Friday, June 27, 2008

PIT - ஜூன் 2008 - டாப் 10 விமர்சனமுலு

9 comments:
 
எந்தரோ மகானுபாவலு...அந்தரிகி வந்தனமுலு. டாப் 10இல் இடம்பிடிச்ச படங்கள்ல 5 படங்களுக்கான விமர்சனங்களை நேத்தே பாத்துட்டதால இப்புடு எஞ்சிய 5 படங்களுக்கான விமர்சனமுலு.

6. Ila

சர்வேசன் : நல்ல composition. ஆனா, அவர் பார்ப்பது, லேப்-டாப்னு, பளிச்னு தெரியல. மொதல்ல பாக்கும்போது, மெடிட்டேஷன் பண்றாறோன்னு நெனச்சுட்டேன். 'a day at work' என்ற தலைப்பை நையாண்டி செய்வது போல், ராத்திரி நேரத்து ஃபோட்டோவை போட்டதும் தெய்வ குத்தமயாயிடுச்சு. மொத்தத்தில், நல்ல லைட்டிங்கில், அழகாக பதியப் பட்ட படம். குறைய தேடினாலும், கெடைக்க மாட்டேங்குது.

கைப்புள்ள : பாத்த உடனே 'வாவ்' சொல்ல வச்ச படம். நல்ல காட்சியமைப்பு. வழக்கமா இப்படி இரவு காட்சியில Flash போட்டு கெடுத்துடுவோம் - இந்த படம் இருக்கிற ஒளியையே பயன்படுத்தி இருக்கிறதுதான் இப்படத்தின் சிறப்பு. கொஞ்சம் Blurred மாதிரி தெரிவது பலவீனம்.


சர்வேசன் : படத்தை க்ளிக்கிய angle எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. வரையப்படும் படமும், புகைப்படத்துக்கு ஒரு ஏத்தத்தைக் கொடுக்குது. unlucky shot. நிறைய பேர், 'ஆ'ன்னு இவரை சுத்தி நின்னு பாக்கர மாதிரி இருந்திருந்தா தூக்கியிருக்கும். ஓவியரை மட்டுமே காட்டுவதால், இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு, கீழ படுத்து கிடுத்து, கட்டடங்களை விச்தாரத்தை காட்டி, angle மூலம் கவர்ந்திருக்கலாம்.

கைப்புள்ள : Point-of-View தான் இந்த படத்தின் வெற்றி. கேமராவை தரை மட்டத்தில் வைத்து எடுத்ததனால் படத்தின் காட்சியமைப்பு மற்ற படங்களில் இருந்து தனிப்பட்டு இருக்கு. இவரு என்னத்த வரையறாருன்னு ஓரக் கண்ணால் பார்க்கும் அந்த பார்வையாளர் அம்மணியும் சேர்த்து இருப்பது படத்துக்கு அழகு சேர்க்குது. குறைன்னு பாத்தா அந்த வெள்ளைப் பை பின்னாடி உறுத்துது - கொஞ்சம் நகர்ந்து எடுத்திருக்கலாமோ? அருகில் இருக்கும் கட்டிடங்களின் பிரமாண்டத்தை காட்டுவதற்காக முயற்சி செஞ்சிருக்கலாம். இந்த படத்தில என்ன கத்துக்கலாம்? எப்போதும் தோள் / கண் மட்டத்தில் இருந்துதான் எல்லாரும் படம் எடுக்கறோம். அதனால்தான் நம்ம படங்கள் எல்லாம் வழக்கமானவையாய் இருக்கு. வெட்கம் பாக்காம உருண்டு படுத்தோ, உயரமான எடத்தில இருந்தோ எடுத்தாதான் வித்தியாசப்படுத்திக் காட்ட முடியும்.

Point of Viewக்கு ஒரு எடுத்துக்காட்டு பாருங்க - கற்கை நன்றே கற்கை நன்றே. அருமையா காட்சியமைப்பு செய்யப்பட்ட ஒரு படத்தையும், குறைவான சொற்களையும் பயன்படுத்தி படிக்கிறவங்களைச் சிந்திக்க வச்சிருக்காரு பாருங்க.
கெளசிகனோட தரை ஓவியம் படம் போன்றே இருக்கும் இன்னொரு படத்தைப் பாருங்கள். ஓவியம், வரைபவர் இரண்டின் மேலும் கவனம் செல்லுவதற்காக ஓவியத்தைத் தலைகீழாய் படம்பிடித்திருக்கும் உத்தியைக் கவனியுங்கள். இவர் இப்படத்தில் காட்ட விரும்புவது, ஓவியத்தின் அழகினை அல்ல, வரைந்தவரின் திறமையை என்பது படம் பார்க்கும் போதே தெரியுதில்லையா?
33. T.Jay

சர்வேசன் : நிறைய disturbance படத்துல. ஒண்ணு, இந்த ரெண்டு வேலையாட்களை தனியா க்ளிக்கியிருக்கலாம். ஒருத்தர் மும்முரமா வேலை செய்வதும், இன்னொருவர் தம்மடித்து வெட்டியா இருப்பதும், ஒரு interesting சப்ஜெக்ட்டாய் மாறியிருக்கும்.இல்லன்னா, இடது புற வேலையாளை மட்டும் ஓரத்தில் வைத்து, கார்/ரோடெல்லாம் காட்டியிருக்கலாம்.

கைப்புள்ள : இன்னும் கொஞ்சம் நகர்த்தி, தெருவைப் பெருக்குபவரை ஒரு ஓரத்தில் வைத்து விரைந்து செல்லும் வாகனங்களைப் பின்புறத்தில்(background) வைத்து எடுத்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும். "They also serve who only stand and wait"னு சொல்லற மாதிரி இருந்திருக்கும்.

36. MQN

சர்வேசன் : கச்சிதமா இருக்கு. ஆனா, இழுக்கல.கார் மேல இருக்கர பேப்பர், distract பண்ணுது போல. கலர் தூக்கிட்டீங்களா? இத, interestingஆ மாத்தணும்னா, ஷட்டர் ஸ்பீடு கொறச்சு, spray paint சர்ர்னு வர மாதிரி காட்டினாதான் உண்டு :)

கைப்புள்ள : அருமையான பிற்தயாரிப்பு(Postprocessing). பிசிறு, குறைபாடு என்று பிற்தயாரிப்பில் எதுவும் தெரியவில்லை. இவர் பயன்படுத்தியிருக்கும் உத்தியின் பெயர் 'selective colouring'. நமது கருப்பொருளின்(subject) மீது பார்வையாளர்கள் கூடுதல் கவனத்தைச் செலுத்த வைக்கும் ஒரு உத்தி. இப்படத்தில் வண்டியின் மீது வண்ணம் இருக்குமாறும், மற்ற எல்லாவற்றையும் கறுப்பு வெள்ளையாக வைத்திருந்தால் இப்படம் கவிதையாக இருந்திருக்கும். அதாவது, வண்ணம் இல்லா உலகுக்குத் தன் உழைப்பால் வண்ணம் தீட்டிச் சிறப்பு சேர்க்கின்றார் என்று. இதுக்கு ஒரு எடுத்துக்காட்டு பாருங்களேன்.

42. Shiju

சர்வேசன் : royal shot! நான் ஒண்ணும் சொல்றதுக்கில்லை. எல்லாரும் flickrலயே நிறைய சொல்லிட்டாங்க.குறிப்பா, நிழல் அருமையா இருக்கு படத்துல. ஆனால், அருவா/எளநீரு பக்கத்துல, இந்த மாதிரி 'a day at work' எல்லாம் எடுபடாம போயிடுச்சு என்பதே மெய்! :) படத்தில் ஒரு குறையும் லேது.
கைப்புள்ள : அருமையான டைமிங். கொஞ்சம் பகல் வெளிச்சமும் இருக்கும் பொன் மாலை பொழுதில் இப்படத்தை எடுத்திருப்பது சிறப்பு. அருமையான புகைப்படங்கள் எடுப்பதற்கு இந்த சமயமே சிறந்தது என்று புகைப்பட வலைத்தளங்கள் பலவற்றிலும் கூட குறிப்பிட்டிருப்பார்கள். இதை படிப்பவர்கள், இவ்வாறான சமயத்தில் புகைப்படங்களை எடுத்து பாருங்கள். உங்கள் படங்கள் வெகு சிறப்பானதாக அமையும். சர்வேசனார் சொன்னது போல படத்தில் குறை என்று ஒன்றும் தெரியவில்லை.

9 comments:

  1. என்னய்யா இது?

    ReplyDelete
  2. could you please help me find the comments for the first 5 photos?

    ReplyDelete
  3. //Venkatesan PS said...

    could you please help me find the comments for the first 5 photos?///


    here it is!

    http://photography-in-tamil.blogspot.com/2008/06/pit-2008_26.html

    ReplyDelete
  4. I really like the comments on each photo. It really impresses on each one how to take photo and increases the interest on photography.
    Thank you very everyone, you are doing a wonderful job though you people are very busy. It gives more interest for me to take a nice photo.
    Go ahead with your excellent job.


    Thanks,
    Saravanan. D

    ReplyDelete
  5. // Saravanan said...

    I really like the comments on each photo. It really impresses on each one how to take photo and increases the interest on photography.
    Thank you very everyone, you are doing a wonderful job though you people are very busy. It gives more interest for me to take a nice photo.
    Go ahead with your excellent job.


    Thanks,
    Saravanan. D//


    thanks saravanan. Keep participating.

    ReplyDelete
  6. நன்றி! :))).

    ஒரு புகைப்படம் எப்படிப் பேச வேண்டும், நடுவர்களின் பார்வை என்ன, என்பது புரிகிறது.

    பொறுமைக்கும் விமர்சனத்திற்கும் வாழ்த்துகள்.:)))

    ReplyDelete
  7. நன்றி!

    i ll do my best for next time

    thank u
    t jay

    ReplyDelete
  8. Hey,

    Thanks for commenting my "Day At Work" image. I will try to give the best shot for Next Contest

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff