மீண்டும் நடுவராக வந்து உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. அடிப்படை விசயங்களை வைத்து போட்டி நடத்தி வெகு நாட்களாகி விட்டன. அதனால், இம்மாத போட்டி புகைப்படக் கலையில் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றான 'வழி நடத்தும் கோடுகள்' (Leading Lines) வைத்து நடத்துவோம்.
வழி நடத்தும் கோடுகள் என்றால் என்ன?
முன்பே நமது தளத்தில் இதைப் பற்றி ஒரு பதிவிட்டிருந்தோம். இதோ அதிலிருந்து...
.......
அதாவது ஒரு படத்துல ஏதாவது கோடு இருந்துச்சுனா,நம்ம கண்ணு அந்த கோட்டை பின்பற்றியே தான் செல்லுமாம்!! அதாவது நம் படத்தில் இருக்கும் கோடு நம் படத்தின் கருப்பொருள் (Subject)-ஐ சென்று சேருகிறார் போல் பார்த்துக்கொண்டால் நம் படம் பார்ப்பதற்கு அழகாகத் தெரியுமாம். அதே போல் நம் படத்தில் இருக்கும் கோடுகள் நம் படத்தின் கருப்பொருளை நீங்கி செல்வது போலவோ அல்லது படத்தை விட்டு வெளியே செல்வது போலவோ இருந்தால் படம் பார்ப்பதற்கு ஒரு மாதிரி இருக்குமாம்.
நல்லா இருக்கு!! இதுக்காக நான் எங்கே இருந்து கோடுகளை தேடி போவது??? நானே படங்களுக்கு ஸ்கேல் வெச்சுகிட்டு கோடு வரையணுமா?? அப்படின்னு எல்லாம் டென்ஷன் ஆகாதீங்க!!!
கோடுகள் என்றால் எதில் வேண்டுமானாலும் இருக்கலாம். கட்டிடங்கள்,ரோடுகள்,வேலிகள், வானம்,கடல்,நிலப்பரப்பு என எதுவாக இருந்தாலும் கோடுகளாகத்தானே தெரிகிறது. அந்த கோடுகளை எல்லாம் நமக்கு சாதகமாக உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டியது தான்!! :-))
ஹ்ம்ம்!! புரியறாப்போல இருக்கு ஆனா புரியலை!! இருக்கு ஆனா இல்லை அப்படின்னு சொல்றீங்களா???
சரி இருங்க!! ஒரு சில படங்கள் கீழே இருக்கு!! அதை பாருங்க!! உங்களுக்கே தெளிவாத்தெரியும்!! :-)
----------------
எடுத்துக்காட்டாக இதோ சில படங்கள்:
# படம் 1: MQN
# படம் 2: ராமலக்ஷ்மி
# படம் 3: MQN
இந்த படத்தை பாருங்கள்... பாம்பன் ரயில் பாலம் நம் கண்களை இராமேஸ்வரம் தீவை நோக்கி இழுத்துச் செல்கிறது. கடைக்கோடிக்கு நம் கண்கள் தானாக செல்வதை தவிர்க்க முடியாது.
# படம் 2: ராமலக்ஷ்மி
இந்த பூக்களின் வரிசை நம்மை அங்கிருக்கும் மணி மண்டபம் நோக்கி இழுத்துச் செல்கிறது.
இந்த படத்தில.. படிக்கட்டின் ஓரத்தில் அமைந்திருக்கும் அந்த கோடுகள் நம்மை அந்த வாசலை நோக்கி அழைத்துச் செல்கிறது.
# படம் 4: MQN
இந்த சாலை உங்களை தூரத்தில் தெரியும் எனது ஊருக்கு அழைத்துச் செல்லும். :)
#படம் 5: ராமலக்ஷ்மி
இந்த சிங்கப்பூர் சாலை... நம்மை தூரத்தில் தெரியும் கட்டிடத்திற்கு வழி நடத்திச் செல்வதுபோல் அதில் கோடுகள் அமைந்துள்ளன.
# படம் 6: MQN
இந்த படத்தில் அமைந்துள்ள கோடுகள்... படத்தில் நிற்கும் மனிதனையும் நம் கண்களையும் சுரங்கப் பாதையினுள் இழுத்துச் செல்கிறது.
# படம் 8: சர்வேசன்
கட்டிடங்களும், நீரில் தெரிகிற அவற்றின் நிழல்களும் பாலத்தின் அடிவழியே பயணிக்க அழைக்கின்றன.
# படம் 9: ராமலக்ஷ்மி
இந்தப் படம் மலையொட்டிய பாதையில் நம்மையும் அழைத்துச் செல்கிறது.
# படம் 10: ராமலக்ஷ்மி
இந்தப் பாலமோ ஜிவ்வென வேகமாக ஊருக்குள்ளே நம்மைக் கூட்டிச் செல்கிறது.
# படம் 11: ஜீவ்ஸ்
கோடுகள் கொண்டு நிறுத்துகின்றன பார்வையைப் பந்தின் மேலே..
# படம் 12: ஜீவ்ஸ்
சாலையோடு நாமும் வழுக்கிச் செல்லும் உணர்வு.
விதிமுறைகள் இங்கே.
கடைசித் தேதி: ஏப்ரல் - 20
மீண்டும் நினைவூட்டுகிறோம்:
படங்களை 111715139948564514448.submit@picasaweb.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இணைப்பாக அனுப்பவும். கூடவே photos.in.tamil@gmail.com முகவரிக்கு cc அனுப்பவும்.
படங்கள் 1024x768 எனும் அளவில் படங்கள் இருக்குமாறு பார்த்துக் கொண்டால் நல்லது.
படம் 9 இயல்பாக உள்ளது. உண்மையில் இந்தப்படத்தைப் பார்க்கும் போது இந்த சாலையில் சென்றால் சூப்பராக இருக்குமே என்று தோன்றியது.
ReplyDeleteநான் வழி நடத்தும் கோடுகளை வழி அனுப்பி வைத்திருக்கிறேன்
ReplyDeleteபோட்டிக்கு நானும் கோடு போட்டு படம் அனுப்பியுள்ளேன்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபோட்டிக்கு நானும் படத்தை அனுப்பியுள்ளேன்
ReplyDeleteபோட்டியின் தளத்தை மாற்றி விட்டீர்களா.. www.picasaweb.google.com/pitcontests2 இல்லையா? கடைசியாக காண கிடைக்கும் ஆல்பம் அண்மைக் காட்சி, Feb 2012.
ReplyDeletei have sent my photo to the competition but its not coming in the picasa album.
ReplyDelete@ Anusha,
ReplyDeleteசென்ற மாதத்திலிருந்து போட்டிப்படம் அனுப்பும் ஐடி மாற்றம் குறித்து அறிவித்திருந்தோம். போட்டி ஆல்பங்கள் இனி www.picasaweb.google.com/pitcontest4 எனும் பக்கத்தில் காணக் கிடைக்கும்.
---------------------------
DHANS,
படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
PICTURES Added, thanks
ReplyDeleteAdded my pictures.. thanks..
ReplyDeletei have sent my photo to the april month competition
ReplyDeleteAdded my pictures.. thanks..
ReplyDeleteAdded my pictures.. thanks..
ReplyDeleteI have sent my photo to the mentioned mail ID
ReplyDeleteI have emailed my photo
ReplyDeleteI have sent my pic ....in the the name Sivapri
ReplyDeleteமுதல் படம் போட்டிக்காகவும், மற்றவை பார்வைக்காகவும் இணைக்கப்பட்டுள்ளன.
ReplyDeleteஅன்புடன்
லதா
முதல் படம் போட்டிக்காகவும், மற்றவை பார்வைக்காகவும் இணைக்கப்பட்டுள்ளன என்று முந்தைய மின்னஞ்சலில் எழுதியிருந்தேன்.
ReplyDeleteதயவு செய்து சரிபார்க்கவும்.
I sent my snap ...
ReplyDeletei sent photo to the contest sathishkumar.jpg. at the last moment. this time unable to resize my photo.
ReplyDeletesorry..
i have sent my pic to pit before two days,,,but i couldnt see my pics in picasa.. had sent two pics, first one for the contest and second one for the viewers ...
ReplyDelete