Sunday, February 27, 2011

வணக்கம் மக்கா,
இந்த மாத போட்டியில் வெற்றிப்பெற்ற முதல் மூன்று இடங்களை பிடித்த படங்கள் கீழே,

மூன்றாம் இடம்
ராமலக்ஷ்மி


இரண்டாம் இடம்
பிரபாகரன் ராஜு



முதல் இடத்தில் இருப்பது
ஜேசு


வெற்றி பெற்றவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ! பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி !!!

Friday, February 25, 2011

வணக்கம்,
'அன்பு' போட்டிக்கு வந்திருந்த படங்களில் இருந்து முதல் சுற்றிற்கு முன்னேறிய படங்கள் இங்கே...

இதில் எதுவும் வரிசை கிடையாது...

ராமலக்ஷ்மி


வெங்கட்ராமன்


ஸ்ருதி


பிரபாகரன் ராஜு


ரம்யா


மணி


ஜேசு


அன்டன்

விஸ்வஸ்ரீ


யாதவன்


நன்றி,
நாதஸ்

Thursday, February 24, 2011

சில சமயங்களில், ஒரே மாதிரியான தன்மை உள்ள படங்களை ஒன்றாக சேர்த்து 'Collage' செய்து வைத்துக் கொள்வது உதவும். இந்த வகை படங்களை ப்ரிண்ட் செய்து சட்டத்தில் மாட்டவும் ஏதுவாய் இருக்கும்.

உதாரணத்துக்கு, உங்க வீட்டுப் பையனின்/பெண்ணின் கால்பந்து ஆட்டம் புகைப்படம் பிடிக்கும்போது, தனித்தனியா அவன்/ள் செய்யும் ஏக்ஷனை பார்ப்பதை விட, எல்லா வித அம்சத்தையும் வெட்டி ஒட்டி ஒரு படமாய் பார்ப்பது அமக்களமாய் இருக்கும்.
கோல் அடிக்கும் போஸும், ஓடி வரும் போஸும், வேர்வை துடைக்கும் போஸும், மூச்சு விடும் போஸும், வெற்றிச் சிரிப்பு போஸும் ஒருங்கே ஒரே படத்தில்.

அதே போல், பிறந்ததின கொண்டாட்ட படமும், கேக் ஊதுவது, வாயில் போடுவது, சிரிப்பது, பரிசு பிரிப்பது, இப்படி பலதும் ஒருங்கே ஒரே படத்தில் பார்ப்பது குதூகலம்.
உ.ம்: (Flickrலிருந்து)

Happy 11th Birthday, Aaron!

மேட்டர் புரினிஞ்சிருக்கும்னு நெனைக்கறேன். இனி, இதை எப்படி Gimpல் செய்வது என்பதை சுருக்க பாக்கலாம்.

1) Gimpஐ திறக்கவும்

2) File->New Image சொடுக்கவும்

  • தேவையான அகலம் நீளம் தெரிவு செய்யவும். (உம்., 2816 x 1880) வெள்ளை பாக்ரவுண்ட் உள்ள படம் திறக்கும். வெள்ளைக்கு பதிலாக வேறு நிறம் வேண்டுமானால், இடதில் உள்ள பக்கெட் ஐக்கான் (bucket fill tool) உதவி கொண்டு தேவையான நிறத்தை பூசவும். பின்னணியில், ப்ளெயினாக இல்லாமல், இன்னொரு படத்தையே பின்னணியாகவும் வைத்துக் கொள்ளலாம். அதற்கு File->Open as layers தெரிவு செய்து, உங்களுக்குப் பிடித்த பின்னணிப் படத்தை சொடுக்கிக் கொள்ளலாம்.
    பேக்ரவுண்ட் ரெடி, இனி படங்களை கோர்ப்பதை பாக்கலாம்.



    2) Collageல் வர வேண்டிய படங்களில், முதல் படத்தை, File->open as layers மூலமாக திறக்கவும். இப்படித் திறந்ததும், அந்த படத்தின் resolutionஐ பொறுத்து, அது, உங்கள் பேக்ரவுண்ட் படம் முழுவதையும் மூடி விடலாம். இப்பொழுது, Layer -> Scale Layer என்ற மெனுவை க்ளிக்கி, இந்த புதிய படத்தை பெருசு/சிறுசு படுத்துங்கள். பேக்ரவுண்ட் படம் 2816 x 1880 என்று கொடுத்திருந்தால், இந்த படத்தை, தேவைக்கு ஏற்ப சிரிது படுத்துங்கள், 1200அகலம் அளவு கொடுத்தீங்கன்னா, கிட்டத்தட்ட நாலு படங்களை உங்களை கொலாஜில் கொலாஜலாம்.
    படத்தின் அளவு சரி செய்ததும், இடது பக்கத்தில் உள்ள Rotate tool உதவி கொண்டு, படத்தின் கோணத்தை மாற்றி அமைக்கலாம்.
    இப்படி,


    3) பாதி கிணறு தாண்டியாச்சு, இனி File->Open as Layer, Layer -> Scale Layer, 'Rotate Tool' உதவி கொண்டு மேலும் பல படங்களை கொலாஜிக் கொண்டே இருக்கலாம், இடம் உள்ளவரை.
    எல்லாப் படத்தையும் சேத்து, செதுக்கி, உருட்டி, ஒதுக்கி முடிச்சதும் Image->Flatten Image சொடுக்கிக் கொள்ளவும். பல லேயர்களாக இருக்கும் படத்தை, ஒரு படமாக்குவதற்கு இது.
    இனி இப்படி இருக்கும்,


    4) கடைசியா, படத்துக்கு, Filter->Decor->Add Border போட்டீங்கன்னா, இப்படி கொலாஜு கிட்டும்.




    இதில் இன்னும் பாலிஷ் செய்ய பல வித்தை உள்ளது, அது ஹோம் வொர்க். கலக்குங்க.
  • Sunday, February 13, 2011

    இதற்கு முன்னர் பகுதியில் DSLR ஐ பற்றிய தகவல்களை நாம் பார்த்தோம்..

    1. DSLR கேமராக்கள் ஏன் பெரிதாக் இருக்கின்றன .

    2. DSLR சென்சாரின் பல வகைகள்..

    3. DSLR நன்மைகள் , குறைகள்

    அதன் அளவு பெரியது என்பதையும்,அதற்கான காரணங்களையும் பார்த்தோம்..
    பல நன்மைகள் இருந்தாலும் பலர் இவ்வகை DSLR கேமராக்களை வாங்குவதற்கு தயக்கம் காட்டுவார்கள்..

    ஒரு சிலருக்கு பட்ஜெட் பிரச்சனை இருக்காது, ஆனால் பெரிய சைஸ் கேமராக்கள் அவர்களுக்கு ஒத்து வராது..பிடிக்காது.

    ஒரு சிலர் அதை பெரிய அளவை பார்த்ததுமே ஏதோ பெரிய விசயங்கள் இருக்கும், எனவே நமக்கு அது ஒத்து வராது என்று ஒதுங்கி விடுவார்கள்..

    ஆனால் அவர்கள் விரும்புவது, சிறிய சைஸ் கேமராவில் நல்ல குவாலிட்டி படங்கள் எடுக்க வேண்டும்.
    இதற்காக விலை எவ்வளவு வேண்டுமானாலும் தர தயாராக இருப்பார்கள்..

    ஆனால் சின்ன சென்சார் என்பதால் சிறிய கேமராக்களை வாங்கினால் குவாலிட்டி கொஞ்சம் இருக்காதே... என்ன செய்வது??

    DSLR குவாலிட்டியில் படமும் வேண்டும் , அதே சமயம் கேமராவும் சிறியதாக இருக்க வேண்டும்..

    சரி இந்த மாதிரி வாடிக்கையாளர்களுக்கு என்ன தான் வழி ?

    இவர்களுக்கு ஒரு அருமையான வழி தான் இந்த mirror less கேமரா..



    சரி, அதென்ன mirror less கேமரா?


    DSLR கேமராக்களை விட சிறியதாக, ஆனால் DSLR போன்றே picture quality மற்றும் செயல்படும் திறன் கொண்ட கேமரா தான் mirror less கேமராவாகும்..


    நாம் DSLR ல் பகுதியில் பார்த்திருப்போம்,அதன் பெரிய அளவிற்கு மிக முக்கிய காரணம் optical viewfinder க்காக கேமராவிற்குள் அமைக்கப்படும் mirror box மற்றும் pentaprism தான்..

    இந்த mirror box ஐயே இல்லாமல் செய்தால் !!

    இதனால், தானாக ஒரு கனிசமான அளவு கேமரா bodyன் அளவு குறையும்.. இதனால் கேமரா பார்ப்பதற்கு ஒரு குட்டி DSLR போல் இருக்கும்..

    இந்த படங்களை பார்த்தால் வித்தியாசம் தெரியும்..
    (படத்தை பெரிதாக பார்க்கவும்)


    இந்த மாதிரி கேமராக்கள் mirror box இல்லாமல் வடிவமைக்கப்பட்டதால் இது mirror less கேமரா என்று கூறப்படுகின்றது..
    இந்த mirror box ஐ தூக்கிவிட்டால்...

    நாம் முக்கியமாக இரண்டு விசயங்களை தியாகம் செய்ய வேண்டியது தான்..

    1.OPTICAL VIEW FINDER:

    Mirror Less கேமராவில் , mirror box இல்லாததால் நம்மால் otical view finder ஐ பயன்படுத்த முடியாது..

    எனவே optical view finderக்கு பதிலாக சிறிய கேமராக்களில்
    live view ஐ பயன்படுத்துவோமே அது மாதிரி பயன்படுத்தி தான் படமெடுக்க முடியும்.

    live view ஐ மட்டும் பயன்படுத்தி படமெடுப்பதற்கு என்றால் mirror box என்பது தேவையில்லை..


    2.AUTO FOCUS வேகம்:இவ்வகை கேமராக்களில் autofocus ன் வேகம் DSLR கேமராக்களை விட சற்று குறைவு தான்..
    ஏனென்றால் DSLR ஐ பொறுத்த வரையில் லென்ஸ் வழியாக வரும் ஒளியினை ஒரு பகுதி அப்படியே நேரிடையாக auto focus செய்வதற்கு பயன்படுத்தப்படும்..

    Auto Focus ற்க்கு என்று தனியாக சின்னதாக ஒரு சென்சார் இருக்கும்
    இதை phase detection auto focus முறை என்று கூறுவர்..

    ஆனால் Mirror Less கேமராவிலும் , மற்ற சிறிய கேமராக்களிலும் mirror box இல்லாததால் phase detection auto focus முறையை பயன்படுத்த முடியாது..

    அதற்கு பதிலாக contrast detect auto focus முறையை தான் பயன்படுத்த முடியும்..

    இது எப்படி என்றால் , லென்ஸ் வழியாக வரும் ஒளியினை சென்சாரில் பதிவு ஆனபிறகே AF செய்ய முடியும்.. இதில் Auto Focusற்க்கு என்று தனியாக சென்சார் எதுவும் கிடையாது..

    இதனால் Auto Focus சற்று காலதாமதம் பிடிக்கும்..

    ஆனால் சிறிய கேமராக்களை விட, mirror less கேமராவில் சற்று வேகமாக Auto Focus இருக்கும்..
    mirror less கேமராவில்.. சென்சார் பெரிது என்பதாலும் , லென்ஸும் பெரிது என்பதாலும், லென்ஸிற்கும் கேமரா பாடிக்கும் தொடர்புகள் அதிகம் என்பதாலும், இதன் AF வேகம் கண்டிப்பாக சிறிய கேமராக்களை விட வேகமாக தான் இருக்கும்..

    தற்போதைய technology ன் படி கிட்டதட்ட 70-80 % வரை DSLR கேமராக்களின் AF வேகத்திற்கு சமமாக படம் எடுக்கக்கூடிய contrast detect AF முறைகள் வந்து விட்டன..


    mirror less கேமராவின் அமைப்பு:

    • Mirror Less கேமராவில் mirror box இல்லாமல் போவதால் சென்சாருக்கும் , லென்ஸ் mountற்கும் உள்ள தொடர்பு தூரம்(flange back distance) பாதியாக குறைந்து விடுகின்றது..



    இதனால் நாம் live view பயன்படுத்தி படம் எடுக்கும் போது DSLR ன் LIVE VIEWஐ விட வேகமாக படம் எடுக்கலாம்,

    • கேமராவிற்கு தகுந்த குறிப்பிட்ட adoptor ஐ பயன்படுத்தி எந்த brand லென்ஸையும் பயன்படுத்த வழி இருக்கின்றது..



    ஆனால் இன்றைய technologyல் இந்த மாதிரி பயன்படுத்தும் போது manual focus தான் வழி.. manual focus பிரச்சனை இல்லையென்றால் எந்த ப்ராண்ட் லென்ஸையும் பயன்படுத்தி படம் எடுக்கலாம்.

    • DSLR கேமராக்களை விட ,லென்ஸிற்கும் கேமரா bodyக்கும் உள்ள தொடர்பு புள்ளிகள் அதிகம்.. உதாரணம் இந்த படத்தை பார்க்கவும்..


    • இதனால், live view பயன்படுத்தி படமெடுக்கும் போது நல்ல வேகமாகவும் , smooth ஆகவும் இருக்கும்

    • சிறிய கேமராக்களின் முக்கிய குறையான shutter lag என்பது பல மடங்கு குறைந்து விடும்..

    • contrast detect AF கூட வேகமாக ஃபோகஸ் செய்யும்

    • data processing என்பதும் வேகமாக நடக்கும், இதனால் வீடியோ அருமையாக பெரிய லென்ஸ்களில் அமையும்..

    • அதே சமயம் லென்ஸையும் சிறியதாக வடிவமைக்கலாம் என்பதால் லென்ஸ் diameter அளவும் குறைந்து விடுகின்றது..



    பயன் படுத்தப்படும் சென்சார்கள்:
    தற்போதைக்கு சந்தையில் olympus , panasonic போன்ற கம்பெனிகள் olympus DSLR ல் பயன்படுத்தப்படும் four third சென்சாரை பயன்படுத்துகின்றன..

    இதனால் இவ்வகை கேமராக்கள் MICRO FOUR THIRD கேமராக்கள் என்று கூறுகின்றனர்..



    அடுத்த கட்டமாக தற்போது sony மற்றும் samsung கம்பெனிகள் APS-C சைஸ் சென்சாரை பயன்படுத்துகின்றன..


    இதன் சென்சார் four third sensorஐ விட சற்று பெரியதாகும்..
    இதனால் லென்ஸ் அளவு மற்றும் lens- body mount diameter இரண்டு மட்டும் சற்று பெரிதாக தான் வரும்..



    MIRROR LESS கேமரா வகைகள்:

    ஒன்று, நாம் live view மட்டுமே பயன்படுத்தி படமெடுப்பதற்கு கேமராவின் பின்னால் இருக்கும் LCD finder ஒன்று மட்டும் தான் வழி..


    இதில் view finder என்பது கிடையாது.. எனவே படத்தை shoulder உதவியுடன் arm levelல் தான் கம்போஸ் செய்வதற்கு வழி..

    இதனால் தான் கனிசமான அளவில் கேமராவின் BODY அளவு குறைகின்றது..

    மற்றொன்று , இந்த வகை கேமராக்களில் optical view finder என்பது சாத்தியமில்லை எனவே , eye level கம்போஸிசன் செய்வதற்கு வழியாக optical view finderற்கு பதிலாக electronic view finder ஐ பயன்படுத்தி படமெடுக்கலாம்..



    EVF என்பது ஒரு குட்டி LCD monitor தான்.. EVF ஐ வடிவமைப்பதற்கு mirror box தேவையில்லை..

    ஆனால் EVF இருந்தால் சைஸ் கொஞ்சம் பெரியதாகும்... இந்த மாதிரி..

    இந்த படத்தில் இருக்கும் இரண்டு கேமராக்களுமே MIRROR LESS கேமரா தான்..

    அதே சமயம், சிறிய mirror less கேமராவிலும் EVF பயன்படுத்துவதற்கு வேறு ஒரு வழி உள்ளது..

    கேமராவில் hot shoe கொடுத்திருப்பார்கள்..
    இதில் external flash ம் பயன்படுத்தலாம் , அதே சமயம் external EVF ஐயும் அதில் பயன்படுத்தலாம்.. இந்த மாதிரி..
    Mirror Less கேமராக்களின் நன்மைகள் , குறைகள் பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்...

    நன்றி
    கருவாயன்

    Thursday, February 10, 2011

    அன்பு நண்பர்களே...

    சென்ற பகுதிகளில்,

    1. DSLR கேமராக்கள் ஏன் பெரிதாக் இருக்கின்றன ..

    2. DSLR சென்சாரின் பல வகைகள்..

    ஆகியவற்றை பற்றி பார்த்தோம்..

    இப்பகுதியில் DSLR கேமராக்களின் நன்மைகள் , குறைகளை பற்றி பார்ப்போம்..


    DSLR ன் நன்மைகள்:



    1. DSLR ல் பெரிய சென்சார் என்பதால், அதிக விலை உயர்ந்த,பல features கொண்ட சிறிய கேமராக்களின் image quality ஐ விட ,விலை குறைந்த DSLR ல் image quality கண்டிப்பாக நன்றாக இருக்கும்..(ஒழுங்காக எடுத்தால்).

    2. லென்ஸ்களை நம் விருப்பம் போல் தெர்ந்தெடுத்துக்கொள்ளலாம்,மாற்றிக்கொள்ளலாம்.
    உதாரணமாக wide angle , macro , telephoto,etc.. போன்றவைகளை தனிதனியாகவே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
    பாதிப்பு,டேமேஜ் வந்தாலும் லென்ஸை மட்டும் மாற்றிக்கொள்ளலாம்.

    3.optical viewfinder இருப்பதால் நாம் கண்ணாடியில் பார்ப்பது போன்று subjectஐ தெளிவாக பார்க்கலாம்..

    இதனால் படத்தை எளிதாக கம்போஸ் செய்யலாம்..

    சிறிய கேமராக்களில் view finder இல்லாததால் , நமது shoulder துனையுடன் arm levelல் படங்களை எடுக்கும் போது கைகள் ஆடும் வாய்ப்பு அதிகம். (ARM LEVEL COMPOSING)



    ஆனால் DSLR ல் கண்களை(eye level) ஒட்டி படம் எடுக்கும் போது கேமராவை க்ரிப்பாக பிடிக்க வசதியாக இருக்கும். இதனால் படங்களை ஆடாமல் எடுக்கலாம்.


    (EYE LEVEL COMPOSING)


    4.இன்றைக்கு basic DSLR கேமராக்கள் கூட 10 மெகா பிக்ஸல்களுக்கு மேல் வரத்தொடங்கி விட்டன.. அதே சமயம் 18,24 MP என்று அதிக மெகா பிக்ஸல் கேமராக்களும் கிடைக்கின்றன..
    சிறிய கேமராக்களில் அதிக பிக்ஸல்கள் அமைப்பது சிரமம், அப்படியே இருந்தாலும் பெரிய நன்மை கிடையாது..

    5.சிறிய கேமராக்களில் live view பயன்படுத்தி படமெடுப்பதால் shutter lag (தாமதம்) அதிகம்..இது DSLR ல் சுத்தமாக இல்லை. அதே சமயம் switch ஐ on பன்னினதும் உடனே படம் எடுக்கலாம்.. response time அதிகம்.

    6.DSLR ல் கண்ட்ரோல்ஸ் அதிகம்.. தனிதனியாக பட்டன்கள், manual controls .. போன்ற பயன்பாடுகள் அதிகம்

    7.அதி வேக லென்ஸ்களை பயன்படுத்தலாம்.. இதனால் flash இல்லாமல் இருட்டிலும் படம் எடுப்பது சாத்தியமாகின்றது..

    8.flash பவர் என்பது அதிகம்.. பல சிறிய கேமராக்களில் external flash பயன்படுத்த முடியாது. அதே சமயம் சிறிய கேமராக்களின் internal ஃப்ளாஷ் power பல இடங்களில் பத்தாது.. இதனால் studio வைப்பவர்களுக்கு DSLR தான் வழி..

    9.focusing speed என்பது பல மடங்கு அதிகம்..சிறிய கேமராக்கள் வெளிச்சம் குறைவான இடங்களில் சில சமயம் focus ஆகாது.. ஆனால் DSLR ல் இருட்டிலும் focus செய்வதற்கு எளிதாக focus light வசதி உண்டு.

    10.சிறிய கேமராக்கள் தான் பயன்படுத்துவது எளிது என்று பலர் நினைக்கின்றனர்..ஆனால் practicalஆக DSLR தான் எளிது..

    11.DSLR ல் ISO 3200 வரை எளிதாக பயன்படுத்தலாம்..படமும் தெளிவாக இருக்கும்,noiseம் குறைவாக தான் இருக்கும்.. ஆனால் சிறிய கேமராக்களில் ISO 200 க்கும் மேல் பயன்படுத்தும் போது கண்டிப்பாக noise இல்லாமல் படம் எடுப்பது வாய்ப்பு குறைவு.

    12.இன்றைக்கு படம் எடுப்பது எவ்வளவு முக்கியமோ,அவ்வளவு photo editing என்பதும் முக்கியமாகி விட்டது.. DSLR ல் படம் எடுத்து பின் photo editing செய்தால் பாதிப்பு என்பது மிக மிக குறைவே..இதுவே சிறிய கேமராக்களில் சிறிது crop செய்தாலே smudging ,வந்து விடும்..

    13. focusing area(focusing point) எந்த இடத்தில் வேண்டுமானாலும் எளிதாக மாற்றிக்கொள்ளலாம்.. இதனால் நமக்கு முக்கியமான இடத்தை மட்டும் தெளிவாக ஃபோகஸ் செய்யலாம்..

    இன்றைக்கு சாதாரணமாக 5 focusing point முதல் 51 focusing point வரை (இதற்கு மேலும் உண்டு) மாற்றிக்கொள்ளும் வசதி DSLR கேமராக்களில் உண்டு..



    (5 point focusing area)





    (51 point focusing area)




    DSLRன் குறைகள்:

    1.தனிதனியாக லென்ஸ்கள் வேண்டும் என்பதாலும், நிறைய controls இருப்பதாலும் தானாக பட்ஜெட் ஏறிவிடுகின்றது..

    2.அளவில் பெரியது..

    3.எல்லா இடங்களுக்கும் கொண்டுபோக முடியாது..இதுக்கென தனியாக பேக் வேண்டும். பாக்கெட்டில் வைத்து கொண்டு எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்த முடியாது..இதனால் சில கேண்டிட் ஷாட்களை நாம் தவற நேரிடலாம்..

    4.வெயிட் அதிகம்.. எனவே ஒரு சிலர் குறிப்பாக பெண்கள் இதை பயன்படுத்த சிரமப்படுவார்கள்.,விரும்ப மாட்டார்கள்

    5.பெரிய சென்சார் என்பதால் depth of field என்பது சிறிய கேமராக்களை விட குறைவு..

    6.சிறிய கேமராக்களில் இருப்பது போல் ஒரே லென்ஸில் நல்ல wide angle முதல் telephoto zoom வரை அமைக்க முடியாது..சிறிய கேமராக்களில் 24mm முதல் 700mm வரையில்(35mm formatல்) இப்போழுது லென்ஸ்கள் உடைய கேமராக்கள் கிடைக்கின்றன.. ஆனால் DSLRல் 28mm முதல் 400mm வரை தான் இப்போதைய நிலவரப்படி உண்டு..


    இப்படி ஒரு சில குறைகள் இருந்தாலும்...பட்ஜெட் , அளவில் பெரியது இவ்விரண்டை தவிர , அனைத்து விசயங்களும் , சிறிய கேமராக்களை விட பல வகைகளில் DSLR சிறந்ததே...

    சரி, சிறிய சைஸ் கேமராக்களில் இதே DSLR image quality யுடன் படங்கள் எடுக்க வாய்ப்பே இல்லையா ?


    என்று கேட்பவர்களுக்கு.. பதில்.. உண்டு..


    அட...அது என்ன கேமரா? என்பதை அடுத்த பகுதியில் விரிவாக பார்ப்போம்..


    நன்றி
    கருவாயன்

    Tuesday, February 1, 2011

    வணக்கம் மக்கா,
    இந்த மாதத்திற்கான தலைப்பு - அன்பு

    அன்பு என்ற சொல் உணர்த்தும் பாசம், காதல், ப்ரியம் ஆகியவற்றையும் உங்கள் படம் வெளிபடுத்தலாம்.

    போட்டிக்கான விதிமுறைகள் இங்கே..

    படம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி 15-02-2011

    சில எடுத்துக்காட்டு படங்கள்,

    கருவாயன்


    நந்து f/o நிலா


    நன்றி,
    நாதஸ்.
    1..சென்ற பகுதியில் DSLR கேமராவின் அளவு பெரிதாக இருப்பதற்க்கான முதல் காரணத்தை பார்த்தோம்..

    பிற காரணங்களை இப்பகுதியில் பார்ப்போம்...

    2.. DSLR சென்சார்கள்..

    சென்சார்களை பற்றி ஏற்கனவே இந்த பகுதியில் பார்த்து விட்டோம்..

    மேலும் சென்சாரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், DSLR லேயே பல வகை அளவுகளில் சென்சார்கள் பயன்படுத்தப்படுகின்றன..

    இதில் சென்சார் அளவுகள் குறைய குறைய கேமரா bodyயின் அளவுகளும் ஒரு குறிப்பிட்ட அளவு சிறியதாகும்...

    ஆனால் எப்படியும் viewfinder இருப்பதால் சிறிய கேமராக்கள் அளவுகளுக்கு குறையாது..

    DSLR ல் பயன்படுத்தப்படும் சென்சார் வகைகள்..

    இதில் வரிசைப்படி பெரிய சைஸ் ஆகும்..

    1.medium format

    2.full frame


    3.aps-c size


    4.four third sensor


    இவற்றில் medium format சென்சார் பயன்படுத்தப்படும் கேமரா விலை அதிகமாக இருக்கும்..

    இந்த மாதிரி பெரிய சென்சார் உள்ள கேமராக்கள் விளம்பர படம் எடுப்பதற்கு மிகவும் பயன்படுத்தப்படுகின்றன..

    ஏனென்றால் சென்சார் பெரியதாக இருக்கும் போது தான் pixels அதிகமாக பயன்படுத்தமுடியும்..

    பிக்ஸல்கள் அதிகமாக இருந்தால் தான் பெரிய்ய்ய்ய்ய அளவிலான விளம்பர பேனர்கள் வைக்கமுடியும் என்பதால் இவ்வகை கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன..

    MAMIYA , PHASE ONE , HASSEL BLAD போன்ற கம்பெனிகள் இவ்வகை சென்சார்களை பயன்படுத்துகின்றன..

    full frame சென்சார் கேமராக்கள்...இது நாம் முன்னர் பயன்படுத்திய ஃப்லிம் நெகட்டிவின் அளவு ஆகும்..

    NIKON D700 , D3 , CANON 5D , 1D , etc.. போன்ற கேமராக்கள் full frame சென்சார்களை பயன்படுத்துகின்றன..


    aps-c size என்பது தான் இப்பொழுது பரவலாக nikon , canon , sony போன்ற கேமராக்களில் பயன்படுத்தப்படும் அளவுகளாகும்.

    NIKON D3100 , D5000 , D300 , D90 , D7000 ,
    CANON 550 D , 60 D , 7 D
    SONY ALPHA A250 , A100
    PENTAX k 5

    போன்ற கேமராக்கள் இந்த அளவுகளை பயன்படுத்துகின்றனர்..

    மேலே சொன்ன மூன்று சென்சார்களின் அளவுகள் சிறியது, பெரியதாக வித்தியாசமாக இருந்தாலும், அமைப்பு என்பது 3:2 எனற அளவில் ஒரே மாதிரி தான் இருக்கும்..

    படத்தை பார்த்தால் புரியும்..



    ஆனால் ,

    four third sensor என்பது olympus மற்றும் panasonic போன்ற DSLR கேமராக்களில் பயன்படுத்தப்படும் வேறு மாதிரி அமைப்பு கொண்ட சென்சார் ஆகும்..

    இந்த வகை சென்சார்கள் எதற்கு என்றால்??

    DSLR கேமராக்களின் அளவுகள் என்பது பெரியதாக இருக்கின்றது.. அதை குறைக்க என்ன வழி ?

    DSLR கேமராக்களின் அளவுகளை குறைக்க வேண்டுமென்றால் , சென்சாரின் அளவை குறைக்க வேண்டும்..
    இதனால் லென்ஸையும் சற்று சிறியதாக வடிவமைக்கலாம்..
    இதனால் ஒரு குறிப்பிட்ட அளவு கேமராவை சிறியதாக்கலாம்..

    ஆனால் சென்சார் சிறிதானால் குவாலிட்டி குறையுமே...

    சென்சாரையும் சிறிதாக்கவேண்டும்,அதே சமயம் குவாலிட்டியும் குறைய கூடாது ..

    அதற்கு 4:3 சென்சார்அமைப்பு ரொம்பவும் உதவியாக இருக்கும் என்பதால் அதை உருவாக்கினர்..

    அது என்னவென்றால்,

    four third sensor என்பது 4:3 என்ற அமைப்பில் சென்சார் இருக்கும்..
    வீடியோ கேமராக்கள் மற்றும் சிறிய கேமராக்களிலும் இந்த மாதிரி தான் அமைப்பு இருக்கும்..

    சரி இதில் என்ன நன்மை?

    இது எதற்கு என்றால்,பொதுவாக லென்ஸ் வழியாக வரும் ஒளி என்பது வட்டமாக தான் வரும்..அந்த வட்டத்தை கட்டமாக தான் சென்சாரில் பதிவு செய்ய முடியும்...

    அப்படி கட்டமாக பதிவு செய்யும் போது லென்ஸ் வழியாக வருகின்ற ஒளியில் ஒரு குறிப்பிட்ட அளவு கட் ஆகி தான் பதிவு செய்ய முடியும்.. (முதல் படத்தை பெரிதாக பார்த்தால் புரியும்)

    இதில் இரண்டு வகைகளில் கட்டம் கட்டுகின்றனர்.. ஒன்று 3:2 மற்றொன்று 4:3..

    இதில் 3:2 ratio வில் பதிவு செய்வதை விட 4:3 ratio வில் பதிவு செய்தால் அதிக அளவில் light fall off இல்லாமல் படத்தை பிடித்துக்கொள்ளலாம்..

    சென்சாரும் சிறியதாக இருந்தால் போதும் என்பதால் 4:3 முறையை உருவாக்கினர்..

    உதாரணமாக நாம் பார்க்கும் TV மற்றும் computer ன் அமைப்பும் கிட்டதட்ட அதே மாதிரி அளவு என்பதால் நாம் computerல் 4:3 போட்டோவை பார்க்கும் போது screen முழுவதும் பார்க்கலாம்..

    உதாரணமாக இந்த படங்களை பார்த்தால் புரிந்து கொள்ளலாம்..


    4:3 சென்சார்



    APS - C 3:2 சென்சார்




    இவ்வகை சென்சார்களால் மற்ற DSLR கேமராக்களை விட கொஞ்சம் சிறிதாக வடிவமைக்க முடியும்..

    ஆனால் படம் பிடிக்கும் 4:3 அமைப்பு பெரியதாக இருந்தாலும் , சென்சாரின் அளவு என்னவோ full frame சென்சாரை விட பாதி சிறியது தான்..

    இதனால் , full frame மற்றும் APS-C சென்சார் கேமராக்களை விட சற்று noise அதிகம் வரும், அதே சமயம் நாம் ப்ரிண்ட் என்பது 3:2 ratio வில் தான் வரும் என்பதால் பிரிண்ட்டில் ஒரு குறிப்பிட்ட பகுதி கட் ஆகி விடும்..

    3.லென்ஸ்கள்

    ஏற்கனவே சொன்ன மாதிரி தனித்தனியாக பிரித்து zoom லென்ஸ் தயாரிக்கும் போதும், வேகமான aperture லென்ஸ்களை தயாரிக்கும் போதும், இதன் அளவுகள் பெரியதாகிக்கொண்டே இருக்கும்..

    இதுவும் DSLR கேமராக்கள் பெரியதாவதற்கு ஒரு காரணம்..

    4. DSLR கேமராவின் அமைப்பு (ergonomics)

    எளிதாக பயன்படுத்துவதற்காக அததெற்கென தனிதனி பட்டன்கள், mode dial,கைகள் நன்றாக க்ரிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆழமாகவும்,internal flash போன்றவைகள் இருப்பதாலும் கேமராக்கள் தானாக பெரியதாகிவிடுகின்றது..

    இவையெல்லாம் தான் ஒரு DSLR என்பது பெரியதாக இருப்பதற்கு முக்கிய காரணங்களாகும்..

    அடுத்த பகுதியில் DSLR கேமராக்களின் நன்மைகள் , குறைகளை பற்றி பார்ப்போம்...

    நன்றி
    கருவாயன்
     
    © 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff