ஒரு பக்கம் மாதாந்திர போட்டிகளும், இன்னொரு பக்கம், புகைப்படம் எடுப்பது எப்படி? எடுத்த படத்தை நேர்த்தியாக்குவது எப்படி? என்கிற ரீதியல் பாடங்களும் PiTல் இடம் பெற்று வருகிறது.
இந்தப் பதிவுகளில் வரும் பின்னூட்டங்களில், அடிக்கடி இடம் பெறும் விஷயம், நம் PiT ஆர்வலர்களின் கேள்விக் கணைகள்.
சில கேள்விகள்/சந்தேகங்கள், பதிவுக்கு சம்பந்தம் உள்ளதா இருக்கும், அதை அங்கேயே தீத்து வச்சு, பதிவெழுதிய நாட்டாம தீர்ப்பு சொல்லிடுவாரு.
ஆனா, பல கேள்விகள், அந்த பதிவுக்கு சம்பந்தமில்லாத பொத்தாம் பொதுவான கேள்வியா இருக்கும். ஒண்ணு, அந்தக் கேள்விக்கு தனியா (பதிவு) ரூம் போட்டு பலரும் சேந்து அலசி ஆராஞ்சு பிரிச்சு மேய வேண்டியிருக்கும், கேட்டவரின் சந்தேகத்தை தீக்க.
இல்லன்னா, கேட்ட இடத்திலேயே ஒரு பின்னூட்டத்தில் கேள்விக்கு பதில் சொல்லும்ம்படியாகவும் இருக்கும்.
கேள்வி கேக்கரது ஈஸி, பதில் தேடரது/சொல்ரதுதான் நெம்பக் கஷ்டம். கூட்டு முயற்சியில்ல்லாமல் அதை செய்வது நெம்ப நெம்ப கஷ்டம் :)
கூட்டிக் கழிச்சு சொல்லணும்னா, கேள்வி கேக்கரதுக்கு ஒரு முறை இருக்கு, அதை இனிமேலேருந்து அமல் படுத்தலாம்னு இருக்கோம். கண்ட எடத்துலையும், கண்டதையும் கேக்கப்டாது.
இனி முதல், உங்கள் கேள்விக் கணைகளை, இந்தப் பதிவில் பின்னூட்டமாய் அளிக்கவும்.
உ.ம்:
அ) வெளிநாட்டுக்கு டூர் போறேன். கேமராவுடன் என்னென்ன எடுத்துக்கிட்டு போகணும்?
ஆ) Canon Rebel வாங்கலாம்னு இருக்கேன். $500 கேக்கறான். ஓ.கேவா? இது நல்ல கேமராவா?
இ) இதோ இந்தப் படம் போன வாரம் புடிச்சேன். ஏதோ ஒண்ணு நல்லால்ல. என்ன மிஸ்ஸிங் என் படத்துல? http://உங்க படத்தின் உரல்.கோம்
ஈ) கிம்ப்ல என் படம் இப்படி இருக்கரத அப்படி மாத்தரது எப்படி?
உ) என் மூஞ்சி ஏன் அம்சமா வர மாட்டேங்குது படங்களில்?
ஊ) கேமரால தூசி விழுந்துருச்சு. துடைப்பது எப்படி? ( இதற்கு ஒரு பதிவு கூடிய விரைவில் வர இருக்கிறது )
etc..
கேள்வியைப் பொறுத்து, அந்த கேள்விக்கு, இதே பதிவில், பின்னூட்டமாயும் பதில் வரலாம். அல்லது, தனிப் பதிவில் உங்கள் கேள்வியை மட்டும் போட்டு, அக்கு வேறு ஆணி வேராய், PiT ஆர்வலர்கள் அனைவரையும் அழைத்து, பிரித்து மேயலாம். ( இ, ஈ மாதிரி கேள்விகள் )
( உ மாதிரி கேள்விகளை தவிர்க்கவும். உண்மை கசக்கும். ஆனால் உங்க கேள்வி, என்னைப் போன்ற பலருக்கும் இனிக்கலாம். "எனக்கு மட்டுமே நடக்கர விஷயம் இல்ல"ன்னு ஊர்ஜீதம் ஆவதால் :) )
ஓ.கே தானே?
மறவாமல், 'Subscribe by email' ஆப்ஷனை கமெண்ட் பொட்டிக்கு கீழே இருக்கும் லிங்க்கை அமுக்கி தேர்ந்தெடுக்கவும். அப்பதான், இந்தப் பதிவில் நடக்கும் சம்பாஷணைகள், உங்கள் ஈ.மடலுக்கு வந்து சேறும்.
உங்கள் அனைவரின் பங்களிப்பும் இந்த "கேள்வி பதில்" சிறப்பாய் நடக்க மிக்க அவசியம்.
நன்றீஸ்ஸ்ஸ்ஸ்!
source: oberazzi



83 comments:
Super...
அருமையான முயற்சி.
என்னை போன்ற கத்துக்குட்டிகள் கத்தும் குட்டிகள் ஆக நல்ல வாய்ப்பு.
நல்ல விஷயம்...
ஆனா.... (ஆரம்புச்சுடாங்கப்பான்னாதீங்க)
இல்ல... பதிவுல வைத்து கொள்வதற்கு பதில் ஒரு ஃபோரம் ஒண்ணு தொடங்கலாமே... அதற்கு முதல் பக்கத்தில் லிங்க் கொடுக்கலாமே... நிறைய் இலவச ஃபோரம் கிடைக்குதேனு சொல்லவந்தேன்..
சும்மா ஒரு ரோசனதான்.
ஆரம்பிச்சுருவோம் ...
என் மூஞ்சி ஏன் அம்சமா வர மாட்டேங்குது படங்களில்? ஏன் ? ஏன் ? ஏன் ?
பிட் குழுவினருக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்!
நான் மிக சமீபத்தில் பிட் நண்பர்களின் உதவியுடன் ஒரு நிக்கான் டி-40 வாங்கினேன். அதற்கு நன்றிகள். நான் புதுசு என்பதால் கத்துக்குட்டி கேள்விகள் மட்டுமே.
சந்தேகங்கள்:
1. ஐ.எஸ்.ஓ இன்றி.. அதாவது 200-க்கு கம்மியா முடியாதா? ஐ.எஸ்.ஓ பூஜ்ஜியம் சாத்தியமா? இது காம்பென்சேஷன் தானே? ஆட்டோவில் போட்டால் சமன் செய்துவிடுகிறது... எனக்கு இருட்டை இருட்டாகவே எடுக்க வேண்டும்.. என்ன செய்ய?
2. பி,எஸ்,ஏ,எம் என்றால் என்ன? (குத்துமதிப்பா தான் தெரியும்.. முழுசா தெளிவா சொன்னா தேவலை)
3. 18-55 எம்.எம் என்பது 35 எம்.எம் ஃபார்மேட்டில் ஏன் மாறுகிறது? எஃப் ஸ்டாப் என்று விளிப்பதை இந்த எம்.எம் கணக்கிலேயே சொல்லித்தொலைத்தால் என்ன? 18-க்கும் 24-க்கும் இடையில் வைத்து எடுத்தால் அதை எப்படி இந்த அலகில் குறிப்பிடுவது?
4. லென்ஸ் வகைகள் குறித்து ர.சுருக்கமாக.. ப்ளீஸ்.
5. ரிவர்ஸ் மேக்ரோ பதிவில் குறிப்பிட்டிருப்பது கேனானுக்கு மட்டுமே செல்லுபடியாகும் போல. ஒரே லென்ஸ் இருக்கும் பட்சத்தில் அதைக் கழற்றியவுடன் லென்ஸ் நாட் அட்டாச்ட் என்று வருகிறது. இரண்டு லென்ஸ்கள் வைத்திருந்தால் மட்டுமே சாத்தியமாகிறது. அதுவும் கருப்பு பேக்கிரவுண்டில் சிறிய வெளிச்ச வளையத்திலேயே எடுக்க முடிகிறது, மேலும் அனாசாய சோடியம் பல்பு தேவைப்படும் போல... இந்த மேக்ரோ ரிங் மற்றும் இது சார்ந்த பிற எக்விப்மெண்ட் எவ்வளவாகும்? (இது போன்ற சிக்கன சிகாமணி ஐடியாக்களை திரட்டித் தரவும்)
6. கேமிராவில் வீடியோ ஃபார்மேட் பால்/என்.டி.எஸ்.சி என்றிருக்கிறதே... அதன் பயன்பாடு என்ன? மேலும் (யு.எஸ்.பி பக்கத்துல) டி.வி ஔட் எதுக்கு?
i understand white balance concept. but where to use what setting? how to use custom WB?
till date, i hv been successful only with 'auto wb'
வெங்கிராஜா
உங்களின் இந்த கேள்விக்கான
2. பி,எஸ்,ஏ,எம் என்றால் என்ன? (குத்துமதிப்பா தான் தெரியும்.. முழுசா தெளிவா சொன்னா தேவலை)
பதில் இங்கே இருக்கு.
http://photography-in-tamil.blogspot.com/2008/03/exposure-modes.html
Nikon ல் எஸ் என்பது கேனானில் Tv என்று இருக்கும் Shutter Priority mode.
ம்
வெங்கிராஜா, மொதல்ல ஒண்ணு சொல்லிக்கறேன்.
கேள்வி கேக்கரது ரொம்ப சுலபம். பதில் சொல்றது பெரிய டார்ச்சர் :) ( just kidding )
உங்க கேள்விக்கு கூகிளாண்டவர் கூட பதிலத் தரலை. காலரை தூக்கி விட்டுக்கோங்க.
////1. ஐ.எஸ்.ஓ இன்றி.. அதாவது 200-க்கு கம்மியா முடியாதா? ஐ.எஸ்.ஓ பூஜ்ஜியம் சாத்தியமா? இது காம்பென்சேஷன் தானே? ஆட்டோவில் போட்டால் சமன் செய்துவிடுகிறது... எனக்கு இருட்டை இருட்டாகவே எடுக்க வேண்டும்.. என்ன செய்ய?
/////
ISO level உங்க ஃபிலிமின் (இப்ப சென்ஸார்) சென்ஸிடிவினெஸ்ஸை குறிப்பிடுது.
உதாரணத்துக்கு, ஒரு பேப்பர்ல நிறைய எண்ணையை தடவி ராத்திரி வெளீல வச்சீங்கன்னா, பூச்சியெல்லாம் பச்சக்னு வந்து ஒட்டிக்குமே.
எந்த அளவுக்கு எண்ணைய தடவறீங்களோ அந்த அளவுக்கு பூச்சி ஒட்டும்.
iso 400, 800 எல்லாம், அதிக எண்ணையுள்ள பேப்பர்.
100ம் 200ம் கொஞ்சம் கம்மி.
கொஞ்சமாவது எண்ணை இருந்தாதான், ஒரு பூச்சியாவது ஒட்டும்.
எண்ணையே இல்லாத பேப்பர் ( ISO 0) வச்சா, ஒரு பூச்சியும் ஒட்டாது.
அப்படிப்பட்ட பேப்பர் எதுக்கு?
ISO level 0 எல்லாம் கிடையாது (எனக்குத் தெரிஞ்சு), அப்படியே கிடைத்தாலும், அதில் இரூட்டை தவிர ஒரு பொட்டு வெளிச்சமும் ஒட்டாது.
இருள் நல்லா வரணும்னா, உங்க காமெராவில் உள்ள lowest iso (50 or 100) வச்சு எடுங்க. auto உபயோகிக்காதீங்க.
(ஒண்ணும் தெரியலன்னாலும், தெரிஞ்ச மாதிரி பதில் சொல்றது நெம்ப கஷ்டமான வேலைங்க:) )
#3) வேர யாராச்சும் சொல்லுங்கப்பா
#4) இது ஏற்கனவே PiTல் இருப்பதாய் ஞாபகம். இல்லன்னா, ஒண்ணு போட்டுடலாம்.
#5) macro ring nikonக்கும் கிடைக்குது. $10க்கு. ebayயில் பார்க்கவும். ஆனா, canon போலவே, ஒரு படம் எடுக்கரதுக்குள்ள மண்டை காஞ்சுடும். auto-focus ஆகாததால், வரும் காய்ச்சல் இது.
#6 ) usb பக்கத்துல tv out , slide show பார்ப்பதர்க்கு.
pal/ntsc - கேள்வி கேட்டே பேர் வாங்கரவரா நீங்க? :)
எனக்குத் தெரிஞ்சது - நம்மூர்ல Pal, அமெரிக்கால ntsc. எதையும் தலைகீழ பண்ற இவனுங்க, இத்த மட்டும் விட்டுடுவாங்களா என்ன?
மேல் விவரங்கள் இங்கே - wikiல் உண்டு.
இதுக்கும் காமெராவுக்கு என்னங்க சம்பந்தம்? :)
கேள்விக்கு நன்னி.
//ஆனா, canon போலவே, ஒரு படம் எடுக்கரதுக்குள்ள மண்டை காஞ்சுடும். auto-focus ஆகாததால், வரும் காய்ச்சல் இது.//
ஃபோக்கஸ் ஒரு பிரச்சனையில்லை. ஷாட்களை தவறவிட்டாலும் பரவாயில்ல, கற்றுக்கொள்ளவேண்டும் என்று மேன்யுவலில் தான் எடுக்கிறேன். ஆனால்.. இந்த மிகச்சிறிய வியனெட் படுத்துதே... க்ராப் பண்ணாம முழு ஃப்ரேமிலும் இமேஜ் விழாதா? இந்த எறும்பையெல்லாம் எடுக்குறாய்ங்களேப்பா...
//ISO level 0 எல்லாம் கிடையாது (எனக்குத் தெரிஞ்சு), அப்படியே கிடைத்தாலும், அதில் இரூட்டை தவிர ஒரு பொட்டு வெளிச்சமும் ஒட்டாது. //
ஐ.எஸ்.ஓ.. எக்ஸ்போஷர் மாதிரி காம்பென்சேஷன்-னு நினைச்சேன். அதனாலதான் லந்தாயிருச்சு.. ஹிஹி
//மேல் விவரங்கள் இங்கே - wikiல் உண்டு.
இதுக்கும் காமெராவுக்கு என்னங்க சம்பந்தம்? :)//
இல்ல பாசு... டி-40யில வீடியோவே கிடையாது.. அதனாலதான் குழம்பிட்டேன்..
An& & SurveySan சிரத்தையோடு பதில் போட்டதற்கு நன்றிகள்!
பேச/அலச இடம் குடுத்த PiT ku நன்றி.
ரொம்ப நாளைக்ப்புறம் இப்பதான் கேமரா ஒண்ணு வாங்க அதிர்ஷ்டம் வந்திருக்கு.
budget 20000 ரூ. எவ்ளோ googleல தேடினாலும், எத்தன review படிசாலும், எத வாங்கறததுணு முடிவு பண்ண முடியல... கொஞ்சம் யாராவது ஹெல்ப் பண்ணுங்களேன் ப்லீஸ்.
Sony DSC H50 எப்படி, அதுல external flash attach பண்ண முடியாதாம் , இதுக்கு வேற ஏதாவது solution உண்டா???
please suggest me to get a better one.
vengiraja, புதுசா camera வாங்கிறுக்கிறதா சொல்றீங்க, உங்க அனுபவம் சொல்லுங்களேன்....
ஹாய் பிரியதர்சன் ,புது கேமரா வாங்குவதற்கு என் வாழ்துக்கள்.. என்னை பொறுத்த வரையில் DSLR கேமரா வாங்குவதே சிறந்தது.. ஸ்பீட் மற்றும் குவாலிட்டி இரண்டிலும் DSLR ஐ விட sony dsc h50௦ குறைவே.. நான் nikon d40௦ ஐ கடந்த ஒரு வருடமாக பயன் படுத்தி வருகிறேன்.. இது rs.20000/- க்குள் கண்டிப்பாக கிரே மார்க்கெட் இல் கிடைக்கும் . கேமரா மற்றும் 18-55mm லென்ஸ் இரண்டும் சேர்த்து ... சைஸ் மட்டும் சோனி ஐ விட கொஞ்சம் பெரிதாக இருக்கும்.. சைஸ் பிரச்சினை இல்லை என்றால் nikon d40௦ வாங்கவும்.. DSLR இல் ஒரு முறை பழகி விட்டீர்கள் என்றால் கண்டிப்பாக சோனி dsc h50௦ போன்ற prosumer மாடல் எல்லாம் கண்டிப்பாக பிடிக்காது .. நான் இரண்டையும் பயன் படுத்தி உள்ளேன் .. other than compact size and higher zoom,nikon d40 is more than enough for beginners..
-suresh babu
//i understand white balance concept. but where to use what setting? how to use custom WB?
till date, i hv been successful only with 'auto wb'//
still waiting for answer
நாகப்பன்,
எனக்குத் தெரிந்து custom WB பிற்சேர்க்கையில் செய்வது தான் எளிது.
முதலில் படத்தை Jpgல் எடுக்காமல் Rawல் எடுத்துக் கொள்ளுங்கள். படத்தில் கருப்பு/வெள்ளை அல்லது 18% Grey இருக்கும்மாறு எடுத்துக் கொண்டால் பிற்சேர்க்கையில் இதன் முலம் சரி செய்துக் கொள்ளாலம். 18% Grey Card க்கள் $20 குறைவாய் கிடைக்கின்றன.
கேமராவிலே செய்யும் CustomWB எவவளவு சரியாக இருக்கும் என்று தெரியவில்லை. இதை செய்வதும் எளிதுதான். முன்னர் குறிப்பட்டதுப் போல 18% Grey Card யை முழுதாய் படம் எடுத்துக் கொண்டு, உங்களின் கேமரா manualல் இந்தப் படத்தை எப்படி WBக்கு மூலமாக மாற்றுவது என்று குறிப்படப்பட்டு இருப்பதுப் போல மாற்றிக்கொண்டால் , அதே வெளிச்சத்தில் எடுக்கும் படங்கள் சரியான WB யுடன் கேமரா மாற்றிக் கொள்ளுங்கள்.
ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கேமரா முழு வெள்ளையும், முழு கருப்பையும் 18% Grey க்கு மாற்ற முயற்ச்சிக்கும். நீங்கள் கேமராவுக்கு ஒரு 18% Grey படத்தை reference ஆக அளிக்கிறீர்கள்.
பிற்சேர்க்கையில் சரி செய்வது பற்றி வேண்டுமானல் சொல்லுங்கள், இரண்டு இடுகைகள் கலர் கரெக்க்டு என்ற தலைப்பில் PiTல் இருக்கு.
மேலும் விளக்கம் வேண்டுமானல் தெரியப்படுத்துங்கள்.
Thanks thalaivaa.....
GIMP + PIT irucka .....veru enna venum!
பிரியதர்ஷன், 21000 க்ரே மார்க்கெட்டில் (பில்/வாரண்டி இல்லாமல்) டி-40 சென்னையில் கிடைக்கிறது. இது லென்ஸ்களை மாற்றக்கூடிய எஸ்.எல்.ஆர் எனப்படும் வகையைச்சார்ந்தது. இதில் படம் எடுக்க கொஞ்சம் சிரமப்பட வேண்டியிருந்தாலும், குவாலிடியில் பல மடங்கு பெட்டர். இல்லை, ஒரு பாயிண்ட் அண்டு ஷூட் கேமிரா போதும் என்றால் கோடாக் இசட் சீரீஸ், நிக்கான் கூல்பிக்ஸ் பி சீரீஸ், பேனசோனிக் லூமிக்ஸ் இசட் சீரீஸ்.. மூன்றும் சிறந்தவை. சோனி எச்- 50 மொக்கை கேமிரா.. வாங்க நான் பரிந்துரைக்க மாட்டேன். கிட்டத்தெட்ட ஆறு மாசம் தேடி கேமிரா வாங்கியவன் என்ற முறையில் இதனைச் சொல்கிறேன். எனது ஷார்ட்லிஸ்ட்: அட்வான்ஸ்ட் எஸ்.எல்.ஆர் என்றால் நிக்கான் டி-40. பி&எஸ். என்றால் லூமிக்ஸ் இசட்-50. முடிவு உங்களுடையதே.
திரு பிரியதர்ஷன்!
உங்களின் புகைப்படக் கலை மீதுள்ள ஆர்வத்தை பார்க்கும்போது சில காலம் கழித்தாவது நீங்கள் D-SLR வாங்குவீர்கள் என்றே நினைக்கிறேன். அதனால் கொஞ்ச நாள் பொறுத்தாவது (இன்னும் கொஞ்சம் பணம் சேமித்து) ஒரேயடியாக D-SLR வாங்குவதே நல்லது என்று தோன்றுகிறது. அதே நேரம் சீக்கிரமே பயணம் போக வேண்டியிருந்தால் அல்லது வீட்டில் ஏதாவது முக்கிய நிகழ்வுகள் இருந்தால் உடனடியாக கேமராவை வாங்கிவிடுங்கள். சில சந்தர்ப்பங்கள் வாழ்க்கையில் மீண்டும் வருவதில்லை.
நான் இப்போது Canon 450D D-SLR மற்றும் Sony DSC H7 இரண்டினையும் பயன்படுத்துகிறேன். எனது கத்துக்குட்டித்தனமான அனுபவங்களிலிருந்து...
D-SLRஇல் உள்ள நன்மைகள்
1. நினைத்த மாதிரியெல்லாம் படம் எடுக்கலாம் (ஆனால் எனக்கு மட்டும் சறுக்கி விடுகிறது)
2. படங்களின் துல்லியம் அதிகம்
3. கையில் எடுத்தவுடன் கொஞ்சமாவது நல்லா போட்டோ பிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் தானாகவே வந்துவிடுகிறது
4. பெரிய போட்டோகிராபர் என்று மற்றவர்களை நம்ப வைக்கலாம்
D-SLRஇல் உள்ள சங்கடங்கள்
1. விலை அதிகம். அத்துடன் ஆசைக்கு அளவில்லாததால் நிறைய பின்னிணைப்புகளை (accessories) வாங்க வேண்டுமென்ற அரிப்பு இருந்து கொண்டே இருக்கும்.
2. அதிக நிறை மற்றும் பருமன். எப்பொழுதும் எடுத்துச் செல்வது கடினம்.
3. விலை உயர்ந்த wide range (Eg:18-200mm) இல்லாவிடின், லென்சை திரும்பத்திரும்ப கழற்றி மாற்ற வேண்டிய தேவை பல தடவை ஏற்படும்.
Sony DSC H50இல் உள்ள நன்மைகள்
1. விலை குறைவு
2. Wide range lens. இதே range லென்ஸ் D-SLRஇற்கு வாங்கவேண்டுமாயின் பல இலட்சங்கள் செலவாகும் (ஆனால் அதற்கு ஏற்ற தரம் இருக்கும்).
3. எப்போதும் எங்கும் எடுத்துச் செல்லாலாம். எனது Sony H7ஐ எப்போதுமே என்கூடவே வைத்திருப்பேன்.
4. Sonyஇன் vivid colours மீது எனக்கு எப்போதுமே தனிக்காதல் உண்டு.
Sony DSC H50இல் உள்ள சங்கடங்கள்
1. பின்னிணைப்புகள் அதிகம் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் விலையும் அதிகம், D-SLR, பின்னிணைப்புகள் அளவிற்கு தரமான output கிடைக்காது.
2. கேமரா தான் நினைத்ததை மட்டுமே focus பண்ணும் (செமையாக கடுப்பேத்தும்). குறிப்பாக இயற்கை சூழலில் பறவைகள், மிருகங்கள், கூட்டத்தில் ஒரு தனி நபர் போன்றவற்றை வேண்டியவாறு focus பண்ணுவது முடியாது என்றே சொல்லலாம்.
3. Manual controls பெயரளவிற்கு மட்டுமே இருக்கும்.
என்னை பொறுத்தவரை Sony H50 கொடுக்கும் விலைக்கு ஏற்ற தரமான கேமரா. இதைவிட எனது இரண்டு நண்பர்களிடம் H50 கேமரா உண்டு. அவர்கள் H50 பற்றி இதுவரைக்கும் எந்த குறையும் சொன்னதில்லை.
அதே நேரம் நிஜமான புகைப்படக் கலைக்கு D-SLR வாங்குவது நல்லது.
அன்புடன்,
விஜயாலயன்
மேலும் ப்ரியதர்ஷன், 30000 ரூபாய் வரையுள்ள எஸ்.எல்.ஆரில் வீடியோ பிடிக்க முடியாது. குடும்ப நிகழ்ச்சிகள், டூர்கள் ஆகியவற்றில் வீடியோ எடுக்க நீங்கள் விரும்பினால், நீங்கள் சொல்லும் பணத்திற்கு எஸ்.எல்.ஆர் கிடைக்காது. கிட்டத்தெட்ட அதைப்போல் மூன்று மடங்கு செலவாகும்.
எஸ்.எல்.ஆர்:
கெனான் வாங்குவதென்றால் EOS 1000D. பில் இன்றி 27000. இதில் லைவ்-வ்யூ (அதாவது படத்தை வ்யூ ஃபைண்டரில் மட்டுமின்றி எல்.சி.டி திரையிலும் பார்க்கும் வசதி) கூடுதலாக உண்டு.
நிக்கான் வாங்குவதெனாற்ல் D40: இருப்பதிலேயே சல்லிசான விலைகொண்ட எஸ்.எல்.ஆர். 21000த்துக்கு கிட் லென்சுடன் கிடைக்கிறது (பில் இல்லாமல் தான்). அதிக ஸூம் முடியாதென்றாலும், ஒரு ஆறு மாசம் வரையாவது நங்கு பழகலாம், பின் நம் ரசனைக்கும் தேவைக்குமேற்ற லென்ஸ் வாங்கிக்கொள்ளலாம்.
மற்றபடி பிற ப்ராண்டு எஸ்.எல்.ஆர்கள் இவற்றுடன் ஒப்பிடுமளவு இல்லை, விலையும் அதிகம்.
பாய்ண்ட் ஆண்ட் ஷூட்:
பானசோனிக் லூமிக்ஸ் Z50 அல்லது பிற Z சீரீஸ்: அற்புதமான கேமிரா. பெஸ்ட் இன் தெ ரேஞ். நிறைய பேர் பரிச்சயமில்லாத ப்ராண்ட், ஆனால் அதி-மேதாவி. லெய்கா லென்ஸ் உடையது- உலகின் மிகச்சிறந்த லென்ஸ் இதுவே. ஸ்விவல் டைப் எல்.சி.டி உண்டு. லென்ஸ் ரேஞ் 35-420 எம்.எம். சும்மா எங்கோ இருக்கும் கழுகைக்கூட துல்லியமாக படம் பிடிக்கிறது. வீடியோ க்ளாரிட்டியும் பிரமாதம். எச்.டி எனும் அதி-துல்லிய வீடியோ எடுக்கலாம். வேறு யோசனையே இல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு வாங்கலாம்.
கோடாக் Z1012: இதை விட பெஸ்ட் ஆஃபர் மார்க்கெட்டில் கிடைக்காது. பனிரெண்டாயிரம் ரூபாய் தான். 12 எக்ஸ் ஸூம், 10 மெகாபிக்சல் கேமிரா. எச்.டி வீடியோ எடுக்கக்கூடியது.
நிக்கான் P80: பிராண்ட் ஸ்பெசிஃபிக்காக இருந்தால் வாங்கலாம். ஸூம் ரேஞ் இதுதான் ரொம்ப ஜாஸ்தி: 18 எக்ஸ். விலையும் 20 வந்துவிடும். இதை வாங்குவதற்கு டி-40 மேல். பி&எஸ் மட்டும் தான் வாங்குவேன், அதையும் நிக்கானில் தான் வாங்குவேன் என்று கங்ஙனம் பிடித்து அலைபவர்களுக்கு மட்டும் உகந்தது.
இது எல்லாவற்றையும் விட ஒரு கேனான் ஏ-570 வாங்கி கொஞ்ச நாள் பழகிவிட்டு பின் வாங்கலாம் என்பதும் ஒரு யோசனை. விலை ஆறாயிரத்து ஐந்நூறு என்று நினைக்கிறேன். ஏழு மெகாபிக்சல், அதனால் படங்களை நன்றாகவே ப்ரிண்ட் செய்யவும் முடியும். மோட்கள், அட்ஜஸ்ட்மெண்ட் எல்லாம் இருக்கும். என்ன மேன்யுவலாக எதையும் செய்ய முடியாது. கேமிரா நினைப்பதை தான் எடுத்து கொடுக்கும். உங்களுக்கு என்ன தேவை என்பதைப்பொறுத்தே நீங்கள் வாங்கும் கேமிரா முடிவு செய்யப்படவேண்டும். மேலதிக விவரங்களுக்கு (என்னிடம் கேட்பதை விட சர்வேசன், சி.வி.ஆர், நாதஸ் இன்னும் பலர் இருக்கிறார்கள். அதையும் மீறி என்னிடம் தான் கேட்பேன் என்றால்) என் பதிவில் பின்னூட்டமோ, மின்னஞ்சலோ அனுப்பவும். இங்கு எதேச்சையாக பார்க்க நேர்ந்தது. மிஸ் ஆகிவிடும் வாய்ப்பிருக்கிறதல்லவா?
நல்ல நாள் ஒன்றில் போய் உடனே ஒன்று வாங்கிடுங்க! :D
வெங்கிராஜா, Third-eye
மிக நல்லத் தகவல்களை பகிர்ந்துக்கொண்டமைக்கு மிக்க நன்றி
I have to decide between Nikon 40D and Canon EOS1000D. I ahve been using canon EOS 350D for the past 1 year.
How much would a basic lens 55 - 300mm cost for Nikon D?
Canon 1000D and 55-250 lens costs around 48K with VAT and warranty.
(my previous comment crashed IE, so didnt know if it was delivered :(
-Saravanan
Currently using a Lumix FZ7, idhai ellam padichi dSLR aasai thothi-kichu
hi ace,
if you using eos 350d,why do you want nikon d40? nearly both were the same..so if you upgrade you will go to canon`s 50d or some else.. otherwise you dont get any benefit with nikon d40..or only liveview option and more pixel benefit with canon 1000d.. so,dont buy either models..stick with canon 350d
canon 55-250mm lens available for rs.11000-12000..this is very beautiful lens,light weight,close focusing capability than other zoom lens,IS,nice quality etc. but please check this lens will autofocus with your 350d camera.
nikon 55-200mm vr available for rs.8500 in grey market,but now this is very demand and non availble.. this one is also very beautiful lens.
if you really need to upgrade any camera,consider canon 40d or 50d or in nikon d90 or d5000.
-suresh babu
Dear Sir,
Please teach me where is the focus point for the bust couple and Standing couples Because it is my big problem when i going for Marriages and other functions
Muralidharan
முரளி,
பொதுவாக, மக்களின் படங்களில் அனைத்திலும் “கண்கள்” சரியாக, தெளிவாக இருக்க வேண்டும். கண்கள் out of focus ல் இருந்தால் படம் சரியாக இருக்காது. உங்களின் focus point கண்களில் இருக்குமாறு மாற்றிக் கொள்ளுங்கள்.
என்ன கேமரா உபயோகிக்கிறீர்கள்? auto focus உபயோகப்படுத்துகிறீர்கள் என்றால் உங்கள் கேமராவில் focus point மாற்றும் வசதி இருக்கா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் படத்தில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட நபர்கள் இருக்கிறார்கள் என்றால், கேமராவுக்கு அருகில் இருக்கும் நப்ரின் கண்கள் தெளிவாக இருக்கும் படி எடுங்கள். உங்களின் aperture மற்றும் DOF படத்தில் இருக்கும் மற்றவர்களை தெளிவாக தெரியும்படி மாற்றிக் கொள்ளலாம்.
DearSir,
Thank you for your reply for focus problem.
I am using D70s DSLR Camera, I am professional photographer. Please give me some useful tips for Wedding photography . also need tips for ISO usage for flash photography
Thank you
Muralidharan
Murali,
Do you have any external flash ?
In built flash of D70s is very harsh and small ?
Since you have Nikon, do you own SB600, SB 800 or SB 900 ? Then you can use CLS ( creative Lighting System of Nikon ) for good effort.
else you need to use manual flash techniques.
Please have a look at
strobist.blogspot.com.
They have lot of tips/techniques for flash photography
ஆதவா
உங்களின் கேள்வியை இங்கேயும் போடுகிறேன்.
///////////////////////////////////////////
அன்பு நண்பருக்கு...
எனக்கு ஒரு உதவி செய்வீர்களா?
ரூபாய் 6000 முதல் 8000 வரை விலையுள்ள நல்ல தரமான கேமரா வாங்க எண்ணியிருக்கிறேன். உங்கள் ஆலோசனை தேவை... "எந்த கேமரா வாங்கறது - பகுதி 1" பதிவைப் படித்தேன்.. ஆனால் பாதியில் நின்றுவிட்டதைப் போன்று இருக்கிறது!!
எனது முகவரி : aadava@gmail.com
உங்களை பெரிதும் எதிர்பார்க்கிறேன்!!!
அன்புடன்
ஆதவா
ரொம்ப நன்றி An&
குறிப்பிட்ட மாடலோடு, சில features உம் சொன்னால் வசதியாக இருக்கும்... எனக்கு Photography யில் மிகுந்த ஆர்வம் இருந்தாலும் அதிக செலவு செய்ய பயப்படுகிறேன். (முதலில் P&S வாங்கிவிட்டு பிறகு SLR போகலாம் என்று!!!)
hi adhava..
if you have budget for SLR go with it..if not,wait and save money for DSLR..in my opinion DSLR is easy and faster than any P&S.
it is difficult to capture moving subjects in P&S,this may leads to discourage your photography interests..you can learn easily in DSLR than P&S.
you must need atleast rs.10,000 for a good P&S camera,adding around 9000 you will get excellent quality DSLR..
other than size and less amount,there is nothing special in P&S camera`s..dont hesitate,if you are beginner or enthusiasist go with DSLR.
-suresh babu
திரு முரளி!
மேலும் பெரும்பாலும் (Automatic) Portrait mode இல் புகைப்படம் எடுக்கும்போது DOF கம்மியாக இருக்கும். இதனால் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட வரிசைகளில் நபர்கள் இருக்கும் புகைப்படங்களில் Focus பண்ணப்பட்டவர்கள் இருக்கும் வரிசையில் இருப்பவர்கள் மட்டுமே தெளிவாக தெரிவார்கள்.
எனவே Group photo எடுக்கும்போது Portrait modeஐ தவிர்ப்பது நல்லது.
அன்புடன்,
விஜயாலயன்
http://www.kenrockwell.com/tech/recommended-cameras.htm
ஆதவா, உங்களுக்கும் எல்லோருக்குமான ஒரு முழுமையான கைட்.
அன்பின் நண்பர்களுக்கு!
எனது சிற்றறிவிற்கு எட்டிய வரையில் எல்லா விதத்திலும் முழுமையான கேமரா என்று எதுவும் இல்லை. பெரும்பாலும் அதிக விலையில் கிடைக்கும் கேமராக்களில் குறைகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். ஆகவே இணையத்தில் வலையேற்றப்பட்டிருக்கும் கேமரா பற்றிய விமரிசனங்களில் (reviews) அவற்றின் குறைகள் சொல்லப்பட்டிருக்காதவிடத்தில் அந்த விமரிசனங்களை எழுதியவரின் குறிக்கோள் (intention) / முழுமையான அறிவு (full knowledge) கேள்விக்குரியது என்பது எனது தாழ்மையான கருத்து.
எப்பொழுதும் ஒன்றுக்கு மேற்பட்ட விமரிசனங்களை பார்த்து தீர்மானத்திற்கு வருவதே மேல்.
பின்வரும் சுட்டியில் ஓரளவிற்கு நன்றாக ஒவ்வொரு கேமராவினதும் குறைநிறைகளை அலசியிருப்பார்கள்.
http://www.dcresource.com/reviews/allreviews.php
ஆனால் இதனையும் முழுமையானதென்று கூறமுடியாது.
அன்புடன்,
விஜயாலயன்
karuvyan, vengiraja, vijayalayan, third eye-vijay, mattrum nan nalla camera vaanga asi valangum anaivarukum nandrikal pala...
Already i used PS digi cams like sony dsc w70 and canon (forgot the model) and get bored.. bcoz it never gave the result wat i need.. sometimes it surprises me but many times disappointment only remains. presently my focus is on Nikon D40. i think its good to start with.... sila chinna doubts, ennana.. athu 6 MP camera so ithu pothuma ??? (enna madhri kathukutiku athiga MP better pic quality and clarity nu oru ninaipu) athan?!!!
then ppl are saying that very few lenses only available to suit that camera (coz focus motor is not in that camera) is it true?
intha santhegatha konjam theerthu vachitingana, oru nalla parthu vaangida vendiyathuthan...
apuram innoru vishyam, wait panni innum konjam undiyalla (ATM) la kasu serthu innum better ah onna vaangalamanum idea iruku... unga karuthukalayum sollunga.
taminglish ku mannikavum, (officela vitukey vida matikranga... :-(
For confusions around the megapixel issue:
http://paathasaari.blogspot.com/2009/07/ii.html
Focus motor is not there in D40, Yes. i.e) The lens controls whether we should manually focus the subject or automatically do it.
But it is not a big problem. With Manual Focus, you can fit in AF-S and AF lenses. If you are particular about autofocus only, then you can buy only the expensive AF lenses. Simple.
The choice is yours. The real jump from D40 is D90 in my opinion which is about 80,000. So, I bought the D40 itself. It is left to you whether you pick D40 or flash few more bucks for a D60 or a D80. IMO, both are not worth their price. D40 is a much better deal. You can buy lenses with the money you get, which is the most sensible investment, since you'll use them forever and if at all, resale value doesn't drop too much like the camera bodies. It remains constant for even 5 years or so.
நண்பர்களின் பார்வைக்கு... முதல் பக்கத்தில் வெளியிட்டால் அனைவருக்கும் பிரயோஜனப்படும்.
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Wikipedia_Takes_Chennai
Currently I am residing in Bangalore. What is the critera to become a freelance photographer. Should we have to register somewhere. Give me details about that.
தர்மா
எனக்குத் தெரிந்து register எதுவும் தேவை யில்லை. Flickr ஏகப்பட்ட பெங்களூர் சம்பந்தப்பட்ட groups இருக்கு. மேல் விவரம் அங்கே கிடைக்கக்கூடும்.
freelance என்ன செய்ய விரும்புகிறீர்கள் ?
நான் Exposure compensation (EV) நல்லா பயன்படுத்துவேன், ஆனா இந்த Flash Exposure Compensation (FEC) பயன் படுதினதே இல்லை. இன்-பில்ட் பிளாஷ்-ல இத என்ன, எப்படி, எங்க-னு சொன்னா நல்லா இருக்கும்.
என் கிட்ட இருக்குறது Panasonic DMC-FZ7. I hope this feature is available in dSLRs too.
நாகப்ப்பன்.
ஆமாம். அனைத்து DSLRல்லும் இந்த வசதி இருக்கு.
பொதுவாக புதிய கேமராக்க்களில் TTL ( Though the Lens) flash metering இருக்கும். அதாவது, கேமரா, உங்களின் லென்ஸின் வழியாக, படத்தை எடுப்பதற்க்கு முன். ஒரு சிறிய pre-flash செய்து, எந்த அளவுக்கு, எவ்வளவு நேரத்த்துக்கு flash ஒளிக்க வேண்டும் என்று தெரிவு செய்யும். பல நேரங்களில் இந்த கணிப்பு தவறாக போகலாம். அல்லது உங்களுக்கு பிடிக்காமல் போகலாம்.
Flash Exposure Compenstation மூலம், இந்த கணக்கை மாற்றிக் கொள்ளலாம். உதாரணதிற்கு, நீங்கள், கேமராவை 1-stop குறைவாக flash வேண்டும் என்று மாற்றிக் கொள்ளலாம். இதன் மூலம் flash விளைவு குறைவாக இருக்கும்.
பதிலுக்கு நன்றி.
இத்தனை நாளா இது தெரியாம போச்சே-னு வருத்தமா இருக்கு ...... பிளாஷ் பயன்படுத்தி வெளிறி போன என் படங்களுக்கு தீர்வு FEC தான்-னு புரியுது.
PIT குழுவினருக்கு வணக்கமும் நன்றிகளும்,
தங்களின் கருத்து பகிர்தல் வியக்க வைக்கிறது....புகைப்படகலையை பிட்டு பிட்டு PIT-யில் வைத்துள்ளீர்கள்,,,நன்றி...வெறும் மொக்கை படங்கள் எடுத்துவந்த என்னையே நண்பர்கள் பாராட்டும் அளவிற்கு வளர்துவிட்டீர்கள்....நன்றிகள்.....
நான் தற்போது உபயோகிக்கும் P&S Kodak C140 யில் long time exposure option,night landscape போன்றவைகளை தெளிவாக எடுக்க Tripod வாங்கலாம் என்று யோசனை...வாங்கும் Tripod, எதிர்காலத்தில் வாங்கும் Nikon D40 க்கும்( கருவாயன் அவர்களின் ஆலோசனைப்படி ) பொருந்துமாறு வேண்டும் என்பதால் உங்கள் ஆலோசனையை எதிர்பாக்கிறேன்......
மேலும், எனது ஓரளவு மொக்கை படங்கள் சில உங்களின் பார்வைக்கு...தவறுகளை சுட்டிகாட்டி மேலும் கைதூக்கிவிட விரும்புகிறேன்...
http://picasaweb.google.com/lh/photo/TCYbE5itdj4F60m6DhJ0Ww?feat=directlink
senthilkumar,
ஒரு tripod வாங்கினால், எல்லா கேமராவிலும் அநேகமாய் உபயோகப் படுத்த முடியும். ஸோ, C140க்கு வாங்கரது, D40க்கும் உபயோகப்படுத்தலாம்.
ஐந்தடி வரை நீளும் முக்காலி வாங்கினால், அத ஒவ்வொரு எடத்துக்கும் எடுத்துக்கிட்டு போரது பெரிய ப்ரச்சனை.
என்னிடம் உள்ள vivitar ஆரம்பத்தில் ஒரு மாதம் உபயோகித்ததோடு சரி. அப்பரம் பல இடங்களிலும் உள்ள டேபிளும், சுவரும் தான் முக்காலியாக பயன்படுகிறது.
ஸோ, உங்க உபயோகம் எந்த அளவுக்கு தீவிரமா இருக்கும்னு யோசிங்க. C140 இன்னும் கொஞ்ச மாசத்துக்கு வச்சிருப்பீங்கன்னா, mini spider வகை முக்காலி வாங்கிக்கோங்க. $2 க்கு கிடைக்கும்.
மாசத்துக்கு சில முறையாவது தீவிரமா உபயோகிப்பீங்கன்னா, 4 ~ 5 அடி முக்காலி யோசிக்காம வாங்குங்க. SunPak, Vivitar எல்லாம் சீப்பான விலைக்கு கிடைக்கும் நல்ல ட்ரைபாடுகள்.
related topic from PiT http://photography-in-tamil.blogspot.com/2007/10/5-1.html
Hai friends,
I have lot of interests in Photography and i want to learn a lot still now i am in LKG only in photography.
I have bought a Canon EOS 500D camera and i want to learn about the camera techniques and getting a good photo through that, can any one help me please.
Thanks and Regards,
Ejas
Ejas, welcome to the club. we may not have any specific posts about 500D techniques, but since its a dslr, you can use previous lessons to explore your camera.
start here
http://photography-in-tamil.blogspot.com/2007/08/1-f-stop.html
அன்பின் நண்பர்களுக்கு!
பின்வரும் சுட்டியில் "தூய்மையான அபிவிருத்திப் பொறிமுறை" (clean development mechanism) எனும் தலைப்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒரு பிரிவு நடத்தும் புகைப்படப்போட்டி பற்றிய விபரங்கள் தரப்பட்டுள்ளன.
http://cdm.unfccc.int/contest/index.html
விரும்பியோர் பங்குபற்றலாம்.
அன்புடன்,
விஜயாலயன்
பி.கு.: இப்படியான தகவல்களை எந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்ற தகவலை ** உங்கள் நகரில் வர இருக்கும் புகைப்படத்துறை சார்ந்த நிகழ்ச்சிகள்/நிகழ்வுகள் பற்றி அறியத் தாருங்கள் ** என்ற அறிவிப்பில் சேர்த்துக்கொண்டால் நன்றாகவிருக்குமே?
ஒரு Canon EOS 1000D வாங்கலாம்னு இருக்கேன் ; லென்ஸ் தேர்வு தான் குழபம்மா இருக்கு....
1. கிட் லென்ஸ் (18-55mm ) மட்டும்
2. கிட் லென்ஸ் + 50mm f/1.4 for portraits (குழந்தைகளை எடுக்க)
3. லென்ஸ் மாற்றும் வேலைய குறைத்து ஒரே 18-250mm Canon lens
கேமரா-வோட சேத்து 30-35k வந்தா சரி...தொடங்குறதுக்கு எது சிறந்த தேர்வு?
Pentax 200D தான் யோசிச்சிட்டு இருந்தேன்...ஆனா இந்தியா-வுல கிடைக்குதா தெரியல.....
சென்னை-ல வைப்பு உண்டா?
-நாகப்பன், பரோடா
நாகப்பன்
Pentax எனக்கு அதிகம் தெரியாது. Canon/Nikon ல் வசதிகள அதிகம் ( நிறைய lens/repair வாய்ப்புகள் ).
1000ட்/xs நல்ல கேமராதான்.Canon ல் 18-250 இருக்கா என்ன ? எனக்கு தெரிந்து 18-200 தான் இருக்கு.
18-55 + 55-250 அல்லது 18-200 இரண்டும் ஒகேதான்.
50mm ல் 1.4 விட குறைந்த விலையில் 1.8 கிடைக்கும். அதுவும் நல்ல லென்ஸ்தான்.
நன்றி ஆனந்த்,
18-200 mm லென்ஸ் விலைய பாத்து மாரடைப்பே வந்திடுச்சு...........
இப்போதைக்கு இருக்குற காசுல - கேமரா + கிட் லென்ஸ் + 50mm f/1.8 தான் முடியும்
யாருக்காவது சென்னைல எங்க வாங்குறது-னு தெரியுமா?
ஊருக்கு வரும் போது தான் வாங்கணும்.
நாகப்பன், தேடியதில் இது கண்ணில் பட்டது. இந்த கடையில் முயன்று பாருங்கள்.
http://chennai.quikr.com/c-Camera-Accessories-Canon-EOS-500D-With-18-200mm-Lens-W0QQAdIdZ64165271
hi friends...
anyone have a photoshop cs4 and flash books in tamil.
Best Regard,
Suria
E-Mail: suriavarman2008@yahoo.co.in
Web: itismycac.blogspot.com
இந்த கேள்வி குறிப்பா நம்ம கிம்ப் தல ஆனந்துக்கு,
இந்நாள் வரை, கலர் படங்களை கருப்பு வெள்ளை-யா மாத்த நம்ம பிட் டுடோரியல் - சேனல் மிக்சர் தான் பயன்படுத்திட்டு வரேன்.
ஆனா இந்த, gradient filter, dodges and burns எல்லாம் கிம்ப்ல எப்படி பண்றது.
ஒரு ஆர்கூட் கலந்துரையாடல்-ல போடோஷோப்-ல பன்றத்தா படிச்சேன்.
நா நிறைய கருப்பு வெள்ளை மாத்துவேன், ஆனா கண்ட்ரோல் கிடைக்காம கஷ்ட படுறேன்.
சில பளுக்-இன் கூட முயற்சி பண்ணிட்டேன், பயன் இல்லை.
சிறு விளக்கம், சில லிங்க்ஸ் இல்ல ஒரு புது பதிவு.
எதுவா இருந்தாலும் சரி தான்.
நாகப்பன்,
Dodge and Burn பற்றி தெளிவாய் இந்த இடுகையில் இருக்கு
http://photography-in-tamil.blogspot.com/2008/11/blog-post_11.html
சேனல் மிக்ஸர் மூலம் முதலில் கருப்பு வெள்ளைக்கு மாற்றிக் கொண்டு இந்த இடுகையில் கூறிய வாறு 50 % grey layerல் சிறிய opacity பிரஷ் முலம்
Non destructive Dodge and Burn செய்துக் கொள்ளலாம்.
Gradient map மூலம் கருப்பு வெள்ளைக்கு மாற்றுவது பற்றி விரவில் ஒரு இடுகையாய் எழுதி விடுகிறேன்
----
An&
நன்றி An& - simple but very effective, especially for touching portraits clicked in natural light without reflectors.
waiting for your post on gradient tool.
Dear sir,
I am photographer, Please give me some tips and techniques for wedding photography. I am also having confusion about focus point, i.e Where to focus for standing couple ,bust couple and groups
Thank you
முரளி
இதே கேள்வியை நீங்கள் ஏற்கனவே கேட்டு இருக்கிறீர்கள். அந்த கேள்வியும் அதற்கான பதிலும் இதே பக்கத்திலேயே இருக்கே.
murali said...
Dear Sir,
Please teach me where is the focus point for the bust couple and Standing couples Because it is my big problem when i going for Marriages and other functions
Muralidharan
July 24, 2009 10:35 PM
An& said...
முரளி,
பொதுவாக, மக்களின் படங்களில் அனைத்திலும் “கண்கள்” சரியாக, தெளிவாக இருக்க வேண்டும். கண்கள் out of focus ல் இருந்தால் படம் சரியாக இருக்காது. உங்களின் focus point கண்களில் இருக்குமாறு மாற்றிக் கொள்ளுங்கள்.
என்ன கேமரா உபயோகிக்கிறீர்கள்? auto focus உபயோகப்படுத்துகிறீர்கள் என்றால் உங்கள் கேமராவில் focus point மாற்றும் வசதி இருக்கா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் படத்தில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட நபர்கள் இருக்கிறார்கள் என்றால், கேமராவுக்கு அருகில் இருக்கும் நப்ரின் கண்கள் தெளிவாக இருக்கும் படி எடுங்கள். உங்களின் aperture மற்றும் DOF படத்தில் இருக்கும் மற்றவர்களை தெளிவாக தெரியும்படி மாற்றிக் கொள்ளலாம்.
July 24, 2009 11:11 PM
Murali.
திருமணப் புகைப்படம் மற்ற எல்லா புகைப்படங்களைப் போலத்தான். ஆனால் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்.
1 - இது வாழ்வின் ஒருமுறைக்கான நிகழ்வு. எனவே ஒவ்வொரு நிகழ்வும் மிக முக்கியமானவை. தவறவிட்ட தருணங்கள் மீண்டும் கிடைக்காது. ஆகவே மிகவும் கவனம் தேவை.
2 - மொத்தக் குடும்பமும் உங்களை நம்பி இருக்கிறது. ஆகவே முடிந்தால் இரு குடும்பத்தினரின் முக்கியமானவர்களிடம் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே பழகி சினேகபாவம் வளர்த்துக் கொள்ளுதல் நலம். கூடவே தவற விடக்குடாத முக்கிய ஆட்கள் என்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். பாட்டி, மாமா மாமி என்று. அது உங்களின் மேல் அவர்களுக்கு நம்பிக்கை வளர்ப்பதோடு நிகழ்ச்சியில் அவர்கள் சிறப்பாக ஒத்துழைக்க உதவும். கூடவே எது போன்ற புகைப்படங்கள் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று ஒரு பட்டியலை செய்து கொள்ளுங்கள்.
உதாரணத்துக்கு என்னுடைய திருமணத்தை புகைப்படம் எடுத்தவர் மிக முக்கியமான ஒருவரை புகைப்படம் எடுக்க தவற விட்டுவிட இன்றும் அது ஒரு புள்ளியாக நிற்கிறது.
3 - புகைப்படம் எடுக்கும் இடத்தை ஏற்கனவே ஒருமுறை சென்று பார்த்து பழகிவிட்டால் எந்த இடத்தில் நிறுத்தி மணமக்களை புகைப்படம் எடுக்க ஏதுவாக இருக்கும் என்று தேர்வு செய்ய வசதியாக இருக்கும்.
4 - உங்களிடம் இருக்கும் கேமரா ஒன்று மட்டுமே போதும் என்று முடிவு செய்து விடாதீர்கள். கூட ஒன்று வைத்துக் கொள்ளுங்கள் கடன் வாங்கியாவது. ஏற்கனவே சொன்னது போல் இது வாழ்கையில் ஒருமுறை நடக்கும் நிகழ்ச்சி. இந்த கேமரா எதாவது பிரச்சினை செய்தால் அடுத்தது உதவியாக இருக்கும்.
5 - பேட்டரி, மெமரி கார்ட் & சார்ஜர் எல்லாம் ஒரு ஸ்பேர் வைத்துக் கொள்ளுங்கள்.
6 - மணமக்களை புகைப்படம் எடுக்கும் போது அவர்களின் முகத்தை & கண்களை போகஸ் செய்து எடுக்கவும். முகபாவம் துள்ளியமாக தெரிய உதவும்.
7 - ஏற்கனவே நீங்கள் எடுத்த புகைப்படங்களில் சிறந்தவைகளை ஆல்பமாகத் தொகுத்து அவர்களுக்கு காண்பிக்கலாம். அது உங்களின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும்.
8 - முக்கியமாக உங்களின் ஈடுபாடும் கூடவே க்ரியேட்டிவிட்டியும். ப்ளாஷ் அடிச்சு எல்லாரும் போட்டோ எடுத்துவிடலாம். நன்றாக எல்லாரும் கவரும் வகையில் எடுக்க வேண்டும்.
9 - மணமக்களை தனியாக நிறுத்தி எடுக்கும் போது வெறுமனே இப்படி அப்படி என்று போஸ் கொடுத்து எடுக்கச் சொல்லாமல் முகபாவம் சிறப்பாக அமையும் படி சிறு சிறு ஜோக்குகள், கிண்டல்கள் என்று ஆரம்பித்தால் புகைப்படம் வெறும் புகைப்படமாக இல்லாமல் உயிரோட்டமாக இருக்கும்.
10 - மணமக்களை மட்டுமே இல்லாமல் அங்கே ஓடியாடும் குழந்தைகளையும் கவனியுங்கள். அவை ஆல்பத்திற்கு மேலும் மெருகேற்றும் ஒன்றாக இருக்கும். முடிந்தால் ஒரு துணை புகைப்படக்காரரை வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பக்கம் மணமக்களை எடுத்துக் கொண்டிருக்கையில் அடுத்தவர் மற்றவர்களை, குழந்தைகளை என கவனித்து எடுக்க உதவும்.
11. முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று, புகைப்படம் எடுப்பது உங்கள் தொழில் அதே நேரத்தில் மணமக்களை அல்லது விழாவில் உள்ளவர்களை தொந்தரவு செய்வது இல்லாமல் எடுக்க வேண்டும்.
12 - ஃப்ளாஷ் / விளக்கின் வெளிச்சம் ரொம்ப ஹார்ஷாக முகத்தின் மீது விழுவதை தவிர்க்கவும். முடிந்தால் டிஃப்யூசர் உபயோகிங்கள்.
13 - முடிந்தால் ரா (RAW ) பார்மாட்டில் புகைப்படம் எடுக்க முயலுங்கள். கொஞ்சம் அதிகப் படியான வேலை தான் ஆனாலும் சில கருப்படித்த படங்கள் ஆனால் முக்கிய படங்கள் எல்லாம் சரி செய்து திரும்ப பெற உதவும்.
14 - ஒரே ஆங்கிள்,ஒரே பெர்ஸ்பெக்டிவ் என இருக்காமல் வித்தியாசமாக முயன்று பாருங்கள்.
15 - மோதிரம் போடுதல், மங்கள நாணை பிடித்திருக்கும் நாத்தியின் கை என சின்ன சின்ன விஷயங்களை க்ளோசப்பில் எடுக்கலாம். அட்டகாசமாக இருக்கும். இரண்டாவது ஆள் இந்த நேரத்தில் உதவலாம்.
16 - பிண்ணனியில் கவனம் செலுத்துங்கள். பேக்ட்ராப் சீலைகள் சில கைவசம் வைத்திருங்கள். மணமக்களை தனியாக புகைப்படம் பிடிக்க உதவும்.
17. குழு புகைப்படம் எடுக்கும் போது கஞ்சி போட்ட மாதிரி விரைப்பாக இருப்பார்கள் நம் ஆட்கள். முடிந்தால் அதை மாற்றி கல கலப்பான சூழல் உருவாக்கப் பாருங்கள்.
18 - பொறுமை மிக அவசியம். கல்யாண வீட்டை சேர்ந்தவர்கள் சற்றே இப்படி அப்படி உங்களை விரட்டலாம், பொறுத்துக் கொள்ளுங்கள், அவர்களுக்கு விளக்குங்கள் இப்படி அவர்கள் விரட்டுவதால் புகைப்படங்கள் சரியாக வராமல் போகக் கூடிய வாய்ப்புகளை. அதே நேரம் முக்கியமானவற்றை தவற விடக் கூடாது.
19 - எடுத்த புகைப்படங்களை சரியில்லை என்றால் அவ்வப்போதே அழித்து விடாதீர்கள். அவை பெரிய திரையில் வேறு பெர்ஸ்பெக்டிவ் தரலாம்.
20 . கடைசியா... மாத்தி யோசிங்க. ஒரே மாதிரி எடுக்காதீங்க
இதை சீக்கிறம் முடிஞ்சா பதிவகவே போட்டுட்றோம்
Dear sir,
Thank you for your reply for my focussing problem.
One more question
Can I use high ISI for wedding?, and where to use More ISO
Murallidharan
நான் எடுக்கும் படங்கள் பல சரியாக இருக்கமாட்டிக்குது (பிரி பிரியா இருக்கும் - lens-ல மண் ஒட்டியிருந்தா படம் எப்படி வருமோ அப்படி). என்னோட எல்லா படங்களும் அப்படி வராது, முக்கியமான படங்கள் மட்டும் :-((. ஏன் இப்படி வருதுன்னு புரியமாட்டிக்குது. எப்படி பிரி பிரியா இல்லாம ஒழுங்கான படம் எடுக்கறது?
kurumban
can you send us as an example pic please ?
Grainy Image என்பதை தான் பிரி பிரியா இருக்கும் மண் ஒட்டியிருக்கும் என்று தமிழ் படுத்தி இருக்கேன். :-)). நான் எடுக்கும் முக்கியமான படங்கள் grainy படமா வந்து அந்த படத்தை பயன்படுத்த முடியாம போயிருது. கண்றாவியா எடுத்தாலும் பரவால grainy இல்லாம படம் எடுக்கனும் என்பது தான் என் விருப்பம். என் நண்பனோட குழந்தை பிறந்தநாள் விழாவை நான் மட்டுமேபடம் பிடித்தேன் அதில் பாதிக்கு மேல் grainy images.
photos.in.tamil@gmail.com முகவரிக்கு படங்களை அனுப்பிட்டேன்.
என்னிடம் இருக்கும் Kodak Easy Share 813 க்கு பதிலாக வேறு வாங்கலாம் என்று இருக்கிறேன்.
1. Nikon Coolpix P90 12.1MP Digital Camera with 24x Wide Angle Optical Vibration Reduction (VR) Zoom and 3 inch Tilt LCD
2. Canon Powershot SX10IS 10MP Digital Camera with 20x Wide Angle Optical Image Stabilized Zoom
Nikon P90 ல் zoom மற்றும் HD video இருப்பதால் அதை வாங்க விரும்புகிறேன். ஆனால் amezonல் சிலர் சரி இல்லை என்றும் சிலர் மிக நன்றாக இருப்பதாகவும் சொல்கிறார்கள். உங்கள் கருத்து என்ன?
Canon Powershot SX10IS எல்லா தளங்களும் பரிந்துரைக்கிற மாடல்.
சென்னையில் மேல் சொன்ன இரண்டு மாடல்களும் கிட்டத்தட்ட ஒரே விலை. எதை தெரிவு செய்யலாம்?
இரண்டும் என் விருப்பம் Canon Powershot SX20IS புதிதாக வந்திருந்தாலும் விலை அதிகமாக இருக்கிறது.
வெங்கட்ராமன்,
நீங்கள் சொல்லும் கேமராக்கள் இரண்டும் 'Prosumer' என்ற வகையினைச் சேர்ந்தது. Professional Modelகளான DSLRகளுக்கும் Consumer Modelகளான Point and Shoot கேமராக்களுக்கும் இடைபட்டவை இவ்வகை கேமராக்கள். அதிலும் நீங்கள் சொல்லிய இரண்டு மாடல்களும் 'Superzoom' என்ற வகையினைச் சார்ந்தவை. என்னிடம் இருந்த Canon Digital IXUS கேமரா3x ஜூம் கொண்ட P&S கேமரா. இந்த கேமராவை மாற்றும் போது நான் மேற்கண்ட ஆய்வுகளைச் செய்தேன். Superzoom கேமரா வாங்குவது என்று முடிவு செய்துவிட்டால் கண்டிப்பாக Panasonic Lumix DMC-FZ28 கேமராவையும் கருத்தில் கொள்ளவும். என்னிடம் உள்ளது இதற்கு முந்தைய மாடலான FZ18 கேமரா. FZ28 6-7 மாதங்களுக்கு முன்னர் வந்த புதிய மாடல். 18x ஜூம் கொண்டது இக்கேமரா. கண்டிப்பாக ஒரு மிகச் சிறந்த கேமரா இது. உபயோகிப்பது மிக எளிது, நான் முன்னர் உபயோகித்த Canon போன்றே எளிதான Dialகளும் ஜூம் லீவரும் கொண்டது இது. அதோடு ஷட்டர் ஸ்பீடு, அபெர்ச்சர் இவற்றை மாற்ற எளிதான ஜாய்ஸ்டிக்கும் இதில் உள்ளது. Nikon P90 நான் பரிசோதித்து பார்த்து திருப்தி இல்லாமல் Panasonic வாங்கினேன். Canon Powershot நல்ல கேமரா தான். சந்தேகம் இல்லை. ஆனால் அதில் rechargable Lithium-Ion பேட்டரி உபயோகிக்க முடியாது. பென் டார்ச் பேட்டரி தான் உபயோகிக்க வேண்டும். புதிய மாடலில் இருக்கிறதா எனத் தெரியவில்லை. FZ18இல் Li-Ion பேட்டரி உள்ளது. 8MP resolutionஇல் பேட்டரி மாற்றாமல் 350 படங்கள் வரை நான் எடுத்திருக்கிறேன். 2GB மெமரி கார்டு வரை நான் உபயோகித்திருக்கிறேன். பயன்பாட்டின் போது எந்த குறையும் தென்படவில்லை. ஆனால் Powershotஐ விட விலை மலிவாக இருக்காது என்பது என் எண்ணம். FZ28இன் reviewக்களையும் படித்துப் பாருங்கள். ஆனால் என்னை பொருத்த வரை கண்டிப்பாக P90 வாங்க வேண்டாம்.
மேலும் விபரங்கள் தேவை பட்டால் கேளுங்கள். நன்றி.
மன்னிக்கவும். 6-7 மாதங்களுக்கு முன்னர் வெளியான புதிய Panasonic மாடல் FZ38 என்பது. FZ28 அதற்கு முன்னர் வந்த மாடல்.
http://www.photographyblog.com/reviews/panasonic_lumix_dmc_fz38_review/
வெங்கட்ராமன், என்னை கேட்டால் ஒரு dslr வாங்குங்கள் என்று தான் சொல்வேன்..ஏற்கனவே நீங்கள் ஒரு point and shoot கேமராவை பயன் படுத்தியுள்ளீர்கள்,எனவே அடுத்த கட்டமாக dslr தான் சிறந்த வழி.. நீங்கள் குறிப்பிடுள்ள prosumer வகைகள் நல்ல zoom range மற்றும் video option இருந்தாலும், picture quality,fast,
noise free image,action shots என்று பார்த்தால் dslr ஒன்றே சிறந்த வழி.. prosumer க்கும்,dslr க்கும் size பொருத்த வரையில் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை..
prosumer cameraவில் நல்ல zoom range இருந்தாலும் என்னை பொருத்த வரையில் சுமாராக 300 mm(35mm format) க்கும் மேல் பயன்படுத்துவது சவாலான விசயம்..அதுவுமில்லாமல் 300mm மேல் என்பது மிகவும் நல்ல வெளிச்சத்தில் மட்டுமே wild life மற்றும் திருட்டுதனமாக தூரத்தில் வரும் ஃபிகர்களை எடுப்பதற்க்கு தான் பயன். நீங்கள் எத்தனை முறை இந்த மாதிரி போட்டோ எடுப்பீர்கள் என்று நன்றாக யோசிக்கவும்..
பொதுவான புகைப்படங்கள் எடுப்பதற்க்கு 28 - 80 mm (18-55mm DSLR format) zoom range என்பதே போதும்..இந்த zoom range ல் wild life,some candit shots தவிர முடிந்த அளவில் அனைத்தும் எடுக்கலாம்..
budget கொஞ்சம் தான் அதிகம்,பட்ஜெட் டைட் என்றால் சிறிது காலம் பொறுத்திருந்து வாங்கவும்..
எனவே, 300-600mm என்பதை கண்டு மயங்க வேண்டாம்..பயன்பாடு மிகவும் குறைவு..
இல்லை எனக்கு prosumer type தான் வேண்டும் என்றால், இவ்விரண்டில் FEATURES பல வகையில் nikon p90 ,canon sx10is ஐ விட அதிக பயன்..
NIKON P90 CANON SX10IS
12 MEGA PIXEL 10 MEGA PIXELS
3.0 INCH LCD 2.5 INCH LCD
26-624MM 28-560MM
F2.8-5.0 APERTURE RANGE.. F2.8-5.7
இதில் 3.0 inch LCD DIPLAY வை தவிர மற்ற feautures ல் முக்கியமான வித்தியாசம் பெரிதாக இல்லை..
இருந்தாலும் picture quality என்று பார்த்தால் canon சிறந்ததாக தெரிகிறது.(AS PER REVIEWS)
மேலும் canon sx20is மற்றும் canon sx10is இவ்விரண்டிற்க்கும் உள்ள வித்தியாசம் மிக குறைவே..
12 mega pixel மற்றும் high quality video(720p) with HDMI output இவ்விரண்டை தவிர சொல்லிகொள்ளும்படி பெரிதாக ஒன்றும் இல்லை,எனவே canon sx20is ஐ பற்றி கவலைபடவேண்டாம்..
கைப்புள்ள சொல்வது போல் panasonic fz28 or fz38/35,மாடல்களையும் பரிசீலனை செய்யவும்,ஏனென்றால் panasonic cameraக்கள் உலகதரம் வாய்ந்த leica lensஐ பயன்படுத்துகின்றனர்..
prosumer வகை என்று பார்த்தால்,nikon ஐ விட canon மற்றும் panasonic மாடல்கள் சிறந்ததே..
எனவே,canon sx10is மற்றும் panasonic fz28 or 38 விலை வித்தியாசம் இல்லை என்றால் இரண்டுமே சிறந்தது,வித்தியாசம் இருப்பின் எது விலை குறைவோ அதை வாங்கவும்...
இன்னும் ஏதும் சந்தேகம் இருப்பின் கண்டிப்பாக கேட்கவும்..
-சுரேஷ் பாபு.
Take it from me - I switched to dSLR (EOS1000D for 25k INR) just a month ago, after using a prosumer camera (Panasonic FZ7) for 3 years. I feel i have wasted 3 yrs of my digital fotography in a bridge cam, although most of my skills as on date have been acquired from FZ7 with it's world class Leica lens.
When I bought the prosumer, I was not so sure of my fotographic skills....thats the reason - so the break even point is more within you.
On any given day, I would opt a dSLR - upgradable and flexible, less noise and real photography.
On the zoom part, a EOS 1000D with kit lens and a Sigma70-300 non-APO would cost you under 31k-32k INR. Almost your PNS price
Thanks to all for participating.
We will make *sticky* post soon
"Which camera to buy ? "
கைப்புள்ள, சுரேஷ்பாபு & Nagappan மிக்க நன்றி.
Panasonic FZ38 விலை கொஞ்சம் பரவாயில்லை அதனால் வாங்கலாம் என்று முடிவு செய்திருந்தேன்.
ஆனால் Nagappan அவர்கள் prosumer camera வாங்கிய அதே மன நிலையில் தான் நான் இருக்கிறேன். என்னால் எந்த அளவுக்கு அதை நன்றாக உபயோகிக்க முடியும் என்று தான் பயப்படுகிறேன். இதுவரை DSLR வகை கேமிராக்களை தொட்டுக் கூட பார்த்ததில்லை.
For new DSLR users
http://www.canon.co.in/p/EN/112-Digital-Cameras/189-EOS/745-EOS-1000D-Kit-EFS-18-55/
Panasonic FZ38
அல்லது
EOS 1000D Kit (EFS 18-55)
புதிதாக் லென்ஸ் வாங்காமல் EOS 1000D KIT ஐ உபயோப்பதில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா. அவர்கள் தரும் லென்ஸ் எத்தனை x zoom க்கு நிகரானது.
கொஞ்சம் காலம் பொருத்து லென்ஸ் வாங்கிக்கொள்ளலாம், அதுவரை DSLRஐ கற்றுக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்.
என்ன சொல்றீங்க, என்ன செய்யலாம்.
உங்களுக்கு பணம் மற்றும் சைஸ் பிரச்சினையில்லையென்றால்,பேசாமல் DSLR வாங்கவும்..இது மற்ற கேமராக்களை விட பயன்படுத்துவது மிகவும் சுலபம்..மிகவும் நம்பகமானது.
அதற்காக,prosumer வகைகள் மோசம் என்று சொல்லவிலலை..compare பன்னினால் DSLR சிறந்தது என்று சொல்வேன்..
பல நேரங்களில் prosumer கேமராவில் வரும் electronic view finder மற்றும் LCD screen ஐ வைத்து படம் எடுப்பது மிகவும் சிரமம்.முக்கியமாக சூரிய ஒளியில் இதை பயன்படுத்தி படம் எடுப்பது சிரமம்.
எல்லோரும் DSLR சைஸை பார்த்து ,பயன்படுத்துவது சிரமம் என்றே நினைக்கின்றனர்.உண்மையில் சின்ன கேமாரக்களை பயன்படுத்துவது தான் சிரமம்(என் கருத்து).
canon eos 1000d மற்றும் 18-55 IS kit lens ஒரு சில விசயங்களை தவிர அதிலேயே கலக்கலாம்..
பொதுவாக x என்பது எத்தனை முறை(times)என்று அர்த்தம். உதாரணமாக kitlensயே வைத்துகொள்வேம்..அந்த லென்ஸ் 18mmல் ஆரம்பிக்கிறது,55mmல் முடிகிறது..எனவே,18லிருந்து 3 தடவை பெருக்கினால் 54 வருவதால் இந்த லென்ஸ் 3x zoom என்று கூறப்படுகின்றது..
28-200 என்றால் 7x zoom (28*7=200)
18-200 என்றால் 11x zoom (18*11=200)
55-200 என்றால் 3.6x zoom
18-85 என்றால் 4.7x zoom.
35-600 என்றால் 17x zoom.
எனவே x ன் அளவை பார்த்து மயங்க வேண்டாம்..எந்த zoom rangeல் ஆரம்பித்து,முடிகிறது என்று தான் பார்க்க வேண்டும்.
kit lensஏ ஒரு நல்ல லென்ஸ் தான்..most of the purpose இதிலேயே கலக்கலாம்..
1.landscape
2.portrait
3.macro(பாதி)
4.family
5.group photos..
மேலே சொன்ன வகைகளை இந்த zoom rangeல் தான் சுலபமாக எடுக்க முடியும்..
இதை பயன்படுத்திய பிறகு,இந்த zoom range பத்தவில்லை என்றால்,வேறு லென்ஸ் வாங்கிக்கொள்ளலாம்.பல வகையான் லென்ஸ் எளிதாக கிடைக்கின்றது..
-சுரேஷ் பாபு
Please explain me about OPTIMIZE IMAGE
I am Using NIKON D 70S
Thank you
Muralidharan
Murali.
கேள்வி இன்னும் சற்று விளக்கமாக கேளுங்கள். என்ன கேட்கவருகிறீர்கள் என்பதில் தெளிவில்லை.
பட மேம்படுத்தல் - எடுப்பதற்கு முன்பா அல்லது அப்புறமா ?
What is the meaning of Optimize Image. Normal , Vivid, Sharper. Custom ,etc. I cant understand about all these things, Which is better to select for function photography
MURALIDHARAN
.
இன்று சென்னை பாரிமுனையில் சில கடைகளில் சென்று விசாரித்தேன். Cannon 1000D இல்லை. கிட்டத்தட்ட எல்லா கடைகளிலும் Nikon D3000, Nikon D60 வகையறாக்கள் தான் இருக்கின்றன.
Nikon D3000 தேர்வு செய்யலாமா, விலை சகாயமாக இருந்தால்.
விரிவான விளக்கத்திற்கு நன்றி சுரேஷ்பாபு.
nikon d3000,d60,d40(கிடைத்தால்)..எது விலை கம்மியோ அதை வாங்கவும்.. picture quality என்று பார்த்தால்,மூன்றும் ஒரே மாதிரி தான்.. pixel மட்டும் தான் வித்தியாசம்.. ஒரு சில features மாறுபடும்..மற்றபடி எதை வாங்கினாலும் பிரச்சினை இல்லை..
உஙளுக்கு canon மீது விருப்பம் இருந்தால் கொஞ்சம் 1000dக்காக wait பன்னலாம்..அல்லது nikon models எதையும் நம்பி வாங்கலாம்.
நான் படித்த வரையில் nikon மாடல்கள் user friendly.. மற்றும் kit lensஐ பொறுத்த வரையில் nikon கொஞ்சம் சிறந்தது..
-சுரேஷ் பாபு
Cannon 1000D வாங்கியாச்சு.
விலை ரூபாய் 25500/- பில் மற்றும் வாரண்டியுடன் Camera citi யில் வாங்கினேன்.
கைப்புள்ள, சுரேஷ் பாபு மற்றும் நாகப்பன் மிக்க நன்றி.
55-200mm லென்சுக்கும், 70-300mm லென்சுக்கும் என்னென்ன வித்தியாசங்கள்?
*சிறிய ஃபோக்கல் லெந்த் மிஸ் ஆகும் என்றாலும், அது சில அடிகள் பின் செல்வதிலோ முன் செல்வதிலோ மறையும், இல்லையா?
*எனக்கு தூரத்தில் இருக்கும் விலங்குகளையும் மனிதர்களையும் தெளிவாகப் பிடிக்க, இந்த லென்ஸ் சரிப்படும் என்று தோன்றுகிறது. நிலவையும்!
The subject is dark and it has a bulb(or some light source) glowing in one particular spot. The light from this bulb is not spread to the whole of the subject, i.e, the whole of the subject is dark, except for one spot. Now when I have to shoot this subject which is totally dark, I need long exposure. But the long exposed shot, makes that bulb over exposed spoiling the entire pic. What do I do? Explain with samples if possible. I was stumped with this issue last night. Or these subjects are to be shot only during the day time?
@வெங்கட்ராமன்...
வாழ்த்துக்கள், ஒரு நல்ல கேமராவை வாங்கிட்டீங்க.இனிமே நல்ல படங்களை எடுத்து அசத்த வேண்டியது உங்க பொறுப்பு..அடுத்த பட்ஜெட்அருமையான canon 55-250mm lens க்கு ரெடி பன்னுங்க..
@வெங்கிராஜா..
55-200mm lens பயன்படுத்தினால் 200-300mm zoom range மிஸ் ஆகிறது..300mmல் வைத்து ஒரு இடத்தில் இருந்து படம் எடுப்பதை,200mmல் வைத்து எடுக்கும் போது, இன்னும் இரண்டு அடி முன்னே சென்றால் மட்டுமே எடுக்கலாம்..300mmஆல் நமக்கு ரெண்டு அடி முன்னே செல்வது மிச்சம் ஆகிறது..
70-300mm பயன்படுத்தினால்,55-70mm zoom range மிஸ் ஆகிறது..உதாரணமாக,55mmல் வைத்து இரண்டு பேரை எடுக்கலாம்,ஆனால் 70mmல் அப்படி எடுக்க வேண்டும் என்றால் இரண்டு அடி பின்னால் செல்ல வேண்டும்..55mmஆல் நமக்கு இரண்டு அடி பின்னால் செல்வது மிச்சம் ஆகிறது..
தூரத்தில் இருப்பதை எடுக்க அதிக zoom தேவை..இதுவே 400mmஆக இருந்தால் இன்னும் முன்னே செல்வது மிச்சம்.
என்னை பொறுத்த வரையில் முன்னால் செல்வது கொஞ்சம் சுலபம்,பின்னால் செல்வது கொஞ்சம் சிரமம்..
-சுரேஷ் பாபு
Truth,
the simplest way.
shot 1. Meter for the subject, ( does your camera has spot meter ) and take a shot. Light will be over exposed. Dont worry
Shot2. Meter for the bulb/light shource. Take shot
Merge in PP.
A good example will be take a shot of laptop/computer/tv. It will be difficult to get with diplay in it correctly. It is easy to merge in two shots.
Truth, as an& suggested exposure blending is the best option.
HDR also comes in handy.
http://photography-in-tamil.blogspot.com/2007/12/hdr.html
As in, if I own a 55-200mm, is it advisable to sell it to buy the 70-300? (FYI, 70-300 will be Sigma with Macro switch and 55-200 is Nikon)
வெங்கிராஜா,
உங்களிடம் nikon 55-200mm lens இருந்தால்,sigma 70-300mm கண்டிப்பாக தேவையில்லை..
இவ்விரண்டும் இல்லை என்றாலும்,வாங்கும் போது nikon 55-200mm vr lensஐயே வாங்கவும்..
ஏனென்றால்,
1.200-300mm zoom difference மற்றும்
2.nikon ஐ விட அதிகமான macro mode(nikon 1:4 vs sigma 1:2 macro ratio)
இவ்விரண்டு வித்தியாசத்தை தவிர வேறு எந்த நன்மையும் sigmaவில் கிடையாது..
விலையும் பெரிய வித்தியாசம் இல்லை(nikon(rs.8500-9000) vs sigma (8000-8500)
இதில் 200-300mm zoom வித்தியாசத்தை nikon 200mm ல் வைத்து ஒரு அடி அல்லது இரண்டு அடி முன்னே சென்றால் போதும் 300mm ல் எடுக்க வேண்டியதை எடுத்துவிடலாம். இந்த zoom range பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை.
macro என்று பார்த்தால்,sigma கொஞ்சம் பலன் அதிகம் தான்..ஆனால் macroவில் 1:3 ratioவுக்கு கீழ் 1:2.5,1:2,,என்று close up போகும் போது கண்டிப்பாக tripod இல்லாமல் நம் கையால் மட்டுமே வைத்து shake இல்லாமல் எடுப்பது மிகவும் வாய்ப்பு குறைவு..focus செய்வதும் மிக சிரமம்..
இவற்றை தவிர மிக முக்கியமான,
1.picture quality
2.focusing speed
3.silent focusing
4.VR
5.NIKON name
6.correct focus
etc..etc
என்று பார்த்தால் NIKON மிகவும் சிறந்தது..
எனவே nikon 55-200mm lens மிகவும் சிறந்தது..
நான் இவ்விரண்டையும் பயன் படுத்தியுள்ளேன்,என்னிடம் இருப்பது nikon 55-200mm vr lens..சாம்பிளுக்கு இங்கே பார்க்கவும்..இதில் கிட்டதட்ட அனைத்தும் nikon 55-200mmல் எடுத்ததே..
http://www.flickr.com/photos/30041161@NO3/
-கருவாயன்
வெங்கிராஜா,இதை பயன்படுத்தி பார்க்கவும் ,http://www.flickr.com/photos/30041161@N03/
Post a Comment
பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி