Sunday, January 17, 2016

 ***வணக்கம் பிட் மக்கா, நலமா? அனைவருக்கும் தைப் பொங்கல் பண்டிகைக் கால வாழ்த்துகள்!

இன்றைய கட்டுரையில் நாம் கேமரா உருவாக்கிக் தரும் கருப்பு வெள்ளை படங்களையும், வண்ணப்படமாக எடுத்து அதனை கருப்புவெள்ளையாக மாற்றம் செய்யும் படங்களை பற்றிய நிறை குறைகளை பார்க்கலாமா?
அதாவது முந்தைய காலத்தில் கருப்புவெள்ளை படங்களை எடுக்க அதற்க்கென சில பிலிம் ரோல்கள் உருவாக்கப்பட்டு அவற்றைக்கொண்டு கருப்பு வெள்ளை படங்களை எடுத்துக்கொண்டிருந்தனர்.ஆனால் இன்றைய டிஜிட்டல் உலகத்தில் இந்த பணியை செம்மையாக செய்ய நிறைய மென்பொருட்கள் இருக்கின்றன.


பொதுவாகவே கருப்பு வெள்ளை படங்கள் என்பது நம்மில் பலராலும் விரும்பப்படுகிறது என்பதனாலேயே இன்றைய நவீன கேமரா உலகில் பாயிண்ட் & ஷூட் கேமரா முதல் விலையுயர்ந்த புரொபஷனல் கேமரா வரை கருப்பு வெள்ளை மற்றும் செபியா படங்களை கேமராவே தயாரிக்கும் வகையில் சென்சார்களை வடிவமைத்துள்ளனர்.

சரி இப்போது நாம் விவாதிக்க இருப்பது அவ்வாறாக கேமராக்கள் உருவாக்கிக்தரும் கருப்பு வெள்ளை படங்கள் சிறந்ததா அல்லது வண்ணப்படமாக எடுத்து பின்னர் அதனை மென்பொருள் கொண்டு கருப்பு வெள்ளையாக மாற்றிக்கொள்வது நல்லதா என பார்க்கலாம்.

பொதுவாக கேமராக்களிலேயே Monochrome மோடில் படம்பிடிக்கும் போது உங்களது சென்சாரனது கலர் டேட்டாக்களை விட்டுவிட்டு வெறும் luminance information மட்டுமே தக்கவைத்துக்கொள்ளும். சுருங்கசொன்னால் "Grayscale"படம்.

நீங்கள் உங்களது கேமராவில் JPG பார்மேட்டில் படம்பிடிப்பவராக இருந்து கேமராவில் « Monochrome »மோடில் படம்பிடிக்கும் போது
படத்தினை கலரில் காணமுடியாது, பின்நாளில் இதே படத்தை கலரில் காண விரும்பினாலும் இயலாது.

அதேபோல கேமராக்கள் உருவாக்கித்தரும் « Grayscale » படங்கள் ஒரு  சாதராண கருப்பு வெள்ளை படமாகவே இருக்குமே தவிர தாங்கள் விரும்பிய வெளியீடுகளாக இருப்பதில்லை காரணம் உங்களது RED, GREEN, BLUE சேனல்கள் neutral செய்யப்பட்டிருக்கும்.

சரி ஒரு உதாரணம் :

கீழேயிருக்கும் படமானது என்னுடைய கேமராவில் Monochrome முறையில் எடுக்கப்பட்ட படம்,இங்கு எனது கேமராவே எனக்கு ஒரு கருப்பு வெள்ளை படங்களை Grayscale மோடில் உருவாக்கிக்கொடுத்துவிட்டது.


நான் இப்போது இதனை போட்டோஷாப்பில் திறந்து இப்படத்தின் RGB சேனல்களை பார்க்கிறேன்.இங்கு எனது மூன்று சேனல்களும் கிட்டதட்ட ஒரேமாதிரியான தகவல்களைக்கொண்டுள்ளது.


சரி அடுத்ததாக இதே படத்தை கலரில் படம் பிடித்திருக்கிறேன்.இதனை நான் போட்டோஷாப்பில் திறந்து இதே மூன்று சேனல்களை பார்க்கிறேன்.
இங்கு எனக்கு வெவ்வேறு மாதிரியான தகவல்களை எனது சேனல்கள் எனக்கு அளிப்பதால் என்னுடைய வெளியீட்டை நான் விரும்
பும் வகையில் அமைத்துக்கொள்ள இயலுகிறது.

உதாரணத்திற்கு,இந்தப்படம் நல்ல சூரிய ஒளியின் தாக்கத்தில் எடுக்கப்பட்டிருப்பதால் படத்தில் நாய்குட்டியின் ரோமங்கள் சற்று overexpose ஆகியிருப்பதை பார்க்கிறேன்.எனவே,அதனை சரி செய்ய என்னுடைய blue சேனலில் இருக்கும் கான்ட்ராஸ்டினை சேனல் மிக்ஸர் டூலைக்கொண்டு ஈடுசெய்து கொள்ள படத்தின் கான்ட்ராஸ்டு இங்கே கூடியிருக்கிறது.



பாருங்கள் கேமரா உருவாக்கித்தரும் கருப்புவெள்ளை படங்களை காட்டிலும் கலரில் படம்பிடித்து பின்னர் கருப்புவெள்ளையாக உங்கள் விருப்பத்திற்கேற்றவாறு மாற்றம் செய்யப்படும் படங்கள் இன்னும் கூடுதல் ஈர்ப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.


சில டிப்ஸ்கள் :

1.கருப்பு வெள்ளை படங்கள் எடுக்கபோகிறீர்களா? முதலில் கேமராவை "RAW" பார்மேட்டிற்க்கு மாற்றுங்கள் அல்லது "RAW+JPG" க்கு மாற்றுங்கள்.

2."RAW"வில் கருப்புவெள்ளையாக படம்பிடித்தாலும் போட்டோஷாப் அல்லது லைட்ரூமில் படத்தை திறக்கும் போது கலர் படமாகவே திறக்கும். RAW எடிட்டரில் இருக்கும் « Convert to grayscale » டூல் கொண்டு கருப்புவெள்ளை படங்களை உருவாக்கிக்கொள்ளலாம்.


3.போடோஷாப்பில் படத்தை திறந்து பின்னர் சேனல்களை ஆராய்ந்து பின்னர் Channel Mixer கொண்டு மூன்று சேனல்களையும் உங்களின் ரசனைக்கேற்ப மிக்ஸ் செய்து கொள்ளலாம்.

பிற்சேர்க்கை முடிந்ததும் கேமரா உருவாக்கித்தந்த கருப்பு வெள்ளை படத்தை நீங்கள் கன்வர்ட் செய்த கருப்பு வெள்ளையோடு ஒப்பிட்டு பாருங்கள் எது பிடித்திருக்கிறதோ அதனை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

நன்றி மக்கா,மீண்டும் மற்றுமொரு கட்டுரையில் சந்திப்போம்!!!

என்ரும் அன்புடன்,
நித்தி ஆனந்த்

Thursday, January 7, 2016

ராபின் ராஜ்:

#இ.வா.ப
https://www.flickr.com/photos/robinraj/23006307239/in/pool-pit-group/
வாழ்த்துகள் ராபின் ராஜ்!

சென்ற மாதத்தில் தேர்வான “இந்த வாரப் படத்துடன்”  இந்தத் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டியுள்ளது. பெரும்பாலானவர்களின் ஃப்ளிக்கர் பக்கங்களில் படங்களை நேரடியாகத் தரவிறக்கம் செய்யும் வசதி மூடப்பட்டிருக்கும் நிலையில் தகவல் அனுப்பி அனுமதி வருவதில் சில சிரமங்களும், தாமதங்களும் ஏற்படுகின்றன. வேறு வகையில் இதைத் தொடருவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

இதுவரையிலும், நேரம் எடுத்து படங்களை ஆராய்ந்து தேர்வு செய்து அளித்த சரவணன் தண்டபாணிக்கு PiT குழுவினரின் நன்றி!

**

மாதாந்திரப் போட்டிகளில் வரவிருக்கும் மாற்றங்கள் குறித்து புதிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
***

Wednesday, January 6, 2016

வணக்கம்!

வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

இந்த முறை போட்டிக்கு மிகக் குறைந்தளவு படங்களே வந்திருந்தன. ஆகவே, விரைவாக போட்டி முடிவுகள்.

மூன்றாமிடம்: Dinesh

இரண்டாமிடம்: Sabinkumar

முதலாமிடம்: Yamo.moya

வெற்றிபெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்! பங்கேற்ற அனைவருக்கும் நன்றி!
***
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff