Friday, May 30, 2008

PIT - ஜூன் 2008 - போட்டி அறிவிப்பு

97 comments:
 
எங்கள் இனிய பிட் நண்பர்களே!

உங்கள் பாசத்துக்குரிய கைப்புள்ள/சர்வேசன் பேசுகிறோம்.

மேடம் க்யூரி, எடியூரப்பா, ஸ்ரீசாந்த், கே.பி.சுந்தராம்பாள், டேனியல் க்ரேக், ராஜர் ஃபெடரர், சுனிதா வில்லியம்ஸ், CVR, அன்னை தெரசா, வெள்ளிக்கிழமை ராமசாமி - இதெல்லாம் என்னங்க? பெயர்கள் அல்லது பெயர்ச்சொற்கள்...இல்லையா?

இந்த பெயர்ச்சொற்களை நாம எல்லாரும் நியாபகம் வச்சிக்க காரணமா இருக்கறது இப்பெயர்களுடன் நாம் தொடர்பு படுத்திப் பார்க்கும் வினைச்சொற்கள் அல்லது அவர்கள் செய்த/செய்கின்ற செயல்கள்/வேலைகள். இந்த மாதம் மேலே சொன்ன மாதிரி பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் இணைத்து ஒரு புகைப்படம் எடுக்கனும். அது தான் போட்டி.

என்னடா தலைப்பு கொடுக்கச் சொன்னா தமிழ் இலக்கணம் பத்தி பேசறான்னு நெனக்கிறீங்களா? அதாவது பெயர்ச்சொல்லாகிய உயிரினம், வினைச் சொல்லாகிய தன் அன்றாட வேலையில் ஈடுபட்டிருப்பதை காட்ட வேண்டும். கவனிக்க "உயிரினம்"!!! - மனிதர்களாகவும் இருக்கலாம், மிருகங்களாகவும் இருக்கலாம். வேலை செய்யும் தாவரங்கள் எதுவும் இல்லைன்னே நெனக்கிறோம். அதுனால மனிதர்ஸ் அண்ட் மிருகம்ஸ் ஒன்லி.

கீழே இருக்கற சாம்பிள் படங்களைப் பாருங்க, உங்களுக்கே புரியும்.










போட்டித் தலைப்பு
அன்றாட வேலையினூடே ஒரு நாள் (A Day at Work) - அன்றாட வேலையில் ஈடுபட்டிருக்கும் உயிரினங்களைப்(மனிதர்கள்/மிருகங்கள்) ஒரு படத்துக்குள் கொண்டு வருதல்.

நினைவில் வைக்க வேண்டிய தேதிகள்
ஜூன் - 1 : போட்டித் தொடங்கும் தேதி
ஜூன் - 15 , 23:59 இந்திய நேரம் : போட்டி முடிவடையும் தேதி
ஜூன் - 25 க்குள் முடிவுகள் அறிவிக்கப்படும்

எப்படி தெரிவிப்பது / கலந்துக் கொள்வது ?உங்களின் வலைப்பூவிலோ அல்லது photo sharing இணைய தளம் "Flickr, Picsasa Web, Photobucket" போன்ற ஏதாவது ஒரு இடத்தில் படங்களை வலையேற்றி இந்தப் பதிவின் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். உஙகள் வலைப்பூவில் இருக்கும் முதல் புகைப்படம் இந்த போட்டிக்கு எடுத்துக்கப்படும்.

எந்த மாதிரி படங்கள் எடுக்கலாம்
1. குழந்தைக்குச் சோறூட்டும் தாய்
2. வீட்டுப்பாடம் எழுதும் பள்ளிச்சிறுவன்
3. ஆணி புடுங்கிக் கொண்டிருக்கும் உங்கள் சக ஊழியர்
4. வண்டியை இழுத்துச் செல்லும் மாடு
5. சோற்று பருக்கையைச் சுமந்து செல்லும் எறும்பு
6. யாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் மளிகை கடைகாரர்
7. பூவை முழம்போடும் பூ விற்கும் பெண்

மேலே உள்ளவை ஒரு சாம்பிளுக்காக மட்டுமே கொடுக்கப்பட்டவை. As always, the sky is your limit.

கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டியவை
அ. புகைப்படம் உங்களுடையதாக இருக்க வேண்டும. மற்றவரால் பிடிக்கப்பட்ட, உங்களை கவர்ந்த படம் போட்டிக்கு எடுத்துக்க கூடாது.

ஆ. புகைப்படத்தை எடுக்கும்போது date option ஐ disable பண்ணிடுங்களேன். அது நமக்கு தேவை இல்லை. EXIF ல அது இருக்கும்.

இ. subject அ கொஞ்சம் சரியாக align பண்ணுங்க

ஈ. Focus சரி பார்த்துக்கவும்

உ. முடிந்தால் பிற்சேர்க்கை செய்து பாருங்கள்

ஊ. நீங்கள் போட்டியில் சேர்க்கும் புகைப்படத்துக்குள்ளே உங்களுடைய signatureஐ இடுவதைத் தவிர்க்கவும். அப்படி இடுவதென்றால், படத்துக்கு ஒரு பார்டர் அமைத்து, பார்டர் அகலத்தில் உங்கள் signatureஐ இடுங்கள்.

ஊ. இத்தலைப்பைப் பொறுத்தவரை காட்சியமைப்புக்கு(Composition) முக்கியத்துவம் கொடுத்து படங்கள் எடுக்கவும். மேலே உள்ள சாம்பிள் படங்களில், முதலில் இருக்கும் ஜீவ்ஸ் அண்ணாச்சியின் டீ கடை படத்தைப் பாருங்கள். ஒரு பெண் டீ ஆற்றிக் கொண்டிருக்கிறார், படத்தின் பேக் க்ரவுண்டும், அருகே இருக்கும் பொருட்களும் எந்த விதத்திலும் "ஒரு பெண் டீ கடையில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருக்கிறார்" என்று அவர் சொல்ல வந்திருக்கும் விஷயத்திற்கு இடையூறு ஏற்படுத்தாமல், படத்திற்கு பலம் மட்டுமே சேர்ப்பதை பாருங்கள். உங்கள் படத்தையும் ஒருவர் பார்க்கும் போது அப்படத்தில் "ஒருவர் வேலை செய்து கொண்டிருக்கிறார், அது என்ன வேலை என்று சுலபமகாப் புரிந்து கொள்ளுதல், வேலையில் அவர் காட்டும் முனைப்பு, அவர் பயன்படுத்தும் சாதனங்கள்" இவை மட்டுமே கவனத்தில் நிற்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

எ. விஜய் ஜோடி நம்பர் ஒன்ல இந்த ஜட்ஜஸ்லாம் சொல்லுவாங்களே "இன்னிக்கு என் கவனம் எல்லாம் இவங்க மேல தான் இருந்துச்சு, அவரை இவங்க பாக்கவே விடலை" அந்த மாதிரி. உங்கள் படத்தைப் பார்ப்பவரின் கவனமும் வேலையில் ஈடுபட்டிருப்பவர் மீதே செல்லுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

ஏ. சும்மா உக்காந்துருக்கற நாயையோ, மனுசனையோ போட்டோ எடுத்துட்டு, இவுங்களோட அன்னாட வேலை சும்மா உக்காந்துருக்கறது தான்னு லந்து பண்ணப்பிடாது.

பிற்சேர்க்கைல என்னலாம் பண்ணலாம்?
நீங்கள் Pro user உபயோகிக்கும் Adobe CS3, GIMP போன்ற மென்பொருட்களை மட்டுமே எதிர் பார்க்காமல் lightroom, Piscasa போன்ற எளியவற்றை உபயோகிக்கலாம்
அ. Piscasa ல "I am Feeling Lucky" செய்து பாருங்கள்
ஆ. Rule of thirds கு உகந்த மாதிரி Crop செய்து பாருங்கள்
இ. புகைப்படம் அதன் உட்பொருளுக்கு ஏற்றவாறு நேர்க்கோணத்தில் அமைவது நன்று (Straighten the Photo according to the subject )
ஈ. "Selective Focus", "Selective Coloring" போன்ற நுட்பங்களை கையாண்டு புகைப்படத்தின் உட்பொருளை வெளிப்படுத்தலாம்.

இந்தத் தலைப்புல கலக்கலான படங்கள் வரும்னு எதிர்பார்க்கிறோம். ஆல் தி பெஸ்ட்!

The authors of this post wish to acknowledge the original works of the following Photographers, which have been showcased in this blog to inspire Photography enthusiasts.

1. Iyappan
2. Eflen001
3. Twobythree
4. Entrelec
5. Strandloper
6. Claude Renault
7. Ornellab

போட்டியாளர்களின் படங்களின் அணிவகுப்பு கீகீகீகீகீகீகீழே....:
...
....
.....
இன்னும் கீகீகீகீகீகீகீழே........
..
....










































































































































































































































1. இம்சை
2. Sankar
3. கவிதா/Kavitha
4. Jeeves
5. மணிமொழியன்
6. Ila
7. வாசி
8. வல்லிசிம்ஹன்
9. Amaan Abdullah
10. JackieSekar
11. கிரி
12. துளசி கோபால்
13. Peeveeclick
14. Newbee
15. ஆனந்த்
16. Boston Bala
17. Jil Jil
18. goma
19. Nathas
20. ரிஷான் ஷெரீப்
21. Athi
22. Sumathi
23. லக்குவண்
24. பாரிஸ் திவா
25. கயல்விழி முத்துலெட்சுமி
26. ராஜ நடராஜன்
27. நந்து f/o நிலா
28. Srikanth
29. சின்ன அம்மிணி
30. கௌசிகன்
31. பிரபு ராஜதுரை
32. ஒப்பாரி
33. T.Jay
34. Truth
35. Amal
36. MQN
37. நானானி
38. சூர்யா
39. ராமலக்ஷ்மி
40. கார்த்திக்
41. ஆயில்யன்
42. Shiju
43. நாமக்கல் சிபி
44. நிலாக்காலம்
45. Illatharasi
46. Geetha
47. Sathiya
48. Venkatesan PS
49. Kuttibalu
50. ஓவியா
51. Gokulan

97 comments:

  1. :-O இந்த முறை யோசிச்சே ஆகணும் போல.. கஷ்டம்தான்.. :-(
    அனைவருக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. சுத்தம்... நல்லா வெச்சீங்கையா தலைப்பு :(

    மண்டைய உடைச்சுக்க வைக்கப் போறீங்க.

    ReplyDelete
  3. //:-O இந்த முறை யோசிச்சே ஆகணும் போல.. கஷ்டம்தான்.. :-(
    அனைவருக்கும் வாழ்த்துகள்!//

    PIT போட்டியில கெலிச்சவர் இப்படி சொல்லலாமா? முயற்சி பண்ணுங்ணா
    :)

    ReplyDelete
  4. //சுத்தம்... நல்லா வெச்சீங்கையா தலைப்பு :(

    மண்டைய உடைச்சுக்க வைக்கப் போறீங்க//

    அட! என்னங்க இப்படி சொல்லிட்டீங்க. உங்க லெவல் தான் எங்களுக்கு தெரியுமே...ஆப் கா லெவல் அபீ பஹுத் ஊன்ச்சா ஹோ கயா :)

    டிரை செய்யண்டி!

    ReplyDelete
  5. //நிலாக்காலம் said...

    :-O இந்த முறை யோசிச்சே ஆகணும் போல.. கஷ்டம்தான்.. :-(
    அனைவருக்கும் வாழ்த்துகள்!

    May 30, 2008 3:13 PM//

    நம்மைச் சுற்றிய நிகழ்வுகள் வெகு சுலபமான விஷயம் தானுங்களே.

    கண்டிப்பா உங்களால முடியும்.



    ///நந்து f/o நிலா said...

    சுத்தம்... நல்லா வெச்சீங்கையா தலைப்பு :(

    மண்டைய உடைச்சுக்க வைக்கப் போறீங்க.///


    நந்தன்னே நீங்களும் இப்படிச் சொன்னா எப்படின்னே ? ஒரு படைப்பாளி வாய்ல இப்படி ஒரு வார்த்தை வரலாமா ? அதை இந்தப் பிட் மக்கள் கேட்கலாமா

    வெட்க்க்க்க்க்கம்ம்ம் !!!!! ( JustKidding )

    ReplyDelete
  6. ஏன்பா கைப்பு 1ம் தேதி தானெ போட்டி அறிவிக்கனும் இன்னைக்கே இம்சையெ குடுத்தா எப்படி... வழக்கம் போல நான் தானே மொத படம் போடனும்... சரி சரி வெயிட் பார் ஒன்லி 5 மினிட்ஸ்....

    ReplyDelete
  7. ரொம்ப ஈசியா இருக்கே...

    ReplyDelete
  8. வந்துட்டோம்ல வந்துட்டோம்ல .... http://iimsai.blogspot.com/2008/05/pit_30.html

    ReplyDelete
  9. நல்ல தலைப்பு!
    மிக நல்ல தலைப்பு!
    மிக மிக நல்ல தலைப்பு!

    இப்பாதைக்கு இப்படி எழுததான் முடியும்.ஏன்னா? இந்த ஊர்ல, ஒரு நாய்க்குட்டியப் படம் எடுக்கணும்னா கூட அது கிட்ட அனுமதி வாங்கணும்.ம்ஹூம்ம்ம்ம்.

    நல்ல தலைப்பு!
    ......:-O , :))))

    ReplyDelete
  10. //இம்சை said...
    ரொம்ப ஈசியா இருக்கே...
    //

    ஆமாம் இம்சை இது ரொம்ப ஈசியான பிட் போட்டி

    ஸோ நானெல்லாம் இதுல கலந்துக்கற மாதிரி ஐடியால இல்ல

    பிஐடி மக்கள்ஸ்க்கு அடுத்த தடவை நல்ல கஷடமா போட்டி வையுங்க அப்ப வர்றேன்

    இப்ப மீ த எஸ்கேப்பபு ( ஷ்ஷ்ஷ் அப்பாடா இந்த மாசமும் தப்பிச்சாச்சு ஜீவ்ஸ்க்கிட்ட ஈசியா இதை காரணமா சொல்லிடலாம்!)))

    ReplyDelete
  11. கைப்புள்ள
    //PIT போட்டியில கெலிச்சவர் இப்படி சொல்லலாமா? முயற்சி பண்ணுங்ணா
    :)/

    :-O சரிங்ணா :-S

    Jeeves
    //நம்மைச் சுற்றிய நிகழ்வுகள் வெகு சுலபமான விஷயம் தானுங்களே.

    கண்டிப்பா உங்களால முடியும்.//

    ஹிஹிஹி.. அது வந்து.. கேமராவை எடுத்து ரொம்ப நாளாச்சு.. :D போன ரெண்டு போட்டியிலும் முன்னாடி எடுத்து வச்சிருந்த படங்களை அனுப்பி ஒப்பேத்தியாச்சு. இப்போ மாட்டி.. :-(

    ReplyDelete
  12. //PIT போட்டியில கெலிச்சவர் இப்படி சொல்லலாமா?//

    கெலிச்சவர் என்றால் என்ன??!

    ReplyDelete
  13. நல்லா ஏத்தி வுடுறீங்க. நம்ம கைப்ஸ் சொன்னதுல ஹோகயான்னறது மட்டும்தான் புரிஞ்சுது.

    சரி வுடுங்க. எனக்கு ஒரே ஒரு தகவல் மட்டும் தான் வேணும். இந்த மாச தலைப்ப மொதல்ல சொன்னது மட்டும் யாருன்னு சொல்லிடுங்க.

    ReplyDelete
  14. இம்சை இதெல்லாம் அநியாயம்

    ReplyDelete
  15. சமைக்கிறது, பாட்டுப் பாடறது ,சாப்பிடறது
    இப்படி ஏகப்பட்ட வேலைகள் இருக்கே.

    சரி ஏதாவது கிடைக்கிறதா பார்க்கலாம்.
    மிக மிக நல்ல தலைப்பு.
    வாழ்த்துகள் பா எல்லோருக்கும்.

    ReplyDelete
  16. அட்டகாசமான, கவித்துவமானத் தலைப்பு.
    நானும் முயற்சிச் செஞ்சுப்பாக்கிறேன்.

    ReplyDelete
  17. தலைப்பு தூள்

    ---சும்மா உக்காந்துருக்கற நாயையோ, மனுசனையோ போட்டோ எடுத்துட்டு, இவுங்களோட அன்னாட வேலை சும்மா உக்காந்துருக்கறது தான்னு லந்து பண்ணப்பிடாது.---

    :)))

    ReplyDelete
  18. //சரி வுடுங்க. எனக்கு ஒரே ஒரு தகவல் மட்டும் தான் வேணும். இந்த மாச தலைப்ப மொதல்ல சொன்னது மட்டும் யாருன்னு சொல்லிடுங்க.//

    நம்ம கைப்ஸ்ன்னு போட்டு குடுத்துடுவேன்னு பாத்தீங்களா ? கம்பெனி சீக்ரெட் வெளிய சொல்ல மாட்டேன்பா!

    ReplyDelete
  19. //
    இப்ப மீ த எஸ்கேப்பபு ( ஷ்ஷ்ஷ் அப்பாடா இந்த மாசமும் தப்பிச்சாச்சு ஜீவ்ஸ்க்கிட்ட ஈசியா இதை காரணமா சொல்லிடலாம்!)))//


    சாரி ஆயில்யன்.. கையும் களவுமா பிடிபட்டாச்சு. இந்த தடவை நீங்க போட்டோ போட்டே தீரணும்..

    ReplyDelete
  20. நல்ல தலைப்பு .. இந்தாங்க நம்ம படம் ..
    http://flickr.com/photos/sankar/172431594/sizes/o/

    ReplyDelete
  21. எப்படியாவது வந்துடுவோமுல்ல!!!!
    கொஞ்சம் வெளியில் போய்த்தான் பாக்கணும்.கைவசம்....?

    ReplyDelete
  22. கைப்பூ -எப்படி இருக்கீங்க.. ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்க பதிவை பார்க்க நேர்ந்தது... இந்தபடம் சமீபத்தில் பிடித்தது -

    http://kavithavinpaarvaiyil.blogspot.com/2008/06/day-at-work.html

    ReplyDelete
  23. my entry ( not for contest tho' just to showcase )

    http://www.flickr.com/photos/iyappan/2544977180/


    thnx

    ReplyDelete
  24. newbee said:// இந்த ஊர்ல, ஒரு நாய்க்குட்டியப் படம் எடுக்கணும்னா கூட அது கிட்ட அனுமதி வாங்கணும்.ம்ஹூம்ம்ம்ம்.//

    அப்படி வாங்க வழிக்கு! அதான் போனவாட்டி 'பொம்ம'லாட்டம் காட்டினீங்களா புதுவண்டு?:)))!

    ReplyDelete
  25. நண்பர்காள்,

    படங்களை தொகுத்து ஒரு பட்டியலாக பதிவில் கூடிய விரைவில் ஏற்றிவிடுவோம்.

    கொஞ்சம் பி.ஜி.

    ReplyDelete
  26. My Entry (Entry க்கு தமிழ்ல என்னங்க?) இந்த இணைப்பில் உள்ள முதல் படம் மட்டும்:
    http://labtap.blogspot.com/2008/06/pit.html

    ReplyDelete
  27. //ராமலக்ஷ்மி said...
    newbee said:// இந்த ஊர்ல, ஒரு நாய்க்குட்டியப் படம் எடுக்கணும்னா கூட அது கிட்ட அனுமதி வாங்கணும்.ம்ஹூம்ம்ம்ம்.//

    அப்படி வாங்க வழிக்கு! அதான் போனவாட்டி 'பொம்ம'லாட்டம் காட்டினீங்களா புதுவண்டு?:)))!
    //

    ஹி..ஹி..உண்மை...வேற வழி.இந்த முறை,PIT-ல சொன்ன மாதிரி, தோட்டத்துல இருந்து இரண்டு எறும்பு, பிடிச்சிட்டு வந்து சோறு வைக்கப் போறேன்.:D :D :D :(

    ReplyDelete
  28. என்னோட பங்குக்கு இதோ
    http://vaasiyin-nizhal.blogspot.com/2008/06/pit.html


    வாசி

    ReplyDelete
  29. இது மக்கள் பார்வைக்கு ..

    http://www.flickr.com/photos/sankar/200032366/sizes/o/

    ReplyDelete
  30. இத்துடன் என் புகைப்படப் பதிவை அனுப்புகிறேன்.
    http://naachiyaar.blogspot.com/2008/06/blog-post_05.html
    இது ஜூன் மாதப் போட்டிக்கிப்பா.

    ReplyDelete
  31. சங்கர் அண்ட் இலா படங்கள் சூப்பர்!!!

    @ இலா
    அது நீங்களா?

    @ சங்கர்
    பின்னிட்டீங்க.....

    வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete
  32. Peace,

    I have added a new photo...after a long time. This one, I took when my husband was reading qur'an in the masjid...it was a serene atmosphere...hence i jus clicked it. i dunn if this suits t theme...cos unless i tell what he is doing n where..no one can realise..but if i tell tat speaks it fully...t same tas every masjid going person would do. lemme know if this is ok.

    here is the url http://www.flickr.com/photos/8604600@N05/2555949533/

    ReplyDelete
  33. http://jackiesekar.blogspot.com/2008/06/pit.html

    ஜுன் மாத புகை பட போட்டிக்கான படங்கள் இணைத்துள்ளேன் ஏதோ பாத்து உங்க கருத்துக்ளை சொல்லூங்க அப்பு...

    ReplyDelete
  34. நன்றி இல்லத்தரசி ..

    seeveeaar .. என்னோட flickr பக்கத்திலே உங்களோட comments'ku மிக்க நன்றி ..

    ReplyDelete
  35. இந்தாங்கோ நம்ப படம் போட்டிக்கு
    http://girirajnet.blogspot.com/2008/06/blog-post_07.html

    ReplyDelete
  36. இது நம்ம பிட்

    http://thulasidhalam.blogspot.com/2008/06/blog-post_09.html


    பின்னூட்டம் போடவே முடியலைங்களே........

    பொட்டியே வரமாட்டேங்குது!!!!

    ReplyDelete
  37. "Smugmug" is a good site to showcase, copyprotect and sell one's work!

    ReplyDelete
  38. ம். என்னுடைய பதிவு இங்கே.
    http://www.flickr.com/photos/peeveeads/2141407318/

    ReplyDelete
  39. சரி.. நண்பர்கள் வேண்டுகோளுக்கு இனங்கி... என்னுடைய புகைபடங்களை இனி போட்டிக்கு எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

    ReplyDelete
  40. வணக்கம்!

    அடித்துப் பிடித்து 'ஒரு' படம் தேத்திவிட்டேன்.துளசி டீச்சர் சொன்ன மாதிரி, ஒரு இருத்தலின் அடையாளம்' தான் :)))).நன்னி டீச்சர்!

    http://naanpudhuvandu.blogspot.com/2008/06/pit.html

    ReplyDelete
  41. PiT குழுவினருக்கு,
    நான் ஒரு புகைப்படத்தை ஏற்கனவே போட்டிக்கு அனுப்பியுள்ளேன்.
    அதைவிட சிறப்பான புகைப்படம் கிடைத்துள்ளதால், முதல் படத்தை நீக்கிவிட்டு இப்பொழுது கிடைத்துள்ள புது புகைப்படத்தை போட்டிக்கு அனுப்பலாமா?
    தெளிவுபடுத்துங்களேன் !

    ReplyDelete
  42. மணிமொழியன், கண்டிப்பா புதுப்படம் அனுப்பலாம்.

    ReplyDelete
  43. படங்கள் சரியா இருக்கான்னு பாத்து சொல்லுங்க.

    நன்றி!

    ReplyDelete
  44. http://picasaweb.google.com/abcanand/JunePIT

    இந்தாங்க, என்னோட பங்கு!
    ஆனந்த்

    ReplyDelete
  45. My entry http://snapjudge.wordpress.com/2008/06/11/%e0%ae%89%e0%ae%b4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%88%e0%ae%95/

    Thanks!

    ReplyDelete
  46. ஆனந்த், உங்க படம் தெரியலியே?

    Peevee, உங்க படம் 'public' share இல்லாததால், மக்கள்ஸை க்ளிக்கி வந்து பாக்க சொல்லிருக்கேன்.
    ப்ளாகர் இருந்தா, அதில் பட ஏற்றம் செஞ்சு போட்டீங்கன்னா நல்லாயிருக்கும். நன்றி.

    ReplyDelete
  47. இப்போ சரி ஆச்சுன்னு நெனைகிறேன்
    மறக்காமல் உங்கள் கருத்துக்களை இடவும்!!

    ReplyDelete
  48. நம்மோட படம் இங்கே:
    http://meendumsanthipoom.blogspot.com/2008/06/blog-post.html

    ReplyDelete
  49. my contribution to the contest.
    link:
    http://valluvam-rohini.blogspot.com/2008/06/blog-post_11.html#links

    ReplyDelete
  50. my entry
    http://valluvam-rohini.blogspot.com/2008/06/blog-post_11.html#links

    ReplyDelete
  51. Present Sir :)

    http://ilavattam.blogspot.com/2008/06/blog-post.html

    ReplyDelete
  52. http://msmrishan.blogspot.com/

    போட்டிக்கான எனது படங்கள் இங்கே உள்ளன :)

    ReplyDelete
  53. நன்றி சர்வேசன் !

    இதோ, போட்டிக்கான எனது புது படம்:

    http://labtap.blogspot.com/2008/06/pit_12.html

    ReplyDelete
  54. இந்த தடவை கொஞ்சம் சீக்கிரமே வந்துட்டேன்.

    http://luvathi.blogspot.com/2008/06/for-pit-jun-2008-contest.html

    படம்: http://picasaweb.google.com/luvathi/Bylakuppe/photo#5210843971170595154

    ReplyDelete
  55. ஹாய் நடுவர்களே,

    http://sumasen.blogspot.com/2008/06/pit.html
    பாத்துபா நான் இப்ப தான் மொதல் மொதலா இந்த மாதிரி இடங்களுக்குஎல்லாம் பொட்டிக்கு வர்ரேன், என்னை ஏமாத்திபுடாதீங்கப்பா, பரிச எனக்கே குடுக்ங்க னு லாம்மிரட்ட மாட்டேன், பாத்து நீங்களே குடுட்தீங்கன்னா சந்தோஷப்படுவேன். அம்புட்டுதான்.வேல முடிஞ்சுது. வர்ட்ட்ட்டா

    ReplyDelete
  56. http://www.flickr.com/photos/lakshmanaraja/2571840093/

    ReplyDelete
  57. http://www.flickr.com/photos/lakshmanaraja/2571840093/

    ReplyDelete
  58. போட்டிக்கான எனது படம்

    http://farm4.static.flickr.com/3083/2574473521_426c0e014b_o.jpg

    ReplyDelete
  59. அன்பின் நண்பர்கள் கைப்புள்ள & சர்வேசன் அவர்களுக்கு,

    எனது http://msmrishan.blogspot.com/ இப்பதிவிலுள்ள நான்காவது படமான இதனை http://bp2.blogger.com/_9IERS7jFjbc/SFDKZVC_3DI/AAAAAAAAFQY/f6kRj0MtKDA/s1600-h/DSC01062.JPG போட்டிக்காக எடுத்துக்கொள்ளும்படி வேண்டிக் கொள்கிறேன்.

    நன்றி :)

    ReplyDelete
  60. http://click1click.blogspot.com/2008/06/blog-post.html

    கயல்விழி முத்துலெட்சுமி சார்பாக. அவர்களால் பின்னூட்டம் அளிக்க இயலவில்லை.

    நன்றி கயலக்கா!

    ReplyDelete
  61. கடைசி பெஞ்சுக்கு சீட் பிடிக்கிறேதே இப்ப எனக்கு வழக்கமாய்ப் போய்விட்டது.உள்ளேன் ஐயா!

    http://parvaiyil.blogspot.com/2008/06/blog-post_13.html

    மண்டைய அதிகமா உடைச்சிக்காம கொஞ்சம் பிற்தயாரிப்பு மட்டுமே படத்தில்.

    ReplyDelete
  62. intha pee pee selumaa...

    :)

    http://lighttome.blogspot.com/2007/09/viscom.html

    ReplyDelete
  63. http://chinnaammini.blogspot.com/2008/06/blog-post_13.html
    என்னோட போட்டோ

    ReplyDelete
  64. போட்டிக்கான எனது படம்

    http://www.flickr.com/photos/gowshihan/2576749607/

    ReplyDelete
  65. என் மனதில் உறைந்த காட்சிகள்!

    http://marchoflaw.blogspot.com/2008/06/blog-post.html

    ReplyDelete
  66. போட்டிக்கான எனது படம்

    http://www.flickr.com/photos/gowshihan/2576749607/

    ReplyDelete
  67. அடிச்சி பிடிச்சி ஒரு வழியா வந்தாச்சு
    http://oppareegal.blogspot.com/2008/06/blog-post.html

    ReplyDelete
  68. இந்த இணைப்பில் உள்ள முதல் படம் மட்டும் ஜூன் மாதப் போட்டிக்கான எனது படம்
    :

    http://rainbow-attitudes.blogspot.com/2008/06/blog-post.html

    thank u

    T Jay

    ReplyDelete
  69. படங்கள் சரியா மேலே பொட்டீல தெரியுதான்னு பாத்து சொல்லுங்க.

    தவறு இருந்தா சொல்லிட்டுப் போங்க.

    ReplyDelete
  70. http://memycamera.blogspot.com/2008/06/june-day-at-work-pit.html

    ~Truth

    ReplyDelete
  71. பழைய படங்களை ஒரு மாதிரியா தேத்தி, வந்து சேர்ந்தாச்சு:-)
    http://vizhiyil.blogspot.com/2008/06/pit.html

    ReplyDelete
  72. போட்டிக்கான எனது படம்:-

    ReplyDelete
  73. புதிதாக எடுக்க நேரமில்லாததால் கையிருப்பில் ஒண்ணை கரைச்சு விட்டேன்.
    http://9-west.blogspot.com/2008/06/pit.html

    ReplyDelete
  74. லேட்டா வந்தான்னு ஒதுக்கிறாதீங்க.. என்னயும் போட்டீல சேத்திக்கோங்க..

    இந்தப் பதிவில் இருக்கும் முதல் படம் போட்டிக்கு..
    http://chummafun.blogspot.com/2008/06/yet-another-day-at-work.html

    ReplyDelete
  75. //சவாலே சமாளி!// என்றேன் அறிவிப்பு வந்ததும். ஏதோ.. சமாளித்திருக்கிறேன். பதிவில் முதல் படம் போட்டிக்கு.

    http://tamilamudam.blogspot.com/2008/06/pit-day-at-work.html

    ReplyDelete
  76. நானும் உண்டு!

    முதல் போட்டோ மட்டும் ஒ.கே!
    ( நிறைய போட்டோக்கள் இருக்கு பட் கடுமையான போட்டியை கொடுத்து நடுவர்களை டென்ஷன் பண்ணிடகூடாதுங்கற நல்ல எண்ணத்துல இந்த போட்டோ மட்டும் ஒ.கேவா!)

    :))))))))))

    http://kadagam.blogspot.com/2008/06/pit.html

    ReplyDelete
  77. என் இந்த இரண்டாவது தொகுப்பிலுள்ள
    படங்களில் முதலாவதை போட்டிக்காக
    சமப்பிக்கிறேன். முதலாவது பதிவில் இட்டதை பார்வைக்கு மட்டுமே எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
    http://www.9-west.blogspot.com/

    ReplyDelete
  78. போட்டிக்கான எனது படம்
    http://www.flickr.com/photos/shiju_haridass/2579060303/

    ReplyDelete
  79. http://pithatralgal.blogspot.com/2008/06/298.html

    இது ஜூன் மாதப் போட்டிக்கான என் பங்கேற்பு!

    ReplyDelete
  80. நான் பார்த்த உயிரினங்கள் இங்கே:
    http://nilaakaalam.blogspot.com/2008/06/pit.html

    ReplyDelete
  81. போட்டிக்கான எனது படம்:
    http://illatharasi.blogspot.com/2008/06/pit-photo-contest-2008.html

    ReplyDelete
  82. ஜூன் மாத போட்டிக்கு எனது படம்.நன்றி.

    http://picasaweb.google.com/geethapremji/JunePIT/photo#5212136438271036194

    ReplyDelete
  83. ஒவ்வொரு வாட்டியும் எப்படியாவது கடைசீல வந்து சேர்ந்துக்குறேன். போட்டிக்கான என்னுடைய படம்:
    http://www.flickr.com/photos/snarayanank/2580955326/in/photostream/
    posted at:
    http://vadakkupatturamasamy.blogspot.com/

    ReplyDelete
  84. New to Photography!!! Would like to participate in this contest. Find below the url for my photo:
    http://farm4.static.flickr.com/3061/2580764752_a731bb14a5_b.jpg

    ReplyDelete
  85. vanthutean Vanthutean.. yennudaiya padam ingae.. yennaiyum intha maatham aatathuku serthukonga

    http://www.flickr.com/photos/balamurugan/2580286061/

    ReplyDelete
  86. Add my photo too in this list:
    http://farm4.static.flickr.com/3061/2580764752_a731bb14a5_b.jpg

    ReplyDelete
  87. கடைசில வந்திருக்கிறேன். என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கோ :0

    http://bp2.blogger.com/_eFPchioB6rE/SFVHhN3LklI/AAAAAAAAAH4/LcTBYl__8sg/s1600-h/PIT-june.jpg

    ReplyDelete
  88. Housefull!

    மக்களே, இந்த மாதப் போட்டிக்கான படங்கள் பெறும் நேரம் முடிவடைந்தது.

    படங்களை அனுப்பிய அனைத்து போட்டியாளர்கள்/நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

    டாப்10னுடன் கூடிய விரைவில் சந்திக்கிறோம்.

    :)

    ReplyDelete
  89. http://bp1.blogger.com/_8Va8Aelff9Y/SFV11TiJY0I/AAAAAAAAAe8/MKuYaq0yVC0/s1600-h/IMG_0406.JPG

    நானும் கடைசியா வந்துட்டேன். என்னையும் சேத்துக்குங்க..

    ReplyDelete
  90. gokulan, பூட்டு போடரதுக்கு முன்னாடி வந்துட்டீங்க. அதனால, ஓ.கே. சேத்தாச்சு.


    இனி, புதிய படங்கள் ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது. ஏன்னா, டைம் ஆயிடுச்சு. கடைய மூடிட்டோம்.

    ReplyDelete
  91. தங்களின் தளத்தில் உள்ளப் படங்கள் அனைத்தும் மிக அருமை. அதிலிருந்து உழவர் படத்தை ... ஒரு கவிதைக்காக எடுத்துக் கொண்டேன். ஒப்புதல் தரவும்... நன்றி. அன்புடன் நான் சி. கருணாகரசு.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff