Thursday, January 1, 2009

ஜனவரி 2009 போட்டி அறிவிப்பு.

103 comments:
 
எல்லோருக்கும் PiT குழுவின் சார்பில் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். சாமி கும்பிடும்போது “சாமீ ! எல்லாரையும் நல்லபடியா வச்சிரு, கூட்டத்திலே என்னையும் கொஞ்சம் நல்லா கவனிச்சுக்கோ" அப்படீன்னு சந்துல சிந்து பாடறதை கண்டுக்காதீங்க.. ஏதோ உங்க பேரை சொல்லி நாங்களும் எங்க அப்பளிகேஷனை தள்ளிவிட முயற்சிப்பண்றது தான்.

புத்தாண்டுன்னு சொல்லும்போதே எல்லாருக்கும் நினைவு வருவது "புத்தாண்டு வாக்குறுதி" தான். ஆனா என்னமோ பாருங்க சொல்லி வச்சாமாதிரி 3 -4 வாரம் தான் தாக்குப்பிடிக்க முடியுது. அதுக்கபுறம் தான் புத்தாண்டு பழசாயிடுதே!. அதனால, இனிவரும் 2009 ல் நீங்க என்ன செய்யப்போறீங்கன்னு கேட்டு உங்களை சங்கடப்பட்டுத்த வேண்டாம்ன்னு ஒரு அபிப்பராயம். சரி, இதுக்கும் இந்த மாத போட்டி தலைப்புக்கும் என்ன சம்பந்தம்ன்னு தானே பார்க்கறீங்களா... இருக்கே !!!

இயற்கையில் ஆரம்பிச்சு நிழல்கள் வரை போட்டி தலைப்பு வச்சு உங்களை மடக்கிடலாம்ன்னு நினைச்ச எங்களை நீங்க எல்லாருமா சேர்ந்து திக்குகுமுக்காட வச்சிட்டீங்க. ஒவ்வொரு போட்டி தலைப்பை தேர்ந்தெடுக்கும்போதும் சரி, நேர்த்தியான படத்தை அறிவிக்கும்போதும் சரி, கண்ணு முழி பிதுங்கிடும் எங்களுக்கு. சில நேரத்திலே பெருமிதமாகவும் இருக்கும் ஏன்னா, IAS collector டைய ரெண்டாம் கிளாஸ் வாத்தியாராட்டம் ஒரு பீலிங்... ( ~ என்னமோ இவரால்தான் IAS பாஸ் பண்ணினா மாதிரி). அதனால, நாம எல்லாரும் புகைப்படம் எடுக்கிறதிலே கடந்து வந்த பாதையை பார்க்கறா மாதிரி இந்த மாத போட்டி தலைப்பை வச்சிருக்கோம்.

போட்டி - தலைப்பு :- "இதுவரை நீங்கள் எடுத்த படத்திலே மிக நேர்த்தியாக இருப்பது" எதுன்னு உங்களுக்கு தோணுதோ.. அது / ஓபன் டாபிக்.
 • கமலஹாசன் சொல்லறாமாதிரி - “My best is yet to come” ன்னு நினைச்சீங்கன்னா... அந்த காட்சியை தேடி க்ளிக்கியும் அனுப்பலாம்
 • விருப்பப்பட்டா "ஏன்" அப்படீங்கரதை பதிவா போடுங்க ... படிக்கவும் , உங்கள் அனுபவத்தை தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கோம்.

படங்கள் அனுப்ப கடைசீ நாள் :- 15 Jan 2009 ( 23:59 hrs)
போட்டி விதிமுறை:-

 1. படங்கள் நீங்களே க்ளிக்கியதாக இருக்கவேண்டும் ( அந்த காலத்திலே எங்க தாத்தா எடுத்த படம் எல்லாம் அனுப்பக்கூடாது)
 2. படங்களை pitcontests.submit@picasaweb.com என்ற மின்னஞ்சலில் attachment ஆக அனுப்பவும். Please also CC photos.in.tamil@gmail.com. (Send the Picture as attachement only – DONOT email the picture URL, your entry will be rejected)
 3. உங்கள் பெயரை ப்டத்தின் பெயராக போட்டு அனுப்பவும் ( Eg Deepa.jpg, CVR.jpg etc ... Those without proper naming format will not be considered for the contest )
 4. ஒரு படம் மட்டுமே சமர்ப்பிக்கவும் , பின்னூட்டத்திலும் மறக்காமல் தெரிவிக்கவும். சரிபார்க்க ரொம்பவே உதவியாக இருக்கும்.
 5. ஒரு முறை படத்தை நிர்ணயித்து PiT க்கு அறிவித்துவிட்டால், எக்காரணத்தாலும் அதை மாற்ற முடியாது. ( இந்த தடவை தலைப்பு புரியலைன்னு சால்ஜாப்பு எல்லாம் சொல்லமுடியாதே :)) :)) !!)

என்ன ஓகேவா .... ஹ்ச் .. ஹச்... அட அதுக்குள்ளே பரணிலே ஏறி தூசி தட்ட ஆரம்பிச்சிட்டீங்களே ... சபாஷ். புகைப்படக் கண்காட்சி விருந்துக்கு நாங்களும் காத்துட்டு இருக்கோம். கலக்குங்க மக்களே.!

103 comments:

 1. நல்லா இருக்கு கான்செப்ட்!

  ஆசையாத்தான் இருக்கு டிரைப்பண்றேன் :)))

  ReplyDelete
 2. அருமையான தலைப்பு.என் மனம் கவர்ந்த படம் எது?தேடி அனுப்பி வைக்கிறேன்

  ReplyDelete
 3. வா ஆயிலு,

  சும்மா கலந்துக்கோப்பா... தினமும் கத்துக்கறோம். ஒவ்வொருப் போட்டியும் ஒவ்வொரு புது விதப் பாடம் தரும் இல்லையா ?

  கோமா மேடம். கண்டிப்பாத் தேடி அனுப்புங்க :)

  ReplyDelete
 4. தலைப்பு ரொம்பவும் யோசிக்க வைக்கிறது. எல்லாமே அவரவருக்கு நன்றாகத்தான் இருக்கும்.
  அதில் நல்லதாக தேர்வு செய்யவேண்டும். இணைய தளத்தில் முதல் முயற்சி.

  தனுஷ்

  ReplyDelete
 5. என்னப்பா இது எப்ப பாத்தாலும் நீங்களே தலைப்பை முடிவு பண்ணுங்கன்னு பொத்தாம் பொதுவா சொல்லி நழுவுறீங்களே! நான் இங்கே வந்த 4 மாசத்திலே இது ரெண்டாவது முறை!

  ஏதாவது ஒரு டெக்னிக்/ கருத்து பத்தி ஒரு பாடம் போட்டு அதையே போட்டியா வெச்சா உபயோகமா இருக்கும்! கத்துக்குட்டிங்க நாங்க கத்துப்போம்.

  விதி முறைகள் இப்ப தெளிவாகவே இருக்கு. அடிக்கடி மாத்தாம இப்படியே செந்தரமா (standard) வெச்சுக்கலாமா?

  ReplyDelete
 6. @Goma ,
  Eager to see your choice of pic

  ReplyDelete
 7. @thiva
  //என்னப்பா இது எப்ப பாத்தாலும் நீங்களே தலைப்பை முடிவு பண்ணுங்கன்னு பொத்தாம் பொதுவா சொல்லி நழுவுறீங்களே! நான் இங்கே வந்த 4 மாசத்திலே இது ரெண்டாவது முறை!//

  True, very true. But i guess you would also agree that we do get frequent requests to change the contest pic after submission, because "I have another choice, now i think this is better, i uploaded the wrong one ".. etc etc reasons.

  By allowing you to make the choice, we are trying to ensure that you develop an eye to spot the ones that qualify & discard the rest.

  A photograph could be "close to heart" ... because of the sentiments / anecdote attached to it. But that does not necessarily mean that it is could be the most awesome shot.. even by your own personal standards.

  We at PiT, are attempting to get you ( as in PiT readers ) spot this variation . This is a matter of perception and i believe this does not have any theory attached to it.So, its only by practice and looking at photographs from varied genre.

  We will be looking forward to see your choice of pic.

  Please pardon me for using english.My e-kalappi is not working. have to re-install again.

  ReplyDelete
 8. அட நல்ல தலைப்புத்தான். வம்பென்னன்னால்
  நமக்குத்தான் அது நாம் பெற்ற குழந்தை.

  :)
  எல்லோருக்க்கும் பிடிக்கணுமே!!முயற்சிக்கலாம்!!

  ReplyDelete
 9. 3.2 எம்பி பனோரமா படம் பரவாயில்லையா?

  ReplyDelete
 10. 3.2 Mb பனோரமா படம் பரவாயில்லையா?

  ReplyDelete
 11. // என்னப்பா இது எப்ப பாத்தாலும் நீங்களே தலைப்பை முடிவு பண்ணுங்கன்னு பொத்தாம் பொதுவா சொல்லி நழுவுறீங்களே!//

  இதுக்கு ஒரு ரிப்பீட்டு

  பிட்டுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்துக்கள்

  ReplyDelete
 12. // வல்லிசிம்ஹன் said...

  அட நல்ல தலைப்புத்தான். வம்பென்னன்னால்
  நமக்குத்தான் அது நாம் பெற்ற குழந்தை.

  :)
  எல்லோருக்க்கும் பிடிக்கணுமே!!முயற்சிக்கலாம்!!

  January 2, 2009 9:36 AM//

  :) true :) but when you are sending for competition, you would prefer to send the fittest one to win right ? ;)

  ReplyDelete
 13. நானும் அனுப்பிட்டேன்.

  வந்துதான்னு சொல்லுங்க ஜீவ்ஸ் சார்.

  ReplyDelete
 14. இந்த தலைப்பு தான் ரொம்ப கஷ்டமானதுன்னு நினைக்கிறேன், எந்தப் படத்த அனுப்பலாம்னு முடிவு பண்ணவே முடியலீங்கோ!

  ReplyDelete
 15. சஞ்சய்January 3, 2009 at 8:04 AM

  // என்னப்பா இது எப்ப பாத்தாலும் நீங்களே தலைப்பை முடிவு பண்ணுங்கன்னு பொத்தாம் பொதுவா சொல்லி நழுவுறீங்களே!//

  இதுக்கு ஒரு ரிப்பீட்டு //

  இதுக்கு இன்னொரு ரிப்பீட்டு.

  =====================================

  வரவர தலைப்பை தேடித் தேடி ஒரு வித சலிப்பு வந்துடுச்சி "பிட்" க்கு ன்னு நெனைக்கிறேன்.

  போன தடவ தலைப்பில வந்த குழப்பமும் அதைத்தான் காட்டுதோ?

  ReplyDelete
 16. @சஞ்சய்
  தலைப்புக்கு என்னங்க..ஆயிரம் தலைப்பு நம்மள சுத்தி கொட்டி கெடக்கு.அதுக்கு ஏத்தா மாதிரி படம் எடுக்கறது தானே கஷ்டமான விஷயம்.. :)

  புது வருஷம் தொடங்கிருச்சு இல்லையா...போன வருஷத்துல நாம எவ்ளோ நல்லா(?!) படம் எடுத்திருக்கோM.எங்கெல்லாம் சரி செஞ்சுக்கனும்,இன்னும் எப்படி நம்மளை சரி செஞ்சுக்கனும் அப்படிங்கற சுயபரிசோதனை செய்துக்கொள்ள உதவுமேன்னு தான் இந்த தடவை இப்படி. போன தடவை என்ன தலைப்புல வேணும்னாலும் எடுங்கன்னு தான் சொல்லியிருந்தோமே தவிர,புதுசா எடுங்கன்னு சொல்லியிருந்தோம்.இந்த தடவையும் உங்களுடைய படங்கள் எதுவும் உங்களுக்கு திருப்தியளிக்கவில்லை என்றால் புதுசா படம் எடுத்து அனுப்புங்க... :)

  ReplyDelete
 17. தீபா என் பங்களிப்பைக், காண ஆர்வமுடன் காத்திருப்பதை அறிந்ததும் நானும் என் கேமராவும் கொஞ்சம் புல்லரித்து நிற்கிறோம்.
  நான் எடுத்து பிடித்த படங்கள் பல ,உறவினரும் நண்பர்களுமாக இருக்கும் .அனுமதி கேட்க வேண்டும் .

  ReplyDelete
 18. நிஜமாகவே இது சவாலான போட்டி.பத்துக்குள் வந்தால் கூட பரவசம் அடைய வைக்கும்

  ReplyDelete
 19. அனைத்தும் நல்ல படம் தான். வீட்டில் ஓட்டேடுப்பு நடத்தி சிறந்ததை அனுப்பிவைக்கின்றேன்.

  வாழ்க வளமுடன்,'
  வேலன்.

  ReplyDelete
 20. திவா, பனோரமா அனுப்பலாம்.

  தவறை திருத்திடலாம் ;)

  ReplyDelete
 21. எடுத்த படத்திலே மிக நேர்த்தியாக இருக்கிறது
  என்ற எண்ணத்தில்
  எடுத்து அனுப்பி உள்ளேன்

  அன்புடன்
  திகழ்

  ReplyDelete
 22. சூ...ப்பர் தலைப்பு!! எதை எடுப்பது எதை விடுப்பது...இல்லை புதுசா எதை க்ளிக்குவது....ன்னு திக்கு முக்காட வெச்சுட்டீங்க. பொறுங்க.

  ReplyDelete
 23. @திவா,
  3.2MB file-a? அத, MS-Paint ல ஓபன் பண்ணி, save as பண்ணி, அதே பேருலயோ, அல்லது வேற பேருலயோ save பண்ணினா, 3.2 MB, வெரும், 500 KB-அ மாறிடும். கண்ணுக்குத் தெரியாத சில நிற மாற்றங்கள் ஏற்படும். ஆனா, கண்ணுக்குத் தான் தெரியாதே. அப்றொம் என்ன? :)

  அப்றொம், 23.99 கரெக்டு தானே? 23:99 தான் தப்பு :)

  ReplyDelete
 24. நன்றி திகழ்
  கூடிய விரவில் உங்கள் படங்களை பிகாசாவில் இருக்கும் பட-அணிவகுப்பில் சேர்க்கப்படும்.

  ReplyDelete
 25. வாங்க நானானி.
  பொறுமையா தேடி / க்ளிக்கி அனுப்புங்க. எங்களுக்கும் ஆர்வமா இருக்கு உங்க எல்லாருடைய படங்களை பார்க்க.

  ReplyDelete
 26. @திவா , Truth சொல்வது சரி தான், படத்தில் சில நுணிக்கமான மாற்றங்கள் இருக்கும் .. ஆனால் file size கம்மி ஆகும். அதனாலே நீங்களே நண்பர்களோடு கலந்துகிட்டு ரெண்டு படத்தையும் பார்த்து எது சிறந்ததுன்னு தேர்வு செய்து அனுப்புங்க...

  மறக்காதீங்கோ... ஒரு முறை அனுப்பியாச்சுன்னா.. அப்புறம் மற்ற முடியாது..

  ReplyDelete
 27. நானும் என்னுடைய புகைப்படத்தை அனுப்பிவிட்டேன்.


  வாழ்க வளமுடன்,
  வேலன்.

  ReplyDelete
 28. என் படத்தை அனுப்பியாச்சு!
  சுமார் 700 கேபி.
  என் வலைப்பக்கத்திலேயும் போட்டு இருக்கேன்.
  http://chitirampesuthati.blogspot.com/2009/01/blog-post_08.html

  ReplyDelete
 29. போட்டிக்காக பிளாக்ல ஒரு போஸ்ட் போடும் வேலை மிச்சம். ஆல்ரெடி போட்ட போஸ்ட் இருக்கு அதான் போட்டிக்கு .

  என் கண்ணுக்குள்ளும் நீதானடி கண்ணம்மா...

  ReplyDelete
 30. @நந்து,

  எனக்கு மிகவும் பிடித்தப் படம். படத்துல கண் பேசுது. வாழ்த்துக்கள். :)

  ReplyDelete
 31. I have sent my photo to run & win.

  Thanks
  Vennila Meeran

  ReplyDelete
 32. All the pictures are so good. Keep it up guys. All the best to all.

  ReplyDelete
 33. கடைசியா சேத்த படங்கள்லே பேர் இல்லை, யாருதுன்னு தெரியலை.

  ReplyDelete
 34. @திவா
  Done..:)
  Caption-ல இல்லனா More info-ல பாத்துக்கோங்க :)

  ReplyDelete
 35. Hi, i have sent a snap 2 days back and it didnt get uploaded yet. Size i sent was around 3gb. Is that a problem?

  Sorry, i am working out to learn typing in tamil

  regards,
  Boopathi

  ReplyDelete
 36. நான் அனுப்பிய புகைப்படம் கிடைத்ததா?
  --ரமேஸ்

  ReplyDelete
 37. இது வரை நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்..!

  இதோ இந்த மாதத்திலிருந்து உங்களோடு போட்டி போட இன்னும் ஒருவன் தயாரகிவிட்டேன்.

  நான் லத்தீப், சவுதியிலிருந்து...

  இந்த மாத போட்டிக்கு எனக்கு பிடித்த என் தோழனை அனுப்பி வைக்கிறேன்.

  என் தோழன் வெற்றி பொருவான் என்ற நம்பிக்கையோடு...
  உங்கள் தோழன்...
  லத்தீப்

  ReplyDelete
 38. //Size i sent was around ,3gb ,. //

  நெசமாவா?

  ReplyDelete
 39. ஓ... கொஞ்சம் உணர்சி வசப்பட்டுடேன்... 3 மெஹா பைட்ஸ்...

  ReplyDelete
 40. @Latheef
  உங்க படம் கெடைச்சிருச்சு.

  ரமேஷ் மற்றும் பூபதி
  உங்க ரெண்டு பேர் படமும் Drop box-ல இல்ல.
  தயவு செஞ்சு திரும்ப அனுப்ப முடியுமா?? :-)

  ReplyDelete
 41. நான் மீண்டும் அனுப்பிஉள்ளேன்...கிடைக்கவில்லையெனில் பின்னுட்டத்தில் தெரிவிக்கஊம்.
  பூபதி

  ReplyDelete
 42. Intha puthiyavanin Padathaium Etru kondamaikku.. Nantri

  Lovely Lathif

  ReplyDelete
 43. என்னுடைய படத்தை போட்டிக்கு அனுப்பியுள்ளேன். :)

  ReplyDelete
 44. நான் கைப்பிடித்தவள் குதித்துள்ள எனக்கு பிடித்த படத்தை அனுப்பியுள்ளேன்..

  நன்றி!!!

  ReplyDelete
 45. போட்டிக்கு என்னோட படத்தை அனுப்பிட்டேன். அதை இங்கேயும் பாக்கலாம்.

  http://www.flickr.com/photos/kaipullai/2839052726/

  நன்றி.

  ReplyDelete
 46. என்னையும் ஆட்டைல சேத்துக்கோங்கப்பு
  http://memycamera.blogspot.com/2009/01/january-open-pit.html

  ReplyDelete
 47. பழம் அனுப்பி இருக்கேன், பாருங்க.

  ReplyDelete
 48. நந்த குமார்January 13, 2009 at 9:05 AM

  எல்லாருக்கும் வணக்கம்,

  இது நான் கலந்துக்கற ரெண்டாவது போட்டி. நமக்கும் ஜெயி்க்கணும்னு கொஞ்சம் ஆசை இருந்தாலும், நிறைய கத்துக்க வேண்டி இருக்கு..
  அதுனால என்ன என்ன தப்பு இதுல இருக்குன்னு மொதல்ல சொல்லுங்க...

  ரொம்ப நன்றி...............

  ReplyDelete
 49. Enga veetukkaararum kachcherikku pona kathaiyaa - naanum onnu anuppiyirukkaen.

  ReplyDelete
 50. ennodathu anupiyaachu... vanthu sernthatha??
  -suresh babu

  ReplyDelete
 51. ennodathu anupiyaachu... vanthu sernthatha??
  -suresh babu

  ReplyDelete
 52. நானும் போட்டுட்டேன். எனக்குப் பிடிச்சதை. பாத்துட்டு சொல்லுங்கோவேன்.

  பிடிச்சது நிறைய இருக்கு. ஆனால் ஸ்கேன் பண்ணி அனுப்ப நேரமில்லை. ஆனாலும் விட்டுடுவோமா? அழகான தலைப்பாச்சே!!!!

  ReplyDelete
 53. நானும் படம் அனுப்பியுள்ளேன். இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் :) .

  நன்றி

  ReplyDelete
 54. என்ற போட்டாவ அனுப்பிட்டேனுங்கோவ்..செயிக்கிறமா , தோக்கறமாங்கறது வேற. நாலு பேரு பாத்து கருத்து சொன்னா நல்லதுதானுங்களே?

  ReplyDelete
 55. ஆஹா! இதுவரை வந்ததில் சிறந்ததில் என் "பூ மழையும்" பொழிந்துவிட்டதே!!!தை பிறந்தால் வழி பிறக்குமோ?

  ReplyDelete
 56. அடங்கப்பா ... இன்னும் என்னோடது பிகாசாவில் தெரியவில்லை .. நான் நேற்றே அனுப்பி விட்டேனே ... எனது போட்டிக்கான படம் இதுவே...

  http://karuvayan-karuvayan.blogspot.com/

  சரிபார்க்கவும் நடுவர்களே ...

  -கருவாயன் .


  agavillai

  ReplyDelete
 57. என்னுடைய புகைப்படம் வரலையா???

  ReplyDelete
 58. இந்த படத்தை தான் இம்மாத போட்டிக்கு அனுப்பி வைத்தேன்... :)

  ReplyDelete
 59. Karuvayan, RaamCM, unga photos add panniyaachu.

  everyone please verify and let us know if anything is missing.

  Please ensure photos.in.tamil at gmail.com is CCd when you send pics to pitcontests.submit@picasaweb.com

  ReplyDelete
 60. எனது படம் [தியான மண்டபம்] அனுப்பிவிட்டேன். பதிவு இங்கே!

  ReplyDelete
 61. போட்டிக்கு என்னோட படத்தை அனுப்பியுள்ளேன்

  nithya balaji

  ReplyDelete
 62. நான் நேற்றே அனுப்பிவிட்டேன். பிகாசாவில் இன்னும் வரலை.

  ReplyDelete
 63. Naanum anupiyachi

  Venky-iimsai

  ReplyDelete
 64. vera yaaraavadhu padam vittup poyirundhaa sollavum.

  i think we have it covered as of now.

  ReplyDelete
 65. என்னோடது என்ட்ரி ஆயிடுச்சு .. நன்றி

  -சுரேஷ் பாபு

  ReplyDelete
 66. நானும் அனுப்பிச்சாச்சு.... சுமாரா இருக்குன்னு நினைக்கிறேன்.. :))

  இதோ இதுதான்... http://images.kodakgallery.com/photos1969/9/72/91/46/65/0/65469172909_0_ALB.jpg

  ReplyDelete
 67. I have just added my picture!!!

  ReplyDelete
 68. போட்டிக்கான படங்களை அனுப்பி் வைத்தாகி விட்டது. நன்றி

  ReplyDelete
 69. updated all pics received so far. pls check.

  -Surveysan

  ReplyDelete
 70. This comment has been removed by the author.

  ReplyDelete
 71. Don't bother my previous comment and my pic' is ther in Picasa. Thanks.

  ReplyDelete
 72. அய்யா... நானும் அனுப்பிட்டேனுங்க.. தியாகச் சுடராம் மெழுகுவத்திச் சுடரை அனுப்பி இருக்கேனுங்க.. சாமிங்க நீங்க பார்த்து ஓட்டு போட்டுங்க... அடியேனுக்கு உங்க ஆதரவு தேவைங்க..

  ReplyDelete
 73. அய்யா.. சாமி.. நம்ம படம் இன்னும் Picasaவில் வரலங்கோ..

  ReplyDelete
 74. இங்கே உள்ள படத்தை அனுப்பியாச்சுங்க!

  ReplyDelete
 75. hi all,
  from this month onwards me too join with u in the contest.
  I had posted my entry. please confirm and comment.

  ReplyDelete
 76. நாமளும் களத்துலே எறங்கிட்டோம்லே :))

  நன்றி,வணக்கம்
  தமாம் பாலா

  Here is my entry. Thanks
  Dammam bala
  www.bala-win-paarvai.blogspot.com

  ReplyDelete
 77. ஒரு வழியாக படத்தை அனுப்பி விட்டேன்.செலெக்ட் பண்ணுவதற்குள் ,போதும் போதும் என்றாகி விட்டது.
  http://valluvam-rohini.blogspot.com/2009/01/blog-post_15.html#links

  ReplyDelete
 78. படம் அனுப்பியாகி விட்டது.வந்து சேர்ந்தமைக்குத் தகவல் சொல்லவும்

  ReplyDelete
 79. Hi,

  we have sent our contest entry file name is Prakash

  ReplyDelete
 80. let me also in here..

  take my photo too..

  ReplyDelete
 81. என்னவாயிற்று இம்மாதம்??? நிறைய படங்களில் பெயர் போடவில்லை.. ஒரு வேளை, நாங்களே படங்களில் பெயர் சேர்த்ததினால் நீங்கள் விட்டுவிடீர்களா???

  ReplyDelete
 82. Thanks all.. No more entry would be allowed now.

  Those who have sent already, please verify your photos and let us know if it is not showing up there. we will take a corrective measures.

  thanks
  Jeeves
  PiT

  ReplyDelete
 83. Ashok,

  Names were added and it is there now.

  thanks

  ReplyDelete
 84. பாடகிகளிடம்,”உங்களுக்குப் பிடித்த ராகம் எது?
  ‘என்று கேட்டால் எப்படி யோசிப்பார்களோ அப்படி யோசிக்க வைத்து விட்டது இந்த மாத போட்டி

  ReplyDelete
 85. I wonder why they still have pictures of animal cruelty and not taken off from this month contest.

  Is anybody listening? Council Members of PIT????

  Please do add some rules or do not add pictures which is not funny at all.

  ReplyDelete
 86. @Priya and others
  Opparee's pic has been moved out of the album as of now.

  ReplyDelete
 87. I request to change the orientation of my picture please1!

  ReplyDelete
 88. அப்படியே அந்த சரக்கு போடோவையும் கொஞ்சம் பாருங்களேன்... அது மட்டும் எப்படி எடுத்து கொள்வது ? அதில் கூட தான் ப்ளேட்டில் ஏதோ ஒன்ன வெட்டி போட்டு வைத்த மாதிரி இருக்கிறது ??
  நியாயமா இம்சை எடுத்த போடோவைவிட இந்த போடோவில் தான் அதிக தவறு இருப்பதாக தெரிகிறது ... சிகரட்,போதை ,இன்னும் பிற .. இது மட்டும் பிரியா அவர்களுக்கு தெரியாமல் போனது எப்படி? அதுவும் இல்லாமல் அதற்க்கு நடுவர் அவர்களே கமெண்ட் பண்ணினால் என்ன நியாயம் ? இது யாருக்கு எதிராகவோ அல்லது யார் சொல்லியோ இதை நான் எழுத வில்லை ... இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே..

  ReplyDelete
 89. அதற்க்காக நான் இம்சை எடுத்த போட்டோவை நியாய படுத்த வில்லை என்பதையும் தெரிவித்து கொள்கிறேன் ..

  மேலும் பிட் நல்ல முறையில் வளரும் இந்த வேளையில் சில கட்டுபாடுகளை கொண்டு வரவேண்டும் என்பதே என் அவா ...

  -சுரேஷ் பாபு

  ReplyDelete
 90. @Maddy
  உங்கள் படத்தின் Orientation மாற்றீயாகிவிட்டது.எப்பொழுதோ செய்திருக்க வேண்டும்....தாமதத்திற்கு மன்னிக்கவும்.

  ReplyDelete
 91. Karuvayan,

  As a people person I spoke for all and nothing personal against anyone. I only specified as animal cruelty and ther was no mention of anybody's name. I don't have to go thru' all the images when there are people who are the heads here have their job to do it.

  ReplyDelete
 92. @கருவாயன்
  தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி கருவாயன்.
  ஆல்பத்தில் இருந்து நீக்கப்பட்டது இம்சையின் படம் அல்ல,ஒப்பாரியின் படம்.அதுவும் தனியொருவரின் கருத்துக்காக அது நீக்கப்படவில்லை.பிட் அமைப்பாளர்கள் அனைவருக்கும் இந்தப்படம் கொடூரமாக தோண்றியதால் இது நீக்கப்பட்டது.இதற்கும் சரக்கு படத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.ஒப்பரியின் படம் நீக்கப்பட்டதற்கு காரணம் அது violent,bloody and disturbing.
  தயவு செய்து பின்னூட்டங்களில் தனிப்பட்ட தாக்குதலில் ஈடுபட வேண்டாம்.இதை பற்றி இனி ஏதும் குழப்பங்கள் வராமல் இருக்க,இனி இதை பற்றி வரும் பின்னூட்டங்கள் மட்டறுத்தப்படும்.இதை பற்றி உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் photos.in.tamil@gmail.com என்கிற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

  இது வரை பிட் போட்டிகளில் வரும் படங்களுக்கு பெரியதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதில்லை,அதற்கான அவசியமும் இருந்ததில்லை.இப்பொழுது வந்துவிட்டது என்று நினைக்கிறேன். :)

  ReplyDelete
 93. மன்னிக்கவும். இப்போதான் பார்த்தேன். equally disturbing. யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன். தயவு செய்து இதை வைத்து யாரும் விவாதங்களை கிளப்ப வேண்டாம்.

  நிச்சயமாக இப்படம் அதிர்ச்சி மதிப்பீட்டீற்க்காக அனுபப்பட்டதல்ல.பிட் குழுவினரும் மன்னிக்கவும்.

  ReplyDelete
 94. @ஒப்பாரி
  மன்னிப்பு அது இதுன்னு எல்லாம் பெரிய வார்த்தை ஏன் பேசறீங்க அண்ணாச்சி.
  நீங்கள் எங்களது போட்டிகளில் பல காலமாய் கலந்துக்கொண்டு வந்திருக்கிறீர்கள்.உங்களின் பல படங்கள் எங்களால் ரசிக்கப்பட்டும் விரும்பப்பட்டும் வந்திருக்கின்றன.இதனால் தான் படம் நீக்கப்பட்ட உடனேயே உங்களிடம் வேறு ஏதாவது படம் அனுப்ப முடியுமா என்று தனி மடல் அனுப்பியிருந்தோம்.முடிந்தால் வேறு படம் ஏதாவது அனுப்பி வையுங்கள் :)

  ReplyDelete
 95. no problem CVR. அடுத்த மாதம் பார்த்துக்கலாம் என்ன தொடர்ந்து 2 மாதம் கலந்துக்க முடியாம போயிடுச்சி :(

  ReplyDelete
 96. @ ஒப்பாரி.. மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் விளக்கம்.. hats off to ur sportsmanship..

  @ CVR.. தறம்பட ஒரு விவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்ததற்கு நன்றி..

  @ all.. இங்கு நடந்த விவாதம் தேவை இல்லாதது.. மறப்போம்.. ஆக்கபூர்வமாய் சிந்திப்போம்..

  நன்றி..

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff