Thursday, July 29, 2010

அன்பு நண்பர்களே,

முன்னேறிய 15 வழிபாட்டுத் தலங்களில் இருந்து முதல் மூன்று எது என்று மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பீர்கள்..

முதலில்,அந்த 15 படங்களில் இருந்து முதலில் வெளியேறிய படங்களை பற்றி பார்ப்போம்..

இந்த வெளியேற்றம் என்பது இங்குள்ள மற்ற புகைப்படங்களை வைத்து தானே தவிர எந்த படமும் நன்றாக இல்லாத படங்கள் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.. சிறு சிறு குறைகள் தான்..

இங்கு வெளியேறிய ஒரு சில படங்களில் சிறு குறைகளை தவிர்த்திருந்தால் ஒரு வேளை அந்த படமும் முதல் மூன்றிற்குள் வந்திருக்கும்..

இதில் முதல் ரவுண்டில் வெளியேறுவது,

கீர்த்தி

கலை

அமைதிச்சாரல்

இவர்களில்,

கீர்த்தி படத்தில் framing நன்றாக இருக்கின்றது..

இருந்தாலும் கலர்ஸ் கொஞ்சம் Dull, பெரிதாக effect இல்லாத foreground,details குறைவு(பெரிதாக பாதிக்கவில்லை) இந்த காரணங்களுக்காக வெளியேறுகின்றது..

கலை படத்தில்,

அந்த அழகான நீல வானம், சந்தன(தங்கம்) கலரில் கோவில் மற்றும் சிவப்பு வெள்ளை சுவர் இந்த மூன்று combinationம் சேர்ந்து இந்த படத்திற்கு attractive brightness தருகின்றன..படம் பளிச் என்று அழகாக இருக்கின்றது..

இருந்தாலும் படத்தின் அழகை குறைக்கும் அந்த தார் ரோடு,கொஞ்சம் குறைவான details, effect குறைவான composition இந்த காரணங்களுக்காக வெளியேறுகின்றது..

அமைதிச்சாரல் படத்தில்,

தொந்தரவுகள் அதிகம் இல்லாத composition, neat foreground,அழகான வானம் இம்மூன்று காரணங்களுக்காக முதல் 15ல் முன்னேறியது..

ஆனால் மிக குறைவான details, tight cropping, dull colours.. இந்த காரணங்களுக்காக வெளியேறுகின்றது..


அடுத்த ரவுண்டில் வெளியேறுவது

சுரேஷ்

துளசி கோபால்

ஆயில்யன்

காவியம்

இவர்களில் சுரேஷ் படத்தில்,

வர்ணங்கள் இல்லாத கோபுரம் மற்றும் தொந்தரவுகள் இல்லாத நீல வானமும் perfect ஆக மேட்ச் ஆகின்றது.. பார்ப்பதற்க்கும் attractive ஆக இருக்கின்றது...

ஆனால் ரொம்ப டைட் க்ராப் மற்றும் சிறிது குறையுள்ள composition காரணங்களுக்காக வெளியேறுகின்றது..

துளசி கோபால் படத்தில்,

சரியான exposure,அழகான பழங்காலத்து ஆலயம்,அதற்கேற்றார் போல் உள்ள வானம்,நல்ல ஷார்ப்னெஸ் இவையெல்லாம் ப்ளஸ்..படம் நல்ல brightness..

இருந்தாலும் டைட் க்ராப் தான் இந்த படத்துக்கு எதிரி..கொஞ்சம் சிம்பிளான கம்போசிசன்..இந்த காரணங்களுக்காக இப்படம் வெளியேறுகின்றது..இருந்தாலும் உங்கள் படம் அருமை..

அடுத்து ஆயில்யன்,

ஆயில்யன் எப்பவுமே கடைசி சுற்றில் முதல் ரவுண்டில் வெளியேறுவார்,ஆனால் இந்த முறை கொஞ்சம் முன்னேற்றம்..உங்கள் படத்தில்,
அருமையான wide angle கம்போஸிசன்,அழகான வானம்,இந்த காரணங்களுக்காக முன்னேறியது..

ஆனால்,கொஞ்சம் exposure குறைத்து இருக்கலாம் ,அந்த சுவற்றில் டீடெயில்ஸ் burn ஆகிவிட்டது கொஞ்சம் வெளுத்தது போல் இருக்கின்றது,அதே சமயம் படத்தில் ஒரு நபர் இருப்பது படத்தின் பிரம்மாண்டத்தை காட்டுவதற்கு இருந்தாலும் படத்தை கொஞ்சம் distract செய்கின்றது..

நல்ல படம்,இருந்தாலும் மேலே சொன்ன காரணங்களுக்காக வெளியேறுகின்றது..

காவியம் படத்தில்,

முதன் முதலில் இந்த படத்தை பார்த்ததும் ரொம்பவும் பிடித்து விட்டது.. நல்ல dark background, தூணில் உள்ள சிலைக்கு மட்டும் ஃப்லாஷ் லைட்டிங்.. முதலில் இந்த படத்தை பார்க்கும் போது PP செய்தது மாதிரி பெரிதாக கண்டேபிடிக்க முடியவில்லை..அதற்கு வாழ்த்துக்கள்..

நல்ல attractive ஆக இருந்தாலும்.. PP என்பது இப்படத்தில் அதிகம் இருப்பதால் இந்த சுற்றில் வெளியேறுகின்றது..

அடுத்த ரவுண்டில் வெளியேறுவது,

கே.ஜி.சன்முகம்

அமல்

மெர்வின் ஆண்ட்டோ


இவர்களில் கே.ஜி.சன்முகம் அவர்கள் படத்தில்,

இருளில் ஒளியாய் படம் கலர் கலராய் அழகாக இருக்கின்றது..பல வண்ணங்களில் லைட்டிங்ஸ் அருமை..

ஆனால் படத்தை வேறு மாதிரி நேராக compose செய்து எடுத்திருக்கலாம் என்று நினைக்க தோன்றுகிறது..கொஞ்சம் blur (low lightல் இது பெரிய குறையில்லை),இந்த காரணங்களுக்காக வெளியேறுகின்றது.

அமல் படத்தில்,

சிலுவையில் இயேசுவும்,அந்த பனிமூட்டமும் ரொம்பவும் அழகு..இவ்விரண்டும் சேர்ந்து ஒரு வித அமைதி effect தருகின்றது அழகு..

ஆனால் இந்த படத்தின் பெரிய மைனஸ் என்பது அந்த கேபிள் வயர்கள் மற்றும் நுழைவு வாயில் கம்பி தான்..நமது கண்கள் நேராக அங்கே தான் செல்வது இப்படத்துக்கு ஒரு குறை..

அதே சமயம் சிலுவையை பின்னால் இருந்து எடுத்திருப்பது சரியான effect தரவில்லை..இந்த காரணங்களுக்காக் இப்படம் வெளியேறுகின்றது..

மெர்வின் ஆண்ட்டோ படத்தில்,

வித்தியாசமான கோணத்தில் படம். வானம்,சூரியன் இவற்றிற்கு எதிராக படம் எடுப்பதற்கு ரொம்பவும் பொறுமை வேண்டும்.அதையும் அழகாக எடுத்துள்ளார்..படம் அருமை..
ஆனால் படத்தின் முக்கிய சப்ஜெக்ட் ரொம்பவே க்ராப் ஆகி சின்னதாக போய்விட்டது ஒரு பலவீனமே..

சிலைக்கு இன்னும் லைட்டிங்ஸ் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றேன்..இன்னும் கொஞ்சம் முழுவதுமாக க்ராப் இல்லாமல் எடுத்திருந்தால் இப்படம் கலக்கியிருக்கும்..
இப்படம் இந்த காரணங்களுக்காக வெளியேறுகின்றது..

அடுத்த கடைசி ரவுண்டில் இருப்பது

இப்ராஹிம்

கமல்

ஆதவா

வீரா

நிமல்


இதில் முதலில் வெளியேறுவது வீரா...



இதுக்கு ஒரே ஒரு காரணம் தான்.. அது டைட் க்ராப்..

வீரா,அந்த செவ்வானமும்,பறவைகளும்,அழகான கோபுரமும் ஒன்று சேர கவிதையாய் இருக்கின்றது... ஆனால் இப்படி அநியாயமா மேலே டைட்டா கட் பன்னீட்டீங்களே... இதனால் தான் இப்படம் வெளியே போகுது...

இருந்தாலும் என் மனதிற்கு இந்த படம் மிகவும் பிடித்திருக்கின்றது... ஆனால் என்ன செய்ய..? சரி,அடுத்த முறை கவனமா பார்த்துக்குங்க..

அடுத்து மூன்றாவது இடத்துக்கு போட்டி போடுவது,

இப்ராஹிம் மற்றும் ஆதவா அவர்களின் படங்கள்..

இப்ராஹிம் படத்தில்


இரவு நேரத்தில் நல்ல ஷார்ப்பான படம்..அதுவும் point and shoot கேமராவில்..ரொம்ப அழகாகவும் எடுத்திருக்கீங்க..வரிசையான தூண்கள் ஒளியில் அழகாக இருக்கின்றன..அதன் reflectionsம் தண்ணீரில் தெரிவதும் அழகு..

இந்த மாதிரி இடங்களில் பக்தர்கள் இல்லாமல் எடுப்பது கண்டிப்பாக கடினம் தான்..ஆனால் அதுவே, யாராவது பக்தியுடன் இருந்திருந்தால் நல்ல effect இருந்திருக்கும்..இதனால் இந்த இடமானது ஒரு பில்டிங் உள்ளே எடுத்தது போல காட்சியமைப்பாகின்றது.. இதுவே இப்படத்திற்கு பலவீனமாக தெரிகின்றது

ஆதவா படத்தில்,

lights மற்றும் shadows ஐ மிக அழகாக படம் பிடித்துள்ளார்..அதுவும் அந்த மண்டபத் தூண்கள் இடையே வரும் ஒளியமைப்பு மிகவும் அழகு..distraction எதுவும் இல்லாத framing,சரியான அளவு exposure, எல்லாம் இப்படத்திற்கு பலம்..

ஆனால் அந்த தூண்கள் நமது பார்வையை ஒரு வெறுமையான இடத்துக்கு அழைத்துப் போவது ஒரு பலவீனமே..இதனால் அந்த இடத்தில் ஏதாவது இருக்ககூடாதா என்று நினைக்க தோன்றுகிறது..

மேலும் water mark ரொம்பவே அதிகம்..இதெல்லாம் ஒரு பெரிய குறைகள் இல்லை..மற்றபடி படம் அருமை..

இவங்க ரெண்டு பேரும் கிட்டதட்ட ஒரே மாதிரியான படத்தை தந்துள்ளனர்..இவர்களில் யாரை தேர்ந்தெடுப்பது?

ரெண்டு பேரும் சரியான அளவுகளில் உள்ளனர்..ஒருவர் இருளில் செயற்கை ஒளியை ஷார்ப்பாக, அழகாக பிடித்துள்ளார் ,
மற்றொருவர் கலைநயம் மிக்க தூண்களை இயற்கை ஒளியுடன் பிடித்துள்ளார்..

என்னை பொறுத்த வரையில் distraction இல்லாத அழகான தூண்களே சிறப்பாக தெரிகின்றன...

எனவே மூன்றாம் இடம் பிடிப்பது ஆதவா..



வாழ்த்துக்கள் ஆதவா..

அடுத்து இறுதி இடத்திற்கு போட்டி போடுவது

கமல் மற்றும் நிமல்... என்ன ஒரு பெயர் பொருத்தம்...

இவர்களின் படங்கள் இரண்டும் கடைசி சுற்று வரை வருவதற்க்கு காரணம், perfect composition,
கசகசன்னு distraction இல்லாத background,
வித்தியாசமான கோணம்...

இவர்களின் படங்கள் இரண்டுமே கோபுரத்தின் படங்கள்.. இதில் எந்த கோபுரம் சிறந்தது??

இதில் கமல் படத்தில்

ஃப்ரேமுக்குள் இன்னொரு ஃப்ரேம்... அழகு.. கோபுரமும் பெர்ஃபெக்ட்.. பேக்கிரவுண்ட் மேகமும் அருமை,திருவிளையாடல் படத்துல வர்ற மாதிரி மேககூட்டம் பிரம்மாண்டமா இருக்கு..

எப்படி மேலே ஏறி எடுத்தீங்களா? இல்லை கோவில் கீழே இருக்கின்றதா?மிகவும் அருமை..

ஆனால் படம் கொஞ்சம் closeஆக இருப்பதால் கண்டிப்பாக details இன்னும் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்..அதுவுமில்லாமல் படத்தின் கீழே கொஞ்சம் வெளிச்சம் பத்தவில்லை..கலர் saturation கொஞ்சம் அதிகமா தெரியுது..

எனவே இரண்டாம் இடம் பிடிப்பது கமல்...


இதெல்லாம் சிறிய பலவீனமே..மற்றபடி இந்த படத்தின் ஃப்ரேம் எனக்கு மிகவும் பிடித்தது...

வாழ்த்துக்கள் கமல்..

அடுத்து நிமல் படம்..

perfect composition, கவிதையான perfect foreground.., அழகான நீல வானம், சரியான exposure, distraction பெரிதாக இல்லாத படம்,இப்படி பல..

அதென்ன கவிதையான fore ground..? அவருக்கு தெரிந்து எடுத்தாரோ, இல்லையோ...
கீழே கற்கள், மேலே அதே கற்கள் நிறத்தில் கோபுரம்.. கற்கள் அப்படியே கோபுரமாவது போல் இருக்கின்றது..(எப்டி இருந்த நான் இப்டி ஆயிட்டேன்)..

இந்த மாதிரி படம் எடுக்கும் போது fore ground என்பது மிக முக்கியம்..இந்த படத்தில் நிமல் அதை அழகாக பயன்படுத்தியுள்ளார்...

இந்த படத்தை பார்த்ததும் , எனக்கு இந்த பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றது...

`கல்லிலே கலை வண்ணம் கண்டான்`

`நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா`..


இறுதியில் முதல் இடம் பிடித்தது நிமல் அவர்களின் தலம்...



நிமல்.... வாழ்த்துக்கள்...

இந்த முறை வெற்றி பெற்ற படங்களை பார்த்தால் அனைத்து படங்களும் சாதாரண point and shoot , prosumer கேமராக்களில் தான் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

இதன் மூலம் நல்ல படங்களை எடுப்பதற்கு, நல்ல கேமரா மட்டும் காரணம் இல்லை என்பது நிரூபனம் ஆகின்றது..

சரி நண்பர்களே, இனி அடுத்த போட்டிக்கு தயாராகுங்க..விரைவில் அறிவிப்பு வரும்.. இந்த முறை கண்டிப்பாக செஞ்சுரி அடித்துவிடுவோம் ..

நன்றி
கருவாயன்

Monday, July 26, 2010

அன்பு நண்பர்களே, மீண்டும் இந்த முறையும் நிறைய படங்கள் `வழிபாட்டுத் தலங்கள்` வழியாக வந்திருப்பது மிக்க மகிழ்ச்சியளிக்கின்றது... இது வரை பார்க்காத,போகமுடியாத பல தலங்களுக்கு தாங்கள் அனுப்பிய புகைப்படங்கள் வழியாக நேரிலேயே போய்விட்டு வந்தது போல் பலருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.. அதற்கு முதலில் வாழ்த்துக்களும்,நன்றிகளும் தெரிவித்துக்கொள்கின்றேன்.. 80 படங்களுக்கு மேல் வந்திருப்பது,சிறந்த படத்தை தேர்ந்தெடுப்பதற்கு மிரட்டலாக இருந்தாலும் இந்த முறையும் செஞ்சுரி அடிக்க முடியவில்லையே என்ற வருத்தமும் இருக்கின்றது.. பார்ப்போம்... அடுத்த முறை அடித்து விடுவோம்.. இந்த முறை எந்த புகைப்படமும் தலைப்புக்கு பொருந்தாமல் இல்லை என்பதும் மகிழ்ச்சி.. சரி, இனி முன்னேறிய 15 வழிபாட்டுத்தலங்களின் அணிவகுப்பு.... வீரா துளசி கோபால் சுரேஷ் இப்ராஹிம் நிமல் மெர்வின் ஆண்ட்டோ கீர்த்தி கமல் கலை காவியம் கே.ஜி.சண்முகம் அமல் அமைதிச்சாரல் ஆயில்யன் ஆதவா போட்டிக்கு வந்திருந்த படங்களில் கிட்டதட்ட 25 -30 படங்கள் கோவில் கோபுரங்களை எடுத்து தள்ளி விட்டார்கள்.. இதில் எந்தெந்த கோபுரங்கள் சிறந்தது என்று தேர்ந்தெடுப்பதற்கு சற்று சிரமமாக இருந்தது.. அனைத்தும் அருமையே.. எனினும் சில சின்ன சின்ன காரணங்களுக்காக மற்ற படங்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை.. விரைவில் முதல் மூன்றுடன் உங்களுடன் சந்திக்கின்றேன்... நன்றி கருவாயன்

Friday, July 23, 2010

Amazing Circle என்ற பெயரில் இணையத்தில் இந்த மாதிரி படங்கள் நிறையப் பார்த்து இருப்பீர்கள். கிம்பில் மிக எளிய முறையில் இந்த மாதிரி படங்களை செய்வதுப் பற்றி இங்கே. முதலில் நமக்கு சதுர வடிவ படம் தேவை. உங்களின் படங்களை சதுரமாக மாற்ற , Rectangular selection tool தெரிவு செய்துக் கொள்ளுங்கள். Shift பொத்தானை அமுக்கிக் கொண்டே படத்தில் உங்களுத் தேவையான பகுதியை தேர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் Image-> Crop to Selection செய்தால் சதுர வடிவ படம் தயார். அடுத்து, Filters->Distorts->Polar Coordinates ... படத்தில் குறிப்பிட்ட படி Map Backwards , Map From Top, To polar மூன்றையும் தெரிவு செய்யாதீர்கள்.Ok கிளிக்குங்கள். அடுத்து மீண்டும் ஒருமுறை ஆனால் இந்த முறை Map From Top, To polar இரண்டையும் தெரிவு செய்துக் கொள்ளுங்கள். அவ்வளவுத்தான் வேலை. Circle depth in percent , offset angle இரண்டுக்கும் நீங்கள் வைக்கும் அளவிற்கு ஏற்ப படம் மாறும். இதில் சரியான அளவு, தவறான அளவு என்று எதுவும் இல்லை. உங்களின் விருப்பம் தான் சரியான அளவு. ஆயிரத்தில் ஒருத்தி மட்டும் விதி விலக்கா என்ன ?

Thursday, July 8, 2010

High Key பட்ங்கள் பற்றி ஏற்கனவே இங்கே பார்த்து இருக்கிறோம். இந்த முறை சேனல் மிக்ஸர் கொண்டு இந்த மாதிரி படங்களாக மாற்றுவது எப்படி என்று பார்க்கலாம். படத்தை கிம்பில் திறந்து பின்னணி லேயரை நகலெடுத்துக் கொள்ளுங்கள். இனி colors->components->Channel Mixer Monochorome மற்றும் Red= 100 , Green =0 , Blue = 0 தேர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து Layer Mode = Screen என்று மாற்றிக் கொள்ளுங்கள். அவ்வளவுத்தான். படம் இப்படி மாறி இருக்கும். இனி மேல் உங்களுத் தேவையான மற்ற பிற்சேர்க்கைகளை செய்துக் கொள்ளலாம். மற்றும் ஒரு எடுத்துக் காட்டு.

Friday, July 2, 2010

அன்பு நண்பர்களே... வணக்கம்... நீ..ண்ட இடைவெளிக்கு பிறகு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி... இந்த மாதம் புகைப்பட போட்டிக்கான அறிவிப்பு வர சில வேலை பளு காரணமாக தாமதமாகிவிட்டது.. (வழக்கம் போல சொல்றது தான்னு திட்டாதீங்க...) இந்த மாதம் என்ன தலைப்பு கொடுக்கலாம்... இப்ப இருக்கின்ற அவசர உலகத்தில் நாம் பெரும்பாலான நேரங்களில் டென்ஷனாக தான் இருக்கின்றோம்..அந்த டென்ஷன் கொஞ்சம் அதிகமாகி நம்மால ஒன்னும் பன்ன முடியாத நிலை வரும் போது பெரும்பாலான நமக்கு வருகின்ற ,தோன்றுகின்ற சொல்...கடவுள்... அந்த கடவுள் குடிகொண்டிருக்கும் இடமான வழிபாட்டுத்தலத்தையே இம்மாதத்திற்கான தலைப்பாக வைத்துக்கொள்ளலாமே.. டென்ஷானான நேரத்தில் மட்டுமில்லை.. மகிழ்ச்சியான நேரங்களிலும் பெரும்பாலோனோர் செல்ல ஆசைப்படும் இடம் ...`வழிபாட்டுத் தலங்கள்`.. எனவே, இந்த மாதத்திற்கான தலைப்பு `வழிபாட்டுத் தலங்கள்`........ (நாதஸ்) (MQN) (அனானி) கோவில்,சர்ச்,மசூதி,சிலை,கோபுரம்,கலசம்,தூண்,பக்தி,இப்படி எது வேண்டுமானாலும் படம் எடுத்து அனுப்புங்க... இந்த தலத்தில் எல்லா மதமும் சம்மதம்.... எனக்கு தெரிந்து ஒரு சிலருக்கு, நம்ம கவர்மெண்ட்டுக்கு அதிக வருமானம் தர கூடிய,வீதிக்கு வீதி இருக்கக்கூடிய ஒரு முக்கிய இடம் தான் வழிபாட்டுத் தலமாக இருக்கின்றது.. அவர்களுக்கு தினமும் அதில்` தீர்த்தம்` குடிக்காமல் இருக்க முடியாது... கண்டிப்பாக `அந்த` மாதிரி வழிபாட்டுத் தலங்கள் மட்டும் போட்டிக்கு அனுமதி கிடையாது.. போட்டிக்கான விதிமுறைகள் இங்கே.. தேதி மட்டும் மாற்றம்.. போட்டிக்கு படங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 20-7-2010 -கருவாயன்
குழுப்போட்டிக்கான கடைசி தேதி முடிந்து விட்டது. இதுவரை கோதாவில் குதித்துள்ள குழுக்களின் விவரங்கள் கீழே தொகுத்துள்ளோம். முடிவுகள் ஜூலை கடைசியில் வெளிவரும். (விடுமுறையில் உலாத்த உள்ளதால், இந்த தாமதம். மன்னிக்க). கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றீஸ். யார் ஆல்பமாவது விட்டு போயிருந்தா தெரிவிக்கவும். 1) uniquely சிங்கப்பூர் குழு குழு: சத்யா - ஒருங்கிணைப்பாளர், ராம்/Raam - ஆலோசகர், ஜோசப், அறிவிழி - ராஜேஷ், கிஷோர், பாரதி, ராம்குமார்(முகவை)ஜெகதீசன் 2) LosColoresOrange, Orange County, California குழு
  • orange county கொசுறு ஆல்பம் இங்கே: குழு: Amal, Senthil 3) Melbourne, Australia குழு குழு: Vijay, ?? 4) Daedal Delhi குழு குழு: mohankumar karunakaran, muthuletchumi 5) ராஜபாளையம் குழு குழு: pg.nanda, ?? 6) சிங்கம் சிங்கிளாத்தான் வரும்னு, லண்டனை சிங்கிளா கூறு போட்ட Truth 'குழு' (போட்டிக்கல்ல) 'குழு': truth 7) City of Summer, Sydney, Australia 'குழு' (போட்டிக்கல்ல) 'குழு': ஷ்ரெயா
  •  
    © 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff