போட்டியாளர்களுக்கு போட்டியில் வெல்ல இருக்கும் சவாலை விட நடுவர்களுக்கு வெற்றிப் படங்களை தேர்ந்தெடுக்கும் சவால் தான் கடுமையானது.
முன்னேறிய பதினைந்து படங்களிலிருந்து வெற்றிப்படங்களை கீழே பார்ப்போம்.
மூன்றாம் இடம்:
இரண்டு படங்கள் மூன்றாம் இடத்தை பிடிக்கின்றன.
தர்மராஜ்:
போட்டிக்கு வந்திருந்த படங்களில் பெரும்பாலும் இழுத்துச் செல்லும் கோடு நேர் கோடாகத்தான் இருக்க வேண்டும் என்பது போல் வந்திருந்தன. இந்தப் படம் அதற்கு ஒரு மாற்றாக லீடிங் லைன்ஸ் வளைந்தும் இருக்கலாம் என்பதை அழகாக எடுத்துச் சொல்லிய படம். பாதையின் இரு புறமும் இருக்கும் மரங்கள் மேலும் அழகூட்டுகிறது. வெளிறிய வானம் கூட பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. வாழ்த்துகள்!
கப்பி:
அழகாக நான்கு கோடுகள் ஓரத்தில் தொடங்கி நம்மை அந்த சிலைக்கு அழைத்துச் செல்கின்றன. பழைய கட்டிடத்திற்கு அழகான பழுப்பு நிறம் கச்சிதமாக பொருந்துகிறது. ஒரே குறை மேலேயும், வலப்புற ஓரமும் தெரியும் கருப்பு நிறத்தை கிராப் செய்திருக்கலாம். வாழ்த்துகள்!
இரண்டாமிடம்:
குசும்பன்:
அழகான வண்ணத்துடன் வளைவான கோடுகள் நம்மை உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபாவிற்கு அழைத்துச் செல்கிறது. அழகான கம்போசிங். கீழே சிறிதளவு கிராப் செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். வாழ்த்துகள்!
முதலிடம்:
துரை:
இயற்கையினூடே பயணிக்கும் இந்த இரயில் நம்மையும் அதில் ஏற்றிக்கொண்டு செல்வது போன்ற உணர்வு. அழகாக படமாக்கியிருக்கிறார் துரை. படத்தின் கீழ் ஓரத்தில் தொடங்கி தண்டவாளத்தில் நம்மை படம் முழுதும் பயணிக்க வைக்கும் கம்போசிஷன். அதில் பயணிகளின் முன்பக்கம் எட்டிப் பார்ப்பது, நம்மையும் முன் பக்கம் இழுத்துச் செல்கிறது. சூப்பர்! வாழ்த்துகள்!
சிறப்புக் கவனம்:
இரண்டு படங்கள் சிறப்புக் கவனம்பெறுகின்றன.
நித்தி க்ளிக்ஸ்:
சுரேஷ் சந்திரசேகரன்:
போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள். இம்மாத போட்டியில் பங்கேற்றது போலவே வரும் மாதங்களிலும் ஆர்வமுடன் பங்கு பெறுங்கள்.
இதைவிட சவாலான தலைப்புடன் உங்களை சந்திக்க வருகிறார் வரும் மாதம் சிறப்பு நடுவராக செயலாற்றவிருக்கும் சத்தியா!
***
al the best Mr.Sathiya.. nice selection photos for top 3. PiT Stamp potta nalla irukum win panni na photoku..
ReplyDeleteThanks PIT Team (Naufal MQ)
ReplyDeleteநன்றி! :)
ReplyDeleteவெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..குசும்பன் அண்ணனுக்கு ஸ்பெசல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅருமையான தேர்வு!
ReplyDeleteவெற்றி பெற்ற அனைவருக்கும் இனிய பாராட்டுகள்.
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
ReplyDeleteநல்ல தேர்வு. பிரமிக்க வைக்கும் படங்கள். மனம் நிறைந்த வாழ்த்துகள்.
ReplyDeleteதுரை,குசும்பன்,தர்மராஜ மற்றும் கப்பி இனிய வாழ்த்துக்கள். பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி
ReplyDeleteபுகைப்பட கலையை கற்று கொள்ள துவங்கியதே PIT படித்துத்தான் (இன்னமும் கற்று கொண்டுதான் இருக்கிறேன்). எனவே PIT -க்கு முதலில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். மேலும் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக முடிவு அறிவிப்பதற்கு முன்பே வெற்றி பெற வாழ்த்திய துளசி கோபால் அவர்களுக்கு மிக்க நன்றி. :))
ReplyDeleteவெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...சிறப்பாக தேர்வு செய்த நடுவர் அவர்களுக்கும் நன்றி
ReplyDeleteவெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. :)
ReplyDelete