களப்பணியாக, ஓட்டல் ஓட்டலாக அலைந்து திரிந்தவர்களுக்கும், அவரவர் தங்கமணியை தொந்தரவு செய்து பாராட்டுக்களுக்கு (?) நடுவே க்ளிக்கியவர்களுக்கும், மெகா சீரியலுக்கு மட்டுமின்றி புகைப்படபோட்டிக்கும் சேர்த்து கொஞ்ச நேரம் பட்டனி போட்டு போட்டி போட்ட அம்மணிகளுக்கும்,நாம் சமைத்ததை நாமே சாப்பிடாவிட்டால் & நாமே புகைப்படமெடுக்காவிட்டால் வேறு யார் செய்வார் என்று மனம்தளராத பேச்சிலர் உடன்பிறப்புகளுக்கும் நன்றி, நன்றி, நன்றி !!!!!
PiT குழுவினர் நடத்தும் புகைப்பட போட்டி அடுத்த கட்டத்தை அடைந்துள்ளது என்று சொல்லலாம். இந்த வலைத்தளத்தில் வரும் பாடங்களை படிப்பவர்களுக்கு, களத்தில் இறங்கி படித்ததை பயன்படுத்திப்பார்க்க வாய்ப்பாய் மட்டுமின்றி, மேலும் முயற்சிகள் செய்து பார்க்க படிப்பவர்களை ஊக்கமூட்டுவதாகவே செயல்படுகின்றது.
இதுவரை வந்த புகைப்பட தலைப்புகளும் சரி, புகைப்படங்களும் சரி, தங்களிடையே இருக்கும் தொகுப்பிலிருந்து ஒன்றை தேர்ந்தெடுத்து அனுப்புவதையே அதிகமாக கொண்டிருந்தது (என்னையும் சேர்த்துதான் ;-) , இதில், படித்ததை பயன்படுத்துதல் என்ற பேச்சுக்கே இடமின்றி போனது.
இம்முறை சர்வேசன்/ஆனந்த்/சிவிர்/நாதன் அவர்களின் தேர்வுகளில் "உணவு" என்ற தினமும் நாம் காணும் காட்சி தேர்வானது. அட உணவுதானே என்றில்லாமல் அதிலும் வித்தியாசங்கள் காட்ட தேவையானதை சிவிர்-இன் பதிவு சரியான நேரத்தில் அமைந்தது, பங்கேற்பாளர்களுக்கு போட்டியின் நோக்கத்தை புரியச்செய்தது.
பழைய புகைப்படங்களை எடுத்து போடும்போதே அசத்தும் நம் மக்கள், இம்முறை கற்றதை பயன்படுத்தி அசத்தியுள்ளார்கள். சென்ற முறை போன்று அதிக அளவில் போட்டியாளர்கள் இல்லாதபோதும் படங்களின் தரம் நடுவர்களின் தேர்வை சென்ற முறை போலவே கடினமாக்கியிருந்தது.
போட்டியாளராய் மட்டுமின்றி நடுவராக பணி புரிதலும் பல விஷயங்களை கற்றுக்கொள்ள வாய்ப்பளித்தது. முக்கியமாய் முதல் பத்து படங்கள் தேர்வு செய்தபோது கவனிக்கவேண்டிய விஷயங்கள், எதில் எல்லாம் சாதரண விஷயங்கள் என்று நினைத்திருந்தோமோ, அதில் எல்லாமும் கவனம் வேண்டும் என்பது ஒரு முக்கியமான பாடம்.
போட்டிக்கான இறுதிப்படங்கள் தேர்வு செய்யும் நிலையில் இருப்பதால், கொஞ்ம் சுவாரசியத்தை உண்டாக்க, இந்த டாப் ட்வெல்வ் + ஒன் புகைப்படங்கள். (அட இல்லிங்க, இதை தேர்வு செய்யும் போது கோர்ட் சூட் போட்டு நாற்காலியெல்லாம்... அந்த கூத்தெல்லாம் இல்லீங்க..) இதில் இருக்கும் வரிசை நிலை எதையும் குறிப்பதில்லை.
ஒவ்வொரு படங்களுக்கும் கமெண்டுகளை சேர்த்துக்கொண்டிருக்கின்றோம், சிறிது தாமதமானதுக்கு மன்னிக்கவும் மக்களே !!!!
விரைவில் முடிவுகளை !!! அதுவரை கெஸ் செய்வது ஒரு போட்டியாக நடக்கட்டுமே... சர்வேசன் ஒரு சர்வே ? ;-)
முதல் சுற்றுக்கு தேர்வானவை

சர்வே வருதோ இல்லயோ, என்னோட கணிப்பு:
ReplyDeleteநெல்லிக்காய், தக்காளி-வெள்ளரி, மீன் வறுவல்.
யாத்ரீகன்.. நம்மளை மறந்துட்டீங்களே..
ReplyDeleteகெஸ்வொர்க் நாங்களும் பண்ணலாமா :D ?
போட்டியின் நெருக்கம் அதிகரித்துள்ளது. எது சிறந்த படம்னு சொல்லத் தெரியலை. வருத்தம் மிகுந்த போதும், என்னிடம் ஈடுபாடு இன்னும் தேவை என்று உணருகிறேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள். வாய்ப்புக்கு நன்றி.
ReplyDelete// முகவை மைந்தன் said...
ReplyDeleteபோட்டியின் நெருக்கம் அதிகரித்துள்ளது. எது சிறந்த படம்னு சொல்லத் தெரியலை. வருத்தம் மிகுந்த போதும், என்னிடம் ஈடுபாடு இன்னும் தேவை என்று உணருகிறேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள். வாய்ப்புக்கு நன்றி.//
வருத்தங்கள் எதற்காக முகவை மைந்தன்..
உங்களின் இரண்டு படங்களில் இரண்டாவது படம் அழகு. கொஞ்சம் போஸ்ட் புரடக்ஸன் செஞ்சு போட்டிருந்தீங்கன்னா சூப்பரா வந்திருக்கும். உண்மையில் அந்த போட்டோ எனக்கு பிடித்திருந்தது.
அடுத்த போட்டிகளில் தவறாமல் கலந்துக்கோங்க.. சித்திரமும் கைப்பழக்கம்... புகைப்படமும் கூடத்தான்,.
/*Collapse comments
ReplyDeletePrakash G.R. said...
சர்வே வருதோ இல்லயோ, என்னோட கணிப்பு:
நெல்லிக்காய், தக்காளி-வெள்ளரி, மீன் வறுவல்.
*/
prakash, one of that picture is bit over exposed..
என்னோட போட்டோ :D ( ஆசை தோசை :)):)) )
ReplyDeleteகாபி + டோனட் அப்புறம் ..... சாப்பாட்டு தட்டு. இதான் என்னோட சாய்ஸ்
எதிர்பாராத காரணமாக நடுவர்கள் முடிவு வெளியிடுவது தாமதமாகியிருக்கிறது.ஆனால் இது போட்டியின் சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளது.
ReplyDeleteபங்களிப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வரியேனும் கமெண்ட் அளிக்க வேண்டும் என்ற நடுவர்களின் எண்ணம் பாராட்டுக்குரியது.அதற்கு தேவையான நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள்,ஆனால் முடிவை மட்டும் விரைவில் அறிவித்து விடுங்கள். :-)
தனக்கு இருக்கும் பிரச்சினைகளுக்கு நடுவே இந்த பதிவை எழுதி வெளியிட்ட யாத்திரீகனுக்கும் எங்க மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்!!
உணவைப் பற்றிய படம் என்பது பார்த்தவுடனே சாப்பிடத் தூண்டுவதாக இருக்க வேண்டும். அந்த வகையில் அந்த வெஜிடபிள் பிரியாணி படம் பார்க்கும் பொழுதே சாப்பிடும் ஆசையை தூண்டி பசியை அதிகமாக்கியது. அதை எடுதவர்க்கு பரிசு கிடைக்கிறதோ இல்லையோ இந்த கமெண்ட் போட்டால் மகிழ்ச்சியாக இருக்கும். அப்படியே அதன் செய்முறையயும் எழுதினால் மிகவும் சிற்ப்பாக இருக்கும். இல்லையென்றால் எந்த பதிவர் என்ற விவரம் கொடுத்தால் என்னைப்போல் கேட்க நினைப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.
ReplyDeleteஸ்ரீ
என்னோட கணிப்பு பிரியாணி + மீன் வறுவல்..படத்துல Composition அருமையா வந்துருக்கு!!
ReplyDeleteஆகா, போட்டிப்படங்களை காட்சிக்கு வைத்த அழகு சூப்பர்!
ReplyDeleteஅனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.பரவாயில்லையே!நானும் அழகுப் போட்டியில் இன்னும் முகம் சிரித்துக் கொண்டுள்ளேனே!இனி மார்கழி வரை இந்த பட அழகுப் போட்டியில் பின் வாங்குவதாக உத்தேசம் இல்லை.
ReplyDelete//இல்லையென்றால் எந்த பதிவர் என்ற விவரம் கொடுத்தால் என்னைப்போல் கேட்க நினைப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.
ReplyDeleteஸ்ரீ
//
it is there in the main announcement.
http://vazhakkampol.blogspot.com/2007/10/october.html
sadhanga is the person.
thnx
// நட்டு said...
ReplyDeleteஅனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.பரவாயில்லையே!நானும் அழகுப் போட்டியில் இன்னும் முகம் சிரித்துக் கொண்டுள்ளேனே!இனி மார்கழி வரை இந்த பட அழகுப் போட்டியில் பின் வாங்குவதாக உத்தேசம் இல்லை.//
அதென்ன மார்கழி வரை மட்டும்.. தொடர்ந்து எல்லா போட்டிகளிலும் பங்கு பெறுங்கள் நட்டு
அட நம்ம போட்டோ கூட இருக்கே... :)
ReplyDeleteநம்ம சகா விழியனின் இரு படங்கள், தல கைப்புள்ள படங்கள் வேற இருக்கே... இவங்க கூட நம்ம படம் வந்ததே பெரிய விசயம் ஆச்சே...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்....
கலக்கல். காத்திருக்கிறேன்.
ReplyDelete\\ஒரு வரியேனும் கமெண்ட் அளிக்க வேண்டும் என்ற நடுவர்களின் எண்ணம் பாராட்டுக்குரியது\\
வழிமொழிகிறேன்.
ரொம்பப் பசிக்குது! :-(
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.குறைவான படங்களா இருந்தாலும் எல்லாமே தரமான படங்களா இருந்தது.
ReplyDeleteஎன்னுடைய இரண்டு படங்களும் பட்டியல்ல பார்க்க மகிழ்ச்சியா இருக்கு, இது வேற மாதிரி மகிழ்ச்சி இரண்டு வெவ்வேறு உணவுகளை படம்பிடிக்கனும்னு முதலில் யோசிச்சு, தேர்வு செய்யும்போது இந்த இரண்டு படங்களும் எனக்கு பிடிச்சதால ,வேறு உணவுகளை எடுக்காமல் இரண்டயுமே அனுப்பிட்டேன்.
Please take part in testing Tamil Domain
ReplyDeletehttp://உதாரணம்.பரிட்சை/முதற்_பக்கம்/
http://உதாரணம்.பரிட்சை/தமிழ்
எனது வோட்டு....
ReplyDelete1. Sweater'ன் மேல் ஆப்பிள்.
2. Coffee with Donut
3. மீன் குளம்பு, சோறு
இப்படி மக்கள் கிட்ட கருத்து கணிப்பு நடத்தி, அதுல இருந்து முடிவை அறிவிக்க போறீங்கன்ணா, நெல்லிக்கயையும் சேர்த்துக்கொங்கப்பா... :-)
ReplyDeletehttp://in.groups.yahoo.com/group/chennaifoto/
ReplyDeleteஇந்த group'ல் போய் பார்க்கவும். நிறைய பெரிய தலைகள் எல்லாம் உள்ளார்கள். இந்த வார ஞாயிறு அன்று ஒரு அட்டகாசமான session நடந்தது. Fotografy'இன் basics'ஐக் கற்றுத் தந்தார்கள். எனக்கே கடைசி நேரத்தில் தான் தெரியும் என்பதால் update செய்ய முடியவில்லை. Anyway, ஒவ்வொரு மாதமும் முதல் வாரம் woodlands'ல் சந்திப்பார்ககளாம்.
Blog moderators'க்கு... இந்த comment'ஐ எத்தனை பேர் படிப்பார்கள் என்று தெரியவில்லை. எனவே, atleast அந்த link'ஐ மட்டுமாவது, ஏதாவது main post'ல் போட்டால் நன்றாக இருக்கும். :-)
Increase the font size in the blog content, it will be helpful like me who are all in later 60's
ReplyDelete@இளா
ReplyDeleteஇப்போ பரவாயில்லையான்னு கொஞ்சம் பாத்து சொல்லுங்க பெரியவரே!! :-P
@ஜீவ்ஸ்:
ReplyDeleteமன்னிச்சிருங்க ஜீவ்ஸ், அவசரமா பதிவு போட முயற்சி செய்ஞ்சதுல கை தவறிருச்சு.. :-(
@முகவை மைந்தன்:
நோ பீலிங்க்ஸ் :-) , இந்த முறை எதனால் மிஸ் செய்தோம் என தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாய் எடுத்துக்கொள்வோம்
@ஸ்ரீ:
கவலைப்படாதீங்க ரெஸிப்பி கிடைச்சிரும் :-D , ஜீவ்ஸ் , உங்களுக்கு பிரியாணி கிடைக்க ப்ராப்த்திரஸ்து ;-)
நெல்லிக்காயும், ஜெல்லி மிட்டாயும், மீனும், ஆப்பிளும் சூப்பர்
ReplyDeleteபோட்டியில் வெல்ல முடியவில்லை என்றாலும் ...
ReplyDeleteஸ்ரீ, உங்களோட ஆர்வம், பின்னர் என் வலைப்பதிவில் சிலரின் பின்னூட்டங்கள், இவற்றை நான் வெற்றியாகக் கருதுகிறேன். நீங்கள் கேட்ட படி ரெசிப்பி ரெடி.
http://vazhakkampol.blogspot.com/2007/10/blog-post_900.html
தொடர்ந்து போட்டிகள் நடத்தி, அதில் வெற்றி பெற PIT குழுவினருக்கு வாழ்த்துக்கள்.