Saturday, October 11, 2014

மெமரி கார்டு வாங்கபோறீங்களா? இத கொஞ்சம் படிங்க!

11 comments:
 
 ***வணக்கம் பிட் மக்கா நலமா? கேமரா வாங்கணும்னு நாம முடிவு பண்ணிட்டா முதல்ல என்ன தேவைக்காக வாங்குறோம் என்ன பட்ஜெட்ல என்ன பிராண்டு வாங்கனும்ன்னு நிறைய ஆலோசனை கேட்போம்கேமராக்கள் குறித்த review பார்ப்போம். ஆனா ஒரு மெமரி கார்டு வாங்குறதுக்கு நாம ஒண்ணும் பெருசா யாரிடமும் ஆலோசனை கேட்பதில்லை. காரணம் மெமரி கார்டுகளின் விலைகேமரா விலையோடு ஒப்பிட்டு பார்க்கையில்  ரொம்ப ரொம்பக் குறைவு.**

எனினும் இந்தப்பதிவின் மூலமாக  பிட் வாசகர்கள் மெமரி கார்டுகள் வாங்கும்போது மெமரி கார்டுகள் குறித்த சில தொழில்நுட்பத்தை தெரிந்துகொண்டு அதற்கேற்றாற்போல மெமரிகார்டுகளை தேர்வு செய்யவேண்டும் என்பதே எமது விருப்பம்.
பொதுவாக நாம் மெமரிகார்டுகள் வாங்க எலக்ட்ரானிக்ஸ் கடையை நாடுகிறோம் அவர்களும் என்ன தேவை என்று அறியாமல் மலிவுவிலையில் இருப்பதை நமக்கு தருவார்கள் நாமும் வாங்கிவருவோம்.(ex: Class4 or Class6 cards).

சரிஅப்படியே கேமரா கடைக்கு சென்று அங்கு மெமரிகார்டுகளை வாங்கும்பொழுது கடைக்காரர் நம்மிடம் கேட்பது உங்களது கேமரா மாடல், அதன்பின்னர் நம்மிடம் கேட்பது கேமராவில் படம் மட்டும் பிடிப்பீர்களா அல்லது வீடியோ எடுப்பீர்களா? படம் மட்டும் தான்னு சொல்லும் போது அவரும் விலை மலிவான கார்டே போதுங்கன்னு சொல்லி நம்மிடம் Class 4 or class 6  card கொடுப்பார். அல்லது வீடியோவும் எடுப்பேன் என்று சொல் லும்பொழுது, அப்படியென்றால் Class10 க்கு போய்விடுங்கன்னு சொல்லுவார் அப்போ போட்டோ என்றால் Class 4 என்றும் வீடியோ என்றால் Class 10  ஒரு வரைமுறை வச்சி இருக்காங்கன்னு தெரியுது.


சரி அதென்ன Class4,Class10? அதாவது மெமரிகார்டுகளின் வேகம் அல்லது திறன் பொதுவாக Class என்ற அலகில் குறிக்கப்படுகிறது அதாவது Class 4 மெமரிகார்டின் குறைந்தபட்ச எழுதும் திறன் 4MB/s ஆகும்.


சரி புகைப்படம் மட்டும் பிடிக்க Class 4 மட்டுமே போதுமானதுன்னு சொல்லுறாங்களே அது சரியா? சரி தாங்க ஆனா எல்லா நேரத்திலையும் சரி இல்லை!!! என்ன குழப்புறேனா??

நீங்க Single shoot மோட்ல ஒரே ஒரு Landscape அழகா படம் பிடிப்பேன், அதேமாதிரி நின்னு நிதானமா ஒரு ஒரு ஷாட்டா எடுப்பென்னு சொல்லுற புகைப்படக்கலைஞராக நீங்கள் இருந்தால்,உங்களுக்கு Class 4 மெமரிகார்டே போதுமானதாகும்.
#

ஆனால் நீங்கள் உங்களது கேமராவில் RAW பார்மேட்டில் Burst Mode (continous shoot) பயன்படுத்தி, பறக்கின்ற பறவைகளை நேர்த்தியாக படம் பிடிப்பேன். அதேபோல ஓடுகிற வண்டிய பேனிங் ஷாட்ல என்னோடு பிரேமிற்குள் கொண்டுவர முயற்சிப்பேன்னு சொன்னா அதுக்கு Class 4 கார்டு சரிப்பட்டு வராது.

#

#

#

பொதுவா நீங்க RAW பார்மேட்டுல தொடர்சியாக படம் பிடிக்கிறவங்களா இருந்தா (Burst mode) உடனே Class10 க்கு மாறிடுங்க. காரணம் Burst modeல் Class4 கார்டுகள் உங்களது கேமராவை Hang ஆக்கிவிடும்.

காரணம் ஒரு 15 மெகா பிக்ஸல் கேமராவில் jpg யில் படம் பிடிக்கும் போது படத்தின் அளவு சுமார் 5mb எம்பிகள் வரும்ஆனால் RAW வில் படம் பிடிக்கும் போது அதே படமானது சுமார் 15 mb அளவு வரும். ஆக இந்த டேட்டாக்கள் உங்களது மெமரிகார்டில் விரைவாக எழுதவேண்டுமென்றால் உங்களிடம் class10 வகை கார்டுகள் இருக்கவேண்டும் என்பது உங்களுக்கு இப்போது புரியும்.

ஒரு செய்தியை உங்களுடன் பகிருகிறேன். அதாவது நீங்கள் கிளிக் செய்யும் படமானது முதலில் கேமரா bufferல் சேமிக்கப்படும் அதன் பின்னரே மெமரிகார்டில் எழுதப்படும்.
#

நீங்கள் Burst modeல் தொடர்ச்சியாக படம்பிடித்துக்கொண்டிருக்கும் போது கேமரா bufferலிருந்து படம் வேகமாக மெமரிகார்டில் எழுதப்படவேண்டும்இல்லையேல் கேமரா buffer நிரம்பிவிட்டால் கேமரா hang ஆகிவிடும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
#

ஆக கேமரா hang ஆகாமல் வேகமாக படம்பிடிக்க விரும்பினால் கட்டாயம் நீங்கள் Class10 கார்டுகளை பயன்படுத்தவேண்டும்பொதுவாக Class 4 மெமரிகார்டுகளின் விலையக்காட்டிலும் Class10 வகை கார்டுகளின் விலை சற்று கூடுதலாகவே இருக்கும். அதுவும் Class10 ல் Ultra high speed கார்டுகளின் விலை இன்னும் கூடுதலாக இருந்தாலும்விலைமதிப்பில்லாத உங்களது புகைப்படங்களுக்காகத் தரமான மெமரிகார்டுகளை சற்று விலை அதிகம் கொடுத்து வாங்குவதில் தவறில்லை என்றே தோன்றுகிறது.

நன்றி 
என்றும் அன்புடன் 

நித்தி ஆனந்த்

11 comments:

 1. நல்ல பகிர்வு...
  புகைப்படங்கள் அருமை....

  ReplyDelete
 2. Please write good manual setting for iso , approchar , and shutter speed details for day light shooting and night light shoot

  ReplyDelete
 3. பயனுள்ள தகவல்கள்.

  என்னுடைய வலைப்பூவில்:

  மெமரி கார்டு |அரிய தகவல்கள்!

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff