருக்கும்) 5.(smaller sensor of prosumer,basic compact) (focal length = 50 mm , 35 equilant focal length = 270mm என்று இருக்கும்) மேலே உள்ள அனைத்து படங்களிலும் focal length என்பது 50mm என்று ஒரே மாதிரி இருந்தாலும், உன்மையான focal length என்பது 35mm eauilant focal lengthல் மாறியிருப்பதை நாம் பார்க்கலாம் சரி,சென்சார்கள் வெவ்வேறு அளவுகளில் இருப்பதால் picture quality என்பது மாறுமா? சின்ன சென்சார் மற்றும் பெரிய சென்சாரில் எப்படி ஒரே அளவு பிக்சல்கள் இருக்கின்றன?என்பதை அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.. அதுவரைக்கும் போயிட்டு வாரனுங்.. இதுல உங்களுக்கு ஏதாவது சந்தேகம்னா பின்னூட்டத்தில் தெரியபடுத்துங்கள்.. -கருவாயன்

    Saturday, February 6, 2010

    ஏற்கனவே சொன்ன மாதிரி வாரா வாரம் PiTன் Flickr groupல இருந்து ஒரு படம் PITல் பதிவேற்றப்படும். இந்த வார படம்,

    விக்னேஷ் சுகுமாரன் அவர்களின் "காத்திருக்கிறேன், நீ வருவாயென"




    ரயிலுக்கு காத்துகொண்டிருக்கும் இரவு நேர சுழலை கருப்பு வெள்ளையில் நன்றாக பதிவு செய்துள்ளார்.

    அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போம். நன்றி ! வணக்கம் !!!

    Friday, February 5, 2010

    கிம்பின் மிக முக்கிய நீட்சிகளுள் ஒன்று GreysMagicImageConverter. அதை பற்றி இங்கே பார்ப்போம். GMICயை இந்த தளத்தில் இருந்து தரவிறக்கிக் கொள்ளலாம். http://gmic.sourceforge.net/gimp.shtml தரவிறக்கி அதில் இருக்கும் அனைத்து கோப்புகளையும், உங்களின் மற்ற நீட்சிகள் இருக்கும் பகுதிக்கு நகர்த்திக்கொள்ளுங்கள். (C:\ProgramFiles\GIMP-2.0\lib\gimp\2.0\plug-ins ) அடுத்த முறை கிம்பை திறக்கும் போது இந்த இடத்தில் GMIC நீட்சி தெரியும். ( Filters->GMIC ) இந்த நீட்சியில் கிம்பிற்கான நிறைய முன்னேற்றங்கள் இருக்கின்றன. விளையாடிப் பார்க்க நிறைய வாய்ப்புகள். உதாரணதிற்கு, கிம்பில் இருக்கும் UnSharpMask விட மிகவும் மேம்படுத்தப்பட்ட UnSharpMask இங்கே இருக்கு, படங்களை கருப்பு வெள்ளை அல்லது Sepia க்கு மாற்ற பல வசதிகள். Artistic பகுதியில் உங்களின் கற்பனைக்கு பல பகுதிகள். உபயோகித்துப் பாருங்கள். கிம்பை பற்றிய மதிப்பு இன்னும் உயரும்.

    Monday, February 1, 2010

    வணக்கம் மக்கா, எல்லோரும் எப்படி இருக்கீங்க. இந்த முறை ஒரு எளிமையான தலைப்போடு வந்து இருக்கிறேன். மனித நாகரிக வளர்ச்சியில் மிக முக்கிய கண்டுபிடிப்பு சக்கரம். சக்கரம் வந்த பிறகு மக்களின் பயணங்களுக்கு துணை புரிய பல வகை வாகனங்கள் வந்து விட்டன. சக்கரமே இல்லாமல் கூட வாகனங்கள் உள்ளன. ஹி ஹி ஹி... எதுக்கு சுத்தி வளைச்சுகிட்டு. இந்த மாசத்தலைப்பு - "வாகனங்கள்" (ஒன்றோ, ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்கள்) An& இந்த முறை உங்களுக்கு சப்ஜெக்ட் கிடைக்கலைன்னு குறை கூற முடியாது :) ரோட்ல போறது, பறக்கறது, மிதக்கறதுன்னு பல வாகனம் இருக்கு. சைக்கிள் முதல் விமானம் வரை பலது இருக்கு. ஏன் நீங்கள் அன்றாடம் பயணம் செய்யும் வாகனத்தையே கூட படம் பிடிக்கலாம். CVR விதிமுறைகள்: இங்கே கடைசி தேதி: பிப்ரவரி 15 2010 போட்டி முடிவு: பிப்ரவரி 25 2010 நம் படம் தனித்து தெரிய, வித்யாசமான கோணம்(POV), Panning, Zoom Burst இப்படி பல உத்திகளை பயன் படுத்தவும். ஜீவ்ஸ் படத்தில் வாகனங்களுக்கு அதிக முக்கியம் அளியுங்கள். வாகன ஒட்டுனருக்கோ, அதில் பிற பயணிகளுக்கோ அல்லது சுற்றுபுரத்திற்கோ அதிக முக்கியமளிக்க தேவை இல்லை. ஓடாமல் ஓரத்தில் துரு பிடித்து கிடக்கும் வாகனங்களை கூட படம் எடுக்கலாம் அனால் பொம்மை கார், பொம்மை கப்பல்ன்னு படம் எடுத்து அனுப்ப கூடாது. :P போட்டியில் பங்குபெற போகும் அனைவருக்கும் என் நன்றி மற்றும் வாழ்த்துக்கள் !!! டிஸ்கி: எமதர்மரோட வாகனம் அப்படின்னு சொல்லி எருமை மாட்டோட படத்தை அனுப்பி லந்து பண்ண கூடாது.
     
    © 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff