Thursday, October 11, 2007

பந்திக்கு முந்திக்கோ

12 comments:
 
வணக்கம் வணக்கம் வணக்கம்!!
இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் மக்களே !!
ஏன்னு கேக்கறீங்களா?? அக்டோபெர் மாத போட்டிக்கு வந்த படங்களை எல்லாம் ஒரு தடவை ஆற அமர பாருங்க ! அப்புறம் ஏன்னு கேட்க மாட்டீங்க!! மக்கள்ஸ் எல்லாம் ச்சும்மா பட்டைய கிளப்பிட்டாங்க-ல!!!
ஒவ்வொரு படமும் அசத்தலா இருக்கு. இந்த பதிவின் நோக்கமே,நம்ம தமிழ் மக்கள் புகைப்படக்கலையில் நிறைய விஷயங்கள் கத்துக்கனும்,புதுசு புதுசா படங்கள் எடுத்து புதிய புதிய உத்திகளில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது தான்.அதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்த தான் மாதாமாதம் நாங்கள் நடத்தும் இந்த போட்டி.போட்டி,பரிசு என்பதெல்லாம் விட நான்கு பேர் கூடி புதிய விஷயங்களை தெரிந்துக்கொள்வதற்கான ஒரு மேடை என்று தான் இந்த போட்டியை நாங்கள் பார்த்துவந்திருக்கிறோம். அந்த நோக்கத்தை முழுவதும் நிறைவேற்றும் விதமாக இந்த மாத போட்டி அமைந்தது மிகவும் மகிழ்ச்சி. நேரம் செலவழித்து நீங்கள் படங்கள் சிறப்பாக அமைய வேண்டும் என்று மேற்கொண்ட முயற்சி ,உங்கள் படங்கள் ஒவ்வொன்றிலும் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
யார் கடைசியில் தேர்ந்தெடுக்க படுகிறார்களோ இல்லையோ,ஆனால் பங்கு கொண்ட அனைவரும் இங்கு வெற்றி பெற்றவர்கள் தான். எல்லா போட்டியிலையும் இத சொல்லி டென்ஷன் படுத்தினாலும் இந்த போட்டிக்கு இந்த விஷயம் சரியா பொருந்துங்க!! ஏன்னா உணவு புகைப்படக்கலை என்னும் ஒரு புது முயற்சியில் ஈடுபட ஒரு அருமையான வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக்கொண்டீர்கள்.இத்தனை அழகழகான படங்களில,் சிலவற்றை தான் நடுவர்களால் தேர்வு செய்ய முடியும் ஆனால் ஒன்றொக்கொண்று சளக்காத பல படங்களை இந்த போட்டியில் கண்டுள்ளோம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
நடுவர்களை பார்த்தால் தான் சிறிது பாவமாக இருக்கிறது. நல்ல வேளை நான் இப்பொழுது இந்தியாவில் இல்லையென்பதால் கொஞ்சம் நிம்மதியாக தூங்க முடியும்.ஜீவ்ஸ் அண்ணாத்த எதற்கும் ஜாக்கிரதையாக இருந்துக்கொள்ளவும்.இவ்வளவு கஷ்டமான வேலையில் அவர்களை மாட்டி விட்டதற்காக அவர்கள் என் மேல் கொலை வெறியில் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்!! :-)
நடுவர்களின் வேலை எவ்வளவு சிரமம் என்பது நமக்கு தெரியும் என்பதால் அவர்களுக்கு போதுமான நேரமும் ,ஒத்துழைப்பும் உற்சாகமும் தருவோம்.
15-ஆம் தேதிக்குள் முடிவு அறிவிக்கப்பட்டு விடும்.அதற்கு முன் நடுவர்களின் நேரமும் சௌகரியத்திற்கும் ஏற்ப ட்ரைலெர் பதிவுகள் வரலாம்.அந்த முடிவை நடுவர்களிடமே விட்டு விடுகிறேன்.
இப்போதைக்கு உங்க எல்லோருக்கும் எங்கள் மனம் கனிந்த நன்றியையும்,போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்களையும் கூறி விடை பெறுகிறேன்.
நன்றி வணக்கம்! :-)

12 comments:

 1. ஆமா ஆமா.. எல்லாமே பெஸ்டு பெஸ்ட்டா தெரியும்போது எப்படித்தான் இதுல வின்னர் தேர்தெடுக்க போறாங்களோ. எல்லாரையும் வின்னர்ன்னு அறிவிச்சிடுங்க. :-)

  ReplyDelete
 2. நன்றி CVR.

  இந்த மாதப் படங்கள் அனைத்தும் அருமை.

  நடுவர்களின் ட்ரெயிலருக்கும், தீர்ப்புக்கும் வெயிட்டிங்.

  ReplyDelete
 3. என்னுடைய கணிப்பில்
  1.நெல்லிக்காய்
  2.மாதுளம் பழ விதைகள்.
  எடுத்தவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. நீங்க சொன்னது போலவே வெற்றி முக்கியம் நல்ல... சில முயற்சிகள் செய்ய வாய்ப்பு கொடுப்பதே எனக்கு எல்லாம் பெரிய விசயம்....

  ஏன்னென்றால் சூடானில் போட்டோ எடுக்க தடை உள்ளது..

  ReplyDelete
 5. என்னையா collageல எல்லாம் ஒத்த படமா இருக்கு. மத்த படம் எங்கே. ஒரு ஆளுக்கு ரெண்டு படம் வீதம் மொத்தம் 40 படம். நடுவர்கள் காலிங்கறது மட்டும் நிச்சயம். ;-)

  ReplyDelete
 6. CVR,

  போட்டியாளர்களின் படங்களனைத்தும் அருமையாக இருக்கின்றன.

  நடுவர்கள் பாடு திண்டாட்டம் என்பதில் சந்தேகமில்லை.

  அடுத்த மாதத்திற்கான போட்டித் தலைப்பைத் தேர்ந்தெடுப்பதும் சவாலான விஷயமாக இருக்கப் போகிறது :-)

  நன்றி.

  ReplyDelete
 7. எங்கே அந்த அனானி வெறும் 4 பேருதான் இருக்காங்கன்னு சொன்னவர் ;-)

  \\அடுத்த மாதத்திற்கான போட்டித் தலைப்பைத் தேர்ந்தெடுப்பதும் சவாலான விஷயமாக இருக்கப் போகிறது :-)\\
  என்ன சுந்தர் இப்படி சொல்லிட்டீங்க.
  street, macro, night, architectue, travel, insects, birds னு எவ்வளவோ இருக்கே. எனக்கு் தெரிஞ்சு humourன்னு ஒரு தலைப்புல வச்ச நிஜமாவா பயங்கர சவாலா இருக்கும்.

  ReplyDelete
 8. அய்யாமார்களே.. மன்னிச்சுக்கோங்கப்பா... இந்த வலைப்பதிவாளர்கள் இப்படி போட்டோஸ் அனுப்பி கவுத்துடுவாங்கன்னு எனக்கு தெரியுமா என்ன ? அதான் 4 பேருன்னு சொன்னேன். எனக்கு அதிகம் பிடிச்ச வலைப்பதிவு இது... .. கூடிய சீக்கிறத்தில நானும் போடறேன்..

  20 பேர் பங்கெடுத்தாலும் முந்தைய போட்டிக்கு குறைவு தான்.. ஆனால் தரம்.... சூப்பர்.. சூப்பர்... சூஊஊஊஊப்பர்..
  ( சத்தியா குறிப்பிட்ட அதே அனானி )

  ReplyDelete
 9. pls andha biriyani photo anupinavarkitta receipe poda sollungalen pls.

  ReplyDelete
 10. சத்தியா

  //street, macro, night, architectue, travel, insects, birds னு எவ்வளவோ இருக்கே. எனக்கு் தெரிஞ்சு humourன்னு//

  இந்த மாதிரி கொஸ்டின் பேப்பர யாராச்சும் அவுட் பண்ணுவாங்கன்னுதான் அந்த மாதிரி சொல்லி வச்சேன்! ஹிஹி!

  ReplyDelete
 11. உணவப்பொருள்ங்கிறது தான் தலைப்புங்கிரதால நிறைய photos வராது. So, இந்த முறையாவது நம்ம பக்கம் காத்து வீசுத்தாண்னு பாக்கலாம்னு பாத்தா, எக்கச் சக்க fotos. கலக்குறாங்க மக்கள். எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. Numbers are being crunched.

  Results will be announced soon.

  how soon? I dont know yet.
  ;)

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff