எச்சரிக்கை : இது ரொம்ப ரொம்ப சிறுபில்லத்தனமான பதிவு. "ஐயே! இது கூட எங்களுக்குத் தெரியாதுன்னு சொல்லவந்துட்டாண்டா கூறுகெட்ட என் குக்கரு"ன்னு எல்லாம் படிச்சிட்டு நீங்க என்ன வைய சான்ஸ் இருக்கு. அதான் முன்னாடியே டிஸ்கி போட்டுக்கறேன். அதுக்கும் முன்னாடி PiTகுழுமத்துல கைப்புள்ள என்ன பண்ணிட்டிருக்கான்னு ஒரு டவுட் வந்துருக்கும். அந்த டவுட் எனக்கும் வந்துச்சு. அதனால PiTகாரங்க கிட்ட "என்கிட்ட இருக்குற எது உங்களை ஹெவியா லைக் பண்ண வச்சுதுன்னு" ஆரியா படத்து ஸ்நேக் பாபு பாவனா கிட்ட கேட்ட மாதிரி கேட்டேன். அதுக்கு அவிங்க "எவ்வளவு அடிச்சாலும் தாங்கற நல்லவன் ஒருத்தன் நீ மட்டும் தான் இப்ப மாட்டுனே"ன்னு சொன்னாய்ங்க.
ஜோக்ஸ் அபார்ட்...பள்ளிக்கூடத்துல படிக்கும் போது ஒன்னு கவனிச்சிருக்கீங்களா? சில சமயம் வாத்தியார் சொல்லி தரதை விட உங்க கூட படிக்கிற பையன் எக்சாமுக்கு அரை மணி நேரம் முன்னாடி அவன் படிச்சதை எல்லாம் சொல்லித் தர்றது ஈஸியா புரியற மாதிரி இருக்கும். அது ஏன்னா ஒரு மாணவனா நீங்க படிச்சி புரிஞ்சிக்கிறதுல என்னென்ன கஷ்டங்களை அனுபவிச்சீங்களோ அதெல்லாம் உங்களுக்குச் சொல்லித் தர்ற அந்த பையனுக்குத் தெரியும். அதனால உங்களுக்குப் புரியற மாதிரி கடைசி நேரத்துல அவன் சொல்லிக் குடுக்கறது எளிமையா உங்களுக்குப் புரியும். அதே மாதிரி போட்டோ எடுக்கும் போது நான் தெரிஞ்சிக்கிட்டது கத்துக்கிட்டது இப்படின்னு சில சில்லியான விஷயங்களை உங்களோட ஒரு சக மாணவனா இருந்து பகிர்ந்துக்கலாம்னு இந்தப் பதிவை எழுதறேன்.
நீங்க ஃபோட்டோ எடுக்கும் போது "சே! எவ்வளவு முயற்சி பண்ணாலும் நம்ம படம் ஏன் அடுத்தவங்க படம் அளவுக்கு நல்லா வரமாட்டேங்குது"ன்னு பல தடவை யோசிச்சிருக்கீங்களா? "ஐ! இந்தப் படம் நல்லாருக்கே...என்ன கேமரா யூஸ் பண்ணறீங்கன்னு" கேட்டா "இந்த மாடல் DSLRல, இந்த ஃபோகல் லெங்க்த்ல, இந்த அபெர்ச்சர் ஸ்பீட்ல, இத்தனை எம்.எம் லென்ஸைப் போட்டு எடுத்தது இந்த படம்னு வர்ற பதிலைக் கேட்டு "சே! நம்ம கிட்ட இருக்கற பாயிண்ட் அண்ட் ஷூட் கேமரால இந்த மாதிரியெல்லாம் எடுக்க முடியாது போலிருக்கு" அப்படின்னு நெனச்சி நொந்து போயிருக்கீங்களா? DSLRல எடுத்த படத்தை விட சூப்பரா இருக்கறதா உங்களுக்குப் படற இன்னொரு படம், உங்க கிட்ட இருக்கறதை விட சுமாரான ஒரு பாயிண்ட் அண்ட் ஷூட் கேமரால எடுக்கப்பட்டதுன்னு தெரிஞ்சு விரக்தியின் எல்லைக்கே போயிருக்கீங்களா? கவலை வேணாம். உங்களுக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்கறதில்லை. நம்மள்ல பலருக்கு இப்படித் தான் நடக்குது. நானும் பலமுறை இந்த மாதிரி யோசிச்சிருக்கேன்.
நம்ம படம் எடுத்த நமக்கே நல்லால்லாத மாதிரி இருக்கும் போது, அந்த படத்தைப் பாக்கற ஒரு மூன்றாம் மனிதருக்கு அது கண்டிப்பா பிடிக்காது. சரி, இது நல்ல புகைப்படம்னு ஒரு பார்வையாளரைச் சொல்ல வைக்கறது எது? நல்ல படங்களை நோக்கி நம்மை இழுப்பது எது? கீழே இருக்கற படங்களைப் பாருங்க. அதைப் பாத்தா என்ன தோணுது?
முதல் படத்துல பச்சையா நெறைய செடிகள் இருக்கு. பின்னாடி எதோ மலை இருக்கற மாதிரியும் இருக்கு இல்லாத மாதிரியும் இருக்கு. அதே மாதிரி ரெண்டாவது படத்துலயும் பின்னாடி ஒரு மலை இருக்கு, முன்னாடி ஒரு மரத்தோட கொம்பு மலையை மறைச்சிக்கிட்டு இருக்கு. மொத்தத்துல ரெண்டு படத்துலயும் என்ன சொல்ல வர்றாங்கன்னே புரியலை. கவனிக்க "என்ன சொல்ல வர்றாங்கன்னே" - ஏன்னா ஒவ்வொரு படமும் எதையாச்சும் ஒன்னு சொல்லனும். இது தான் நல்ல படம் எடுக்கறதுக்கு முதற்படியா நான் நெனக்கிற விஷயம். மேலே இருக்கற படங்கள்ல படம் எடுத்தவரு(நான் தான்) மலைகளின் அழகைப் பத்தி சொல்ல வர்றாரா, அடர்ந்த காடுகளைப் பத்தி சொல்ல வர்றாரா அப்படீங்கறது படத்தைப் பாத்ததும் பாக்கறவங்களால சொல்ல முடியலை. அது தான் இந்த படம் நல்லால்லதுக்குக் காரணம்.
இந்த படங்கள்ல குறைன்னு பாத்தீங்கன்னு, சொல்ல வந்தது என்னன்னு முடிவு பண்ணாதது. சொல்ல வந்த பொருள்னு சொன்னேன் இல்லையா இதை புகைப்படக்கலைல சப்ஜெக்ட்னு சொல்றாங்க. சப்ஜெக்ட் மரமா, செடியா, மலையான்னு ஒரு நொடி யோசிச்சிட்டு, படக்குன்னு க்ளிக் பண்ணாம சப்ஜெக்டை ஃபோகஸ் பண்ணி எடுத்திருந்தா படம் நல்லாருந்துருக்கும். நாம டிஜிட்டல் கேமராக்கள்ல பண்ணற இன்னொரு மிகப்பெரிய தப்பு, ஒரு காட்சியைக் கண்டதும் சடக்குன்னு க்ளிக்கறது தான். இந்த மாதிரி பண்ணும் போது கேமரா சரியா ஃபோகஸ் ஆகறதில்லை. பல சமயங்கள்ல உங்க படங்கள் ஆட்டம் கண்ட மாதிரியோ, வெளிறிப் போயோ தான் வரும். டிஜிட்டல் கேமராக்கள்ல மெல்லமா முதல்ல ஒரு அரை க்ளிக்(Half Clickனு சொல்லுவாங்க) பண்ணிட்டு அப்புறமா முழுசா க்ளிக் பண்ணி எடுத்தீங்கன்னா படம் சரியா ஃபோகஸ் ஆகித் தெளிவா விழும்.
கீழே இருக்கற படத்தைப் பாருங்க. படத்தின் பெரும்பான்மையான இடத்தை செடிகளும் செம்பருத்தி மலர்களும் ஆக்ரமித்து இருப்பதால் அநேகமா மலர்களைப் பத்தி சொல்ல வர்றாங்கன்னு யூகிக்க முடியுது. இருந்தாலும் மலர்களின் அழகு இந்தப் படத்துலயும் வெளிப்படலை. படத்துல எதோ ஒரு கட்டிடத்தின் சுவர், குளிர்சாதனப் பெட்டி இதெல்லாம் கூடத் தெரியுது. அதெல்லாம் புகைப்படத்துலேருந்து நம்ம கவனத்தைத் திருப்புது. புகைப்படம் எடுக்கும் போது கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் படத்தை சிம்பிளாக வைத்திருப்பது தான்(Keep it simple).
சொல்ல வந்த விஷயம் மலர்களின் அழகுன்னு முடிவான பிறகு, மலர்களைத் தவிர்த்து மற்ற சமாசாரங்களை உங்க படத்துலேருந்து நீக்கிடுங்க. இது பார்க்கறவங்களின் கவனம் நீங்க சொல்ல வர்ற விஷயத்தின் மீது மட்டுமே போக வழிவகுக்கும். கீழே இருக்கற படத்தைப் பாருங்க. இது மேக்ரோ மோட்ல மலருக்கு அருகாமையில் போய் மலரின் அழகு மட்டுமே வெளிப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் எடுத்தது. கும்பலா நிறைய மலர்களை எடுக்கறதை விட ஒரு மலரை நல்லா ஃபோகஸ் பண்ணி எடுத்தா இன்னும் நல்லாருக்கும்னு நெனச்சி எடுத்த படம் இது. சொல்ல வர்ற விஷயத்தைத் தெளிவா இந்தப் படம் சொல்லுது.
கீழே இருக்கற இந்தப் படத்தைப் பாருங்க. சொல்ல வர்ற விஷயத்திற்கு அருகில் போய் எடுத்தால் படம் நன்றாக விழும் என்ற எண்ணத்தில் மிக அருகில் சென்று எடுத்ததாலும் சரியான கேம்ரா மோட் உபயோகிக்காததாலும் சொல்ல வந்த விஷயமான செடியில் காய்த்திருக்கும் தக்காளி மங்கலாக அவுட் ஆஃப் போகஸ் ஆகிவிட்டது. படங்கள்லேருந்து எவ்வளவு தூரத்திலிருந்து அல்லது எவ்வளவு அருகாமையிலிருந்து எடுத்தால் படம் நன்றாகத் தெளிவாக விழும் என்று அனுமானித்தல்(judgment) அவசியம்.
படங்களை எடுக்கும் போது கவனிக்க வேண்டியது என்னன்னு இன்னிக்கு பார்த்தது.
1. படங்கள்ல நீங்க சொல்ல வர்ற விஷயம் என்னன்னு முடிவு பண்ணுங்க
2. சொல்ல வர்ற விஷயம் என்னன்னு முடிவு பண்ணதுக்கப்புறம் அதை சரியா ஃபோகஸ் பண்ணுங்க
3. ஃபோகஸ் பண்ணும் போது, சொல்ல வர்ற விஷயத்துக்கு இடையூறா இருக்கற விஷயங்களைப் படத்துலேருந்து நீக்குங்க
4. சொல்ல வர்ற விஷயத்துக்கு முடிந்த வரையில் அருகில் சென்று உங்கள் படங்களை எடுங்கள். அதே சமயம் சரியான தூரம் எது என்பதையும் தீர்மானித்தல் அவசியம்.
மேலே சொன்ன விஷயங்கள்லாம் என்னன்னு நெனக்கிறீங்க? டெக்னிக்கலா சொல்லனும்னா இதை Compositionனு சொல்லுவாங்க, தமிழில் காட்சியமைப்பு. சரி, காட்சியமைப்புன்னா என்ன? நாம் ஒரு புகைப்படங்கள் நிறைந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்மைச் சுற்றி பேசிக் கொண்டும், நின்று கொண்டும், நடந்து கொண்டும், பறந்து கொண்டும், தவழ்ந்து கொண்டும், ஓடிக் கொண்டும், விளையாடிக் கொண்டும் ஆயிரமாயிரம் படங்கள் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அதை ஒரு காட்சியாய், படமாய் அழகுணர்ச்சியோடு வெளிக்கொண்டு வருதலே காட்சியமைப்பு ஆகும்.
இந்த காட்சியமைப்புங்கிறது எதோ புரியாத ஒரு விஷயம் மாதிரி இருக்கலாம். ஆனா உண்மையிலே நம்ம எல்லாருக்கும் அது ஏற்கனவே தெரியும். அது தான் காட்சியமைப்புன்னு நாம் உணர்வதில்லை. உதாரணத்திற்கு டிஜிட்டல் கேமராக்கள் வருவதற்கு முன்னர் நம்மில் பலரும் ஃபிலிம் கேமராக்களை உபயோகித்து படங்களை எடுத்திருப்போம். குடும்பத்துடன் தாஜ்மகாலைப் பார்க்க ஒரு இன்பச் சுற்றுலா செல்கிறோம். தாஜ்மகாலை பேக்க்ரவுண்டாக வைத்து நம் குடும்பத்தினரை முன்னனியில் நிற்க வைத்து ஒரு ஞாபகத்திற்காகப் படம் பிடித்து வைத்துக் கொள்ள நினைப்போம். நீங்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும் போது குறுக்கே ஒருவர் செல்கிறார் என்றால், நாம் என்ன சொல்வோம் - "சார்! ப்ளீஸ் கொஞ்சம் தள்ளிக்கோங்க". "சார்! ப்ளீஸ் கொஞ்சம் தள்ளிக்கோங்க"ன்னு நம்ம சொல்ல வைப்பது எது? நாம் எடுக்கும் புகைப்படத்தில் அழகான ஒரு பொருள் என நாம் நினைக்கும் தாஜ்மகாலும் நம் குடும்பத்தினர் மட்டுமே விழவேண்டும் என்ற நினைப்பு. நாம் எடுக்க நினைக்கும் அந்த அழகிய படத்திற்கு குறுக்கீடாக எது வந்தாலும் எவ்வழியிலாவது நாம் அகற்ற முற்படுவோம். உங்கள் படத்தில் குறுக்கே நிற்கும் அம்மனிதர் நீங்கள் கேட்டுக் கொண்ட பின்னரும் விலகவில்லையென்றால் என்ன செய்வீர்கள்? படம் எடுக்கும் நாம் சற்று விலகி தாஜ்மகாலும் நம் குடும்பத்தினரும் மட்டும் படத்தில் விழுமாறு பார்த்துக் கொள்வோமில்லையா? இது தான் காட்சியமைப்பின் அடிப்படை.
இது நமக்கு டிஜிட்டல் கேமரா உபயோகிக்கறதுக்கு முன்னாடியே தெரிஞ்சு தான் இருந்தது இல்லையா? ஆனா படங்கள்ல நம்ம குடும்பத்தினரோ, அல்லது ஒரு முக்கியமான கட்டிடமோ இருந்தா நமக்கு ஃபோகஸ் பண்ணி எடுக்கறது சுலபமா இருக்கு. ஏன்னா அப்போ நம்ம படங்கள்ல இந்த நாலு பேரும் இந்த கட்டிடமும் மட்டும் தான் விழனும்னு நமக்கு தெரியும். அதுவே இயற்கை காட்சியோ, இல்லை பொதுவான ஒரு விஷயத்தைப் பத்தி படம் எடுக்கும் போது, காட்சியின் அழகில் மதிமயங்கிப் போயிடறோம். நம்மோட எண்ணம் எல்லாம் அந்த அழகைப் படம்பிடிக்க வேண்டும் என்பதுல மட்டும் தான் இருக்குது. அதனால சொல்ல வர்ற விஷயம் அப்படீங்கற ஒன்னு மேல கவனத்தைச் செலுத்தாம போயிடறோம். இப்படி பட்ட படங்கள்லேயும் சொல்ல வர்ற விஷயம் என்னன்னு சரியா முடிவு பண்ணற தெறமை வந்துடுச்சுன்னா, அதுக்கப்புறம் நம்மோட எல்லா படமும் நல்ல படம் தான்.
சரி காட்சியமைப்புன்னா என்னன்னு பாத்தோம், காட்சியமைப்பைப் பத்தி க்ரூப் ஸ்டடி பண்ண இன்னும் சில லெஸன்ஸ் இருக்கு. எக்சாம் ஆரம்பிக்கிறதுக்குள்ள சீக்கிரமே இன்னொரு பதிவோட வரேன். நன்றி.

kaips, kalakkitteenga.
ReplyDelete//சொல்ல வர்ற விஷயம் என்னன்னு சரியா முடிவு பண்ணற தெறமை வந்துடுச்சுன்னா, அதுக்கப்புறம் நம்மோட எல்லா படமும் நல்ல படம் தான். //
very true.
மொத்தத்துக்கும் உடன் படுகிறேன்.
ReplyDeleteஅற்புதமான மல்டி-பர்ப்பஸ் லென்ஸ் - மனிதனின் கண்.
அற்புதமான டெலி-மேக்ரோ லென்ஸ் - பருந்தின் கண்
இதை விட பிரமாதமான லென்ஸ் இன்னும் கிடைக்க வில்லை என்றே நினைக்கிறேன்.
நாம் என்ன காண்கிறோமே அப்படியே படத்தில் கொண்டு வர மிகவும் சிரமப்படவேண்டும். ஆனால் கலைநயத்தோடு செய்ய கைப்ஸ் சொன்ன
கம்போசிஷன் முக்கியம்.
நல்லப் பதிவு கைப்பு
SONNA ELLAM KARITTU SAARE.
ReplyDeleteஇது படங்களுக்கும் மட்டும் இல்ல. வாழ்க்கைக்கும் பொருந்தும்:)
சரி வாத்தியாரே!!
ReplyDelete//kaips, kalakkitteenga//
ReplyDeleteநன்றி சர்வேசன்.
//நாம் என்ன காண்கிறோமே அப்படியே படத்தில் கொண்டு வர மிகவும் சிரமப்படவேண்டும்//
ReplyDeleteகரெக்ட். கேமரா இல்லாம மனசுக்குள்ளேயே படத்தைக் காட்சியா பாக்கற தெறமையுள்ளவங்களும் இருக்காங்க. அவங்க நெனச்சப்போ கலக்கலான படம் எடுக்க முடிஞ்சவங்க. நன்றி அண்ணாச்சி.
//SONNA ELLAM KARITTU SAARE.
ReplyDeleteஇது படங்களுக்கும் மட்டும் இல்ல. வாழ்க்கைக்கும் பொருந்தும்:)//
வாங்கம்மா. நீங்க சொன்னா சரியாத் தானிருக்கும். கருத்துக்கு நன்றி.
//சரி வாத்தியாரே!!//
ReplyDeleteகலத் ஜவாப். நான் ஸ்டூடண்ட் தான் ஸாமீயோய்.
:)
//Awesome post!//
ReplyDeleteநன்றி CVR.
:)
//ஒரு மாணவனா நீங்க படிச்சி புரிஞ்சிக்கிறதுல என்னென்ன கஷ்டங்களை அனுபவிச்சீங்களோ அதெல்லாம் உங்களுக்குச் சொல்லித் தர்ற அந்த பையனுக்குத் தெரியும். அதனால உங்களுக்குப் புரியற மாதிரி கடைசி நேரத்துல அவன் சொல்லிக் குடுக்கறது எளிமையா உங்களுக்குப் புரியும்//
ReplyDeleteஇது நம்ம ஆசிரியர்களுக்குப் புரிஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்.
'Looking from whoose perspective' அப்படிங்றதுதான் சொல்லித்தருதலுக்கு அடிப்படை.
மிகப் பயனுள்ள பதிவு.
ReplyDeleteநன்றி. :)
Hello PIT,
ReplyDeleteI have been introduced to this site very recently thru Sundar's blog. I find the site very useful for a budding photographer like me. I have a very basic question, in my old SLR(not digital), I used to take mulitiple exposure on the same film(same person appearing twice on the picture), is this posiible in a DSLR. I undersatnd you can do it using software by cropping and pasting, but want to know if it is posiible using the camera itself.
எனக்குத் தெரிந்துசெய்ய முடியாது. software செஉவதுதான் எளிய வழி.
ReplyDeleteMultiple exposure is possible with Nikon D80.
ReplyDeleteGuess it depends on the model!
But,for the record,it can be done in DSLRs too!
I have seen it being done.
//A n& said...
ReplyDeleteஎனக்குத் தெரிந்துசெய்ய முடியாது. software செஉவதுதான் எளிய வழி.
June 12, 2008 10:19 PM//
ஆனந்த், & ஸரவணன்
சீவீஆர் சொன்னது போல, டி80 ல மல்டி எக்ஸ்போஷர் ஆப்ஷன் இருக்கு. ஒரே படத்துக்கு 3 எக்ஸ்பொஷார் வரை செய்யும் வசதி உள்ளது.
ஆனால் அது அவ்வளவு உபயோகமாகக் படவில்லை. அதன் உபயோகத்தைப் பற்றி ஆனந்த் அல்லது தெரிந்தவர்கள் யாராவது விளக்கினால் நல்லது.
நான் கேனன் ஆளு, அதில் செய்ய முடியாது என்று தெரியும் .மற்றவற்றில் செய்ய முடியும் என்பது எனக்கு புது செய்திதான். கேமராவில் செய்வதால் பெரிய பயன் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. sfotware ல் செய்வதுதான் எளிது என்று எனக்குத் தோன்றுகிறது
ReplyDelete"இந்த மாடல் DSLRல, இந்த ஃபோகல் லெங்க்த்ல, இந்த அபெர்ச்சர் ஸ்பீட்ல, இத்தனை எம்.எம் லென்ஸைப் போட்டு எடுத்தது இந்த படம்னு வர்ற பதிலைக் கேட்டு "
ReplyDelete"same blood" :))
மிகவும் பயனுள்ள பதிவு இலகுவாக புரிந்து கொள்ளும் விதமாய் எழுதப்பட்டுள்ளது. பகிர்தலுக்கு நன்றி.
ReplyDeleteமிகவும் பயனுள்ள பதிவு இலகுவாக புரிந்து கொள்ளும் விதமாய் எழுதப்பட்டுள்ளது. பகிர்தலுக்கு நன்றி.
ReplyDelete