நண்பர்கள் என்னிடம் புகைப்படத்துறை சம்பந்தமாக கேட்கும் பல விஷயங்களில் முதன்மையான கேள்வி
என்ன கேமரா வாங்கலாம்???
இதற்கு என்ன பதில் சொல்லலாம் என்றே எனக்கு தெரியாது.ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேவை,பட்ஜெட்,ஆர்வம்,திறமை எல்லாம் உண்டு. இப்படி பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு எடுக்கப்பட வேண்டிய முடிவு இது.இதில் முக்கால்வாசி விஷயங்களை அவங்களே யோசிச்சு பாத்து தான் சொல்ல முடியும்,நாம ஒன்னும் சொல்ல முடியாது்.இன்னும் சொல்லனும்னா,ஒரு விதமான கலந்தாலோசனை (counselling) வெச்சு முடிவு பண்ற அளவுக்கு சீரியசான மேட்டரு இது!! :-)
அவங்கவங்களே நிறைய கூட்டி கழிச்சு பாத்து ,ஆராய்ச்சி பண்ணிதான் வாங்கியாகனும்.அப்படி முடிவு பண்ணுறதுக்கு என்னவெல்லாம் யோசிக்கனும்னு இந்த பதிவுல பாக்கலாம்.
1.) தேவை : மொதல்ல நீங்க வாங்கப்போகிற கேமராவில் என்னவெல்லாம் வேண்டும் என்று முடிவு செய்துக்கொள்ளுங்கள்.
கேமரா எதுக்கு பயன்படுத்தப்போறோம்?? சும்மா நண்பர்கள் கூட படம் எடுத்துக்கறதுக்கா?? ஆர்வத்தோட இந்த கலையை கத்துக்கிட்டு இதுல திறமையை வளர்த்துக்கொள்வதற்கா,இதை வைத்து காசு பண்ணுவதற்கா?? இப்படி...
எந்த மாதிரி படம் எடுக்க போறோம்?? பெரும்பாலும் இயற்கை காட்சிகளையா(landscape)?? இல்லை மக்களையா(portraits)?? இல்லை விளையாட்டு நிகழ்வுகளையா?? (sports) ..... இதுமாதிரி
புகைப்படக்கலையில் அறிவு..ஏற்கெனவே ஏதாவது கேமரா வெச்சிருந்து என்னென்ன ஃபீச்சர்ஸ் எல்லாம் இருக்கு அதெல்லாம் எப்படி பயன்படுத்தனும்னு தெரியுமா?? இல்ல இப்போதான் புதுசா வாங்க போறீங்களா?? எதையும் மாத்தாம சும்மா auto mode-ல போட்டுட்டு சுட்டு தள்ள போறீங்களா??
எந்த மாதிரி சிறப்பு அம்சங்கள் வேணும்?? ஜூம் அதிகமா இருக்கறது அவசியமா??LCD திரை பெருசா இருக்கனுமா?? ராத்திரி நல்லா படம் எடுக்கறா மாதிரி வேணுமா??கை உதறல்களை சமாளித்து தெளிவான படங்கள் தர தொழில்நுட்பம(Image stabilisation)் வேணுமா??
பையில எவ்வளவு காசு இருக்கு??
இப்படி ஏகப்பட்ட விஷயங்களை முதலில் முடிவு செய்துக்கொள்ளுங்கள்.
2.) எவ்வளவு MP வாங்கலாம்??
மொதல்ல இந்த MP என்றால் என்ன என்று பார்த்துவிடுவோம்.MP என்பது megapixel என்பதன் சுருக்கம். உங்கள் படத்தில் உருவாகும் காட்சி எவ்வளவு புள்ளிகள் மூலம் உருவாக்கபடும் என்பதையே இந்த MP சுட்டி காட்டுகிறது.
உங்கள் கணிணியில் display settings-இல் 16bit,24bit என்று உள்ளது அல்லவா!!அதே மேட்டர்தான் இதுவும். உங்கள் படங்கள் எல்லாம் பிரிண்ட் போட போகிறீர்கள் என்றால் அதிகப்படியான MP இருப்பது நல்லது.மற்றபடி 5 MP-க்கு மேற்படியாக எவ்வளவு இருந்தாலும் சரிதான்!! இரண்டு கேமாராக்களில் ஒன்று 6MP இருந்து இன்னொன்றில் 7MP என்று இருந்தால் அதிகப்படியான MP தான் நல்லதா என்றெல்லாம் குழப்பிக்கொள்ள வேண்டும்.
MP அதிகமாக அதிகமாக உங்கள் படத்தின் அளவுதான் பெரிதாகிக்கொண்டு போகும். ஆனால் என்ன? MP அதிகமாக இருந்தால் படம் எடுத்துவிட்டு அதன் மேல் cropping போன்ற மற்ற பிற்தாயாரிப்பு உத்திகளை பயன்படுத்தினால் தாங்கும். கம்மியான MP-இல் கொஞசம் வெலை செய்தாலே படத்தின் பளபளப்பு குறைந்துவிடும்!
3.)எவ்வளவு zoom வாங்கலாம்?
பல பேர் முடிஞ்ச வரைக்கும் ஜூம் அதிகமா இருக்கற கேமரா வாங்கறதுதான் நல்லது அப்படின்னு நெனைச்சிட்டு இருக்காங்க. தூரக்க இருக்கற காட்சிகளை எடுப்பதற்கும் கிட்டக்க இருக்கற பொருட்களை பெரிதாக எடுப்பதற்கும் இந்த அதிகப்படியான ஜூம் உபயோகமா இருந்தாலும்,பல சமயங்களிலே அவ்வளவு ஜூம் தேவையே படாது. அதுவும் ஒளியின் அளவு கம்மியாக இருந்தால் அதிகமா ஜூம் பண்ணா கேமரா ஃபோகஸ் பண்ணாது.அதனால அதிகமா ஜூம் இருந்தாலே எல்லா சமயமும் கிட்டக்க /பெரிதாக எடுக்கலாம் என்று சொல்ல முடியாது.அதுவுமில்லாம அதிகமா ஜூம் பண்ண பண்ண படத்தின் ஷேக் அதிகமாக வரும்,அதனால் உங்க கிட்ட மிக மிக உறுதியான கைப்பிடி இருந்தாலோ அல்லது முக்காலி இருந்தாலோ ஒழிய அதிகப்படியான ஜூமில் நல்ல படங்கள் வராது.
அதுவுமில்லாமல் கேமராவில் ஜூம் அதிகமாக இருந்தால் அதற்கேற்றார்போல் கேமராவும் பெரிதாக இருக்கும். புகைப்படக்கலையில் பெரிதாக ஆர்வம் இல்லையென்றால் ஒன்றிரண்டு மாதங்களில் அவ்வளவு பெரிதான கேமராவை வெளியில் எடுத்து புகைப்படம் எடுக்க சுவாரஸ்யம் போயிடும்.பெரும்பாலான தொடக்கக்கட்ட கேமராக்களில் 3x அல்லது 4x ஜும் லென்ஸ்கள் இருக்கும்.ஆரம்ப நிலையில் இருக்கும் புகைப்பட அர்வலருக்கும் சும்மா சுற்றுலா,உறவினர் நண்பர்கள் என்று புகைப்படம் எடுக்க விரும்புவர்களுக்கும் அந்த ஜூமே போதுமானது என்பது என் கருத்து
4.) பேட்டரி
கேமராக்களில் இரண்டு விதமான பேட்டரிகள் உள்ள கேமரா வகைகள் உண்டு. ஒன்று கேமாராவோடு வரும் பேட்டரி.இதை அவர்கள் கொடுக்கும் சார்ஜர் கொண்டு மட்டுமே ரீசார்ஜ் செய்ய முடியும்.பேட்டரி தீர்ந்துவிட்டால் திரும்பவும் அவர்கள் கொடுக்கும் ரீசார்ஜரில் ரீசார்ஜ் செய்துக்கொள்ள வேண்டும்.இந்த வகை பேட்டரிகள் கேமராவின் எடையை சற்றே கூட்டவும் செய்யும். அடுத்த வகை நாம் எல்லா இடங்களில் உபயோகிக்கும் சாதாரண பேட்டரிகள். தீர்ந்துவிட்டால் எந்த கடையில் வேண்டுமென்றாலும் வாங்கி பொருத்திக்கொள்ளலாம். இதிலும் ரீசார்ஜபிள் பேட்டரிகள் வாங்கிக்கொண்டால் ஒவ்வொரு முறையும் பேட்டரி வாங்கும் செலவு குறையும்.
5.) வடிவமைப்பு
என்னதான் அம்சமாக படம் பிடித்தாலும் கேமரா பிடிப்பதற்கு வாட்டமாக இல்லையென்றால் படம் எடுக்கும் ஆர்வமே போய் விடும் கைக்கு அடக்கமாகவும்,பிடிப்பதற்கு சுலபமாகவும்,எல்லா கண்ட்ரோல்ஸும் சுலபமாக உபயோகிக்கும் படியும் இருக்கும் கேமராக்கள் பயன்படுத்துவதற்கு மிகவும் வசதியாக இருக்கும். அதுவும் கேமராவில் உள்ள LCD திரை எவ்வளவு பெரியதாக இருக்கிறது என்றும் பார்த்துக்கொள்ளுங்கள். பல கேமராக்களில் LCD திரை கேமராவோடு ஒட்டி இருக்கும்,ஆனால் சில கேமராக்களில் LCD திரையை தனியாக பிரித்து அங்கே இங்கே திருப்பிக்கொள்ளலாம். இதனால் பலவேறு கோணங்களில் நாம் கேமராவை திருப்பி படம் எடுத்துக்கொள்ளலாம்.
6.) SLR-ஆ?? Point and shoot-ஆ???
இது ரொம்ப பெரிய தலைப்பு மக்களே!! இது குறித்து தனியாக வேண்டுமானால் ஒரு பதிவு போடுகிறேன். ஷுட்டெர் ஸ்பீடு என்றால் என்ன,அபெர்சர் என்றால் என்ன,ISO என்றால் என்ன என்று நுணுக்கங்கள் தெரியாத பட்சத்தில் கற்றுக்கொள்வதற்கு ஒரு point and shoot வாங்கி பழகி விட்டு,பிறகு SLR வாங்கிக்கொள்ளலாம். இப்பொழுது வரும் சில high end point and shoot கேமராக்கள் இரண்டுக்கும் நடுவிலான குறையை நன்றாகவே தீர்க்கிறது என்று சொல்ல வேண்டும்.சிறிது காலம் point and shoot வாங்கி பழகினால் SLR வாங்கலாமா வேண்டாமா என்று உங்களுக்கே தெளிவாகிவிடும்.
புகைப்படக்கலை என்பது மிகவும் சுலபமான விஷயம் கிடையாது.அதில் பல ஏமாற்றங்கள்,சலிப்புகள்,எரிச்சல்கள்,உழைப்பு.விடாமுயற்சி எல்லாம் உண்டு.ஒரு நல்ல படத்தை பார்த்தால் அதன் பின் ஒளிந்திருக்கும் பல்லாயிரக்கணக்கான ஒத்துக்கப்பட்ட படங்கள் நம் கண்ணுக்கு தெரியாது.இதெல்லாம் மீறி உங்களுக்கு இந்த கலையில் ஆர்வமிருந்தால் மட்டுமே SLR வாங்குவது உசிதம்.
When in doubt ,get a high end point and shoot.
இப்படியாக கேமரா வாங்க வேண்டுமென்றால் நீங்கள் பல விஷயங்களை யோசித்து பார்க்க வேண்டும். உங்கள் தேவையை முதலில் தெளிவாக முடிவு செய்து கொண்டு இணையத்தில் நன்றாக மூழ்கி எழுங்கள்.கூகிளிருக்க பயம் ஏன்.
Dpreview போன்ற தளங்கள் உங்கள் தேடுதல் வேட்டையில் மிகவும் உபயோகமாக இருக்கும்
இத்தனையும் தேடி பிடிக்க பொறுமை/ஆர்வம் இல்லையென்றால் கீழே இருக்கும் கேமராக்கள் என்னுடைய சிபாரிசு.கேமரா உலகம் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கிறது.நான் தரும் இந்த பட்டியல் ,எனக்கு தெரிந்த வரை (எனக்கு தெரிந்தது மிகவும் குறைவு) இப்பொழுதைய நிலையில் வாங்கக்கூடிய கேமராகள்.
Point and shoot - Canon A630
High end point and shoot - Canon S5 IS.
DSLR
பையில துட்டு இருந்தால் - Nikon D80
கொஞ்சம் குறைவாக இருந்தால் - Canon rebel XTi or 400D(இது நான்/விழியன் வைத்திருப்பது)
இதற்கும் குறைவான விலை வேண்டுமென்றால்
Nikon D40X அல்லது Canon Rebel XT or 350D
இதுதான் இப்போதைக்கு தலைசிறந்த கேமராக்கள் என்றெல்லாம் நான் வாக்குமூலம் தாரவில்லை,நான் பார்த்தவரை என் நண்பர்களிடம் பார்த்த வரையிலும் இந்த கேமராக்கள் நம்பி வாங்கக்கூடியவை என்று பரிந்துரைக்கிறேன்.அவ்வளவுதான்!! :-)
எந்த கேமராவை வாங்குவதாக இருந்தாலும் ஒன்றிற்கு நான்கு விமர்சனங்களை இணையத்தில் தேடி பிடித்து படித்துவிட்டே வாங்குங்கள். :-)
இணையத்தில் வாங்குவதாக இருந்தால் தேடிப்பிடித்து நல்ல பேரம் தேடி பிடிக்கலாம்.இணையத்தில் வாங்குவதாக இருந்தால் வாங்கும் தளம் நம்பகமானதா என்று உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். (திரும்பவும் கூகிளிருக்க பயமேன்)
பதிவு பெரிதாகிப்போனதால் சில முக்கியமான விஷயங்களோடு நிறுத்திக்கொள்கிறேன்.உங்களுக்கு தோன்றும் கருத்துக்களையும் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்!! :-)

//நண்பர்கள் என்னிடம் புகைப்படத்துறை சம்பந்தமாக கேட்கும் பல விஷயங்களில் முதன்மையான கேள்வி
ReplyDeleteஎன்ன கேமரா வாங்கலாம்???
//
இப்படித்தான் ஒருத்தர் உன் கிட்ட அட்வைஸ் வாங்கி, பாவம் கடைசில கேமராவ தொலைச்சிட்டு ஊருக்கு வந்தாரு... ஹி..ஹீ..
(இத ஏன் இப்போ சொல்றேனு எல்லாம் கேக்கப்படாது...)
வழக்கம்போல நல்ல போஸ்ட்..
என்னோட சாய்ஸ் எப்பவுமே canon தான்...
my choice is always for nikon. best lenses are from nikon ( ofcourse next to leicar )
ReplyDeleteவழமைபோல நல்ல பதிவு
ReplyDeletecanon S3 IS இப்போதைக்கு. அப்புறமா D80 மாதிரி SLRக்கு தாவ உத்தேசம்.
dpreveiw நல்ல பக்கம். நண்பர்களுக்கு பரிந்துரைப்பது அந்த பக்கத்தைத்தான்.
If you are buying D-SLR you need to invest more to get good Lenses. Sometimes the Lenses cost more than the camera body.
ReplyDeleteA post with simple words for layman to understand.
ReplyDeleteBy the way,I checked pictures from both canon and sony cybershot series in equal MP capacity.
I found cybershot gives better pictures with vivid colours..
any comments?
My choice for low end is Sony. For image stabilization and picture clarity.
ReplyDeleteMy opinion on high end -- Lens plays a vital role. Body doesn't matter.
பயனுள்ள பதிவு.
ReplyDeleteசில லிங்க்குகள் தவறாக காண்பிக்கிறது.
நன்றி
மயிலாடுதுறை சிவா...
@K4K
ReplyDelete///வழக்கம்போல நல்ல போஸ்ட்..
என்னோட சாய்ஸ் எப்பவுமே canon தான்..///
வாழ்த்துக்களுக்கு நன்றி தல!! காசு இருந்தா கண்ணை மூடிக்கிட்டி நிக்கான் D80 வாங்கியிருப்பேன்.
நாம மத்திய வருமான குடும்பத்துல வளர்ந்ததால கம்மி விலையில என்ன இருக்குன்னே தான் மனசு எப்பவும் யோசிக்குது !!
ஹி ஹி!! :-D
@நிழற்படம்
லென்ஸ் மட்டும் இல்லாம. பிடிப்பதற்கு நிக்கான் கைக்கு அடக்கமாக வசதியாக இருப்பது போல் எனக்கு ஒரு எண்ணம்!!அதனால் தான் DSLR-களில் எனக்கு நிக்கான் ரொம்ப பிடிக்கும்
@சத்தியா
வாங்க சத்தியா!!
சீக்கிரமே DSLR வாங்கி பட்டைய கிளப்ப வாழ்த்துக்கள்!! (அதுக்குன்னு எங்க பதிவுல இருக்கற தமிழ்மண பட்டைய கிளப்பிட்டு போயிடாதீங்க!! :-D)
@செந்தில்நாதன்
நீங்கள் சொல்வது சரிதான் செந்தில்நாதன். கேமரா வாங்கிய பின் ஒவ்வொரு லென்ஸ்க்கும் யானை விலை ,குதிரை விலை கொடுத்து வாங்க வேண்டும்.
:-)
@அறிவன்
இரண்டு கேமராக்களிலும் ஒரே இடத்தில்,ஒரே ஒளி அமைப்பில் ,ஒரே ஆள் எடுத்த படங்களா அவை??
படம் நல்லா வருவதற்கு லென்ஸ் வடிவமைப்பில் ஆரம்பித்து பல காரணங்கள் இருக்கலாம்! :-)
MP-ஐ பொருத்த வரை நான் பட்திவில் குறிப்பிட்டிருந்ததை தவிர அதற்கும் படத்திற்கும் வேறு சம்பந்தம் கிடையாது. :-)
Canon S5IS is too good... I simply luv it...
ReplyDelete@காட்டாறு
ReplyDeleteமுற்றிலும் சரி!
சோனி நிறுவனத்தின் குவாலிடி கண்ட்ரோல் எல்லாம் உலகப்பிரசித்தம் ஆயிற்றே.
எனக்கு தெரிந்த ஒரு நண்பர் வைத்திருக்கும் சோனி கேமராவிலும் படங்களின் வண்ணம் கண்களை பறிக்கும்.
ஆனால் நண்பர்கள் பலர் கேனன் வைத்திருப்பதாலும்,அவர்கள் எல்லோருக்கும் அதில் திருப்தி இருபதாலும் அந்த மாடல்களை சிபாரிசு செய்தேன்.
:-)
@மயிலாடுதுறை சிவா
வாழ்த்துக்களுக்கு நன்றி சிவா!
சுட்டிகள் பிரச்சினையை சரி செய்து விட்டேன்!
சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி! :-)
தல,
ReplyDeleteநான் முன்னாடி Canon S2IS பயன்படுத்தினேன். அடுத்து Sony DSC H2. DSC H2 ~ Canon S3IS
ஆனா எனக்கு என்னுமோ கேனான் தான் பிடிச்சிருந்தது. இப்பக்கூட DSC H9 வாங்கலாமா இல்லை S5IS வாங்களாமானு பெரிய குழப்பம். கடைசியா S5IS வாங்கினேன்...
நல்ல பதிவு CVR.. நானும் கெனான் ரிபெல் எக்ஸ்.டி.ஐ தான் வைத்திருக்கிறேன்
ReplyDeleteகை வசம் ஏற்கென்வே ஒரு ஃபிலிம் காமிரா (Nikon FM2)+ லென்சுகள் (not Auto Focus lenses) இருக்கிறது. டிஜிட்டல் வாங்கினால் (body only) - என்னாகும்?
ReplyDeleteable to mount the lens onto the digital camera(D40). but when clicked ......nothing :(
any solution?
D 40X will accept AF-S and AF-1 அப்டின்னு பார்த்ததாக நினைவு. ஆனால் இந்த லென்ஸ் (series) நம்பர்களை எப்படித் தெரிந்து கொள்வது?
ReplyDeleteவீடியோ மற்றும் டிஜிட்டல் போட்டோ எடுப்பது போல் நல்ல கேமரா யாராவது பரிந்துரை செய்ய இயலுமா?
ReplyDeleteதருமி
ReplyDeleteManual Focus முயற்சி செய்து பார்த்தீர்களா ? இல்லை AF/MF இரண்டுமே வேலை செய்ய வில்லையா ?
ஏதேணும் Nikon forum கேட்டுப்பருங்கள். நி றிய Nikon குருக்கள் இருக்கிறார்கள். நிச்ச்யம் விடை கிடைக்கும். உதாரண்திற்கு
DPreview Nikon Forum
வணக்கம் அனைவருக்கும்.வேலைக்குப் போகும்போதும் வரும்போதும் பக்கத்து கதவு கெனான் வா!வான்னு கூப்பிட்டுகிட்டே இருக்குமுங்க!முன்னாலே அனுபவமில்லாம நிக்கான் பத்தி தெரியாம போச்சு.மார்க்கெட்டுல கெனானும்,நிக்கானுமே தாதாக்களுன்னு பேச்சு.இருந்தாலும் நம்மளுக்கு 35 எம்.எம் லயும் சரி தற்போதைய மாற்றங்களுக்கும் தோதா ஒரே லென்சுல ரெண்டு போட்டோங்கிற மாதிரி Pentax K10D.பெருசா படம் வேணுமின்னு ஜூம் லென்சையும் இணைச்சா CVR சொன்ன மாதிரி முக்காலி கட்டாயம் தேவைப்படுது.வித்யா அவர்களுக்கு சோனியில் 905E வீடியோவுடன் போட்டோவும் பிடிக்கிற மாதிரி இரு வசதி.இது ஒரு வருடத்துக்கு முந்தி.புதியன HD ஏதாவது வந்துள்ளதா பார்க்கவும்.
ReplyDeleteCVR! முந்தைய பின்னூட்டம் கொஞ்சம் நீளமானது போல் இருந்த்தால் மீண்டும் வருகிறேன்.அடுத்த பரிட்சைப் பேப்பர அவுட் பண்ணுங்க சீக்கிரம்.மாதப் பரிட்சையோட வாரத்துல குட்டிப் பரிட்சை ஏதாவது வைத்து மார்க் போட யோசனை பண்ணுங்களேன்.
ReplyDeleteஐயா தங்களுடைய இந்தப் பதிவு மிக நன்றாக இருந்தது. சமீபத்தில் எனக்கு வேண்டிய ஒருவரிடம் இதே கேள்வியைக் கேட்டேன். அவர் இவ்வளவு விவரமாகவும் அழகாகவும் எடுத்துச் சொல்லவில்லை. நீங்கள் மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றீர்கள். மிக்க நன்றி.
ReplyDeleteதல
ReplyDeleteவரும் ஆண்டு இந்தியாவுக்கு உலாத்தப் போகிறேன், புச்சா நல்ல காமரா வாங்கணும், எதை வாங்கணும்னு திணறும் போது "அழைத்தவன் குரலுக்கு வருவேன் என்றான்" போல் உங்க பதிவு
எங்ககிட்டே ஒரு சோனிதான் இருக்கு.
ReplyDelete7.2 MP. model DSC-P200.
இன்னும் கொஞ்ச நாளுக்கு இதைவச்சு ஓட்டணுமுன்னு இருக்கேன்.
முதல்லெ என் படம் எடுக்கும் லக்ஷணத்துக்கு இது போதுமா போதாதா? அதைச் சொல்லுங்க.
// Senthilnathan said...
ReplyDeleteIf you are buying D-SLR you need to invest more to get good Lenses. Sometimes the Lenses cost more than the camera body.
October 23, 2007 8:04 AM//
thats true.. quality of picture is always depends on quality of lens.
May be you are paying more money, but you wont regret after seeing the outcome.
-- i have Nikon D70 with 3 lens. but no regret on purchasing them. i get desired result most of the time.
//By the way,I checked pictures from both canon and sony cybershot series in equal MP capacity.
ReplyDeleteI found cybershot gives better pictures with vivid colours..
any comments?//
again depends on the setting. Like white balance is one of the main key. you cant compare photos taken in different place and lighting. If you need compare them, put them in same place and take same picture with same setting on both cameras.
In my opinion, canon is always better compared with Sony cameras.
//My choice for low end is Sony. For image stabilization and picture clarity.
ReplyDeleteMy opinion on high end -- Lens plays a vital role. Body doesn't matter.//
even for low end camera, i would suggest canon or nikon. if you are ready to spend lil more, then choose panasonic.
I have tried macro shots with sony low end ( even with medium level ) and with canon and nikon.
Nikon was producing amazing results. Canon also was giving better result but sony ? nah...
When you choose camera, look into all the aspects. Sony may looks like giving better result for portrait and landscape. Nikon or canon give much better result than sony. Macro capability also decides the quality of the lens.
Camera is always based on quality of the lens.
//தருமி said...
ReplyDeleteகை வசம் ஏற்கென்வே ஒரு ஃபிலிம் காமிரா (Nikon FM2)+ லென்சுகள் (not Auto Focus lenses) இருக்கிறது. டிஜிட்டல் வாங்கினால் (body only) - என்னாகும்?
able to mount the lens onto the digital camera(D40). but when clicked ......nothing :(
any solution?//
தருமி சார்.
நிக்கான் டி40 கேமரா பாடில மோட்டார் கிடையாது. அதனாலா மேனுவல் போகஸ் செய்யனும். எந்த நிக்கான் லென்ஸ் போட்டும் எடுக்கலாம். சாத்தியமே. ஆட்டோ போகஸ் வேண்டுமானால் நீங்கள் லென்ஸில் மோட்டார் பொருத்தியதாக பார்த்து வாங்க வேண்டும். ஃபிளிம் கேமராவில் எப்படி மேனுவலாக போகஸ் செய்தீர்களோ அப்படியே இதிலேயும் செய்யலாம்.
நிக்கான் டி40 - நல்ல தேர்வு. அருமையான கேமரா.
//எங்ககிட்டே ஒரு சோனிதான் இருக்கு.
ReplyDelete7.2 MP. model DSC-P200.
இன்னும் கொஞ்ச நாளுக்கு இதைவச்சு ஓட்டணுமுன்னு இருக்கேன்.
முதல்லெ என் படம் எடுக்கும் லக்ஷணத்துக்கு இது போதுமா போதாதா? அதைச் சொல்லுங்க.//
துளஸியக்கா...
ஓவியனுக்கு பெருமை தூரிகையாலா இல்லை அவனுடைய திறமையாலா ? சாதாரண நிகழ்வுகள் எடுக்க இந்த கேமரா போதும். அதிகப்படி ஆர்வம் வந்தால் அப்போ எஸ்.எல்.ஆர் வாங்கிக்கோங்க
good post!
ReplyDeleteNikon rocks, always :)
for point & shoot, i suggest Canon SD850 or like ones. I personally, hate Sony digital cameras.
for high-end, Nikon D80 is a very good choice. For lesser $s D40x would be ideal.
CVR, coule u help deciding on Ultracompact P&S Sony T200 vs Sony T100 vs Canon SD-870IS vs Panasonic DMX FX-55?
ReplyDelete@அனானி
ReplyDeleteஇதை பாருங்க!! :-) http://tinyurl.com/23aj52
மிக மிக தேவையான அருமையான பதிவு.
ReplyDeleteவிழியனுக்கு நன்றி. இந்த பதிவுக்கு வரவைத்ததற்கு.
புகைப்பட போட்டி நடத்துறீங்க.
உங்களிடம் ஒரு கேள்வி?
இருப்பதிலேயே அழகான படமெடுக்கும் விலையுயர்ந்த கேமராவை முதல் பரிசாக கொடுக்கும் முறையில் ஒரு போட்டி வைக்க முடியுமா?
(ஆனா, அந்த போட்டியில் எனக்கு தான் முதல்பரிசு கிடைக்கணும்:-)
ஆமாம். சொல்லிவிட்டேன். நான் போட்டியில் கலந்து கொண்டாலும், கலந்து கொள்ளாவிட்டாலும்)
அண்ணனிடம் ஆலோசனை செய்த பிறகு கேனான் A550 7MP வாங்கினேன், என்னையே அழகா படம் புடிக்குதுன்னா பார்த்துக்குங்களேன்.
ReplyDeleteமிக நல்ல பதிவு அண்ணாத்தே!!!
On&, நிழற்படம்,
ReplyDeleteஇருவருக்கும் நன்றி. முயற்சித்துவிட்டு வருகிறேன்.
கையில அவ்ளோ துட்டு இல்லாததுனாலா நெறைய ஆராய்ச்சிக்கு அப்புறம் வாங்குனது canon S3IS. அந்த கேமிரா ஏமாற்றவில்லை. Highend point and shoot -ல் மிக அருமையான கேமிரா. அதோட firmware hack கூட கெடைக்குது. ஒரிஜினல் firmware-ஐ அது தொடாது. top-up மாதிரி இந்த firmware S3-ல போய் உட்கார்ந்திரும். தேவைப்பட்ட லோட் பண்ணிக்கலாம் இல்லேன்னா firmware hack-a லோட் பண்ண வேண்டாம். இவ்ளோ நல்ல கேமிராலா RAW file கிடைக்கமாட்டேங்குதேன்ற கவலைய அந்த 3rd party firmware நீக்கிடிச்சி. RAW வசதியிருக்கிறதுனாலா white balance, contrast-ன்னு கவலையே பட்றதில்லை. RAW processing-ல எல்லாத்தையும் பின்னி பெடலெடுத்திறலாம். என்ன post processing-க்கு அநியாயத்துக்கு டைம் ஆகுது.
ReplyDelete6 MP-க்கு மேல எப்போவுமே நாம படாபடா பிரிண்ட் போடுவாமன்னு சந்தேகம் தான். சொல்லப்போனா 6MP அநியாத்துக்கு ஜாஸ்தி. ஜாஸ்தி MP-க்கு போன ஒரே அட்வாண்டேஜ் சூப்பரா cropping space கிடைக்கிறது தான்.
ReplyDelete@வெட்டி
ReplyDeleteஅதான் படப்பதிவுகளாக போட்டு கலக்குறீங்களே தல!
உங்க கேம்ராவிலே யாரு குறை கண்டு பிடிக்க முடியும்?? :-)
@கார்த்தி
நல்ல தேர்வு கார்த்தி! :-)
@தருமி!
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி தருமி ஐயா! :-)
@வித்யா
சட்டென கூறும் அளவுக்கு எதுவும் தெரியவில்லை வித்யா.இணையத்தில் தேடி/ஆராய்ச்சி செய்துதான் பார்க்க வேண்டும்.
@நட்டு
மாசத்துக்கு ஒரு போட்டி ஒழுங்கா நடத்திட்டு போறதே போதும் போதும்னு இருக்கு!!
இதுவே ரொம்ப அடிக்கடி நடத்தறோம்,இப்படியே போனா சுவாரஸ்யம் போயிடும்,கொஞ்சம் தள்ளி தள்ளி நடத்தலாமா?? அப்படின்னு ஒரு எண்ணம் சில பேருகிட்ட இருக்கு!! :-)
@ஜிரா
ரொம்ப நன்றிங்க! :-P
@கானா பிரபா
வாங்க தல!! மிக்க மகிழ்ச்சி!! சீக்கிரமே நல்ல கேமராவா வாங்கிட்டு கலக்குங்க!! :)
@துளசி டீச்சர்
வாங்க டீச்சர்!
நீங்க சொன்ன கேமராவே நல்லாதான் இருக்கும் போல தெரியுது! அதுலையே வித விதமா சுட்டு தள்ளுங்க!! தேவை தோனிச்சுன்னா வேற வாங்கிக்கலாம்.
@குசும்பன்
நன்றி குசும்பரே! :-)
@மதுமிதா!
இது உங்களுக்கே கொஞ்சம் டூ மச்சா தெரியல?? ;)
@அல்வாசிட்டி!
கருத்துக்களுக்கு மிக்க நன்றி விஜய்! மிக உபயோகமான கருத்துக்கள்!
ஊருக்கு போய் செட்டில் ஆகியாச்சா?? ;)
Olympus E-500 ரொம்ப சீப்பா கெடைக்கிதே. அதை நம்பி வாங்கலாமா ?
ReplyDelete@அனானி!
ReplyDeleteரிவ்யூ பாத்தா நல்லா இருக்க மாதிரி தான் இருக்கு.
இதை பாருங்க!
http://www.dpreview.com/reviews/olympuse500/page26.asp
இணையத்துல இன்னும் நல்லா தேடி பாருங்க!
எனக்கு தெரிஞ்சு யாரும் இதை வெச்சி இல்ல.
So I can only guess and my guess is as good as yours!! :-)
E-500 = $600
ReplyDeleteS5 = $339.49
இது நாள் வரை P&Sல மனித முகங்களையே படமெடுக்கும் எனக்கு எது சரியா வரும்னு தீர்ப்ப சொல்லுங்க சார்.
@அனானி
ReplyDeleteஇதுக்கு நிச்சயமா நாங்க பதில் சொல்ல முடியாது.
உங்கள் ஆர்வம் ,திறமை எல்லாவற்றையும் சிந்தித்து எடுக்க வேண்டிய முடிவு இது!
SLR-இன் தொடக்க விலை குறைவாக இருந்தாலும் அதை மேம்படுத்த நிறைய காசு கொடுத்து உபகரணங்கள் வாங்க வேண்டும்.
அதுவுமில்லாமல் அது தூக்கிக்கொண்டு அலைவது என்பது எல்லோருக்கும் சரி பட்டு வராது.
உங்களுக்கு இந்த கலையை நன்றாக கற்க வேண்டும் என்று ஆர்வம் இருந்தால் மட்டுமே SLR வாங்குங்கள்!
நல்ல படங்கள் எடுக்க வேண்டும் என்றால் point and shoot போதும்!
Its the photographer who shoots the photo and not the camera! :-)
///@மதுமிதா!
ReplyDeleteஇது உங்களுக்கே கொஞ்சம் டூ மச்சா தெரியல?? ;)///
ஆமாங்க. சாரி.
டென் மச்சா கூடத் தெரிஞ்சதுங்க.
ஆனா பின்னே எப்படிதான் படம் புடிக்கறதுல ஆர்வம் இருக்குங்கறத காட்டறது:-)
எனக்கு இன்னும் நகைச்சுவையா பேசத் தெரியலியோ?????
//E-500 = $600
ReplyDeleteS5 = $339.49
இது நாள் வரை P&Sல மனித முகங்களையே படமெடுக்கும் எனக்கு எது சரியா வரும்னு தீர்ப்ப சொல்லுங்க சார்.//
anony
if you are taking just portrait.. i would suggest you to stick with s5IS .. that would serve your request. it has very good zoom for nice portraits. unless you are keen in varieties SLR not that useful.
happy shooting
// மதுமிதா said...
ReplyDelete///@மதுமிதா!
இது உங்களுக்கே கொஞ்சம் டூ மச்சா தெரியல?? ;)///
ஆமாங்க. சாரி.
டென் மச்சா கூடத் தெரிஞ்சதுங்க.
ஆனா பின்னே எப்படிதான் படம் புடிக்கறதுல ஆர்வம் இருக்குங்கறத காட்டறது:-)
எனக்கு இன்னும் நகைச்சுவையா பேசத் தெரியலியோ?????///
madhumitha, nammukkulla irukkira oppandham CVR kku theriyathu. neenga vizhiyan kitta camera vaangi en kitta tharuveengalaam.. naan vaangippenaam...
adede... ragasiyaththa public la sollitteno ?
nanbare vanakkam. நானும் கெனான் ரிபெல் எக்ஸ்.டி.ஐ தான் (400D}வைத்திருக்கிறேன்
ReplyDeleteprabhakaran
நானும் கெனான் ரிபெல் எக்ஸ்.டி.ஐ தான் வைத்திருக்கிறேன் 400D
ReplyDeleteprabhakaran
what is your opinion about Panasonic Lumix DMC FZ8?
ReplyDeleteIt has leica lens. So I am planning to get it even though it is an old model.
I would personally prefer a Canon over a panasonic :)
ReplyDeletethats just me.
It looks like a pricey cam, but its rather cheap.
I glanced through the reviews and they all look positive.
if this is what your budget is <$260, go for it.
when you buy the SD card, you need to buy the one which is SDHC compliant for this camera -- read somewhere.
Did you look at the canon Pro S series?
Thought this info will be of help to some one. There is a deal for Canon Digital Rebel XT (350D) for $479.98 (no sales tax, free shipping in most of the states in US). The kit includes "Canon Lens EF-S, 18-55 mm, f/3.5-5.6"
ReplyDeleteSpecial offer : Order "Canon Lens EF 75-300mm f/4-5.6 III" for $99.88 (original price: 199.88)
http://www.vanns.com/shop/servlet/item/features/495999333?v_c=CJ&AID=10273773&PID=1240034
I have bought this package through my friend in US. I think this is very very cheap.
Hi All,
ReplyDeleteCame across this link from one of my friend. Great to see the photography stuffs in tamil.
regarding the camera's choice, it is upto the buyer's interest & economy as mentioned by the author.
I have got a Nikon D40 camera. I think it is a good camera for a affordable price. The kit lens(18-55mm) with this camera is very nice.
Again, I heard that Canon G9 is also doing great(a non DSLR), but with a lot of options.
Just have a look at this site, it can give you some ideas on what camera to purchase:
http://www.kenrockwell.com/tech/recommended-cameras.htm
Regards,
Suresh
அருமை
ReplyDeleteஇன்னும் நிறைய எதிர்பார்த்து
http://loosupaya.blogspot.com
today camera kaddayam vanka venum ena google la thedi unka blog parthan ... ippathan thnk panninan nalla camera vanka,, nan parththu 4 x zoom and 12.1 mp , today again online la order pannanum .. ok thanks for tips good bllog thanks again
ReplyDelete