Tuesday, January 27, 2009

ஜனவரி மாத போட்டி - முதல் மூன்று இடங்கள்

44 comments:
 
வணக்கம் நண்பர்களே!

இந்த தடவை முதல் மூன்று இடங்கள் தேர்வு செய்வது வழக்கம் போலவே ரொம்ப கடினமாத் தான் இருந்தது. இருந்தாலும் முதல் மூன்று தேர்வு செய்தே ஆகனும் இல்லையா.போட்டிக்கு வந்த படங்கள் எல்லாம் கவர்ந்திழுத்தாலும் எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி முதல் மூன்று இடங்களை பிடித்தவை கீழே!மூன்றாம் இடம் :

இந்த இடத்திற்கு பிரகாஷ், கோமா,ராம், அமல் மற்றும் MQN படங்களுக்கிடையே கடும் போட்டி.

இராமின் படம் HDR முறையில் எடுத்திருந்தால் இன்னும் அட்டகாசமாக இருந்திருக்கும்.

அமலின் படத்தில் வளைவுகளில் வெட்டி இருக்காமல் முழுதாய் இருந்திருக்கலாம். அப்படி இருந்திருந்தால் முதலிரண்டில் கண்டிப்பாக வந்திருக்கும்.

கோமாவின் படத்தில் வாயிலின் வளைவிற்கு மேலே இருக்கும் இடத்தையும் சேர்த்து எடுத்திருந்திருக்கலாம். அதை வெட்டி இருப்பது அங்கே எப்படி இருந்திருக்கும் என்று யோசிக்க வைத்து கோபுரத்தின் மீதான கவனத்தை சிதறடிக்கிறது. ஆனாலும் பைசா கோபுரத்தை இந்த கோணத்தில் பார்ப்பது இதுவே முதல் முறை. Nice framing and composition.
கடைசியில் வென்று மூன்றாம் இடத்தை பிடித்தது. MQN
Diff Composition இல் எடுத்திருந்திருந்தால் இன்னமும் நன்றாக வந்திருக்குமோ என்று ஒவ்வொரு கோணத்தையும் மனதால் யோசிக்க வைக்கிறது. மிகச் சரியான நேரத்தில் அழகாக எடுக்கப் பட்ட புகைப்படம். வாழ்த்துக்கள் MQN.இரண்டாம் இடத்திற்கும் முதல் இடத்துக்கும் இடையே போட்டி போட்டது இரு படங்கள். நிலாவின் புகைப்படமும் ( ராம் கவனிக்க : நந்துவின் படம் இல்லை. ) மற்றும் சங்கரின் படமும். சங்கரின் படம் நேர்த்தியாகவும், அழகுடன் இருந்தாலும் அழகுக் குவியலாய் உணர்ச்சிகளை அற்புதமாய் வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் உள்ளங்கவர் நிலாவை பின்னுக்குத் தள்ள இயலாமல் இரண்டாம் இடத்தில் நின்று விட்டது.

ஆக இரண்டாம் இடம் சங்கர் பாலசுப்ரமணியம். வாழ்த்துக்கள்.
சீக்கிறம் வைட் ஆங்கிலள் லென்ஸ் வாங்கி பட்டையைக் கிளப்ப வாழ்த்துக்கள் சங்கர்.முதலிடம் சொல்லித்தான் ஆகனுமா.. கண்டிப்பா நந்துக்கு இல்ல. நிலாவுக்குத் தான். அருமையா போஸ் குடுத்து அப்பாவை போட்டோ எடுக்க வைச்ச நிலாதான்.

முதலிடத்தைப் பெற்று வெற்றி பெறும் நிலாவிற்கு எங்களின் வாழ்த்துக்கள். அப்படியே அப்பாக்கும் போனாப் போறதுன்னு எங்க எல்லார் சார்பிலையும் நீயே ஒரு வாழ்த்துக்கள் சொல்லிடு நிலா.Flickr explorer ல் மொத்தம் 500 இடங்களில் இரண்டாம் இடத்தை பல வாரங்கள் தக்கவைத்திருந்தது இந்தப் புகைப்படம் வாழ்த்துக்கள் நந்து!Special mention :

பிரகாஷின் படம். முழுதாய் பார்க்கையில் நிறைய Post Processing செய்தது போலத் ( உண்மையில் இல்லை) தோன்றியதோ, அல்லது sharpness குறைந்ததா .. எதுவோ ஒன்று கவனத்தை சிதறடிக்கிறது. நல்ல கோணம். மேலும் பல படங்கள் சிறப்பாக எடுக்க வாழ்த்துக்கள் பிரகாஷ்.முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் புகைப்படம் எடுத்த விதத்தையும் அதை செம்மைப் படுத்திய விதத்தையும் பகிர்ந்துக் கொள்ளுமாறு குழுவின் சார்பிலும் பங்கேற்பவர்களின் சார்பிலும் கேட்டுக் கொள்கிறேன்.மீண்டும் அடுத்த போட்டியில் எல்லாரையும் சந்திக்கலாம். அடுத்தப் போட்டியிலும் அசத்த தயாரா இருங்க மக்கா!!44 comments:

 1. படங்களை தர வரிசைபடுத்துவதில் மிகவும் சிரமப்படுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.

  அருமையான செலக்சன்

  வெற்றியடைந்தவர்களை வாழ்த்த வயதில்லை. கற்றுக்கொள்கிறேன்
  (வாழ்த்த அல்ல, படம் எடுக்க)

  ReplyDelete
 2. முதல் இடம் பிடித்த நிலாவிற்கு நல்வாழ்த்துகள் - நந்து - சீக்கிரம் சுத்திப் போடுங்க - கண்ணு படப் போகுது - ஏற்கனவே பலமுறை பார்த்த படந்தான்.

  ReplyDelete
 3. அருமையான தேர்வு. முதல் மூன்று இடத்தைப் பிடித்தவருக்கும், மூன்றாம் இடத்துக்கு போட்டி போட்ட மற்றவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

  ReplyDelete
 4. HDR 'ஆ..? அடுத்த மாசம் போறப்போ எடுத்துறேன்.... :)

  MQN'தான் செம டப் கொடுத்தாரு... அவர் படத்தை முதலிலே பார்த்ததுமே டாப் 3'க்குள்ளே வரதுக்கு சான்ஸ் இருக்குன்னு நினைச்சேன் சரியா இருக்கு... :))


  //( ராம் கவனிக்க : நந்துவின் படம் இல்லை. )//


  நோ கமெண்ட்ஸ்... :)

  ReplyDelete
 5. எல்லாருக்கும் வாழ்த்துக்கள்'ப்பா... :)

  ReplyDelete
 6. அனைவருக்கும் வாழ்த்துக்கள் ;))

  ReplyDelete
 7. நன்றி நன்றி நன்றி.
  ஒரு வருசம் முன்னாடி எனக்கு ஒரு போட்டியில் முதல் இடம் கொடுத்து பித்துப்பிடிப்பதற்கான முதல் வித்தை விதைத்து இப்போ முத்திப்போகும் அளவுக்கு ஆக்கியது PIT தான் (டீ.ஆர் பாணில சொல்லியாச்சு.


  எல்லாப்புகழும் PIT டீமுக்கே.

  ReplyDelete
 8. Nice Selection !

  Congrats Winners !!!

  ReplyDelete
 9. ராம் ங்கொய்யால வாடி உன்ன தனியா கவனிச்சுக்கறேன் :P

  ReplyDelete
 10. நல்ல தெரிவுகள். வெற்றி பெற்ற மூவருக்கும் வாழ்த்துக்கள்!. முடிந்தால் அவர்கள் தளங்களையும் இணைத்தால் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 11. congratulations to all winners...

  special congrats to ullur kaarar..(nandhu)

  -karuvayan

  ReplyDelete
 12. எல்லா புகழும் நிலா நிலாவிற்கே,
  (நந்து) நீ நதி போல ஓடிக்கொண்டிரு
  :)

  Wishes for all participants!
  Congratulations for winners!!

  Waiting for the next one, ;)

  ReplyDelete
 13. Good selection from a tough fight.

  - Manivasagan..

  ReplyDelete
 14. Good selection from a tough fight.

  - Manivasagan

  ReplyDelete
 15. போட்டியில் மூன்றாவது படத்திற்கான தேர்வில் நுழைந்ததும் ஒரு வெற்றிதான்.
  ”மூன்றாம் இடத்துக்கு போட்டி போட்ட மற்றவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.”என்று குறிப்பிட்டு வாழ்த்திய ராமலஷ்மிக்கும் நன்றி

  ReplyDelete
 16. வெற்றி பெற்ற அனைத்து திறமைசாலிகளுக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
  நாளுக்கு நாள் புகைப்படங்களின் தரமும், புகைப்படக் கலைஞர்களின் ஆர்வமும் கூடிக் கொண்டே போகிறது.

  வாழ்க வளமுடன்
  வெண்ணிலா மீரான்

  ReplyDelete
 17. அனைவருக்கும் வாழ்த்துகள், நிலாவிற்கு சிறப்பு வாழ்த்துகள்! :-)

  ReplyDelete
 18. Congrats to all winners..:)

  முதல் பரிசு பெற்ற படம் என் வலைப்பதிவிலேயும் இருக்கு.. சொந்தக்கரங்க வேற.. அதனால நெறைய சந்தோஷம்...:))

  ReplyDelete
 19. க்ளிக் பண்ணுவதுற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் எத்தனை எத்தனை?
  பரிசு பெற்ற படங்களை ,அறிவித்ததோடு நில்லாமல்,இந்த படம் பரிசைத் தட்டிச் சென்றது எப்படி,தவற விட்டது எதனால் என்றும் விளக்கம் தந்து ,நாம் கற்றுக் கொள்ள வேண்டியவைகளையும் நமக்கு அழகாக உணர்த்துகிறார்கள் தேர்வுக் குழுவினர்.
  நன்றி

  ReplyDelete
 20. நன்றி எல்லாருக்கும். குறிப்பா இராமுக்கு. :)

  வெற்றி பெற்ற மற்றவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 21. வாழ்த்துக்கள். நல்ல தேர்வு. நெக்ஸ்டு மீட் பண்றேன் :)

  ReplyDelete
 22. // MQN'தான் செம டப் கொடுத்தாரு... அவர் படத்தை முதலிலே பார்த்ததுமே டாப் 3'க்குள்ளே வரதுக்கு சான்ஸ் இருக்குன்னு நினைச்சேன் சரியா இருக்கு... :)) //

  அதே அதே

  வெற்றிபெற்ற மூவருக்கும் போட்டியிட்ட அனிவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 23. நந்துனா ஜெச்சதுல டபுள் சந்தோசம்

  ஏன்னா அவர் முன்னாடியே சொல்லிருக்காரு அடுததடவ முதலிடத்துல வந்தா இங்க (ஈரோட்டுல) இருக்க ஓபன் ரெஸ்ட்டாரண்டுல டிரீட் கொடுக்கறதா சொல்லிருக்காரு.அதனால எல்லாரும் வந்திருங்க.
  நாள் வரும் சனிக்கிழமை மாலை (31.01.09)

  ReplyDelete
 24. // முதல் பரிசு பெற்ற படம் என் வலைப்பதிவிலேயும் இருக்கு.. சொந்தக்கரங்க வேற..//

  நான் முதல்லயே சொன்னமாதிரி சொந்தக்காரங்க வேறா

  அதனால அந்தன்னைக்கு ஆகுற சரக்கு செலவு என்னோடது.

  ReplyDelete
 25. //நந்துனா ஜெச்சதுல டபுள் சந்தோசம்

  ஏன்னா அவர் முன்னாடியே சொல்லிருக்காரு அடுததடவ முதலிடத்துல வந்தா இங்க (ஈரோட்டுல) இருக்க ஓபன் ரெஸ்ட்டாரண்டுல டிரீட் கொடுக்கறதா சொல்லிருக்காரு.அதனால எல்லாரும் வந்திருங்க.
  நாள் வரும் சனிக்கிழமை மாலை (31.01.09)//


  ennaal vara iyalatha karanaththaal bangalore kku parcel anuppavum

  ReplyDelete
 26. அய்யயோ சஞ்சய் உன்மனசுல என்ன இருக்குன்னு தெரியாம நாவேற 5 லிட்டர் பட்ட சாராயம் காச்ச ஆடர் கொடுத்துட்டேன்.

  ReplyDelete
 27. "அருமையாக போஸ்கொடுத்து அப்பாவை போட்டோ எடுக்க வைச்ச நிலாவுக்குத்தான் முதலிடம்"
  இது அருமையான candid படம். போஸ் என்றால் காமிரா பார்த்து இந்த எக்ஸ்ப்ரஷன் இருக்காது.
  அப்பாவுக்கு என் பாராட்டுக்கள்.
  இரண்டாம் இடம் படம் அருமை. கீழே வரை லைட் அழகாக இருக்கிறது.
  மூன்றாம் இடத்திற்கு உங்களை மிகவும் சிந்திக்க வைத்த பிரகாஷ், கோமா, ராம், அமல், MQN நால்வருக்கும் பாராட்டுக்கள்.
  சகாதேவன்

  ReplyDelete
 28. "அருமையாக போஸ்கொடுத்து அப்பாவை போட்டோ எடுக்க வைச்ச நிலாவுக்குத்தான் முதலிடம்"
  இது அருமையான candid படம். போஸ் என்றால் காமிரா பார்த்து இந்த எக்ஸ்ப்ரஷன் இருக்காது.
  அப்பாவுக்கு என் பாராட்டுக்கள்.
  இரண்டாம் இடம் படம் அருமை.கீழே வரை லைட் அழகாக இருக்கிறது.
  மூன்றாம் இடத்திற்கு உங்களை மிகவும் சிந்திக்க வைத்த பிரகாஷ், கோமா, ராம், அமல், MQN நால்வருக்கும் பாராட்டுக்கள்.
  சகாதேவன்

  ReplyDelete
 29. வெற்றியாளர்கள் மூவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!!நிலா அழகு முகம் காட்டிற்று.
  ஸ்பைரல் படிகள்....தலை சுற்றிற்று.
  அசையாச்சிறுவன் படம் வெற்றிப்படிகள் ஏறிற்று.

  ReplyDelete
 30. அடுத அறிவிப்புக்குக் காத்திருக்கோம்!

  ReplyDelete
 31. அட, ரொம்ப நன்றிங்க. சில படங்களுக்கு லைட்டிங், ஆங்கிள் எல்லாம் தானாவே சரியா அமைஞ்சிடற மாதிரியான படம் இது. படியில இறங்கப் போகும் போது கண்ல பாத்தத அப்படியே புடிச்சது தான். ஒரிஜினல் இங்கே http://flickr.com/photos/sankar/199166231/.

  பிற்சேர்க்கை : Gimp-Curves. அவ்ளோ தாங்க மேட்டர்.

  நிலா(சரி, நந்து), MQN இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  அமல், உங்க படமும் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.

  ReplyDelete
 32. வெற்றிப்பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்....

  நிலாவின் புகைப்படம் மிக அழகு..

  ReplyDelete
 33. //வால்பையன் said...

  படங்களை தர வரிசைபடுத்துவதில் மிகவும் சிரமப்படுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.

  அருமையான செலக்சன்

  வெற்றியடைந்தவர்களை வாழ்த்த வயதில்லை. கற்றுக்கொள்கிறேன்
  (வாழ்த்த அல்ல, படம் எடுக்க)

  //
  சீக்கிறம் வாங்கையா வந்து படமெடுத்து கலக்குங்க :)

  ReplyDelete
 34. cheena (சீனா) said...

  ராமலக்ஷ்மி said...

  Priya said...


  நன்றி பிரியா, ராமலக்ஷ்மி & சீனா சார்

  ReplyDelete
 35. இராம்/Raam said...

  HDR 'ஆ..? அடுத்த மாசம் போறப்போ எடுத்துறேன்.... :)

  MQN'தான் செம டப் கொடுத்தாரு... அவர் படத்தை முதலிலே பார்த்ததுமே டாப் 3'க்குள்ளே வரதுக்கு சான்ஸ் இருக்குன்னு நினைச்சேன் சரியா இருக்கு... :))


  //( ராம் கவனிக்க : நந்துவின் படம் இல்லை. )//


  நோ கமெண்ட்ஸ்... :)
  January 27, 2009 11:22 PM
  இராம்/Raam said...

  எல்லாருக்கும் வாழ்த்துக்கள்'ப்பா... :)
  //


  நன்றி ராம்.

  நம்ம கொரியர் என்னமோ சவுண்டு விட்டு இருக்காரே என்னான்னு கவனிக்கலையா ?

  ReplyDelete
 36. // January 27, 2009 11:23 PM
  கோபிநாத் said...

  அனைவருக்கும் வாழ்த்துக்கள் ;))
  //

  நன்றி கோபிநாத்

  நந்து f/o நிலா said...

  நன்றி நன்றி நன்றி.
  ஒரு வருசம் முன்னாடி எனக்கு ஒரு போட்டியில் முதல் இடம் கொடுத்து பித்துப்பிடிப்பதற்கான முதல் வித்தை விதைத்து இப்போ முத்திப்போகும் அளவுக்கு ஆக்கியது PIT தான் (டீ.ஆர் பாணில சொல்லியாச்சு.


  எல்லாப்புகழும் PIT டீமுக்கே.//

  அது சரி சட்டியில இல்லாமையா அகப்பையில வருது ?

  nathas said...

  Nice Selection !

  Congrats Winners !!!

  //

  நன்றி நாதாஸ்!

  January 28, 2009 12:24 AM
  நந்து f/o நிலா said...

  ராம் ங்கொய்யால வாடி உன்ன தனியா கவனிச்சுக்கறேன் :P
  ///


  :))

  ReplyDelete
 37. January 28, 2009 12:24 AM
  காரூரன் said...

  நல்ல தெரிவுகள். வெற்றி பெற்ற மூவருக்கும் வாழ்த்துக்கள்!. முடிந்தால் அவர்கள் தளங்களையும் இணைத்தால் நன்றாக இருக்கும்.

  //

  காரூரன்,
  ஏற்கனவே சொன்னது தான். மடலில் படங்கள் வருவதால் ( பெரும்பாலானவர்களின் ) அவர்களின் தளங்களின் முகவரி இல்லை. அடுத்த முறை சரி செய்ய முயல்கிறோம். நன்றி


  January 28, 2009 7:33 AM
  karuvayan said...

  congratulations to all winners...

  special congrats to ullur kaarar..(nandhu)

  -karuvayan

  // மறக்காம ட்ரீட் வாங்கிடுங்க :))

  ReplyDelete
 38. ஆனந்த் said...

  எல்லா புகழும் நிலா நிலாவிற்கே,
  (நந்து) நீ நதி போல ஓடிக்கொண்டிரு
  :)

  Wishes for all participants!
  Congratulations for winners!!

  Waiting for the next one, ;)
  //

  நன்றி ஆனந்த். விரைவில் அறிவிப்பு வரும்.


  January 28, 2009 10:21 AM
  Anonymous said...

  Good selection from a tough fight.

  - Manivasagan..
  January 28, 2009 10:25 AM
  Man in the MIRROR said...

  Good selection from a tough fight.

  - Manivasagan
  January 28, 2009 10:26 AM
  Man in the MIRROR said...

  Good selection from tough fight.
  January 28, 2009 10:27 AM

  // நன்றி மணிவாசகம். அடுத்தப் போட்டியிலும் கலந்துக்கோங்க.

  goma said...

  போட்டியில் மூன்றாவது படத்திற்கான தேர்வில் நுழைந்ததும் ஒரு வெற்றிதான்.
  ”மூன்றாம் இடத்துக்கு போட்டி போட்ட மற்றவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.”என்று குறிப்பிட்டு வாழ்த்திய ராமலஷ்மிக்கும் நன்றி

  // நன்றி கோமா மேடம்!!


  January 28, 2009 11:25 AM
  pearldroops said...

  வெற்றி பெற்ற அனைத்து திறமைசாலிகளுக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
  நாளுக்கு நாள் புகைப்படங்களின் தரமும், புகைப்படக் கலைஞர்களின் ஆர்வமும் கூடிக் கொண்டே போகிறது.

  வாழ்க வளமுடன்
  வெண்ணிலா மீரான்
  //

  வாங்க வெண்ணிலா மீரான். அது தானே நம் குழுவின் வெற்றி :)

  ReplyDelete
 39. திகழ்மிளிர், சஞ்சய், சந்தனமுல்லை, கார்த்தி, நனானி , MQN மற்றும் சங்கர் அனைவருக்கும் நன்றி

  ReplyDelete
 40. வெற்றியாளர்கள் மூவருக்கும் வாழ்த்துக்கள்!!!!
  வெற்றியாளர்களாக நான் தேர்வு செய்திருந்த மூவரும் அதே வரிசையில் வந்ததில் மிக்க மகிழ்ச்சி!!!

  //
  அமலின் படத்தில் வளைவுகளில் வெட்டி இருக்காமல் முழுதாய் இருந்திருக்கலாம். அப்படி இருந்திருந்தால் முதலிரண்டில் கண்டிப்பாக வந்திருக்கும்.
  //
  எடுத்ததே அவ்வளவு தான் Jeeves. zoom range-ல் மாட்டிக்கிட்டேன்:-(. no crops.
  //
  அமல், உங்க படமும் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.
  //
  //
  முதல் மூன்று இடத்தைப் பிடித்தவருக்கும், மூன்றாம் இடத்துக்கு போட்டி போட்ட மற்றவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
  //
  நன்றி சங்கர் & ராமலஷ்மி!!!

  ReplyDelete
 41. படங்கள் அருமை. முதலிடம் பெற்ற நிலாவிற்கு
  வாழ்த்துக்கள்.

  வாழ்க வளமுடன்,
  வேலன்.

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff