Saturday, July 2, 2011

அபெச்சர் மோட்.. ஓர் அதிசயம் - அவ்வ்வ்... டு வாவ் ரசசியம்

23 comments:
 
நிலவுக் கனவு:

ழெட்டு மாசம் முன்னே DSLR(Nikon D5000) வாங்குன புதுசு. ஒரு முடிவோட ட்ரைபாட், 55-200mm லென்சும் சேர்த்தே வாங்கினேன். என்னன்னா நிலாவை அதுவும் உள்ளே உட்கார்ந்து வடை சுடும் பாட்டியோட சேர்த்துப் பிடிச்சிடணும்னு. பாயிண்ட் அண்ட் ஷூட்ல நிலவு என்பது வெள்ளிப் பொட்டு அல்லது தட்டாகதான் கிடைச்சுட்டு இருந்தது. 2008-ல் PIT தளம் அறிமுகமானதிலிருந்து குழும உறுப்பினர்களின் வலைப்பூ மற்றும் ஃப்ளிக்கர் தளங்களுக்கு அடிக்கடி விஜயம் செய்து ‘ஆ..’ன்னு பார்த்துட்டு வருவது வழக்கமா இருந்துச்சு. அப்போ நந்து எடுத்த நிலாவைப் பார்த்து அசந்து ‘இது போலப் புடிக்கணும்’ ஒரு நாள்னு நினைச்சிருந்தேன்.

ட்ரைபாட்:

DSLR-ன் பயன்பாடே சரியா தெரியாதிருந்தப்போ மொதப் பெளர்ணமியும் வந்தது. . ‘மார்கழித் திங்களல்லவா’ன்னு ஹம் செஞ்சுகிட்டே ட்ரைபாடெல்லாம் அமர்க்களமா வீட்டு பால்கனியில் செட் செஞ்சுகிட்டேன். இங்க ஒரு விஷயம் கவனிங்க. புதுசா ட்ரைபாட் வாங்கறவங்க சும்மா இருக்கும் போது காமிராவை அதில் பொருத்தி அதன் முழுப் பயன்பாட்டை நல்லா ஒரு பத்து இருபது நிமிஷம் செலவழிச்சு தெரிஞ்சு வச்சுக்கணும். அட, இங்க இழுத்து இங்க நீட்டி இங்க திருக்கி ப்ப்பூ, அவ்வளவுதானேன்னு களத்துக்கு நேராப் போயிடாதீங்க. குறிப்பா நிலவுல ஃபோகஸ் செய்ய ரொம்ப மைந்யூட்டானா அட்ஜெஸ்ட்மெண்ட்ஸ் அவசியப்படும்.

#படம் 1

ஆழ்நீல இரவு வானம் பரவாயில்லை. ஆனா பாட்டியும் நீல ட்ரெஸ் போட்டுக்கிட்டு.. அவ்வ்வ்வ்...

#படம் 2
அடுத்த பெளர்ணமிக்குப் பாட்டி இப்படி பிங்க் சேலை கட்டியிருந்தாங்க. எங்கேயோ தவறு செய்து கொண்டிருந்தேன்.

ந்த சமயத்தில பிட் குழும ஜீவ்ஸ் தலைமையில ஒரு புகைப்படப் பட்டறை நடந்துச்சு. சோம்பலான ஞாயிறில் சுறுசுறுப்பா சென்னையிலிருந்தெல்லாம் வந்திருந்த ஆர்வலர்கள் சூழ காலை ஆறுமணிக்கெல்லாம் கே ஆர் மார்க்கெட் போய் விதம் விதமா படம் பிடிச்சாங்க. அத்தனை காலையில் அங்கெல்லாம் வருவது ஆகாதுன்னுட்டேன். எடுத்த படங்களை ஆற அமர ரெவ்யூ செய்ய கப்பன் பார்க்கில் பத்தரை மணி போல கூடப் போறாங்கன்னதும் புது காமிராவோடு போய் சேர்ந்தேன்.

சென்ட்ரல் லைப்ரரியை ஒட்டிய ஓங்கி உயர்ந்த மரங்கள் அடர்ந்த சோலை. இந்த இடம் சரியான தேர்வு. எதற்கு? அபெச்சர் மோடில் ப்ராக்டிகலா பல வித வெளிச்சங்களில் பரிசோதனைப் படங்கள் எடுக்க!

அபெச்சர் மோட்:

ஏற்கனவே சர்வேசன் இது குறித்து விவரமா பதிவு போட்டுள்ளார் DSLR ஆரம்பப் பாடமாக இங்கே. ஆனா நடைமுறையில் பரிசோதிக்காம பழகாம.., சித்திரம் மட்டுமல்ல எந்தக் கலையும் கை வராது இல்லையா? இந்த பயிற்சியை அங்கிருந்த ஓரிரு மணிகளுக்குள் புரிய வச்சாங்க ஜீவ்ஸ் மற்றும் வந்திருந்த நண்பர்கள். அதை இங்கே பகிர்ந்துக்கறேன்.

அபெச்சர் அப்படிங்கற ஒளி உட்புகும் திறப்பினை குறிப்பிட்ட அளவில் செட் செய்வதன் மூலம் சென்சரில் பாயும் ஒளிக் கதிரின் வீச்சினைக் கட்டுப்படுத்தி சிறப்பான படங்களைக் கொடுக்க முடியும்.

அபெச்சரை f ஸ்டாப்-னும் சொல்வாங்க. இதன் கன்ட்ரோல் பிடிபட்டுட்டுன்னா அருமையான DOF(depth of field)-வுடன் சப்ஜெக்டை மிக ஷார்பாக நாம காட்ட முடியும்.
நாம பொதுவா குறுகிய அபெச்சரை(அதாவது பெரிய f நெம்பர்) லேண்ட்ஸ்கேப் போன்றவற்றுக்கும், அகன்ற அபெச்சர்(சின்ன f நம்பர்) போட்ரெயிட்ஸ் மற்றும் பூக்கள் போன்றவற்றுக்கும் பயன் படுத்துவோம்.

#படம் 3
நல்ல வெளிச்சம். அதற்கேற்ப f/5.6 தேர்ந்தெடுக்க 1/2000, ISO 800 என மற்றதை கேமராவே பார்த்துகிட்டு.

#படம் 4
மரத்தடியிலிருக்கும் நிழலுக்கு ஏற்ப f/4.5 , 1/125 , ISO 800.

டுத்து 55-200mm லென்ஸுக்கு மாறிக் கொண்டு பாடம் தொடர்ந்தது. போர்ட்ரெயிட் படங்களுக்கு நண்பர்கள் மாடலானார்கள். அதுலயும் இவரு கழுத்துல காமிராவை மாட்டிக்கிட்டு விளம்பர மாடல் போல போஸ் கொடுத்தாரா? ஸ்ட்ராப்புல இருக்கும் நைகான்ங்கற எழுத்துக்கள் பளிச் பளிச்சுன்னு விழுந்துச்சா? சரின்னு விளம்பரப் படமாவே மாற்றி விட்டேன்:)!

# படம் 5
ஓலை வேஞ்ச கூரைக்குள்ளே ஆங்காங்கே நட்சத்திரங்களா எட்டிப் பார்க்கும் சூரியன். இங்கே அதுக்குக் கூட வழியில்லாம அடர்ந்த கிளை இலைகள். தள்ளிக் காய்ஞ்சுட்டிருந்த வெயிலுகிட்டே வெளிச்சத்தைக் கடன் கேட்டுக் கெஞ்சிக்கிட்டிருந்த மரத்தடி.

இப்படி நிழல் சூழ்ந்த இடத்துல ஆட்டோ மோடில் வைத்து எடுத்திருந்தால் இத்தனை தெளிவா வந்திருக்குமாங்கறது சந்தேகமே. அதிக வெளிச்சம் வேண்டி அகன்ற அப்பெச்சர் (சின்ன f நம்பர்) f/2.8 வைத்து எடுத்தது.

டுத்து மாட்டியது அங்கிருந்த புதரில் பூத்தும் பூக்காமலுமிருந்த மொட்டு.

#படம் 6
f/5.6 , 1/60, ISO-200, Focal length 175mm

பூக்களைப் படம் பிடிப்பதில் எப்பவுமே ஆர்வம் காட்டும் நான் P&S-ல் மிக அருகில் கேமராவைப் பிடித்து ”மேக்ரோ” மோட் மூலமாக ஓரளவு DOF மற்றும் bokeh கொண்டு வருவேன் இப்படி:
#படம் 6 [Sony W80]


ஆனால் DSLR-ல் நான்கடி தூரத்திலிருந்து எடுத்த மொட்டு படத்தின் DOF ஆச்சரியப் படுத்தியது. இப்ப பழகிட்டுன்னாலும் முதத் தடவ அடைஞ்ச ஆச்சரியத்தைப் பதிவு செஞ்சுக்கறேன்:)!

[இப்படியாகப் படங்கள் 3,4,5,6 ஒரே நாளில் கிடைத்த அபெச்சர் பாடங்களாய் அமைந்தன எனக்கு.

மேலும் தெளிவா உங்களுக்கு வித்தியாசத்தைக் காட்ட, ஒரே காட்சியை ஆட்டோ மோடிலும் அபெச்சர் செட்டிங்கிலுமா எடுத்த படங்களை தனிப்பதிவாப் பிறகு தர்றேன்.]

Subject Vs DOF :

Depth of Field சரியாக அமைஞ்சா படத்தோட மெருகு கூடும். ஆனா அதுலயே கவனத்தை வச்சுட முடியாது. வாழ்க்கையிலே பார்த்தோமானாலே பேக் ரவுண்ட் மட்டும் நல்லா இருந்தா போதாம, நம்மளயும் தனிப்பட்ட முறையில அழுத்தம் திருத்தமா நிரூபிக்க.. அடையாளப்படுத்திக்க.. வேண்டிய கட்டாயத்துல இருக்கோம். அதே கதிதான் படங்களுக்கும். சரி அப்போ சப்ஜெக்டோட ஷார்ப்நெஸை அதிகரிக்கணும்னா இருப்பதுலயே குறுகின அபெச்சரை (பெர்ர்ரிய f) பயன்படுத்தினாதான் என்னன்னு...

கூடாதாம். ஏன்னு பார்ப்போம்.

ரொம்ப குறுகிய திறப்புடனான அபெச்சர் வேல்யூஸ் f/32, f/22 ஏன் f/16 கூட ஒளிச் சிதறலுக்குக் காரணமாகி படத்தை ரொம்ப சாஃப்டா காட்டிடும் அபாயம் இருக்கு. உங்களுக்கு இதனால் DOF பிரமாதமா வந்தாலும், பிரதானமான சப்ஜெக்ட் ஷார்ப்பா இருக்காது. இதற்கும் சென்சருக்கும் தொடர்பு இருக்கு. காம்பேக்ட் காமிராக்களின் குட்டி சென்சர்களின் குறைந்த பட்ச அபெச்சர் f/8 வரைக்குமே இருப்பதும் இதனால்தான். இதை ஒரு பத்திரிகையில படிச்சு தெரிஞ்சுக்கிட்டேன்.

அதிகபட்ச அபெச்சர்(optimum aperture):


ந்த வகை லென்சானாலும் நாம ஃபோகஸ் பண்ற சப்ஜெக்டை படு துல்லியமா காட்ட குறிப்பிட்டதொரு அளவு அப்பெச்சர் ஒன்றை கொண்டிருக்கும். இதைத்தான் அதிக பட்ச அபெச்சர்னு சொல்வாங்க. நமக்கு ரொம்பத் துல்லியமான விவரங்கள் தேவைப்படுகையில் இந்த அளவைத்தான் பயன்படுத்தணும். இது உங்களுக்கு DOF கொடுப்பதை விட, ஃபோகஸ் செய்யற பாயிண்டில் அதிகபட்ச ஷார்ப்நெஸை தந்து பிரமாதமான படங்களைத் தரும்.

சரி உங்க கேமிரா லென்ஸின் ஆப்டிமம் அபெச்சர் எது என்பதை எப்படிக் கண்டு பிடிக்கறது? அதற்கும் ஒரு வழி இருக்கு. அதைத் தனிப்பதிவாக இன்னொரு சமயம் பார்க்கலாம். எல்லாத்தையும் ஒண்ணா போட்டுக் குழப்பிக்க வேண்டாம். இப்போதைக்கு அதிக துல்லியத்துக்கு ஆசைப்பட்டு குறுகிய திறப்புடைய பெரிய அபெச்சர் நம்பரை தேர்ந்தெடுக்கக் கூடாது என்பதை மட்டும் நினைவில் வச்சுக்கோங்க.


மீண்டும் நிலவுக் கதைக்கு வருவோம். எனக்காச்சு உனக்காச்சுன்னு நானும் நிலாவை விடறதாயில்லை. அடுத்தடுத்த மாதங்களில் முயன்றபடியே இருந்தேன்.

இந்த இடத்துல ஒரு விஷயம் கவனியுங்க. இரவாச்சே அப்போ வெளிச்சக் குறைவுக்கு அகன்ற அபெச்சர்தானேன்னு நினைச்சுடக் கூடாது. இருட்டிலேயானாலும் நாம புடிக்கப் போறது ஒளிப் பந்தை. அதிகமா திறந்து வச்சோம்னா ஒளி ஏராளமாப் பாஞ்சு படம் கன்னா பின்னான்னு ஆயிடும். எனவே நிலவை f/9-லிருந்து முயன்றிடுவதே சிறந்தது. இந்த ஜட்ஜ்மெண்ட் இல்லாம அடுத்த வந்த மாதங்களில் f/5.6-ல் எடுத்த படங்கள் கீழே:

#படம் 8


மாசி நிலா பிறகு பங்குனியின் அரை நிலா வளர் நிலான்னு முயற்சியும் வளர்ந்துகிட்டே இருந்தது

#படம் 9


#படம் 10ம்ம். முதல் மாத ‘அவ்வ்வ்’-லிருந்து ஒவ்வொரு வ்-ஆகக் குறைஞ்சுதே தவிர ஒரு ‘வாவ்’ சிக்க மாட்டேங்குதேன்னு இருந்துச்சு. நிமிஷத்துல ட்ரைபாட் செட் செஞ்சு ஃபோகஸ் செய்யற திறன் பக்காவா வந்தது மட்டுமே மிச்சமாச்சு.

கனவு நிலா:

ப்போதான் மார்ச் 19-ல் பங்குனி நிலா பதினெட்டு வருடங்களுக்கு பிறகு வரும் சூப்பர் நிலாவாக உதிக்க இருப்பது குறித்து பதிவுலக புகைப்பட ஆர்வலர்கள் buzz-ல் பரபரப்பாகப் பேசியபடியே, ஃப்ளிக்கர் நண்பர்கள் ஒருவருக்கொருவர் டிப்ஸ் கொடுத்தபடியே தயாராகினர். இதுவரையில் பால்கனியில் மேற்கே வரும் அஸ்தமன நிலாவையே படம் பிடித்து வந்த நான் இரவு 11 மணி போல ஒன்பதாவது தள மொட்டை மாடிக்கு சென்று விட்டேன். இன்னும் முன்னதாப் போயிருந்தா பிரமாண்ட நிலாவைப் பிடிச்சிருக்கலாம். ஃப்ளிக்கரில் பல நிலாப் படங்களின் exif விவரமெல்லாம் பார்த்து சென்றிருந்ததால் f/9-ல் ஆரம்பித்து f/13 வரை விதம் விதமா எடுத்ததில் என்னை ஒருவாறாக “வாவ்” சொல்ல வைத்து விட்டது லென்சில் சிக்கிய இந்த என் கனவு நிலா.

# படம் 10

super moon: f/11,.002 sec(1/500), ISO-200
509 views 58 comments 9 favorites 1 Gallery-ன்னு flickr-ல மட்டுமில்லாம, என் blog-லேயும் பாராட்டுக்களை வாங்கிக் குவிச்ச படம்.

இப்பல்லாம் ‘நிலா நிலா ஓடி வா’ன்னா போதும். சமர்த்தா வந்து இரண்டு ஷாட்டிலே உட்கார்ந்துக்குதுன்னா பாருங்களேன்:)!

23 comments:

 1. ''பூத்தும் பூக்காமலுமிருந்த மொட்டு'' - wow.... Super.

  ReplyDelete
 2. படங்களும் அழகு!!! பாடங்களும் அருமை!! கலக்க‌றீங்க!!அணுபவங்களை எங்களுடன் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி!!

  ReplyDelete
 3. அருமையான விளக்கங்கள்...அருமையான படங்கள்...:-)
  படம் #6 மிக அருமை :-)
  எனக்கு Nikon D5000 வாங்கின புதிதில் macro shot தவிர ஒன்னும் சரியா வராது ...உங்க அனுபவங்களை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி, ராமலக்ஷ்மி :-)

  ReplyDelete
 4. நல்ல விளக்கம்! நிலா படம் அருமை! நான் இது வரைக்கும் ட்ரை பண்ணது கிடையாது, இனிமே ட்ரை பண்றேன். அப்புறம், DSLR camera'la aperture mode'la ISO naama dhaan set pannanum, adhu automatic kedayadhu, correct'a?

  ReplyDelete
 5. மேடம், ஏதோ நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்கன்னு மட்டும் புரியுது. ஒன்னாம் கிளாஸ் படிக்கிறவன் ஆறாம் கிளாஸ் பாடப் புத்தகத்தைப் படிச்சா எப்படி இருக்குமோ அப்படி இருக்கு எனக்கு.

  ஒழுங்கா ஆரம்பப் பாடங்களை படிச்சிட்டு, இதவந்து படிச்சாத்தான் பிரையோசனப்படும் போல.

  நன்றி.

  ReplyDelete
 6. மிகவும் பயனுள்ள காட்டுரை நன்றி

  ReplyDelete
 7. மிகவும் பயனுள்ள காட்டுரை நன்றி

  ReplyDelete
 8. அனைவருக்கும் நன்றி:)!

  @ சத்யா,

  இரண்டு விதமாகவும் உள்ளன சத்யா. பெரும்பாலும் செமி ஆட்டோவில் எடுக்கும் போது நானாகதான் இப்போதெல்லாம் செட் செய்கிறேன். ஆனால் ஆரம்ப தினப் பயிற்சி என்பதால் Shooting Menu-> ISO sensitivity settings-> AUTO என வைத்துத் தரப் பட்டது எனக்கு:)! அதிலும் கவனித்தால் ISO மேக்ஸிமம் மினிமம் வேல்யூ நம் விருப்பப்படி செட் செய்து சேவ் செய்திடலாம். விரைந்து அடுத்தடுத்து படங்கள் எடுக்க வேண்டிய சூழலில் இது பயனாகும் ஆரம்ப நாட்களில்.

  ஆட்டோ மோடில் ஆட்டோவிலேயே இருக்கும் ISO-வை நம் தேவைக்கு செட் செய்யலாம் என்பதும் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

  ReplyDelete
 9. படங்களுடன் நல்ல தெளிவான பதிவு. ஒரு சிறு திருத்தம் - Depth of Field மற்றும் Bokeh இரண்டும் வேறு வேறு.
  Depth of Field:
  குறிப்பிட்ட Aprature'இல் படத்தின் கூர்மை தொடங்கி முடியும் தூரம். உதாரணமாக படம் #6 இல் மொட்டுக்கள் பூவிற்கு முன்னும் பின்னும் அவுட் ஆப் போகஸ் ஆகிஉள்ளது. படத்தின் கூர்மை முதல் மொட்டிற்கு அப்புறம் ஆரம்பித்து பூவை தாண்டி கடைசி மொட்டிற்கு முன் முடிந்துவிடுகிறது அந்த தூரம் தான் Depth of Field . Aprature ஓபனிங் அதிகமாக இருந்தால் அதாவது f 2.8 , Depth of Field குறைவாக இருக்கும். Aprature ஓபனிங் கம்மியாக இருந்தால் அதாவது f 16 , Depth of Field தூரம் அதிகமாக (மிக அதிகமாக) இருக்கும்.

  Bokeh:
  படங்களில் அவுட் ஆப் போகஸ் ஆனா இடங்கள் ஒரு creamey லேயர் போல் தெரிவது தான் bokeh . உருவப் படங்கள் எடுக்கும் போது இந்த bokeh பின்புலத்தை blurr ஆக்கி படத்திற்கு மெருகூட்டும்.

  ReplyDelete
 10. @Ramalakshi: Yeah, right. Earlier the semi-auto modes doesn't have auto-ISO. I was using canon 400D for quite long and it doesn't have auto-ISO in Av/Tv mode. But it's there in 60D which I'm using now.

  ReplyDelete
 11. நல்லது சத்யா:)!

  @ மீனாட்சி சுந்தரம்,

  Depth of Field / Depth of object

  Depth of object is called bokeh. It occurs for parts of the scene that lie outside the depth of field.

  தெளிவானது.

  விளக்கத்துக்கு மிக்க நன்றி:)!

  ReplyDelete
 12. நீங்க எழுதிய அனுபவம் படங்களை
  விட அழகு ராமலக்ஷ்மி !

  ReplyDelete
 13. @ James Vasanth,

  /படங்களை விட/

  இன்னொ..ரு.. முறை சொல்லிக்கறேன் அவ்வ்:))! நன்றி ஜேம்ஸ்:)!

  ReplyDelete
 14. படங்கள் அற்புதம்! என் மனைவிக்கும் போடோக்ராபியில் மிகுந்த நாட்டம் உண்டு.

  ReplyDelete
 15. @ bandhu,

  மகிழ்ச்சி. நன்றி.

  ReplyDelete
 16. நல்ல கட்டுரை + பாடம் :)

  ReplyDelete
 17. கடைசி நிலா கொள்ளை அழகு... இதற்கு நீங்கள் பயன்படுத்திய லென்ஸ் என்னனு தெரிஞ்சிக்கனும்

  ReplyDelete
 18. @ Ramesh Babu,

  nikkor 55-200mm VR !

  இப்போது 55-300mm சந்தைக்கு வந்துவிட்டுள்ளது.

  ReplyDelete
 19. முதலில் உங்களோட http://photography-in-tamil.blogspot.in/2011/07/blog-post.html இந்த பதிவுக்கு மிக்க நன்றி..dslr கேமிரா வங்கியும் படம் சரியா வர மாட்டேங்குதேன்னு தவித்துட்டு இருந்த எனக்கு,,google help னால அந்த தளம் கிடைத்தது..அதில் பல தலைப்பு இருந்தாலும் எதை முதலில் படிக்குறதுன்னும் ஒரு குழப்பம்..ஆனால் உஙகளோட அந்த பதிவில் எல்லா அடிப்படை பகுதிகளையும் இனைத்து பதிந்தமைக்கு மிக்க நன்றி..இப்போ தான் இதன் ஆர்வம் அதிகமாக உள்ளது..

  ReplyDelete
 20. அருமையான எளிய விளக்கம்....a very useful one for the amateurs like me..

  ReplyDelete
 21. அந்த மலர் மொட்டு உண்மையாகவே மிக மிக அருமை...
  https://www.scientificjudgment.com/

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff