Sunday, January 31, 2010

எந்த கேமரா நமக்கு சிறந்த கேமரா- பாகம்-3 / மெகா பிக்சல்ஸின் தேவைகள்

12 comments:
 
சென்ற பகுதியில் pixelsஐ பற்றியும்,தேவைக்கும் அதிகமான பிக்சல்கள் அவசியமில்லை என்றும் பார்த்தோம்,அதே சமயம் அதிக பிக்சல்களின் தேவையும் சில நேரங்களில் உண்டு. .. PIXELSன் நன்மைகள், பல நேரங்களில் நாம் பொதுவாக படங்களை நம் தேவைக்கேற்ப CROP செய்வோம்..அப்படி CROP செய்யும் போது pixelsன் அளவு கண்டிப்பாக CROP ன் அளவிற்கேற்ப குறைந்து விடும்.. இதை கீழே உள்ள படங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம்..இந்த பட்டாம்பூச்சியின் படம் 6 பிக்சல் கேமராவில் எடுத்தது. எந்தவித cropம் செய்யாமல் இருக்கின்றது, இதன் தற்போதய resolution 3008*2000 பிக்சல்கள் ஆகும். இதனால் நாம் 200 DPIயில் வைத்து ப்ரிண்ட் எடுத்தால் அதிகபட்சம் 15 X 10 இன்ச் சைஸ் வரை எடுக்கலாம்.. மேலே உள்ள முதல் படத்தில் குறிப்பிட்ட பகுதியை தவிர சில இடங்கள் தேவையில்லை என்று, இப்படி crop செய்யும் போது இதன் resolution 2448 X 1637ஆக தானாக குறைந்து விடும். எனவே, இதன் தற்போதைய பிக்சல் அளவு 4 MPயாக குறைந்து விடும். இதனால் நாம் இந்த படத்தை வைத்து 12 X 8 வரை தான் நல்ல குவாலிட்டியில் ப்ரிண்ட் போட முடியும்.. அந்த பட்டாம்பூச்சி மட்டும் போதும்,மற்ற பகுதி எதுவும் தேவையில்லை என்று இன்னும் crop செய்யும் போது இதன் resolution 1623 X 1083ஆக மேலும் குறைந்து, 1.5MP என்று ஆகிவிடும். இதனால் நம்மால் 6 X 4(maxi size) வரை தான் ப்ரிண்ட் எடுக்க முடியும். இந்த மாதிரி நேரங்களில் தான் நாம் பெரிய சைஸில் ப்ரிண்ட் போடுவதற்கு மேலும் அதிகமான pixels தேவைப்படும்.. சின்ன சைஸ் ப்ரிண்ட் போடும் போது கண்டிப்பாக தெரியாது.. அப்படி பெரிய சைஸ் ப்ரிண்ட் போடும் போது,pixel குறைபாடால் வரும் pixellate பிரச்சினையை கீழே உள்ள படத்தை பார்த்தால் புரியும். (க்ளிக் செய்து பெரிதாக பார்த்தால் திரித்தல் நன்றாக தெரியும்) அதே பட்டாம்பூச்சி படத்தை இன்னும் க்ளோசாக பார்க்க விரும்பி,இந்த அளவு க்ராப் செய்தால் படம் pixelattion,smudge (திரித்தல்) ஆகிவிடும். இதனால் படம் தெளிவாக இருக்காது. இது தான் பிக்சல் குறைவால் வரும் பிரச்சனை ஆகும்.. மெகாபிக்சல்கள் சில தகவல்கள்.
  • ஒரு குறிப்பிட்ட கேமராவில் 6MP ஒன்றும்,10MP ஒன்றும் இருந்து வேறு வித்தியாசங்கள் பெரியதாக இல்லாமல் அதன் விலை வித்தியாசம் மட்டும் அதிகமாக இருந்தால் 6MP கேமராவை வாங்கி பணத்தை மிச்சம் செய்வது நல்லது.
  • உதாரனமாக 6 MP nikon d40 கேமராவின் விலை rs.17000க்கு விற்றார்கள், கிட்டதட்ட 95% அதே மாதிரியுடைய 10MP nikon d40x கேமராவின் விலை rs.21-22000 க்கு விற்றார்கள்.. pixelக்காக மட்டும் கிட்டதட்ட 5000 ரூபாய் வரை அதிகம் என்பது நமக்கு தேவையில்லை.. அந்த பணத்தை நாம் மிச்சம் செய்து வேறு லென்ஸ் அல்லது வேறு accessories வாங்குவத்ற்கு பயன் படுத்தி கொள்ளலாம்..
  • pixels அதிகமாக அதிகமாக file சைஸ் அதிகரிப்பதால் download/upload செய்வதற்க்கு நேரமும் அதிகம் பிடிக்கும்.
  • 2 லட்ச ரூபாய் கொண்ட 18 MP கேமராவில் கொஞ்சம் out of focus ஆக எடுத்து பார்ப்பதை விட ,வெறும் 10,000 ரூபாய் 5 MP கேமராவில் clean shot ஆக எடுக்கப்படும் படமானது சிறந்ததாக இருக்கும்...எனவே picture quality என்பது எவ்வளவு pixels என்பதில் இல்லை,எடுப்பவரின் திறமையில் தான் உள்ளது..
  • ஒரு கேமராவை வாங்கும் முன் pixel ஐ மட்டும் முக்கியமாக பார்ப்பதை விட, கேமரா எவ்வளவு வேகமாகவும்,பயன் படுத்துவதற்கு எவ்வளவு ஈசியாகவும் இருக்கின்றது என்பதை தான் முக்கியமாக பார்க்க வேணடும்..
  • இனி வரும் காலங்களில் pixels என்பதை பார்க்கவே தேவையில்லை, ஏனென்றால் இப்பொழுது வருகின்ற விலை குறைவான கேமராக்களில் கூட குறைந்தபட்சம் 8 mega pixelsஆக தான் வருகின்றது..
  • குறைந்த அளவு pixels (8mp vs 10mp)வித்தியாசம் என்பது வெறும் வியாபர தந்திரமே....
நல்ல குவாலிட்டி படம் வேண்டும் என்றால் pixelsகளை விட முக்கிய பங்கு வகிப்பது sensor size தான்,அதை பற்றி அடுத்த பாகத்தில் பார்ப்போம்..

12 comments:

  1. அழகான படம். தேவையான தகவல்கள்

    ReplyDelete
  2. Good information. But you did not get any good picture to demo this!?! Naughty.

    ReplyDelete
  3. நல்லா கொடுக்குறீங்கையா, எக்ஸாம்பிள் :-)

    ReplyDelete
  4. நல்ல தகவல்கள்.

    ஆனா, வேறு படம் போட்டிருக்கலாம்.

    ReplyDelete
  5. Yenna oru villathanam..padatha paarunga :-P Thagavalgal arumai !!

    ReplyDelete
  6. குழந்தையை இப்படி படம் எடுத்ததும் இல்லாமல் பப்ளிஷ் வேறு செய்து இருக்கீர்களே... ரொம்ப அநாகரீகமாக இருக்கிறது.

    படத்தை நீக்கிவிட்டு நாகரீகமான வேறு படம் போட்டு விடுங்கள் கருவாயன்.

    ReplyDelete
  7. நன்றி கருவாயன், அருமையான படம் அருமையான விளக்கம். வண்ணத்து பூச்சியை போலவே உங்களின் விளக்கமும் வண்ணமயமாக இருக்கிறது...

    ReplyDelete
  8. // எனவே picture quality என்பது எவ்வளவு pixels என்பதில் இல்லை,எடுப்பவரின் திறமையில் தான் உள்ளது..//

    சரியாச் சொன்னீங்க :-))

    ReplyDelete
  9. @வித்தூஸ்..
    சிரமத்திற்கு வருந்துகிறேன்.. படங்களை மாற்றியாச்சு.
    -கருவாயன்.

    ReplyDelete
  10. நல்ல வேலை மாத்திட்டீங்க...என்னால ஆபீஸ் ல ஒக்காந்து படிக்க முடியல:)

    அருமையான விளக்கங்கள்....நல்ல உபயோகமான பதிவு!

    ReplyDelete
  11. //நல்ல குவாலிட்டி படம் வேண்டும் என்றால் pixelsகளை விட முக்கிய பங்கு வகிப்பது sensor size தான்,அதை பற்றி அடுத்த பாகத்தில் பார்ப்போம்.. //


    காத்திருக்கின்றேன்

    ReplyDelete
  12. நல்ல தகவல்கள்

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff