Saturday, September 27, 2014

 ***
வணக்கம் மக்கா,

போட்டியில் சிறப்பு கவனம் பெறும் படத்தையும் வென்ற படங்களையும் பார்ப்போம்.**

சிறப்புக் கவனம்:

பூபதி :


அருமையான காம்போஸிஷன்,கடற்கரை Reflection அருமை,எனினும் Horizon correction செய்யாமலிருப்பது அதைவிட over saturation கண்ணை சற்று உறுத்துவதால் சிறப்பு கவனத்தோடு நின்றுவிட்டது.

சற்று saturation ஐ போட்டோஷாபில் குறைத்து horizon லைனை கரெக்ட் செய்திருக்கிறேன். இப்படி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கிறதில்லையா?





மூன்றாமிடம் பிடிப்பது :

வினோத் :
எளிமையான கம்போஸிஷனில் அற்புதமான காட்சி.

இரண்டாமிடம் பிடிப்பது :

அந்தோனி சதீஷ் :
என்ன இது பார்ப்பதற்க்கு எதோ புள்ளி புள்ளியாய் தெரிகிறது இதற்க்கு எதற்கு சிறப்பு கவனம் என பார்கிறீர்களா? அதாவது இந்தStar Trials எடுப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது,Long Exposureல் தொடர்சியாக சுமார் 2 மணி நேரம் படம் பிடிக்கவேண்டும்,அதன் பின்னர் எடுத்த அத்தனை படங்களையும் எடிட் செய்வதும் ஒரு லாங் பிராஸஸ் ஆகும் எனவே  அவரது இந்த முயற்சிக்கு பிட்டின் வாழ்த்துக்கள்.


முதலிடம் பிடிப்பது :

ராஜேஷ் நடராஜன் :


அற்புதமான silhouette, தலைப்புக்கு பொருந்துவது போலவும் இருக்கிறது.அதிலும் ஆதவனின் ஜுவாலை Light leaksபோல இருவருக்கு நடுவில் பீய்சிக்கொண்டு வருவது அருமை.

வாழ்த்துக்கள் ராஜேஷ் நடராஜன்.

போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும்,வெற்றிபெற்றவர்களுக்கும் பிட்டின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு மற்றொரு கட்டுரையில் உங்களுடன் இணைகிறேன்.

என்றும் அன்புடன்,
நித்தி ஆனந்த்

Thursday, September 25, 2014

 ***வணக்கம் பிட் மக்கா,

நலமா....கொஞ்சம் கஷ்டமான தலைப்பைத்தான் கொடுத்துவிட்டோமோ என நினைத்திருந்தேன்...ஆனா நல்ல நல்ல படங்களா அனுப்பியிருந்ததைப் பார்க்கும் பொழுது அசத்தலா இருந்தது.
** 

ஆனா இந்த தேர்வு செய்யறதுங்கிறது சாதாரண விஷயமில்லே,எல்லா படங்களுமே நல்லாத்தான் இருக்கு ஆனா எல்லாவற்றையும் தேர்வு செஞ்சிட்டா போட்டி சொதப்பலாகிடும்,அதனால எப்போதும்போல பார்த்தவுடன் கவர்ந்த 10 படங்களை எவ்வித வரிசையுமின்றி முதல் பத்து சுற்றுக்கு கொண்டு செல்கிறேன்.

1.அந்தோனி சதீஷ் :


2.பூபதி :


3.கணேஷ் :


4. ஜெயந்த் :



5.நிரஞ்சன் :


6.ராஜேஷ் நடராஜன் :


7.சஞ்சய் :


8.சுயா (அ) சூர்யா? :


9.TVN விஜய் பிரகாஷ் :



10.வினோத் :

விரைவில் போட்டி முடிவுகளுடன் சந்திக்கிறேன்

அன்புடன்,
நித்தி ஆனந்த்


Monday, September 15, 2014

வணக்கம்.

இன்றைய நமது கட்டுரையில் நாம் விவாதிக்க இருப்பது படத்தின் நிறத்தை கூட்ட Vibrance_ அல்லது  Saturation_ஆ  என்பது குறித்தது, புகைப்படக் கலைஞர்கள் தங்கள் படத்திற்கு நிறங்களை கூட்ட போட்டோஷாப் அல்லது கிம்பிலோ நாடுவது Hue/Saturation தான் ஆனால் இக்கட்டுரையில் நான் குறிப்பிடப்போவது Vibrance குறித்தே, காரணம் நான் ஃபோட்டோஷாப்பில் இருக்கும் இந்த Hue/Saturation அவ்வளவாக பயன்படுத்துவது கிடையாது காரணம் இதனுடைய வெளியீடு மிகவும் அதிகமாக இருக்கும் ஒரு சிறு உதாரணம், கீழேயிருக்கும் படத்திற்கு நான் Hue/Saturation இல் 100 சதவீத மதிப்பை கொடுக்கிறேன்,வெளியீடை பாருங்கள்.படத்தின் அழகை கெடுத்து விட்டதை பாருங்கள்.


அதே படத்திற்கு நான் Vibrance இல் இருக்கும் Saturation மதிப்பை 100 ஆக ஆக்குகிறேன், Not bad இல்லையா?
ஆக Hue/Saturationகும்,Vibranceஸில் இருக்கும் Saturationகும் நிச்சயமாக வித்தியாசம் இருப்பதை நீங்கள் உணரலாம்.

சரி முதலில் இந்த Vibranceகும் Saturationகும் உள்ள வித்தியாசத்தை பார்ப்போம்.Saturation என்பது உங்களின் படத்தில் நிறத்தை எல்லா இடத்திலும் ஒரே அளவாக அதிகரிக்கும்ஆனால் Vibrance கூட்டும் போது படத்தில் எந்த இடத்தில் நிறம் Fade ஆகி இருக்கிறதோ அந்த குறிப்பிட்ட நிறத்தை மட்டுமே அதிகரிக்கும். (அதாவது Dull Colors,Muted Colors). அதேநேரத்தில் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு வண்ணங்களை கவனமாக கையாளும் ஏனென்றால் படத்திலிருக்கும் Skintoneகளை பாதுகாக்கவேண்டியே…..

ஆக, உங்கள் படத்தில் மனிதர்கள் இல்லையேல் நீங்கள் அந்த படத்திற்க்கு Saturation கொண்டு படத்தின் நிறங்களை கூட்டிக்கொள்ளலாம். கீழேயுள்ள படத்தை பாருங்கள் இதில் நான் Saturation மதிப்பை  60 க்கு கொண்டு போகையிலே படத்திலிருக்கும் மனிதரின் Skintone ஆனது பாதிக்கப்படுகிறதை பாருங்கள்.

இதுபோன்ற வேளைகளில் Vibrance பயன்படுத்தி உங்களது படத்திற்கு நிறத்தினைக்கூட்டிக்கொள்ளவும்.

இதே படத்தை நான் Vibrance கொண்டு adjust செய்கிறேன் பாருங்கள் Vibranceன் மதிப்பை 75 க்கு கொண்டுபோகையிலும் Skintone பாதிக்காமல் இருப்பதை பாருங்கள்.
குறிப்பு:இக்கட்டுரை Camera Raw விற்கும், Lightroom ற்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.  

உங்கள் படங்களுக்கு நிறங்களைக்கூட்டுவது குறித்த விபரங்களை தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.
***

Sunday, September 7, 2014

***
வணக்கம் பிட் மக்கா நலமா? இந்த மாத புகைப்படப்போட்டியினூடாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி...இம்மாத  புகைப்படப்போட்டியின் தலைப்பு "வானம் எனக்கொரு போதிமரம்" அட என்னடா இப்படி தலைப்பு கொடுத்திருக்காங்க ஒண்ணும் வெளங்க மாட்டுதே அப்படின்னு என்ன நீங்க திட்டுறது எனக்கும் கேக்குது வானம் சரி அது என்ன போதி மரம்?
**
இந்த வானத்த மையக்கருவா வச்சி நீங்க வித விதமா படம்பிடிச்சா நீங்க நேசிக்கிற இந்த‌ புகைப்படக்கலையில நிறைய ஞானம் வருங்க...

காலையில உதிக்கிற சூரியனா இருக்கட்டும்,மாலையில அது மறைகிற வேளையா இருக்கட்டும்,மழை பெய்கிற தருணமா இருக்கட்டும்,கருமேகம் சூழ்ந்த இருளா இருக்கட்டும்,மின்னல் மின்னுற தருணமா இருக்கட்டும்,நிலவு,நட்சத்திரம்னு வானத்த மைய கருவா வச்சி படம் பிடிக்க கண்டிப்பா உங்களுக்கு ஞானம் வேணுங்க.

ஆக இந்த வானத்த கருப்பொருளா வச்சி நீங்க கத்துகிட்ட உங்க புகைப்ட ஞானத்த வெளிப்படுத்தபோகிறது தான் இந்த மாதம் பிட்டின் புகைப்படப்போட்டி.

மாதிரிப்படங்கள் :

Nithi Clicks :
#

#

 Thiry Arnaud :
இவரு ஃப்ரான்ஸில இருக்கும் என்னோட நண்பர். அவரு படங்கள் சிலதும் உங்க பார்வைக்கு:
#

#

#


Iyappan Krishnan:
#

#


Anton Croos


#


Ramalakshmi

#

#

#

# Anand Vinayagam
#


வெறும் வானமாக மட்டுமில்லாமல் இப்படி ஒரு காட்சி சேரும் வாய்ப்பு அமையின் எப்படி அழகு கூடுகிறது பாருங்கள். இந்த கொலாஜ் மாதிரிக்காக பகிரப்படுகிறது. நீங்கள் அனுப்பும் போது ஒரே படமே அனுப்ப வேண்டும்:)!

படங்களை அனுப்பும்போது File name மட்டுமில்லாம மெயிலோட subject_லேயும் ஒங்க பேரு இருக்கிற மாதிரிப் பாத்துக்கோங்க. அப்பதான் படம் ஆல்பத்துல சேரும் போது கூடவே ஒங்க பேரும் தன்னப்போல அப்டேட் ஆகும்.

படங்கள் வந்து சேரவேண்டியக் கடைசித் தேதி: 20  செப்டம்பர் 2014.
போட்டி விதிமுறைகள் இங்கே

அன்புடன்,
நித்தி ஆனந்த்

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff