Wednesday, October 29, 2014

வணக்கம் பிட் மக்கா, நலமா? சமீபத்தில் இந்தியா சென்றிருந்த போது போட்டோ ஸ்டுடியோ வைத்திருக்கும் நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். போட்டோஷாப் குறித்துப் பேசிக்கொண்டிருக்கையில் அவர் என்னிடம், “சார் நாங்க எல்லாம் இங்க 5 நிமிடத்தில பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் எடுத்துக்கொடுக்கிறோம்னு பேச்சை ஆரம்பிச்சாரு, (என்னமோ கேட்கப்போறாருன்னு புரிஞ்சி போச்சு).


“போட்டோஷாப்பில போய் Face Retouch செய்து கொண்டு அப்புறம் அதை மாஸ்க் செய்துகிட்டு இருக்க சிரமமாக இருக்கிறது என்பதை விட அதிக நேரமெடுக்கிறது சார்”னு சொன்னாரு.

சரி அதுக்கு என்ன பண்ணலாம்?”ன்னு கேட்டேன்.

அதுக்கு இல்ல சார் எனக்கு நல்ல நீட்சி (Plug-in) ஆக இருக்கனும் Sliders மூலமாய் எளிமையா சீக்கிரமா வேலைய முடிச்சு பிரின்ட் பண்ணிடனும்”ன்னு கேட்டாரு.

“பொதுவா Portrait Retouch க்கு நிறைய நீட்சிகள் (Plug-Ins) இருந்தாலும் ஸ்டுடியோக்களை பொருத்தவரை பாஸ்போர்ட் சைஸ் படங்களுக்கு ஒண்ணும் பெரிய Retouch பண்ணனும்ன்னு அவசியமில்லை. கொஞ்சம் முகத்துக்கு Blur apply பண்ணிட்டு அத எளிமையா கண்ட்ரோல் செஞ்சிகிட்டா போதும் சார்னு கூறியதால எனக்கும் சற்று யோசனையாகவே இருந்தது, காரணம் எனக்கு Plug-Ins களில் போதிய அனுபவமில்லை என்பதால் சென்னையில் பணிபுரியும் நண்பர்களிடம் கேட்டேன், .“என்ன  iOS Devolopers கிட்ட வந்து Designing doubt கேட்டு நக்கல் பண்ணற”ன்னு சொல்லிட்டு,
“சரி எங்கஆபிஸ் டிசைனிங் டீம்ல கேட்டு சொல்லுறேன்”னு சொன்னாங்க
சொன்னமாதிரியே அவங்க team ஒரு டிசைனர் சொன்னதா சொல்லி “Portraiture னு ஒரு நீட்சி இருக்காம். அத யூஸ் பண்ணிக்க சொல்லு”ன்னு சொன்னாங்க.

சரி, ஒருத்தருக்கு சிபாரிசு செய்யறதுக்கு முன்னாடி நாம அதை சோதிச்சுப் பாக்கணுமில்லையா? பயன்படுத்திப் பார்த்தேன். அடnot bad ங்க.
மிகவும் எளிமையான User Interface, அனைத்து கன்ட்ரோல்களும் ஸ்லைடர்கள் கொண்டு நகர்த்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பு.


பொதுவாக Portrait, Modelling, Fashion photography சூழலில் பணி புரிகின்றவர்கள் ஒரு Portrait நல்லவிதமாக கொடுக்க Blemishes cleaning, Imperfections, Smoothing the Skin tone னு மணிக்கணக்காப் பணிபுரிவாங்க. இந்த நேரத்தை மிச்சப்படுத்த போட்டோஷாப்பிலோ அல்லது தானியங்கியாக இயங்கும் சில நீட்சிகள் (Plug-Ins) இருந்தாலும் அதில் இந்த Portraiture ம் தன் பணியை நன்றாகவும் எளிமையாகவும் செய்கிறது என்பதனை தெரிந்து கொண்ட பின்னரே இந்த கட்டுரையை உங்களுக்கு தருகிறேன்.

Skin Smoothing presetsகளையும் இதனுடன் வழங்கியுள்ளது அதாவது Normal, Medium, High, Glamour, High key மற்றும் low key.


மேலும், Auto mode டிலேயே Skin toning மற்றும் Skin Smoothing  அருமையாக செய்து தருகிறது. Auto Skin selection கூட குறைசொல்ல முடியாத அளவிற்கு மேம்படுத்தப்பட்டிருக்கிறது.


Sharpness,Softness,Brightness,Contrast னு கன்ட்ரோல்கள் இதிலேயே இருப்பதால் வெகு சீக்கிரத்தில் facial retouching செய்துகொள்ள ஏதுவாக இருக்கிறது.

கிழேயுள்ள படமானது Nikon D5100 இல் Nikkor 75-300 பழைய Fx லென்ஸை பொருத்தி மேனுவலாக நான் எடுத்தபடம்.

இந்த படத்திலிருக்கும் பாட்டியை Portraiture கொண்டு age defying செய்து அதே நேரத்தில் Skin Texture முழுவதும் நீக்கப்படாமல் பார்த்துக்கொண்டேன்.


ரிசல்ட் திருப்தியாக இருக்கிறதா என நீங்கள் தான் முடிவுசெய்துகொள்ளவேண்டும்.

அடுத்ததாக பிட் அட்மின் குழுவின் சக நண்பரான  திரு.ஆனந்த் விநாயகம் (Fashion Photographer) அவர்களிடம் இதுகுறித்து விவாதித்தபோது அவர் கிளிக்கிய ஒரு மாடல் படத்தை இக்கட்டுரைக்கு பயன்படுத்திக் கொள்ளும்படி தந்தார். நன்றி திரு.ஆனந்த் விநாயகம்.
அவரது படத்தை Portraiture இல் Retouch செய்ததன் வெளியீடு: 


© Anand Vinayagam
ஆக, Portraiture, டிஜிட்டல் ஃபோட்டோ ஸ்டுடியோ வைத்திருப்பவர்களும்,பேஷன்&மாடலிங் ஃபோட்டோகிராஃபியில் பணிபுரியும் கலைஞர்களும்  பயன்படுத்திப் பார்க்கலாம். ஆனால் விலைதான் சற்று அதிகம் 200 U.S டாலர்கள்...,எனினும் 30 நாட்களுக்கு trial ஆக பயன்படுத்திப் பார்க்கலாம்.


மேலும் விபரங்களுக்கு :

அன்புடன்:
நித்தி ஆனந்த்

Saturday, October 11, 2014

 ***வணக்கம் பிட் மக்கா நலமா? கேமரா வாங்கணும்னு நாம முடிவு பண்ணிட்டா முதல்ல என்ன தேவைக்காக வாங்குறோம் என்ன பட்ஜெட்ல என்ன பிராண்டு வாங்கனும்ன்னு நிறைய ஆலோசனை கேட்போம்கேமராக்கள் குறித்த review பார்ப்போம். ஆனா ஒரு மெமரி கார்டு வாங்குறதுக்கு நாம ஒண்ணும் பெருசா யாரிடமும் ஆலோசனை கேட்பதில்லை. காரணம் மெமரி கார்டுகளின் விலைகேமரா விலையோடு ஒப்பிட்டு பார்க்கையில்  ரொம்ப ரொம்பக் குறைவு.**

எனினும் இந்தப்பதிவின் மூலமாக  பிட் வாசகர்கள் மெமரி கார்டுகள் வாங்கும்போது மெமரி கார்டுகள் குறித்த சில தொழில்நுட்பத்தை தெரிந்துகொண்டு அதற்கேற்றாற்போல மெமரிகார்டுகளை தேர்வு செய்யவேண்டும் என்பதே எமது விருப்பம்.
பொதுவாக நாம் மெமரிகார்டுகள் வாங்க எலக்ட்ரானிக்ஸ் கடையை நாடுகிறோம் அவர்களும் என்ன தேவை என்று அறியாமல் மலிவுவிலையில் இருப்பதை நமக்கு தருவார்கள் நாமும் வாங்கிவருவோம்.(ex: Class4 or Class6 cards).

சரிஅப்படியே கேமரா கடைக்கு சென்று அங்கு மெமரிகார்டுகளை வாங்கும்பொழுது கடைக்காரர் நம்மிடம் கேட்பது உங்களது கேமரா மாடல், அதன்பின்னர் நம்மிடம் கேட்பது கேமராவில் படம் மட்டும் பிடிப்பீர்களா அல்லது வீடியோ எடுப்பீர்களா? படம் மட்டும் தான்னு சொல்லும் போது அவரும் விலை மலிவான கார்டே போதுங்கன்னு சொல்லி நம்மிடம் Class 4 or class 6  card கொடுப்பார். அல்லது வீடியோவும் எடுப்பேன் என்று சொல் லும்பொழுது, அப்படியென்றால் Class10 க்கு போய்விடுங்கன்னு சொல்லுவார் அப்போ போட்டோ என்றால் Class 4 என்றும் வீடியோ என்றால் Class 10  ஒரு வரைமுறை வச்சி இருக்காங்கன்னு தெரியுது.


சரி அதென்ன Class4,Class10? அதாவது மெமரிகார்டுகளின் வேகம் அல்லது திறன் பொதுவாக Class என்ற அலகில் குறிக்கப்படுகிறது அதாவது Class 4 மெமரிகார்டின் குறைந்தபட்ச எழுதும் திறன் 4MB/s ஆகும்.


சரி புகைப்படம் மட்டும் பிடிக்க Class 4 மட்டுமே போதுமானதுன்னு சொல்லுறாங்களே அது சரியா? சரி தாங்க ஆனா எல்லா நேரத்திலையும் சரி இல்லை!!! என்ன குழப்புறேனா??

நீங்க Single shoot மோட்ல ஒரே ஒரு Landscape அழகா படம் பிடிப்பேன், அதேமாதிரி நின்னு நிதானமா ஒரு ஒரு ஷாட்டா எடுப்பென்னு சொல்லுற புகைப்படக்கலைஞராக நீங்கள் இருந்தால்,உங்களுக்கு Class 4 மெமரிகார்டே போதுமானதாகும்.
#

ஆனால் நீங்கள் உங்களது கேமராவில் RAW பார்மேட்டில் Burst Mode (continous shoot) பயன்படுத்தி, பறக்கின்ற பறவைகளை நேர்த்தியாக படம் பிடிப்பேன். அதேபோல ஓடுகிற வண்டிய பேனிங் ஷாட்ல என்னோடு பிரேமிற்குள் கொண்டுவர முயற்சிப்பேன்னு சொன்னா அதுக்கு Class 4 கார்டு சரிப்பட்டு வராது.

#

#

#

பொதுவா நீங்க RAW பார்மேட்டுல தொடர்சியாக படம் பிடிக்கிறவங்களா இருந்தா (Burst mode) உடனே Class10 க்கு மாறிடுங்க. காரணம் Burst modeல் Class4 கார்டுகள் உங்களது கேமராவை Hang ஆக்கிவிடும்.

காரணம் ஒரு 15 மெகா பிக்ஸல் கேமராவில் jpg யில் படம் பிடிக்கும் போது படத்தின் அளவு சுமார் 5mb எம்பிகள் வரும்ஆனால் RAW வில் படம் பிடிக்கும் போது அதே படமானது சுமார் 15 mb அளவு வரும். ஆக இந்த டேட்டாக்கள் உங்களது மெமரிகார்டில் விரைவாக எழுதவேண்டுமென்றால் உங்களிடம் class10 வகை கார்டுகள் இருக்கவேண்டும் என்பது உங்களுக்கு இப்போது புரியும்.

ஒரு செய்தியை உங்களுடன் பகிருகிறேன். அதாவது நீங்கள் கிளிக் செய்யும் படமானது முதலில் கேமரா bufferல் சேமிக்கப்படும் அதன் பின்னரே மெமரிகார்டில் எழுதப்படும்.
#

நீங்கள் Burst modeல் தொடர்ச்சியாக படம்பிடித்துக்கொண்டிருக்கும் போது கேமரா bufferலிருந்து படம் வேகமாக மெமரிகார்டில் எழுதப்படவேண்டும்இல்லையேல் கேமரா buffer நிரம்பிவிட்டால் கேமரா hang ஆகிவிடும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
#

ஆக கேமரா hang ஆகாமல் வேகமாக படம்பிடிக்க விரும்பினால் கட்டாயம் நீங்கள் Class10 கார்டுகளை பயன்படுத்தவேண்டும்பொதுவாக Class 4 மெமரிகார்டுகளின் விலையக்காட்டிலும் Class10 வகை கார்டுகளின் விலை சற்று கூடுதலாகவே இருக்கும். அதுவும் Class10 ல் Ultra high speed கார்டுகளின் விலை இன்னும் கூடுதலாக இருந்தாலும்விலைமதிப்பில்லாத உங்களது புகைப்படங்களுக்காகத் தரமான மெமரிகார்டுகளை சற்று விலை அதிகம் கொடுத்து வாங்குவதில் தவறில்லை என்றே தோன்றுகிறது.

நன்றி 
என்றும் அன்புடன் 

நித்தி ஆனந்த்

Tuesday, October 7, 2014

வணக்கம்.

இந்த மாதப் போட்டிக்கு நீங்கள் கேமராவுடன் தோட்டத்துக்கோ, தோப்புக்கோ, சோலைக்கோச் செல்ல வேண்டும். இயற்கை அன்னையின் மடியில் உறங்குபவற்றைத் தொந்திரவு செய்யாமல் படமாக்க வேண்டும். இலை தளைகளுக்குள் ஒளிந்து கொண்டு சிரிப்பவற்றைக் குனிந்து நிமிர்ந்து கண்டு பிடிக்க வேண்டும். சூரியக் குளியலில் ஆனந்தித்திருப்பவற்றை கண்டு ரசித்துக் காட்சியாக்க வேண்டும்.  தலைப்பைப் பார்த்தால் புரிந்து விடும்.

கொய்யாத காய்கனிகள்

மாதிரிப் படங்கள்:

ராமலக்ஷ்மி
#
#
#

 #
#

#


படங்கள்: நித்தி ஆனந்த்

#
#

படங்களை அனுப்பும்போது File name மட்டுமின்றி மின்னஞ்சலின் subject_ லும் உங்கள் பெயர் இருக்கட்டும். அப்போதுதான் படம் ஆல்பத்தில் சேரும் போது உங்கள் பெயரும் தானாகவே அப்டேட் ஆகும்.

படங்கள் வந்து சேரவேண்டியக் கடைசித் தேதி: 20 அக்டோபர் 2014. 

போட்டி விதிமுறைகள் இங்கே .

**
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff