Wednesday, December 16, 2009
high key
Posted by
Anand V
at
8:41 AM
7 comments:
Labels:
Gimp,
Lessons பாடங்கள்,
Naufal MQ,
post production பிற்தயாரிப்பு
HighKey படங்கள், நல்ல பிரகாசமான வெளிச்சத்துடன், குறைந்த contrast ல், மகிழ்ச்சியான முகப்பாவங்களுடன் ( பற்பசை விளம்பர சிரிப்போடு), பொதுவாக கருப்பு வெள்ளையில் எடுக்கப்படும் படங்கள்.
உதாரணதிற்கு இந்தப் படம்
( உபயம் விக்கிபீடியா ).
இந்த மாதிரி படங்களை கிம்பில் செய்வது பற்றி இங்கே.
அனைவரும் பிரியா மணி அக்காவுக்கு வணக்கம் சொல்லுங்கள். அவிங்க தான் இன்றைக்கு நமக்கு மாடல்.
ப்டத்தை கிம்பில் திறந்து கருப்பு வெள்ளைக்கு மாற்றிக் கொள்ளுங்கள். ( நினைவிருக்கட்டும், high key கலரிலும் செய்யலாம். )
எளிதான கருப்பு வெள்ளைக்கு மாற்றும் முறை.
colors -> desaturate ..
Luminosity...
இந்த கருப்பு வெள்ளை லேயரை நகலெடுத்துக் கொள்ளுங்கள்.
புதிய லேயரின் mode => Addition என்று மாற்றிக் கொள்ளுங்கள்.
படம் பிரகாசமாய் ஆகி இருக்கும் .படம் பிடித்து இருந்தால், இதோடு கூட முடித்துக் கொள்ளலாம்.
வலது எலிக்குட்டியை கிளிக்கி Add Layer Mask தெரிவு செய்யுங்கள்.
Greyscale copy of the layer...
படம் அழகாய் மெருகேறி இருக்கும்.
படம் பிடித்து இருந்தால் இந்த இடத்தோடும் நிறுத்திக் கொள்ளலாம்.
அடுத்த பகுதி, படத்தின் ஓரங்களை இன்னும் வெள்ளைக்கு மாற்றுவது.
( வினியட் பற்றி இங்கு ஏறகனவே பார்த்து இருக்கிறோம். இது அதேபோலத்தான். அங்கே கருப்புக்கு பதில் இங்கே வெள்ளை. )
ஒரு புதிய transparent லேயரை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
ஒரு மெல்லிய , சிறிய opacity ( 10-20 % ) வெள்ளை நிற பிரஷ் கொண்டு ஒரங்களில் வெள்ளை அடிக்க ஆரம்பியுங்கள்.
மற்ற இரண்டு லேயரகளையும் எடுத்து விட்டு , நான் இப்படி சுண்ணாம்பு அடித்து இருக்கிறேன் என்று கீழே காண்பித்து இருக்கிறேன்..
அவ்வளவுதான் வேலை.
கலரும் கருப்பு வெள்ளை படமும் அருகருகே.
இன்னும் ஒரு உதாரணம்.இந்த முறை ரோஜா.
(செல்வமணி ரோஜா இல்லீங்க. நிஜ ரோஜாத்தான். )
Subscribe to:
Post Comments (Atom)
ப்ரியா மணி அக்கா அட்டகாசமாத்தான் இருக்காங்க, கிம்ப்ல கலக்கிட்டிங்க எங்களுக்குஉபயோகமான விளக்கம்...
ReplyDeleteநன்றிகள் பலவற்றுடன்
கமல்
செஞ்சு பார்த்துடறேன் - மாடலுக்கு என்னோட போட்டோவையே யூசு பண்ணிக்கிறேன் :)
ReplyDeleteபை தி பை பிரியாமணி அக்கா ம்ம்ம்ம்ம் சரி ஒ.கே
ஆனா வேற யாராச்சயும் (லைக் தமன்னா ) அக்கான்னு சேர்த்து விளிச்சா ஞான் இவ்விட வரமாட்டேன் !
மிகவும் உபயோகமான குறிப்பு
ReplyDeleteநான் ட்ரை செஞ்சது இதோ
http://www.flickr.com/photos/jayashree-shankar/4189968253/
நல்ல குறிப்பு
ReplyDelete(செல்வமணி ரோஜா இல்லீங்க. நிஜ ரோஜாத்தான். )//
நல்லவேளை நல்ல வேலை செஞ்சீங்க.
நானும் பயன்படுத்தி பார்த்தேன். அருமையா இருக்கு. நன்றி PiT குழுவினர்களுக்கு...
ReplyDeleteஇதோ என்னுடையாது...
http://www.flickr.com/photos/kamalk023/4194296864/
நல்ல பகிர்வு நன்றிங்க
ReplyDeleteAn&, here's my piece
ReplyDeletehttp://www.flickr.com/photos/nagappanr/4922722359/
Thanks for the tutorial